10TH-TAMIL-PUBLIC EXAM-2025-MODEL QUESTIONS -6

தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள்

மாதிரி அரசு பொதுத் தேர்வு – 2024-25

வினாத்தாள் - 6

பத்தாம் வகுப்பு - மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                      மதிப்பெண் : 100

                                                   பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

i)              அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

ii)             கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்.                                     15×1=15

1. காய்ந்த இலையும்,காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது ___

) இலையும்,சருகும்                   ) தோகையும் சண்டும்    

) தாளும் ஓலையும்                    ) சருகும் சண்டும்

2. கீழ்க்கண்டவற்றில் வெளிப்படை விடையைத் தேர்க

அ)  உற்றது உரைத்தல்               ஆ) இனமொழி        இ) மறை       ஈ) ஏவல்

3. பாடு இமிழ் பனிக்கடல் பருகி ‘ என்னும் முல்லைப் பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?

அ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல்          ஆ) கடல் நீர் குளிர்ச்சி அடைதல்

இ) கடல் நீர் ஒலித்தல்                           ஈ) கடல் நீர் கொந்தளித்தல்

4. தூக்குமேடை என்னும் நாடகத்தின் பாராட்டு விழாவில்தான் கலைஞர் என்ற சிறப்புப்பெயர் வழங்கப்பட்டது. இத்தொடருக்கான வினா எது?

அ) தூக்கு மேடை நாடகத்தில் நடித்தவர் யார்?

ஆ) கலைஞர் என்ற சிறப்புப்பெயர் எப்போது வழங்கப்பட்டது?

இ) தூக்கு மேடை என்பது திரைப்படமா? நாடகமா?

ஈ) யாருக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது?

 5. சீவலமாறன் என்ற பட்டப் பெயர் கொண்டவர்___

) அதிவீரராம பாண்டியன்           ) குலேச பாண்டியன்     

) முதலாம் இராசராசன்               ) இரண்டாம் இராசராசன்

6. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது

அ) திருக்குறள்        ஆ) புறநானூறு                  இ) கம்பராமாயணம்  ஈ) சிலப்பதிகாரம்

7. ’ வீட்டைத் துடைத்து சாயம் அடித்தல் ‘ – இவ்வடிகள் குறிப்பிடுவது ---

அ) காலம் மாறுவதை                               ஆ) வீட்டைத் துடைப்பதை

இ) இடையறாது அறப்பணி செய்தலை      ஈ) வண்ணம் பூசுவதை

8. வாய்மையே மழைநீராக – இத்தொடரில் வெளிப்படும் அணி ___

) உவமை            ) தற்குறிப்பேற்றம்           ) உருவகம்           ) தீவகம்

9. ஊர் பெயரின் மரூஉவைத் தேர்க:- மன்னார் குடி

அ) மன்னை    ஆ)  மன்னுகுடி   இ) மாங்குடி              ஈ) மங்குடி

10. குயில்களின் கூவலிசை; புள்ளினங்களின் மேய்ச்சலும்  பாய்ச்சலும்; இலைகளின் அசைவுகள்; சூறைக்காற்றின் ஆலோலம் – நயமிகு தொடருக்கான தலைப்பைத் தேர்க

 அ) உயிர்ப்பின் ஏக்கம்  ஆ) மிதக்கும் வாசம்   இ) வனத்தின் நடனம்  ஈ) காற்றின் பாடல்

11. பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்

   கண்ணோட்டம் இல்லாத கண் – குறளில் பயின்று வரும் அணியைத் தேர்க.

