மூன்றாம் பருவம் –
மாதிரி வினாத்தாள்
ஏழாம்
வகுப்பு
மொழிப்பாடம்
– தமிழ்
பாடம்- தமிழ்
மதிப்பெண்கள்: 60
I ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
6x1=6
1. உழவர் சேற்று வயலில் _______ நடுவர்
அ) செடி ஆ) பயிர் இ) மரம் ஈ) நாற்று
2. இளங்கோவடிகள் ______ மலைக்கு முதன்மை
கொடுத்துப் பாடினார்.
அ) இமய ஆ) கொல்லி இ) பொதிகை ஈ) விந்திய
3. -------
ஒரு நாட்டின் அரணன்று.
அ) காடு ஆ)
வயல் இ)
மலை ஈ) தெளிந்த நீர்
4. செல்வத்தின் பயன் __________ வாழ்வு
அ)
ஆடம்பர ஆ) நீண்ட இ) ஒப்புரவு ஈ) நோயற்ற
5. ‘ அறம் + கதிர் ‘ என்பதனைச் சேர்த்து எழுதக்
கிடைக்கும் சொல்___________
அ) அறகதிர் ஆ)
அறுகதிர் இ)
அறக்கதிர் ஈ)
அறம்கதிர்
6.
மனித வாழ்க்கையில் தேவைப்படுவது ________
அ) பணம் ஆ) பொறுமை இ) புகழ் ஈ) வீடு
II ) கோடிட்ட இடம் நிரப்புக. 5x1=5
7. உலகம்
உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்று கூறியவர் __________
8.
மரம் வளர்த்தால் __________ பெறலாம்.
9.
மக்கள் அனைவரும்
__________ ஒத்த இயல்புடையவர்கள்
10.
‘ இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது ‘ என்பது ____________ ஆகுபெயர்.
11. சாந்தகுணம் உடையவர்கள் __________ முழுவதையும் பெறுவர்
III
) எதிர்ச்சொற்களைப்
பொருத்துக.
12.
எளிது - புரவலர்
13.
ஈதல் - அரிது
14.
அந்நியர் - ஏற்றல்
15.
இரவலர் - உறவினர்
IV) கீழ்க்காணும் வினாக்களுள் எவையேனும் ஆறுக்கு
மட்டும் விடை தருக. 6x2=12
16. பாரி
மகளிரின் பெயர்களை எழுதுக.
17. வாழ்க்கை மலர்ச்சோலையாக மாற என்ன செய்ய
வேண்டும்?
18. சிறந்த நாட்டின் இயல்புகளாக வள்ளுவர்
கூறுவன யாவை?
19. உலகம் நிலை தடுமாறக் காரணம் என்ன?
20. ஒரு நாட்டுக்கு எவையெல்லாம் அரண்களாக அமையும்?
21. காயிதே மில்லத் அவர்கள்
தன் குடும்பத்திலும் எளிமையைக் கடைப்பிடித்தவர் என்பதற்குச் சான்றாக உள்ள நிகழ்வை
எழுதுக.
22. பொருளீட்டுவதை விடவும் பெரிய செயல் எது?
23.
இரட்டைக் கிளவி என்பது
யாது? சான்று தருக.
24. பின்வரும் தொடரில் உள்ள உவமை, உவம உருபு, உவமேயம் கண்டுபிடித்து
எழுதுக.
மயில் போல ஆடினாள்.
V ) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு
மட்டும் விடை தருக.
2x3=6
25. ஒப்புரவுக்கும் உதவிசெய்தலுக்குமுள்ள
வேறுபாடு யாது?
26. உருவக அணிக்கும் ஏகதேச உருவக அணிக்கும்
உள்ள வேறுபாடு யாது?
27. திருநெல்வேலிக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்பு குறித்து எழுதுக
VI) அடிமாறாமல் எழுதுக. 4+2=6
28. அ) ‘ வையம் தகளியா… ‘
எனத் தொடங்கும் புதுமை விளக்குப் பாடலை எழுதுக.
( அல்லது ) ‘ மாரியொன்று ‘ எனத் தொடங்கும் பாடல்
ஆ) உறுபசியும் எனத்
தொடங்கும் திருக்குறளை எழுதுக.
VII ) ஏதேனும் ஒன்றனுக்கு விடை தருக. 1x5=5
29.அ) உங்கள் ஊரில்
நடைபெறும் திருவிழாவைக் காண வருமாறு அழைப்பு விடுத்து உறவினர் ஒருவருக்குக் கடிதம்
எழுதுக. ( அல்லது )
ஆ) ஒற்றுமை உயர்வு –
கட்டுரை வரைக.
VIII ) ஏதேனும்
ஒன்றனுக்கு விடையளிக்க
1x6=6
30. அ) ‘ உண்மை ஒளி ‘. படக்கதையைச் சுருக்கி
எழுதுக (அல்லது)
ஆ) டி,கே.சி குறிப்பிடும் திருநெல்வேலிக் கவிஞர்கள் பற்றிய செய்திகளைத்
தொகுத்து எழுதுக.
IX ) அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்க. 5x2=10
31 . கொடுக்கப்பட்டுள்ள ஊரின் பெயர்களில் இருந்து
புதிய சொற்களை உருவாக்குக
அ) நாகப்பட்டிணம்
ஆ) கன்னியாகுமரி
32. கொடுக்கப்பட்டுள்ள ஊரின் பெயர்களில் இருந்து புதிய சொற்களை
உருவாக்குக.
அ) பட்டுக்கோட்டை ஆ) கன்னியாகுமரி
33. கலைச்சொல் தருக : அ) HARVEST ஆ) AMBITION
34. சரியான வினாச்சொல்லை இட்டு நிரப்புக
அ) அறநெறிச்சாரம் பாடலை எழுதியவர்
_____?
ஆ) அறநெறிச்சாரம் என்பதன் பொருள் ____?
35. தலைப்புச்
செய்திகளை முழுசொற்றொடர்களாக எழுதுக.
அ) சாலையில்
கிடந்த பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த மாணவன் – மாவட்ட ஆட்சியர் பாராட்டு
ஆ) தமுக்கம்
மைதானத்தில் புத்தகக் கண்காட்சி தொடக்கம் -
மக்கள் ஆர்வத்துடன் வருகை.
*Join our community*
*90+ mark -
online class* *group(tamil)*
(online class - persons
only* ) : https://chat.whatsapp.com/BBai24kgX1tFRIKRgO82n4
ஒன்பதாம்
வகுப்பு மாணவர்கள் குழு* :https://chat.whatsapp.com/IQ90kTVmpCxI24sOGhG2OG
பத்தாம்
வகுப்பு-மாணவர்கள் குழு : https://chat.whatsapp.com/FQnt9veuPn8CBmjl5Sd9U5
*ஆசிரியர்கள்
குழு* : https://chat.whatsapp.com/Bu0EAxO66pREFHO74Dh9zb
*WhatsApp
chennal* : https://whatsapp.com/channel/0029Va5ugwv8KMqlYeGAWC1S
*Telegram* : https://t.me/thamizhvithai
Facebook : https://www.facebook.com/groups/215175780078251/?ref=share