9TH-TAMIL-MODEL ANNUAL EXAMINATION QUESTION PAPER - 2025

 

மாதிரி முழு ஆண்டுத் தேர்வு – வினாத்தாள்-1– 25

 மொழிப்பாடம் – தமிழ்

வகுப்பு : 9

நேரம் : 3.00 மணி                                                                           மதிப்பெண் : 100

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

குறிப்புகள் :  I ) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.

                II) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் ஏற்புடைய விடையினைத்    

                     தேர்ந்தெடுத்து  எழுதுக.

அ) சரியான விடையைத் தேர்வு செய்க.                                                       15×1=15

1. ‘தமிழ்விடுதூது ____ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.

) தொடர்நிலைச் செய்யுள் ) புதுக்கவிதை ) சிற்றிலக்கியம் ஈ) தனிப்பாடல்

2. ஐம்பெருங்குழு, எண்பேராயம் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்

) திசைச்சொற்கள்  ஆ) வடசொற்கள்  இ) உரிச்சொற்கள் ஈ) தொகைச்சொற்கள்

3. நீர் நிலைகளோடு தொடர்பில்லாதது எது?

) அகழி               ) ஆறு               ) இலஞ்சி            ஈ) புலரி

4. பொருத்தமான விடையைத் தேர்க .

 அ) சிறுபஞ்ச மூலம்                  - 1. காப்பிய இலக்கியம்

 ஆ) குடும்ப விளக்கு                  - 2. சங்க இலக்கியம்

 இ) சீவகசிந்தா மணி                  - 3. அற இலக்கியம்

  ஈ) குறுந்தொகை                     - 4. தற்கால இலக்கியம்.

(௧) அ-3, ஆ- 4, இ -1, ஈ- 2      (௨) அ- 2, ஆ- 3, இ- 1, ஈ- 4

(௩) அ- 3, ஆ-1, இ- 4. ஈ -2      (௪) அ- 4, ஆ -1, இ – 2, ஈ- 3

5. ஒன்றறிவதுவே உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே இவ்வடிகளில் அதனொடு என்பது எதைக் குறிக்கிறது?

அ) நுகர்தல் ஆ) தொடு உணர்வு         இ) கேட்டல் ஈ) காணல்

6.  பூவாது காய்க்கும், மலர்க்கை - அடிக்கோடிட்ட சொற்களுக்குரிய இலக்கணம் யாது?

அ) பெயரெச்சம், உவமைத்தொகை    ஆ) எதிர்மறைப் பெயரெச்சம், உருவகம்

 இ) வினையெச்சம், உவமை          ஈ) எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை

7. ஐஞ்சிறுங் காப்பியங்களுள் ஒன்று

அ) சிலப்பதிகாரம்   ஆ) யசோதர காவியம்    இ) மணிமேகலை      ஈ) நாலடியார்

8. ஐந்து சால்புகளில் இரண்டு

அ) வானமும் நாணமும்             ஆ) நாணமும் இணக்கமும்

 இ) இணக்கமும் சுணக்கமும்     ஈ) இணக்கமும் பிணக்கமும்

9. இளங்கமுகு, செய்கோலம் – இலக்கணக்குறிப்புத் தருக.

அ) உருவகத்தொடர், வினைத்தொகை      ஆ) பண்புத்தொகை, வினைத்தொகை

இ) வினைத்தொகை, பண்புத்தொகை        ஈ) பண்புத்தொகை, உருவகத்தொடர்

10. இமயத்துக் கோடு உயர்ந்தன்ன – இவ்வடியில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் யாது?

அ) கொம்பு                      ஆ) மலையுச்சி       இ) சங்கு                ஈ) மேடு

11. வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே – இவ்வடி உணர்த்தும் பொருள் யாது?

