10TH-TAMIL-PUBLIC EXAM -2025 - MODEL QUESTION - 3

 

மாதிரி அரசு பொதுத் தேர்வு -வினாத்தாள்-3- 2025

 மொழிப்பாடம் – தமிழ்

பத்தாம் வகுப்பு

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                   மதிப்பெண் : 100

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

அ) சரியான விடையைத் தேர்வு செய்க.                                                                  15×1=15

1. “ மருந்தே ஆயினும் விருந்தோடு உண் “ என்னும் அடிகள் இடம் பெற்றுள்ள நூல்

அ. குறுந்தொகை    ஆ. கொன்றை வேந்தன்     இ. திருக்குறள்        ஈ. நற்றிணை

2. பாடு இமிழ் பனிக்கடல் பருகி ‘ என்னும் முல்லைப் பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?

அ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல் ஆ) கடல் நீர் குளிர்ச்சி அடைதல்

இ) கடல் நீர் ஒலித்தல்                  ஈ) கடல் நீர் கொந்தளித்தல்

3. கீழ்க்கண்ட சொற்களில் பொதுமொழி அல்லாத சொல்லைத் தேர்க

அ) தாமரை             ஆ) அந்த மான்          இ) எட்டு              ஈ) பாடினாள்

4. “ வாடா இராசா, வாடா கண்ணா “ என்று தன் மகளைப் பார்த்து தாய் அழைப்பது ___________

அ) திணை வழுவமைதி   ஆ) கால வழுவமைதி  இ) பால் வழுவமைதி   ஈ) இட வழுவமைதி

5. அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்

   புல்லார் புரள விடல் – இக்குறளில் இடம் பெற்றுள்ள அடி மோனைச் சொற்களைத் தேர்க______

அ) அருளொடும் - அன்பொடும்               ஆ) பொருளாக்கம் – புல்லார்

இ) வாரா – புரள                                    ஈ) அருளொடும் – விடல்

6. பொருத்துக:-

அ. தமிழ்கூறும் நல்லுலகம்                               – 1) சிலப்பதிகாரம்

ஆ) தண்தமிழ் வரைப்பு                                    - 2) பரிபாடல்

இ) தண்தமிழ் வேலி தமிழ்நாடு                          - 3) தொல்காப்பியம்

ஈ) இமிழ் கடல்வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய      - 4) புறநானூறு

அ. 3,4,2,1     ஆ. 4,3,2,1              இ. 2,3,4,1               ஈ. 1,4,2,3

7. கப்பலுக்கு போன மச்சான் என்னும் நாவலைப் படைத்தவர்_______________

அ) கி.ராஜகோபாலன்           ஆ)  அழகிரிசாமி     இ) ப.சிங்காரம்        ஈ) நாகூர் ரூமி

8. பார் என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத் தொடரைத் தேர்க

) துளிர் பார்த்தாள்  ) துளிருடன் பார்த்தேன் ) பார்த்துச் சிரித்தாள்  ) பார்த்தவர் வந்தார்

9. “ நன்றும் தீதும் ஆய்தலும் அன்பும் அறனும் காத்தலும் அமைச்சர் கடமை “எனக் கூறும் நூல்

அ) மதுரைக்காஞ்சி     ஆ) புறநானூறு            இ) சிறுபாணாற்றுப்படை         ஈ) கலித்தொகை

10. தமிழர் வாழ்வில் பண்பாட்டின் மகுடமாக கருதப் படுவது___________

அ) விளைச்சல்  ஆ) மஞ்சுவிரட்டு    இ) பொன் ஏர் பூட்டுதல்     ஈ) விருந்தோம்பல்

 11. எழிலன் கண்ணும் கருத்துமாகப் படித்து தேர்வில் வென்றார். இத்தொடரில் மரபுத் தொடர் உணர்த்தும் பொருளைத் தேர்க

) கற்பனை               ) தாராளம்               ) தள்ளிப்போடுதல்     ) கவனம்


பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

உறங்கு கின்ற கும்ப கன்ன வுங்கண் மாய வாழ்வெலாம்

இறங்கு கின்ற தின்று காணெ ழுந்தி ராயெ ழுந்திராய்

கறங்கு போல விற்பி டித்த கால தூதர் கையிலே

உறங்கு வாயு றங்கு வாயி னிக்கி டந்து றங்குவாய்

12. யார் உறங்குவதாக கூறப்பட்டுள்ளது?