அ) உருவக அணி                                 ஆ) உவமை அணி 

இ) எடுத்துக்காட்டு உவமை அணி            ஈ) தீவக அணி

பாடலைப் படித்து வினாக்களுக்கு (12,13,14,15) விடையளிக்க:-

பூக்கையைக் குவித்துப் பூவே

    புரிவோடு காக்கென்று அம்பூஞ்

சேக்கையைப் பரப்பி இங்கண்

    திருந்திய அறத்தை யாவும்

யாக்கையைப் பிணித்தென்று ஆக

    இனிதிலுள் அடக்கி வாய்ந்த

ஆக்கையை அடக்கி பூவோடு

    அழுங்கணீர் பொழிந்தான் மீதே

12. இப்பாடல் இடம் பெற்ற மோனைச் சொற்களைத் தேர்ந்தெடுக்க

அ. பூக்கை – குவித்து                            ஆ. சேக்கை - இங்கண்     

இ. யாக்கை – ஆக்கை                           ஈ. பூக்கை - பூவே

13. இப்பாடல் இடம்பெற்ற நூல்

அ. முல்லைப்பாட்டு  ஆ. பரிபாடல்             இ. நீதிவெண்பா         ஈ. தேம்பாவணி

14. இப்பாடலின் ஆசிரியர் _______

அ. நப்பூதனார்           ஆ. வீரமாமுனிவர்   இ. கீரந்தையார்           ஈ. குலசேகராழ்வார்

15. சேக்கை என்பதன் பொருள்_____

அ. உடல்                ஆ. மலர்                  இ. படுக்கை            ஈ. காடு

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

குறிப்பு : எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                4×2=8

21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்கவும்

16. விடைக்களுக்கேற்ற வினாக்கள் அமைக்க.:-

அ. இளம்வயதிலேயே கலைஞர் ‘ மாணவ நேசன் ‘ என்னும் கையெழுத்து ஏட்டை நடத்தினார்.

ஆ. ஜப்பானில் சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன் பெப்பர்.

17. வசன கவிதை குறிப்பு வரைக

18. செய்குதம்பி பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக.

19. நச்சப் படாதவன் செல்வம் – இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லுக்குப் பொருள் தருக.

20. மெய்க்கீர்த்தி பாடுவதன் நோக்கம் யாது?

21.  ‘ உலகு ‘ என முடியும் திருக்குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                5×2=10

22.  தீவக அணியின் வகைகள் யாவை?

23.  சொற்களைப் பிரித்துப் பார்த்துப் பொருள் தருக.

          அ) கானடை                     ஆ) பலகையொலி

24. “ கலைஞர், பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர், படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்” – பேராசிரியர் அன்பழகனார். இக்கூற்றை அயற்கூற்றாக எழுதுக.

25. கலைச்சொற்கள் தருக:          அ) STORY TELLER             ஆ) COSMIC RAYS

குறிப்பு: செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

சொல்லைக் கண்டுபிடித்துப் புதிரை விடுவிக்க.

( புதுமை, காற்று, நறுமணம், காடு )

(அ) பழமைக்கு எதிரானது – எழுதுகோலில் பயன்படும்.

(ஆ) ஓரெழுத்தில் சோலை – இரண்டெழுத்தில் வனம்

26. வினைமுற்றை வினையாலணையும் பெயராக மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக.

(அ ) கலையரங்கத்தில் எனக்காகக்  காத்திருக்கிறார் அவரை அழைத்து வாருங்கள்.

(ஆ) நேற்று என்னைச் சந்தித்தவர். அவர் என் நண்பர்.

27. பகுபத உறுப்பிலக்கணம் தருக:- உரைத்த

28 கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய

     கோடிஉண் டாயினும் இல்- இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 ) பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                                   2×3=6

29.  உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க

தலையில் கரகம் என்னும் குடத்தை வைத்துக் கொண்டு ஆடும் கரகாட்டமும் தோளில் காவடியைச் சுமந்தவாறு ஒய்யாரமாக ஆடும் காவடியாட்டமும் மக்களால் விரும்பப்படும் மரபார்ந்த கலைவடிவங்கள்.மயில்வடிவக் கூட்டுக்குள் இருந்துகொண்டு, நையாண்டி மேளத்திற்கு ஏற்ப ஆடும் மயிலாட்டமும் குதிரைவடிவக் கூட்டுக்குள் இருந்து பாதத்துக்குக் கீழ் கட்டையைக் கட்டிக் கொண்டு ‘ டக் டக் ‘ என்று ஆடும் குதிரையாட்டமும் புலி வேடமிட்டு ஆடும் புலியாட்டமும் காண்பதற்கு உற்சாகம் தரக் கூடிய நிகழ்த்துகலைகள். இசைக்கேற்ப துணியைவீசிக் குழுவாக ஆடும் ஒயிலாட்டம், தப்பு என்னும் தோற்கருவியின் தாளத்திற்கு ஆடும் தப்பாட்டம், தேவராட்டம், சேர்வையாட்டம் ஆகியவை கிராமியக் கலைஞர்களால் நிகழ்த்தப்படும் கலைவடிவங்கள்.