அ. மணம் கமழும் வயலில் உழவர் வெள்ளமாய் உழுதிருந்தனர்

ஆ. வறண்ட வயலில் உழவர் வெள்ளமாய் அமர்ந்திருந்தனர்

இ. செறிவான வயலில் உழவர் வெள்ளமாய்க் கூடியிருந்தனர்

ஈ. பசுமையான வயலில் உழவர் வெள்ளமாய் நிறைந்திருந்தனர்

பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ

வெள்ளம்தீப் பட்ட(து) எனவெரீஇப்பு ள்ளினம்தம்

கைச்சிறகால் பார்ப்பொடுக்கும் கவ்வை உடைத்தரோ

நச்சிலைவேல் கோக்கோதை நாடு       

12. இப்பாடல் இடம் பெற்ற நூல்

அ. தமிழ்விடுதூது   ஆ. பெரியபுராணம்  இ. முத்தொள்ளாயிரம் ஈ. இராவண காவியம்

13. இப்பாடலில் இடம் பெற்றுள்ள அடி எதுகைகள்___________

அ. அள்ளல் – வெள்ளம்   ஆ. கவ்வை – கோக்கோதை

இ. ஆம்பல் – புள்ளினம்      ஈ. சிறகால் - நச்சிலைவேல்

14. ‘ அள்ளல் ‘ என்பதன் பொருள்__________

அ. பாக்கு     ஆ. முத்து              இ. சேறு                  ஈ. சங்கு

15. ‘ வெரீஇ‘ – இச்சொல்லில்  இடம் பெறும் அளபெடை

அ. சொல்லிசை அளபெடை                ஆ. செய்யுளிசை அளபெடை              

இ. இன்னிசை அளபெடை                  ஈ. உயிரளபெடை

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 )  பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.          4×2=8

(21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.)

16. விடைக்கேற்ற வினா அமைக்க.

அ. ஏறுதழுவுதல், தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது?

ஆ. யோகக்கலை, நாட்டியகலைக் கூறுகளும் தமிழகச் சிற்பக்கலைகளில் இடம் பெற்றுள்ளன.

17. நிலம் போல யாரிடம் பொறுமை காக்க   வேண்டும்?

18. இந்திய தேசிய இராணுவத்தில் குறிப்பிடத் தகுந்த தமிழக வீரர்கள் யாவர்?

19. பகுத்தறிவு’ என்றால் என்ன?

20. கண்ணி என்பதன் விளக்கம் யாது?

21.  தரும் – என முடியும்  குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                  5×2=10

22. மரபு இணைச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

 அ. மேடும் பள்ளமும்                                     ஆ. நகமும் சதையும்

23. அடைப்புக்குள் உள்ள சொற்களைப் பொருத்தமான வினைமுற்றாக மாற்றி, கோடிட்ட இடங்களில் எழுதுக.

அ. இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத் தமிழ் _______ ( திகழ் )

ஆ. வைதேகி நாளை நடைபெறும் கவியரங்கில் _________ ( கலந்துகொள் )

24. மரபுப் பிழையை நீக்கி எழுதுக.

          அ) நேற்று தென்றல் காற்று அடித்தது.   ஆ) கொடியிலுள்ள மலரை எடுத்து வா

25. பகுபத உறுப்பிலக்கணம் தருக.  : உணர்த்த

26. கலைச்சொல் தருக.            அ. EXCAVATION    ஆ. HERO STONE

27. வீணையோடு வந்தாள், கிளியே பேசு – தொடரின் வகையைச் சுட்டுக.

குறிப்பு :- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

பிழை நீக்கி எழுதுக.

அ. மதீனா சிறந்த இசை வல்லுநர் வேண்டும்.  ஆ. நல்ல தமிழுக்கு எழுதுவோம்

28. பொருத்தமான உரிச்சொற்களை எழுதுக.