அ. இராமன்   ஆ. இராவணன்  இ. கும்பகன்னன் ஈ. லக்ஷ்மணன்

13. இப்பாடலில் மாயம்  என்பதன் பொருள்

அ. பொய்      ஆ. உண்மை          இ. நேர்மை    ஈ.  கயமை

14. இக்கவிதை  இடம் பெற்ற நூல் ?

அ. சிலப்பதிகாரம்     ஆ. தேம்பாவணி      இ. கம்பராமாயணம்             ஈ. முல்லைப்பாட்டு

15. இக்கவிதையின் ஆசிரியர்

அ. இளங்கோவடிகள்  ஆ. கம்பர்    இ. நப்பூதனார்         ஈ. கீரந்தையார்

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                                  4×2=8

(21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.)

16. விடைக்கேற்ற வினா அமைக்க.

       அ) நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா என பாராட்டப்படுபவர் பாரதியார்.     

      ஆ) தோளில் காவடியைச் சுமந்தவாறு ஒய்யாராமாக ஆடும் காவடியாட்டம்.

17. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய

     கோடிஉண் டாயினும் இல் – இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.

18. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

19. மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?

20. சிலேடை அணி என்றால் என்ன?

21. எந்தப் பொருளானாலும் அந்தப் பொருளின் உண்மை பொருளைக் காண்பதே அறிவாகும் என உணர்த்தும்  குறளை எழுதுக

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                 5×2=10

22. அடைப்புக் குறிப்புகளில் உள்ளவாறு மாற்றி எழுதுக.

          அவன் உன்னிடம் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை. ( படர்க்கையை முன்னிலையாக, முன்னிலைத் தன்மையாக, தன்மையைப் படர்க்கையாக மாற்றுக )

23.
பா எத்தனை வகைப்படும்? அவை யாவை?

24. பகுபத உறுப்பிலக்கணம் தருக : வாழ்க

25. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக:-  

அ)  சிலை  - சீலை                     ஆ) மடு - மாடு

26. குறிப்பைப் பயன்படுத்தி விடை தருக.

          அ) கொடுத்துச் சிவந்த                   ஆ) அருகில் அமர்க

27. தடித்த தொடர்களின் தொடர்களை வகைப்படுத்துக.

          அ) அன்புச்செல்வன் திறன்பேசியின் தொடுதிரை யில் படித்துக் கொண்டிருந்தார்.

          ஆ) வெண்டைக்காய்ப் பொரியல் மோர்க் குழம்புக்குப் பொருத்தமாக இருக்கும்.

குறிப்பு :- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க;-

        அ) மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

          ஆ) குழந்தைகள் தனித்தனியே எழுதித் தரவேண்டும்.

28. ஐவகை நிலங்களையும் அதன் தன்மைகளையும் குறிப்பிடுக.

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                                2×3=6

29. “ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் “ – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

30. உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

“கவியரங்குகளே தனக்கு இளைப்பாறும் இன்னிழல் சோலைகளாயின!”என்பார் கலைஞர். அறிஞர் கூடும் கவியரங்கத்தை, மக்கள் கூடும் கவியரங்கமாக்கியவர் அவர். பாமரரும் புரிந்து கொள்ளும் எளிமையும் இதயம் தொடும் இனிய சந்தமும் வாய்ந்தவை கலைஞரின் கவிதைகள்.கலைஞர் இயற்றியுள்ள கவிதைகள், ஒன்பது தொகுதிகளாக வெளிவந்துள்ளன. “புறநானூற்றுத்தாய்” என்னும் தலைப்பிலமைந்த வசன கவிதையும் புகழ்பெற்ற ஒன்று.

அ) கவியரங்குகள் குறித்து கலைஞரின் கூற்று யாது?

ஆ) கலைஞரின் கவிதைகள் எப்படிப்பட்டவை?

