மாதிரி
அரசு பொதுத் தேர்வு வினாத்தாள் - 5
பத்தாம்
வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
நேரம் : 15 நிமிடம் +
3.00 மணி மதிப்பெண் : 100
பகுதி
– I ( மதிப்பெண்கள் : 15 )
அ) சரியான விடையைத் தேர்வு செய்க. 15×1=15
1.
தாய்லாந்து மன்னரின் முடிசூட்டு விழாவில் _____ பாடப்படும் தமிழ் நூல்கள்
அ) சிலப்பதிகாரம், மணிமேகலை ஆ) குறுந்தொகை, நாலடியார்
இ) திருவெம்பாவை, திருப்பாவை ஈ) திருக்குறள், கொன்றை வேந்தன்
2.
கப்பிய பசியினோடு கடும்பசி ஆகும் தானே – இப்பாடல் வரிகள் இடம் பெற்ற நூல்
அ.
புறநானூறு ஆ. ஐங்குறுநூறு
இ.
விவேகசிந்தாமணி ஈ. நற்றிணை
3. பரஞ்சோதி முனிவர் காலம்____
அ) 17ம் நூற்றாண்டு ஆ)
18ம் நூற்றாண்டு
இ) 19ம் நூற்றாண்டு ஈ)
16ம் நூற்றாண்டு
4. வன்கண்_________ கற்றறிதல்
ஆள்வினையோ
டைந்துடன் ______ தமைச்சு – குறளில் விடுபட்ட இடத்தில்
உரிய சீர்களை நிரப்புக
அ.
மக்கள், ஆண்ட ஆ. குடிகாத்தல், மாண்ட
இ.
ஆட்சி, தாண்ட ஈ. ஆட்சி, மாண்ட
5. கி.பி.ஆறாம் நூற்றாண்டில்
சீனாவுக்குச் சென்ற காஞ்சி மாநகரத்து அரசர்
அ)
அதிவீரராம பாண்டியர் ஆ)
போதிதர்மர்
இ)
இளங்கோவடிகள் ஈ) ராஜராஜசோழன்
6. ஆசிரியத்தளை மிகுதியாகவும்,
வெண்டளை, கலித்தளை ஆகியவை விரவியும் வருவது
அ)
கலிப்பா ஆ) வஞ்சிப்பா இ)
வெண்பா ஈ)
ஆசிரியப்பா
7. தேம்பாவணி உள்ள பாடல்களின்
எண்ணிக்கை
அ)
3315 ஆ) 3615 இ) 3370 ஈ) 3400
8. நாம் ஏன் தமிழ் காக்க
வேண்டும் – என்ற நூலை எழுதியவர்
அ) மா.நன்னன் ஆ)
புதுமைப்பித்தன்
இ) உதய சங்கர் ஈ)
முனைவர் சேதுமணி மணியன்
9 நீடுதுயில் நீக்கப் பாடி வந்த நிலா – என
பாராட்டப்படுபவர்
அ) பாரதியார் ஆ)
பாரதிதாசன் இ) தமிழழகனார் ஈ) வாணிதாசன்
10. இருக்கும் போது உருவமில்லை
இல்லாமல் உயிரினம் இல்லை – புதிருக்கான விடையைத் தேர்க
அ)
விண் மீன் ஆ) காற்று இ) நறுமணம் ஈ)
காடு
11 கூத்தராற்றுப் படை என வழங்கப்படும்
நூல்------
அ)
முல்லைப்பாட்டு ஆ) தனிப்பாடல் திரட்டு இ) மலைபடுகடாம்
ஈ) நற்றிணை
பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-
‘ முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
மெத்த வணிகலமும் மேவலால் – நித்தம்
அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு
இணைகிடந்த தேதமிழ் ஈண்டு “
12.
இப்பாடல் இடம் பெற்ற நூல்
அ.
நற்றிணை ஆ. முல்லைப்பாட்டு இ. குறுந்தொகை ஈ.தனிப்பாடல்
திரட்டு
13.
பாடலில் இடம் பெற்றுள்ள பொருத்தமான அணி
அ.
இரட்டுற மொழிதல் அணி ஆ, தீவக அணி
இ.
வஞ்சப்புகழ்ச்சி அணி ஈ. நிரல்
நிறை அணி
14.
தமிழுக்கு இணையாய்ப் பாடலில் பொருத்தப்படுவது
அ.
சங்கப் பலகை ஆ. கடல் இ. அணிகலன் ஈ. புலவர்கள்
15.
இப்பாடலில் இடம் பெற்றுள்ள அடிஎதுகை சொற்கள்
அ.
முத்தமிழ் – முச்சங்கம் ஆ.
