SLM-10TH-MODEL ACHIVEMENT EXAM -3 - 2025

 

மாதிரி அடைவுத் தேர்வு-3- பிப்ரவரி- 2025

 மொழிப்பாடம் – தமிழ்

பத்தாம் வகுப்பு

நேரம் : 2.00 மணி                                                                                         மதிப்பெண் : 100

பகுதி – I ( மதிப்பெண்கள் : 80 )

அ) சரியான விடையைத் தேர்வு செய்க.                                                                                   80×1=80

1. தொழிலைச் செய்யும் கருத்தாவைக் குறிப்பது__________

அ) தொழிற்பெயர்    ஆ) வினைமுற்று      இ) வினையாலணையும் பெயர்   ஈ) பெயர்ச்சொல்


2.‘ மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும்’ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டு குறிப்பு உணர்த்தும் செய்தி.

அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

ஆ) காப்பியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

இ) பக்தி இலக்கியக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

ஈ) சங்கம் மருவிய காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது.

3. பழமைக்கு எதிரானது – எழுதுகோலில் பயன்படும்____________

) விண்மீன்              ) புதுமை     ) நறுமணம்               ) காற்று

4. பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்

   கண்ணோட்டம் இல்லாத கண் – இக்குறளில் பயின்று வரும் அணியைத்  தேர்க

) உவமை அணி                              ) வஞ்சப்புகழ்ச்சி அணி 

) எடுத்துக்காட்டு உவமை அணி     ) சொற்பொருள் பின்வரு நிலையணி

5. பழமொழியை நிறைவு செய்க…… உப்பில்லாப் _________

அ) பண்டம் குப்பையிலே                    ஆ) மருந்தும் மூன்று நாள் 

இ) சோற்றுக்கு ஒரு சோறு பதம்         ஈ) பொருள் குப்பையிலே

6 சிறுவர் நாடோடி கதைகள் என்ற நூலை எழுதியவர் ______________

அ) ஆழகிரிசாமி    ஆ) ஜெயகாந்தன் இ) கி.ராஜநாராயணன்  ஈ) ச.தமிழ்ச்செல்வன்

7. நச்சப் படாதவன் செல்வம் நடுஊருள்

   நச்சு மரம்பழுத் தற்று – இக்குறளில் காணப்படும் உவம உருபுவைத் தேர்க….

) நச்சு     ) செல்வம்           ) தற்று      )  ஊருள்

8. அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் எந்த ஆண்டு நம் பால் வீதி போன்று பல பால் வீதிகள் உள்ளன என நிரூபித்தார்

) 1934                      ) 1944                    ) 1914           ) 1924

9. ‘ இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்’  – என மெச்சிக் கொள்பவர்

அ) பெருஞ்சித்திரனார்   ஆ) பாரதியார்  இ) கண்ணதாசன்    ஈ) பாரதிதாசன்

10. ‘ மனசாட்சி உறங்கும் போது மனக் குரங்கு ஊர் சுற்றக் கிளம்பிவிடுகிறது ‘ என்னும் வசனம் இடம் பெற்ற திரைப்படம்

அ) ராஜா ராணி            ஆ) மனோகரா       இ) காஞ்சித் தலைவன்              ஈ) பூம்புகார்

11. அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

  மருளை அகற்றி மதிக்கும் தெருளை”  -என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?

அ) தமிழ்          ஆ) அறிவியல்            இ) கல்வி        ஈ) இலக்கியம்

12. காற்றின்  ஆற்றலை “ வளி மிகின் வலி இல்லை” எனக் கூறியவர்.

அ) இளநாகனார்  ஆ) ஐயூர் முடவனார்  இ) ஒளவையார்       ஈ) வெண்ணிக்குயத்தியார்

13. ‘ மொழி ஞாயிறு ‘ – என்றழைக்கப்படுபவர் யார்?