          அ) ____ பெரும் பொதுக்கூட்டம் ( கடி, மா)   ஆ) ___ சிறந்தது ( சால, மழ )

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )   பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                         2×3=6

29. பத்தியைப் படித்து பதில் தருக

          தமிழ் மக்கள் துணையுடன் போராடிய நேதாஜியைக் கண்டு ஆங்கில பிரதமர் சர்ச்சில் கோபம் கொண்டார்.’ மலேயாவில் உள்ள தமிழர்களின் இரத்தம் நேதாஜியின் மூளையில் கட்டியாக உள்ளது ‘ என்று சர்ச்சில் கூறினார். அதற்கு நேதாஜி இந்த தமிழனம் தான் ஆங்கிலேயர்களை அழிக்கும் என்று பதில் கூறினார்.

அ) நேதாஜியிடம் கோபம் கொண்டவர் யார்?

ஆ) தமிழ் மக்கள் குறித்து ஆங்கில பிரதமர் கூறிய கூற்று யாது?

இ). தமிழினம் குறித்து நேதாஜியின் பதில் என்ன?

30. சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக.

31. சோழர்காலக் குமிழிதுதூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.          2×3=6

              ( 34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.)

32. “மாகால் எடுத்த முந்நீர்போல” – இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக.

33. உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திர விழா நிகழ்வுகளுடன் ஒப்பிடுக.

34. அ) “ காடெல்லாம்  “ எனத் தொடங்கும் பெரிய புராணப் பாடலை  எழுதுக (அல்லது )

      ஆ) “பூவாது காய்க்கும் ” எனத் தொடங்கும் சிறு பஞ்ச மூலப்  பாடலை எழுதுக.

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                     2×3=6

35. வல்லினம் மிகும் இடங்கள் எவையேனும் மூன்றனுக்குச் சான்றுகள் தருக.

36. வஞ்சப் புகழ்ச்சி அணியை சான்றுடன் விளக்குக.

37. ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்

      மாற்றாரை மாற்றும் படை – இக்குறட்பாவிற்கு அலகிட்டு வாய்பாடு தருக.

                                                        பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                5×5=25

38. அ) பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக. ( அல்லது )

ஆ) குடும்ப விளக்கு நூலில் தலைவி பேச்சில் வெளிப்படும் பெண்கல்விக்கான கருத்துகளை இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு எழுதுக.

39. சுற்றுச் சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்துகொள்ளும் மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றை எழுதுக.  (அல்லது)

ஆ. ‘ எனது பயணம் ‘ என்னும் தலைப்பில் உங்களது அனுபவங்களை வருணித்து எழுதுக.

40.  காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

 

41. அ) பிழை நீக்கி எழுதுக.

பெறுந்தலைவர் காமராசர் பள்ளிப் படிப்பை நிரைவு செய்யவிள்ளை எண்ராலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் புத்தகங்கள் படிக்கும் அலவுக்கு புலமைகள் பெற்றிருந்தது பலருக்குத் தெரியாது. ஆங்கிலச் செய்தி இதழ்கலை நாள்தோறும் படித்தது. எப்போது அரையை விட்டு வெளியே போனாலும் மின்விசிரியை நிருத்த மறப்பதில்லை. வெளியூருக்குச் செல்லும்போது தம்முடைய துணிமனிகளைத் தாமே எடுத்துவைத்துக்கொள்வார்.

 

 

42. நயம் பாராடுக:-

வயலிடைப் புகுந்தாய் மணிக்கதிர் விளைத்தாய்

வளைந் துசெல் கால்களால் ஆறே!

அயலுள ஓடைத் தாமரை கொட்டி

ஆம்பலின் இதழ்களை விரித்தாய்

கயலிடைச் செங்கண் கருவரால் வாளை

கரைவளர் தென்னையில் பாயப்

பெயரிடைப் பட்ட வானெனத் தோன்றும்

பெருங்குளம் நிறைந்து விட்டாயே! – வாணிதாசன்    ( அல்லது )

ஆ) மொழிபெயர்க்க:-

Conversation between two friends meeting by chance at a mall.

