மாதிரி மூன்றாம் பருவம் - தொகுத்தறி
மதிப்பீடு வினாத்தாள்
ஆறாம்
வகுப்பு
மொழிப்பாடம்
– தமிழ்
பாடம்- தமிழ்
மதிப்பெண்கள்: 60
நேரம் : 2.00 மணி
I ) சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
4x1=4
1. தம் + உயிர் என்பதனைச்
சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ---------
அ) தம்முயிர் ஆ) தமதுயிர் இ)
தம்உயிர் ஈ) தம்முஉயிர்
2. அன்னை தெரசாவிற்கு_______________க்கான
நோபல் பரிசு கிடைத்தது
அ) பொருளாதாரம் ஆ)
இயற்பியல் இ) மருத்துவம் ஈ) அமைதி
3. ’சோம்பல்’ என்னும்
சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல் --------
அ) அழிவு ஆ)
துன்பம் இ) சுறுசுறுப்பு ஈ)
சோகம்
4. காந்தியடிகள் _____________ அடி
நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்று விரும்பினார்.
அ) நாமக்கல் கவிஞர் ஆ) பாரதிதாசன் இ) உ.வே.சாமிநாதர் ஈ) பாரதியார்
II ) கோடிட்ட இடம்
நிரப்புக. 3x1=3
5. புத்தரின்
வரலாற்றைக் கூறும் நூல்______________
6. இலக்கண அடிப்படையில் சொற்கள் ______________ வகைப்படும்.
7. நூலாடை என்பதை பிரித்து எழுதக் கிடைக்கும் சொல் ________
III ) பொருத்துக. 3x1=3
8. வள்ளலார் - நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்
9. கைலாஷ்
சத்தியார்த்தி - பசிப்பிணி போக்கியவர்
10. அன்னை தெரசா - குழந்தைகள் உரிமைக்குப்
பாடுபட்டவர்.
IV) கீழ்க்காணும்
வினாக்களுள் எவையேனும் ஐந்து மட்டும் விடை தருக. 5x2=10
11. அமுத சுரபியின் சிறப்பு யாது?.
12. யாருக்குத் தொண்டு
செய்ய வேண்டும்?
13. வள்ளலார்
பசிப்பிணியை நீக்க என்ன செய்தார்?
14. காந்தியடிகளுக்குத் தமிழ் கற்கும் ஆர்வத்தை
ஏற்படுத்திய நிகழ்வைக் கூறுக.
15. சொற்களின் வகைகளை
எழுதுக
16. இன்ப நிலை எப்போது
வந்து சேரும்?
17. உலகம்
முழுமையையும் எப்போது ஆளமுடியும்?
18. பழம்,வேர்
ஆகியவற்றின் இயல்புகள் யாவை?
V ) எவையேனும் மூன்று
வினாக்களுக்கு மட்டும் விடை தருக.
3x3=9
19. மணிமேகலை மன்னரிடம் வேண்டியது
யாது?
20. குளிரால் வாடுபவர்களுக்கு
நீங்கள் எவ்விதம் உதவுவீர்கள்?
21. காந்தியடிகளின் உடை மாற்றத்திற்குக் காரணமாக
அமைந்த நிகழ்வினை எழுதுக.
22. எல்லா உயிர்களும்
மகிழ்வோடு வாழ புத்த பிரான் கூறும் அறிவுரைகள் யாவை?
VI) அடிமாறாமல் எழுதுக. 4+2=6
23. அ) ‘ புதுமைகள் செய்த… ‘
எனத் தொடங்கும் பாரதம் அன்றைய நாற்றங்கால் பாடலை எழுதுக. (
அல்லது )
ஆ) தம் உயிர்போல் எனத் தொடங்கும் பராபரக் கண்ணி
பாடலை எழுதுக.
24. தலை எனத் முடியும்
திருக்குறளை எழுதுக.
VII ) அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. 5x2=10
25. கீழ்க்காணும் பெயர்ச் சொற்களை அகரவரிசையில் எழுதுக.
பூனை, தையல், தேனீ, ஓணான், மான், வெளவால், கிளி,
மாணவன், மனிதன், ஆசிரியர், பழம்
26. கலைச்சொல்
தருக:- அ) PATRIOTISM ஆ) HUMANITY
27.
பின் வரும் தொடர்களில் அடிக்கோடிட்ட சொற்கள் எவ்வகை பெயர்கள் என எழுதுக.
அ) நான் மதுரைக்குச் சென்றேன்,
ஆ) நீதி நூல் பயில் என்கிறார் பாரதியார்.
28. சொற்றொடரில் அமைத்து
எழுதுக.
அ) ஆலோசனை ஆ) மாற்றம்
29. கட்டத்தில் உள்ள
சொற்களைக் கொண்டு தொடர்களை உருவாக்குக.
மாலையில் பெரியோரை நூல் பல அதிகாலையில் |
கற்போம் எழுவோம் விளையாடுவோம் வணங்குவோம் |
VIII ) ஏதேனும்
ஒன்றனுக்கு விடையளிக்க
1x7=7
30. அ) வேலு நாச்சியார்
சிவகங்கையை மீட்ட நிகழ்வை எழுதுக. (அல்லது)
ஆ) நூல்கள் அனுப்ப வேண்டிப் பதிப்பகத்தாருக்குக் கடிதம் எழுதுக.
IX ) கீழ்க்காணும்
வினாக்களுள் ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் விடையளிக்க. 1x8=8
31 . அ ) அறம் செய்ய விரும்பு என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக
( அல்லது )
ஆ) தேசிய ஒருமைப்பாடு என்ற தலைப்பில்
கட்டுரை எழுதுக.
*Join our community*
*90+ mark -
online class* *group(tamil)*
(online class - persons
only* ) : https://chat.whatsapp.com/BBai24kgX1tFRIKRgO82n4
ஒன்பதாம்
வகுப்பு மாணவர்கள் குழு* :https://chat.whatsapp.com/IQ90kTVmpCxI24sOGhG2OG
பத்தாம்
வகுப்பு-மாணவர்கள் குழு : https://chat.whatsapp.com/FQnt9veuPn8CBmjl5Sd9U5
*ஆசிரியர்கள்
குழு* : https://chat.whatsapp.com/Bu0EAxO66pREFHO74Dh9zb
*WhatsApp
chennal* : https://whatsapp.com/channel/0029Va5ugwv8KMqlYeGAWC1S
*Telegram* : https://t.me/thamizhvithai
Facebook : https://www.facebook.com/groups/215175780078251/?ref=share
www.kalvivithaigal.com www.tamilvithai.com