சங்கம் - நித்தம்
இ.
அணைகிடந்தே – இணை கிடந்த ஈ. ஆழிக்கு
– தமிழ்
பகுதி – II
( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 4×2=8
21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.
16. விடைக்கேற்ற வினா அமைக்க.
அ. சம்பாவில் அறுபது
உள்வகைகள் உண்டு.
ஆ. ஜப்பானில் சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன் பெப்பர்.
17.
“ காய்மணி யாகு முன்னர்க் காய்ந்தெனக் காய்ந்தேன்
“ – உவமை உணர்த்தும் கருத்து யாது?
18. நச்சப் படாதவன்
செல்வம் – தடித்தச் சொல்லின் பொருள் தருக.
19. ஆற்றுப்படை என்றால்
என்ன?
20. வசன கவிதை – குறிப்பு வரைக
21. உலகு – எனத்
முடியும் குறளை எழுதுக.
பிரிவு
– 2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5×2=10
22. தஞ்சம் எளியர் பகைக்கு – இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்பாடுகளையும்
தருக
23. மாமழை பெய்கையிலே
மாம்பூவே கண்ணுறங்கு
– தொடர்வகைகளை எழுதுக
24. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக:- வளி
- வாளி
25. கலைச்சொல் தருக அ. COSMIC RAYS ஆ. INTELLECTUAL
26. ஊர்ப்பெயர்களின் மரூஉ எழுதுக. அ. திருநெல்வேலி ஆ. மன்னார் குடி
27. வருக – பகுபத உறுப்பிலக்கணம் தருக
குறிப்பு :- செவி மாற்றுத்
திறனாளர்களுக்கான மாற்று வினா
எதிர்மறையாக எழுதுக :- அ. மீளாத்துயர் ஆ) எழுதாக் கவிதை
28. பொருள் கூறுக:-
அ. கட்புள் ஆ) திருவில்
பகுதி
– III ( மதிப்பெண்கள் -18 ) பிரிவு
– I
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:- 2×3=6
29. உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப்படிப்பைப்
பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார்.அவரிடம் கல்வி கற்பதன் இன்றியமையாமையை
எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?
30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி
அரசர்கள் தங்கள் வரலாறும் பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க விரும்பினார்கள்;
அழியாத வகையில் அதனை கல்லில் செதுக்கினார்கள். சங்க இலக்கியமான பதிற்றுப்பத்துப் பாடல்களின்
இறுதியிலுள்ள பதிகங்கள் இதற்கு முன்னோடி! பல்லவர் கல்வெட்டுகளும் பாண்டியர் செப்பேடுகளிலும்
முளைவிட்ட இவ்வழக்கம், சோழர் காலத்தில் மெய்க்கீர்த்தி எனப் பெயர் பெற்றது.
அ) அரசர்கள் தங்கள் வரலாறும்
பெருமையும் காலம் கடந்தும் நிலைக்க என்ன செய்தனர்?
ஆ) கல்லில் செதுக்குவதற்கு
முன்னோடியாக இருந்தது?
இ) யாருடைய காலத்தில் மெய்க்கீர்த்தி
என பெயர்ப்பெற்றது?
31“ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்
“ – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.
பிரிவு
– II
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.
32. முதல் மழை விழுந்ததும் என்னவெல்லாம் நிகழ்வதாக
கு.பா.ரா “ ஏர் புதிதா?” கவிதையில் கவி பாடுகிறார்?
33. வள்ளுவம்,சிறந்த
அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.
34.அ) “ விருந்தனனாக “ எனத் தொடங்கும் காசிக்காண்டப் பாடலை
அடிமாறாமல் எழுதுக (அல்லது ) ஆ) “ தூசும் துகிரும் “ எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை எழுதுக.
பிரிவு
-III
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
35‘ ஆசிரியப்பாவின்
பொது
இலக்கணத்தை எழுதுக
36. அறனீனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த
பொருள் – இக்குறளை அலகிடுக.
37. நிரல்
நிரை அணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக
பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. 5×5=25
38. அ) சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில்
இலக்கிய உரை எழுதுக.
அன்பும்
பண்பும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ம்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே!
அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே
நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி…. தண்டலை மயில்கள் ஆட….. இவ்வுரையைத் தொடர்க. (
அல்லது )
ஆ) கண்ணோட்டம் என்னும் அதிகாரத்தில் வள்ளுவரின் கூற்றினை
விளக்குக.
39. நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் ‘ உழவுத் தொழிலுக்கு
வந்தனை செய்வோம் ‘ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிரியருக்குக்
கடிதம் எழுதுக. (
அல்லது )
ஆ. பள்ளித்திடலில் கிடைத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும்
அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக்
கடிதம் எழுதுக.