அ) தமிழழகனார்          ஆ) கம்பர்        இ) தேவநேயப் பாவாணர்                     ஈ) வைரமுத்து

14. தென்னந்தோட்டம் என்பது _______ வழு

) திணை      ) பால்          )  காலம்        ) மரபு

15. எறும்புந்தன் கையால் எண்சாண் – இத்தொடரில் உள்ள எண்ணுப்பெயர்

அ) எறும்பு       ஆ)  தன்கை              இ) எண்          ஈ) சாண்

16. மலர்விழி பாடினாள் – இத்தொடர்

) பொதுமொழி          ) தனிமொழி        ) தொடர் மொழி           ) அடுக்குத் தொடர்

17. பெய்த மழை – இத் தொடரின் வினைத் தொகை

அ) பெய்யா மழை        ஆ) பெய்யும் மழை    இ) பெய்மழை   ஈ) பெய்கின்ற மழை

18. முல்லை நில மக்களின் உணவுப் பொருள்கள்_____

அ) வெண்நெல்,வரகு ஆ) மலைநெல்,திணை          இ) வரகு,சாமை   ஈ) மீன்,செந்நெல்

19. “ காலின் ஏழடிப் பின் சென்று “ – என்னும் பொருநராற்றுப் படை உணர்த்தும் செய்தி


அ. விருந்தினரின் காலைத் தொட்டு வணங்கினர்

ஆ. விருந்தினரை ஏழு அடி வரை நடந்து சென்று வழியனுப்பினர்

இ. எழுவர் விருந்தினரின் பின் சென்று வழியனுப்பினர்

ஈ. ஏழுநாள்கள் விருந்தளித்துப் பின் விருந்தினரை வழியனுப்பினர்

20. தொடரைப் படித்து விடையைக் காண்க

     குரலில் இருந்து பேச்சு எனில், விரலில் இருந்து_______

அ. சோறு      ஆ. எழுத்து        இ. கரு             ஈ. கற்றல்

21. சிறந்த சிறுகதைகள் பதின்மூன்று என்ற நூலை எழுதியவர் ______________

) வல்லிக்கண்ணன்            ) வெ.ஸ்ரீராம்            ) எம்.பி,அகிலா         ) சா. கந்தசாமி

22. துளிர் பார்த்தாள் – இத் தொடரின் பெயரெச்சத் தொடர்

அ) துளிரே பார்!   ஆ) பார்த்துச் சென்றாள்      இ) பார்த்த துளிர்          ஈ) துளிருடன் பார்த்தேன்

23. நும் நாடு யாது எனில் தமிழ்நாடு என்றல் எனக் கூறியவர்

) அண்ணா               ) இளம்பூரணர்         ) இளங்கோவடிகள்   ) கலைஞர்

24. இளைய தலைமுறையே; எழுவாய்! செயப்படுபொருள் பயனிலையேல் விழுவாய்! என தனக்கே உரிய நடையில் பேசுபவர்

அ) பாரதியார்    ஆ) கண்ணதாசன்      இ) ம.பொ.சி     ஈ) கலைஞர்

25. பாடுவதற்கு தகுதி உடைய ஆண்மகனின் ஒழுக்கலாறுகளை பாடும் திணை

            அ) பெருந்திணை         ஆ) பொதுவியல்       இ) பாடாண்        ஈ) கைக்கிளை

26 இவற்றில் இருவருக்கும் பொதுவாக உள்ள பிள்ளைப் பருவம்

அ) சிற்றில்                  ஆ) அம்மானை           இ) ஊசல்                    ஈ) தால்

27. சிறுகதை மன்னன் என்ற பட்டத்தைப் பெற்றவர்___________

அ) ஜெயகாந்தன்         ஆ) கி.ராஜநாராயணன்    இ) புதுமைப்பித்தன்   ஈ) அழகிரிசாமி

28. பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.

அ) கொண்டல் -         1. மேற்கு          ஆ) கோடை    -          2. தெற்கு

இ) வாடை       -          3. கிழக்கு        ஈ) தென்றல்    -          4. வடக்கு

அ) 1,2,3,4        ஆ) 3,1,4,2                   இ) 4,3,2,1        ஈ) 3,4,1,2

29. தொடரில் விடுபட்ட வண்ணத்தை எண்ணங்களால் நிரப்புக.