Aruna: Hi Vanmathi! It’s great to see you after a long time.

Vanmathi: It’s great seeing you. How long has it been? It must be more than 6 months. I’m doing good. How about you?

 Aruna: Fine. I have come with my parents. They are inside the grocery shop. What about you?

 Vanmathi: I came with my father. He has gone to buy tickets for a 3D movie. Aruna: Which movie?

Vanmathi: Welcome to the jungle.

Aruna: Great! I am going to ask my parents to take me to that movie

 

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

தொகைக் சொற்களைக் கொண்டு பத்தியைச் சுருக்குக.

சேர, சோழ, பாண்டிய அரசர்களிடம் யானைப்படை, குதிரைப்படை, தேர்ப்படை, தரைப்படை ஆகியவை இருந்தன. அவர்கள் மா, பலா, வாழை ஆகிய கனிகளுடன் விருந்தோம்பல் செய்தனர். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய திசைகளில் அவர்களின் ஆட்சிப்புகழ் பரவியிருந்தது. தமிழகத்தின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நிலங்களில் உள்ள புலவர்கள் இவ்வரசர்களை இம்மையிலும் மறுமையிலும் வாழ்கவென்று வாழ்த்தினர்..

பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                              3×8=24

43. அ) நீரின்றி அமையாது உலகு – என்னும் வள்ளுவரின் அடி உணர்த்தும் பொருள் ஆழத்தை எடுத்துக்காட்டுடன் விவரிக்க.        ( அல்லது )

ஆ) தமிழ்நாட்டுச் சிற்பங்கள் கலைநயம் மிக்கனவாகவும், வரலாற்றுப் பதிவுகளாகவும் இருப்பதை நிறுவுக.

44. அ. 'தண்ணீர்’ கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.    ( அல்லது )

மொழியின் விரல் பிடித்து நடக்கப் பழகிக்கொண்டிருக்கும் தன்மகனுக்கு நா.முத்துக்குமார் எழுதியுள்ள கடிதச் செய்திகளைத் தொகுத்து எழுதுக.

45. அ) குறிப்புகளைக் கொண்டு மழைநீர் சேகரிப்பு என்னும் தலைப்பில்  கட்டுரை எழுதுக.

முன்னுரை – மழைநீர்  – உயிர் நீர் – மழை நீரின் பயன்கள் – சேமிக்கும் வழிகள் – நமது கடமை – முடிவுரை    ( அல்லது )

ஆ) எங்கள் ஊர்ச் சந்தை – என்னும் தலைப்பில் நாளிதழ்ச் செய்தி ஒன்றை எழுதுக.

www.tamilvithai.com                                                         www.kalvivithaigal.com

உங்கள் குழுக்களில் தினசரி தமிழ்விதை மற்றும் கல்விவிதைகளின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை பெற 8695617154 என்ற எண்ணை சேர்க்கவும். மேலும் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் குழுவில் இணைய கீழ் உள்ள இணைப்புகளை பயன்படுத்துங்கள்.

 

Join our community

 *90+ mark - online class* *group(tamil)*

( Attend 100%  online class - persons only ) 

https://chat.whatsapp.com/BBai24kgX1tFRIKRgO82n4

 ஒன்பதாம் வகுப்பு -மாணவர்கள் குழு

https://chat.whatsapp.com/IQ90kTVmpCxI24sOGhG2OG

பத்தாம் வகுப்பு-மாணவர்கள் குழு

https://chat.whatsapp.com/FQnt9veuPn8CBmjl5Sd9U5

ஆசிரியர்கள் குழு

https://chat.whatsapp.com/Bu0EAxO66pREFHO74Dh9zb

WhatsApp chennal

https://whatsapp.com/channel/0029Va5ugwv8KMqlYeGAWC1S

 Telegram

https://t.me/thamizhvithai

 Facebook

https://www.facebook.com/groups/215175780078251/?ref=share

click here to get pdf

click here

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post