அ). மரபார்ந்த கலைவடிவங்கள் எவை?

ஆ). தப்பு என்னும் தோற்கருவியின் தாளத்திற்கு ஆடப்படும் ஆட்டங்கள் எவை?

இ). கரகாட்டம் எவ்வாறு ஆடப்படுகிறது?

30. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்த சிந்தனைகளை முன்வைத்து எழுதுக..

31. ‘ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

பிரிவு – II

குறிப்பு :எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.          வினா எண். 34க்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.                                        2×3=6

32. கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துதலைக் கூத்தராற்றுப் படை எவ்வாறு விளக்குகிறது?.

33. எவையெல்லாம் அறியேன் என கருணையன் கூறுகிறார்?

34.  அடிபிறழாமல் எழுதுக

அ) “ சிறுதாம்பு “ எனத் தொடங்கும் முல்லைப்பாட்டுப் பாடலை எழுதுக  (அல்லது )

ஆ) “ மாற்றம் “ – எனத் தொடங்கும் காலக் கணிதம் பாடலை எழுதுக.

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                          2×3=6

35. வேலோடு நின்றான் இடுஎன்றது போலும்

      கோலொடு நின்றான் இரவு – இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்கி எழுதுக.

36. தன்மை அணி குறித்து எழுதுக.

37 மதிநுட்பம் நூலோ டுடையார்க் கதிநுட்பம்

     யாவுள முன்நிற் பவை   -  இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க.

பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                    5×5=25

38.அ)  ஒழுக்கமுடைமைக் குறித்து வள்ளுவர் கூறும் கருத்துகளை எழுதுக.  ( அல்லது )

ஆ) கருணையனின் தாய் மறைவுக்கு, வீரமாமுனிவர் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.

39. ’ பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல்’ – குறித்த செயல்திட்ட வரைவு ஒன்றை உருவாக்கி, அதற்குத் தலைமை ஆசிரியரின் ஒப்புதல் பெறக் கடிதம் ஒன்று எழுதுக. ( அல்லது )

 ஆ. நீங்கள் படித்த நூல் ஒன்றின் சிறப்புகளைக் குறிப்பிட்டு அந்நூலைப் படிக்குமாறு பரிந்துரை செய்து உங்கள் நண்பருக்குக் கடிதம் ஒன்று எழுதுக..    

40. காட்சியைக் கவினுற எழுதுக.

41. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, வள்ளுவர் நகர், எண் 19 இல் வசித்து வரும்  முகிலன், தந்தை பெயர் நெடுமாறன், அலுவலக உதவியாளர் பணி வேண்டி விண்ணப்பிக்கிறார். தேர்வர் தன்னை முகிலனாக எண்ணி படிவத்தை நிரப்புக.

42. தொலைக்காட்சி நிகழ்வுகளையே பார்த்துக் கொண்டிருக்கும் தம்பி; திறன் பேசியிலேயே  விளையாடிக் கொண்டிருக்கும் தங்கை; காணொளி விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும் தோழன். எப்போதும் சமூக ஊடகங்களில் இயங்கியபடி இருக்கும் தோழி. இவர்கள் எந்நேரமும் நடப்புலகில் இருக்காமல் கற்பனை உலகில் மிதப்பவர்களாக இருக்கிறார்கள்! இவர்களை நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்பட நீங்கள் செய்யும் முயற்சிகளை பட்டியலிடுக.    ( அல்லது )

ஆ) மொழிபெயர்க்க.

Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had  the most fertile lands. The properity of a farmer depended on getting the necessary sunlight,seasonal rains and the fertility of the soil.Among these elements of nature,sunlight was considered indispensible by the ancient Tamils.

குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

 உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

மொழி பெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் நாம் எளிதாகப் பெற முடியும். பல அறிவுத் துறைகளுக்கும் தொழில் துறைகளுக்கும் வெளிநாட்டாரை எதிர்பார்க்காமல் நாமே நமக்கு வேண்டிய அனைத்தையும் உருவாக்கிக் கொள்ள முடியும். மனித வளத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியும். வேலைவாய்ப்புத் தளத்தை விரிவாக்க முடியும்.நாடு,இன மொழி எல்லைகள் கடந்து ஓருலகத் தன்மையைப் பெற முடியும். நாடு விடுதலை பெற்ற பிறகு பல நாட்டு தூதரகங்கள் நம் நாட்டில் நிறுவப்பட்டன. அவை தங்களுடைய இலக்கியம், பண்பாடு, தொழில் வளர்ச்சி, கலை போன்ற்வற்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் தத்தம் மொழிகளைக் கற்றுக் கொடுக்கின்ற முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. இதனைச் சார்ந்து பிற மொழிகளைக் கற்றுத்தரும் தனியார் நிறுவனங்களும் உருவாகியுள்ளன. பள்ளிகளிலும் கல்லுரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் பிறமொழிகளைக் கற்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

( I ). ஓரூலகத் தன்மையைப் பெறுவதற்கான முக்கிய வழிமுறையாக எதனைக் கொள்ளலாம்?

( ii ). பிற மொழிகளைக் கற்பதற்கான வாய்ப்புகளைத் தருவன எவை?

( iii ) தூதரங்களின் முதன்மையான பணிகளில் ஒன்று எது?

( iv ) மொழி பெயர்ப்புக் கல்வியின் பயங்களை எழுதுக.

( v )  இப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு இடுக.

பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                                           3×8=24

43.அ)  தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக் குறிப்புகளை விரிவாக எழுதுக.     ( அல்லது )

ஆ) போராட்டக் கலைஞர் – பேச்சுக் கலைஞர் – நாடகக் கலைஞர் – திரைக் கலைஞர் – இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

44. அ) ‘ கற்கை நன்றே கற்கை நன்றே

         பிச்சை புகினும் கற்கை நன்றே ‘ என்கிறது வெற்றிவேற்கை, மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச்சுடரை ஏற்றிய கதையைப் பற்றி உங்களின் கருத்துகளை விவரிக்கவும்.   ( அல்லது )

ஆ) அழகிரிசாமியின்ஒருவன் இருக்கிறான்சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் குறித்து எழுதுக.

45.அ) முன்னுரை-உழவே தமிழர் பண்பாட்டு மகுடம் – உழவுத் தொழிலும் உழவர்களும் – தமிழர் வாழ்வில் உழவு – இலக்கியங்களில் உழவு - உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்- சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்-முடிவுரை.  கொடுக்கப்பட்ட குறிப்புகளைக் கொண்டு கட்டுரை வரைக..   ( அல்லது )

ஆ) பின்வரும் குறிப்புகளைக் கொண்டு போதை இல்லா புது உலகைப் படைப்போம் என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.

குறிப்புகள் : முன்னுரை – போதைப் பொருட்கள் – போதை பொருளும் சமுதாயமும் – போதை எனும் ஆயுதம் – உடல் நலப் பிரச்சனைகள் – முடிவுரை.

எங்களது தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் குழுவில் இணைந்து பல பயனுள்ள கற்றல் வளங்களை பெற கீழ் உள்ள QR CODE மூலம் வருடி குழுவில் இணையவும்.

வாட்ஸ் அப் சேனல்             வாட்ஸ் அப் குரூப்             டெலிகிராம்                 முகநூல்

      JOIN NOW                        JOIN NOW                      JOIN NOW               JOIN NOW

அரசுப்பொது தேர்வு அடிப்படையில் உருவாக்கப்பட்ட பத்தாம் வகுப்பு இளந்தமிழ் வழிகாட்டி மெல்லக் கற்போர், சராசரியாக கற்போர், மீத்திற மாணவர்கள் என அனைவருக்கும் பயன்படும் படியாக ஒரே வழிகாட்டியாக வடிவமைத்துள்ளோம். அனைத்து வினாக்களுக்கும் உரிய விடைகள் இளந்தமிழ் வழிகாட்டியில் கொடுக்கப்பட்டுள்ளது. படித்து தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுங்கள். வழிகாட்டியினை பெறுவதற்கு 8072426391 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளுங்கள்.

முயற்சி + பயிற்சி = வெற்றி

 மிழ்விதை மற்றும் கல்விவிதைகள்

 CLICK HERE TO GET PDF

CLICK HERE

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post