 அனைவரின் பாராட்டுகளால் , வெட்கத்தில் பாடகர் முகம் ________

அ) வெள்ளந்தி            ஆ) வெளுத்தது            இ) கருத்தது             ஈ) சிவந்தது

30. செய்கு தம்பி பாவலர் “ சதாவதானி “ என்ற பட்டம் பெற்ற ஆண்டு_______

அ) 1907          ஆ) 1908                     இ) 1909                      ஈ) 1906

31. கம்பன் இசைத்த கவியெல்லாம் நான் – எனப் பெருமைப் படுபவர் _________

அ) பாரதியார்    ஆ) பாரதிதாசன்    இ) குலோத்துங்கன்          ஈ) தனிநாயகம்.

32. காலை 10 மணி முதல் 2 மணி வரை உள்ள பொழுது _______

அ) நண்பகல்               ஆ) காலை                  இ) மாலை       ஈ) யாமம்


33. விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன் கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’ – இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை

அ) நிலத்திற்கேற்ற விருந்து                          ஆ) இன்மையிலும் விருந்து 

இ) அல்லிலும் விருந்து                                  ஈ) உற்றாரின் விருந்து

34. மருத நிலத்திற்கான ஊரைத் தேர்க.

அ) சேரி           ஆ) பட்டினம்              இ) சிறுகுடி                 ஈ) பேரூர்

35. மரபார்ந்த கலைவடிவங்கள் எவை?

அ) கரகம்,காவடி                                  ஆ) மயிலாட்டம்,பொய்க்கால்குதிரை

 இ) தேவராட்டம், பொய்க்கால்குதிரை ஈ) மயிலாட்டம், ஒயிலாட்டம்

36. இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்

  இன்மையே இன்னா தது.- இக்குறளில் பயின்று வரும் அணியைத் தேர்க

அ. உவமை அணி                                           ஆ. வஞ்சப் புகழ்ச்சி அணி      

இ. சொற்பொருள் பின்வருநிலை அணி         ஈ. எடுத்துக்காட்டு உவமை அணி

37. தொடரைப் படித்து விடையைக் கண்டறிக.

கல் சிலைஆகும் எனில் நெல் _______________

அ) சோறு                    ஆ) கற்றல்      இ) எழுத்து                  ஈ) பூவில்

38. கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் எந்த ஆண்டு இணைந்தது?

அ) 1957 நவம்பர் 1      ஆ) 1958 நவம்பர் 10   இ) 1956 நவம்பர் 1      ஈ) 1959 நவம்பர் 10

39. திருபுவனச் சக்ரவர்த்தி என்ற பட்டத்தைக் கொண்டவர்

அ) அதிவீரராம பாண்டியர்                   ஆ) குலேசப் பாண்டியன்

இ) முதலாம் இராசராச சோழன்           ஈ) இரண்டாம் இராசராச சோழன்

40. “ நாற்றிசையும் செல்லாத நாடில்லை” “ ஐந்துசால்பு ஊன்றிய தூண்” – இந்தச் செய்யுள் அடிகளில் இடம்பெற்றுள்ள எண்ணுப்பெயர்களையும் அவற்றிற்கான தமிழ் எண்களையும் தேர்க.

) நான்கு , ஐந்து – ௪ ,௫        ) மூன்று, நான்கு – ௩ , ௪   

) ஐந்து , ஏழு – ௫ , ௭               ) நான்கு , ஆறு – ,

41. நீலச்சட்டை பேசினார் – இத்தொடரில் “ நீலச்சட்டை“என்னும் சொல்லுக்கான தொகையின் வகையைத் தேர்க.

அ) பண்புத்தொகை     ஆ) உவமைத்தொகை இ) அன்மொழித்தொகை      ஈ) உம்மைத்தொகை

42. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது

) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்   

) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காத்தல்   

) அறிவியல் முன்னேற்றம்  ) வெளிநாட்டு முதலீடுகள்

43. சிலப்பதிகாரம் காட்டும் வணிகர்களில் எண்ணெய் விற்பவரைத் தேர்க

) பாசவர்       ) ஓசுநர்        ) கண்ணுள் வினைஞர்       ) பல்நிணவிலைஞர்

44.பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் படிப்பவர் மனதிற்கினிமை ஈந்து தமிழ்ப்பெருமை சாற்றுகிறது. இவற்றில் இடம் பெறும் எண்ணுப்பெயருக்கான தமிழ் எண்ணைத் தேர்க.