40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.
41. கதவு எண்- 23, பாரதி தெரு, கிருஷ்ணகிரியில் வசித்து வரும்
கண்ணன் மகள் புனிதா, இறகு பந்துப் போட்டியில் பங்கு கொள்வதற்காக விளையாட்டு மேம்பாட்டு
ஆணையத்தில் உறுப்பினராகச் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை புனிதாவாக கருதி உரிய படிவத்தை நிரப்புக.
42. அ) நீங்கள் பள்ளியிலும், வீட்டிலும் நடந்துக் கொள்ளும்
விதத்தை பட்டியலிடுக ( அல்லது )
ஆ)
மொழிபெயர்க்க:-
The Golden sun gets up early in the morning and starts
its bright rays to fade away the dark.The milky clouds start their
wandering.The colourful birds start twitting their morning melodies in
percussion.The cute butterflies dance around the flowers. The flowers fragrance
fills the breeze. The breeze gently blows everywhere and makes everything
pleasant.
குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
மேற்கு
என்பதற்குக் குடக்கு என்னும் பெயருமுண்டு. மேற்கிலிருந்து வீசும் போது நான் கோடை எனப்படுகிறேன்,
மேற்கிலிருந்து அதிக வலிமையோடு வீசுகிறேன். வறண்ட நிலப்பகுதியிலிருந்து வீசுவதால் வெப்பக்காற்றாகிறேன்.
வடக்கு என்பதற்கு வாடை என்னும் பெயருமுண்டு. வடக்கிலிருந்து வீசும்போது நான் வாடைக்காற்று
எனப்படுகிறேன். நான் பனிப்பகுதியிலிருந்து வீசுவதால் மிகவும் குளிர்ச்சியான ஊதைக்காற்று
எனப்படுகிறேன்.
1. மேற்கிலிருந்து வீசும் காற்று யாது?
2. ஊதைக்காற்று என அழைப்பதேன்?
3. மேற்கு என்பதற்கு மற்றொரு பெயர் என்ன?
4. வாடை என்பது எத்திசையைக் குறிக்கிறது?
5. இப்பத்திக்கு ஏற்ற தலைப்பு தருக.
பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )
அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. 3×8=24
43. அ) சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக
வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக. (
அல்லது )
ஆ) தமிழின் சொல்வளம் பற்றியும், புதிய சொல்லாக்கத்திற்கான
தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்புகளை எழுதுக
44. அ அன்னமய்யா என்னும் பெயருக்கும், அவரின் செயலுக்கும்
உள்ள பொருத்தப்பாட்டினைக் ‘ கோபல்லபுரத்து மக்கள் ‘ கதைப் பகுதி கொண்டு விவரிக்க ( அல்லது )
ஆ
நிகழ்வுகளைத் தொகுத்து அறிக்கை எழுதுக.
மகளிர் நாள் விழா
இடம் – பள்ளிக் கலையரங்கம் நாள்
-08.03.2019
கலையரங்கத்தில் ஆசிரியர்கள்,மாணவர்கள்
கூடுதல் – தலைமையாசிரியரின் வரவேற்பு
– இதழாளர் கலையரசியின் சிறப்புரை
– ஆசிரியர்களின் வாழ்த்துரை
– மாணவத் தலைவரின் நன்றியுரை.
45. அ) தமிழின் இலக்கிய வளம் – கல்வி மொழி – பிற மொழிகளில்
உள்ள இலக்கிய வளங்கள் – அறிவியல் கருத்துகள் – பிறத்துறைக் கருத்துகள் – தமிழுக்குச்
செழுமை
மேற்கண்ட குறிப்புகளைக் கொண்டு “ செம்மொழிக்கு வளம் சேர்க்கும்
மொழிபெயர்ப்புக் கலை ‘ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக. ( அல்லது )
ஆ)
உங்கள் பகுதியில்
நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த
நிகழ்வைக் கட்டுரை எழுதுக.
எங்களது தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள்
குழுவில் இணைந்து பல பயனுள்ள கற்றல் வளங்களை பெற கீழ் உள்ள QR CODE மூலம் வருடி குழுவில்
இணையவும்.
வாட்ஸ் அப் சேனல் வாட்ஸ் அப் குரூப்
டெலிகிராம் முகநூல
JOIN NOW JOIN NOW JOIN NOW JOIN NOW
இளந்தமிழ் – வழிகாட்டி
மற்றும் வினாவங்கி வேண்டுவோர் தொடர்புக் கொள்ளவும்.
தொடர்பு கொள்ள :
8072426391
CLICK HERE TO GET PDF