இ) கலைஞர் இயற்றிய வசன கவிதை எது?

31. சோலைக் காற்றும் மின் விசிறி காற்றும் பேசிக்கொள்வது போல் ஓர் உரையாடல் அமைக்க.

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                     2×3=6

              ( 34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.)

32. அரசனின் ஆட்சி திறத்தை கொடுங்கோன்மை வழியாக வள்ளுவர் கூறும் கருத்துகளை எழுதுக.

33. மன்னன் இடைக்காடானார் என்ற புலவனுக்குச் சிறப்புச் செய்தது ஏன்? விளக்கம் தருக.

34.  அ )  “ அருளைப் பெருக்கி  “ எனத் தொடங்கும் நீதிவெண்பா  பாடலை எழுதுக. (அல்லது)

ஆ) ‘ செம் பொனடிச்‘ – எனத் தொடங்கும் முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் பாடல்.

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                            2×3=6

35. தோட்டத்தில் மல்லிகைப் பூ பறித்த பூங்கொடி, வரும் வழியில் ஆடுமாடுகளுக்குத் தண்ணீர்த் தொட்டியில் குடிநீர் நிரப்பினாள்.வீட்டினுள் வந்தவள் சுவர்க்கடிகாரத்தில் மணி பார்த்தாள்.

  இப்பத்தியில் உள்ள தொகை நிலைத் தொடர்களின் வகைகளை எழுதுக.

36. அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்

      என்பரியும் ஏதிலான் துப்பு – இக்குறளை அலகிடுக.

37. கொண்டுகூட்டுப் பொருள்கோளைச் சான்றுடன் விவரிக்க

 

                                                        பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                     5×5=25

38. அ) கண்ணோட்டம் என்ற அதிகாரத்தில் வள்ளுவர் கூறியுள்ள கருத்துகளுடன் உங்கள் கருத்துகளை ஒப்பிட்டு எழுதுக,   ( அல்லது )

ஆ) தமிழர் மருத்துவமுறைக்கும் நவீன மருத்துவமுறைக்கும் உள்ள தொடர்புக் குறித்து எழுதுக.

39. அ) மருந்தகம் ஒன்றிலிருந்து உங்கள் தாத்தா வாங்கி வந்த மருந்தின் பயன்பாட்டுத் தேதி முடிவடைந்ததை அறிந்த நீங்கள், அந்த மருந்தகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரதுறை ஆய்வாளர் அவர்களுக்கு முறையீட்டுக் கடிதம் ஒன்றை எழுதுக ( அல்லது )


ஆ. உங்கள் பள்ளியில் நடைபெறும் நாட்டுநலப் பணித்திட்ட முகாமின் தொடக்க விழாவில் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்க உரை ஒன்றை உருவாக்குக.

40. அ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக…..

41. சேரனின் மகன் இளவழகன் முதுகலை ஆங்கிலம் படித்து அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளர் பணிக்கு விண்ணபிக்க விரும்புகிறார். தேர்வர் தம்மை இளவழகனாக நினைத்து உரிய படிவத்தை நிரப்புக.

42. அ)  தொலைக்காட்சி நிகழ்வுகளையே பார்த்துக் கொண்டிருக்கும் தம்பி; திறன் பேசியிலேயே  விளையாடிக் கொண்டிருக்கும் தங்கை; காணொளி விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும் தோழன். எப்போதும் சமூக ஊடகங்களில் இயங்கியபடி இருக்கும் தோழி. இவர்கள் எந்நேரமும் நடப்புலகில் இருக்காமல் கற்பனை உலகில் மிதப்பவர்களாக இருக்கிறார்கள்! இவர்களை நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்பட நீங்கள் செய்யும் முயற்சிகளை பட்டியலிடுக.   ( அல்லது )

ஆ) நயம் பாராட்டுக:-

          நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்

நேர்ப்பட வைத்தாங்கே

    குலாவும் அமுதக் குழம்பைக் குடிதொரு

கோல வெறிபடைத்தோம்;

    உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்

ஓட்டி மகிழ்ந்திடுவோம்;

   பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு

பாடுவதும் வியப்போ?           - பாரதியார்

குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

மொழி பெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் நாம் எளிதாகப் பெற முடியும். பல அறிவுத் துறைகளுக்கும் தொழில் துறைகளுக்கும் வெளிநாட்டாரை எதிர்பார்க்காமல் நாமே நமக்கு வேண்டிய அனைத்தையும் உருவாக்கிக் கொள்ள முடியும். மனித வளத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியும். வேலைவாய்ப்புத் தளத்தை விரிவாக்க முடியும்.நாடு,இன மொழி எல்லைகள் கடந்து ஓருலகத் தன்மையைப் பெற முடியும். நாடு விடுதலை பெற்ற பிறகு பல நாட்டு தூதரகங்கள் நம் நாட்டில் நிறுவப்பட்டன. அவை தங்களுடைய இலக்கியம், பண்பாடு, தொழில் வளர்ச்சி, கலை போன்ற்வற்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் தத்தம் மொழிகளைக் கற்றுக் கொடுக்கின்ற முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. இதனைச் சார்ந்து பிற மொழிகளைக் கற்றுத்தரும் தனியார் நிறுவனங்களும் உருவாகியுள்ளன. பள்ளிகளிலும் கல்லுரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் பிறமொழிகளைக் கற்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

( I ). ஓரூலகத் தன்மையைப் பெறுவதற்கான முக்கிய வழிமுறையாக எதனைக் கொள்ளலாம்?

( ii ). பிற மொழிகளைக் கற்பதற்கான வாய்ப்புகளைத் தருவன எவை?

( iii ) தூதரங்களின் முதன்மையான பணிகளில் ஒன்று எது?

( iv ) மொழி பெயர்ப்புக் கல்வியின் பயங்களை எழுதுக.

( v )  இப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு இடுக.

( v )  உரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு தருக..

                                                        பகுதி -V ( மதிப்பெண்கள் : 24)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                      3×8=24

43.அ)  நெகிழிப் பைகளின் தீமையைக் கூறும் பொம்மலாட்டம் உங்கள் பள்ளியின் ஆண்டு விழாவில் நிகழ்த்தப்படுகிறது. அதற்கு பாராட்டுரை ஒன்று எழுதுக   ( அல்லது )

ஆ) தமிழ் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.

44. அ) அழகிரி சாமியின் ஒருவன் இருக்கிறான் கதையில் வெளிப்படும் மனித நேயத்தை விவரிக்கவும்.          ( அல்லது )

ஆ) அன்னமய்யா என்னும் பெயருக்கும், அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் ‘ கோபல்லபுரத்து மக்கள் ‘ கதைப் பகுதி கொண்டு விவரிக்க.

45. குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை எழுதுக

அ) முன்னுரை – உழவுத் தொழில் – உழவர் – உழவுத் தொழிலின் இன்றியாமை – உழவர்களை மதித்தல் – உணவினை வீணாக்கமல் உண்ணுதல் – முடிவுரை   ( அல்லது )

ஆ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பிடுக.

முன்னுரை – ‘ சாலைப் பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு ‘ – சாலை விதிகள் – ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள் – ‘ விபத்தினைத் தவிர்ப்போம் விழிப்புணர்வு தருவோம் ‘ – முடிவுரை.

-------------------------------------------------------------------------------

எங்களது தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் குழுவில் இணைந்து பல பயனுள்ள கற்றல் வளங்களை பெற கீழ் உள்ள QR CODE மூலம் வருடி குழுவில் இணையவும்.

வாட்ஸ் அப் சேனல்             வாட்ஸ் அப் குரூப்             டெலிகிராம்                 முகநூல்

   

                       

     

     JOIN NOW                         JOIN NOW                      JOIN NOW                  JOIN NOW

 

இளந்தமிழ் – வழிகாட்டி மற்றும் வினாவங்கி வேண்டுவோர் தொடர்புக் கொள்ளவும்.

தொடர்பு கொள்ள : 8072426391 

முயற்சி + பயிற்சி = வெற்றி

 click here 

 



Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post