) க0,அ         ) அ, உ        ) எ,உ            ) ரு,அ

45. ஊர்ப்பெயர்களின் மரூஉவைத் தேர்க : மன்னார் குடி

அ) மன்னை    ஆ) மன்னார்                இ) மயிலை                 ஈ) மன்னைக்குடி

46. உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம் தீர்ப்பது தான் எனக் கூறுபவர்

அ) நல்லந்துவனார்   ஆ) நல்வேட்டனார்       இ) பூதன் தேவனார்    ஈ) கபிலர்

47. நதிவெள்ளம் காய்ந்துவிட்டால் நதிசெய்த குற்றமில்லை – எனப் பாடுபவர்

அ) கம்பன்       ஆ) கண்ணதாசன்      இ) பாரதியார்    ஈ) பாரதிதாசன்

48. வேர்கடலை,மிளகாய்விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை ________

) குலை வகை ஆ) மணிவகை இ) கொழுந்து வகை ஈ) இலை வகை

49. பாடு இமிழ் பனிக்கடல் பருகி ‘ என்னும் முல்லைப் பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?

அ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல்     ஆ) கடல் நீர் குளிர்ச்சி அடைதல்

இ) கடல் நீர் ஒலித்தல்            ஈ) கடல் நீர் கொந்தளித்தல்

50. காசிக்காண்டம் என்பது __________

அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல் ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்

இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்          ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

51. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

அ) துலா                      ஆ) சீலா                      இ) குலா          ஈ) இலா

52. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்.

அ) உதியன்;சேரலாதன்          ஆ) அதியன்;பெருஞ்சாத்தன்  

இ) பேகன்;கிள்ளிவளவன்      ஈ) நெடுஞ்செழியன்;திருமிடிக்காரி

53. மேன்மை தரும் அறம் என்பது ______________________

அ) கைம்மாறு கருதாமல் அறம் செய்வது 

 ஆ) மறுபிறப்பில் பயன் பெறலாம் என்ற நோக்கில் அறம் செய்வது

இ) புகழ் கருதி அறம் செய்வது                       ஈ) பதிலுதவி பெறுவதற்காக அறம் செய்வது

54 “ பிரிந்தன புள்ளின் கானில்

    பெரிதழுது இரங்கித் தேம்ப   - பாடலடிகளில் அடிக்கோடிட்ட சொற்களின் பொருளைத் தெரிவு செய்க

அ) கிளை, துளை        ஆ) நிலம்,வாட            இ) காடு,வாட               ஈ) காடு,  நிலம்

55. குயில்களின் கூவலிசை,புள்ளினங்களின் மேய்ச்சலும் இலைகளின் அசைவுகள், சூறைக்காற்றின் ஆலோலம்

அ) மொட்டின் வருகை  ஆ) வனத்தின் நடனம்   இ)  உயிர்ப்பின் ஏக்கம்     ஈ) நீரின் சிலிர்ப்பு

56. கட்டுரையைப் படித்து, ஆசிரியர் மாணவர்களுக்குப் பரிசு வழங்கினார் – இத்தொடரில் இடம் பெற்றுள்ள வேற்றுமை உருபுகள்

) ஐ, ஆல்                 ) ஆல், கு                ) ஐ, கு          ) இன், கு

57. ’ தூசும் துகிரும் ஆரமும் அகிலும்’ – இப்பாடலடி இடம் பெற்றுள்ள நூல்

அ) மணிமேகலை        ஆ) தேம்பாவணி          இ) கம்பராமாயணம்      ஈ) சிலப்பதிகாரம்

58. ‘ கானடை’ என்னும் சொல்லைப் பிரித்தால் பொருந்தாத பொருளைக் குறிப்பிடுக.

அ) கான் அடை – காட்டைச் சேர்     ஆ) கால் உடை – காலால் உடைத்தல்

இ) கான் நடை – காட்டுக்கு நடத்தல்   ஈ) கால் நடை – காலால் நடத்தல்

59. இஸ்மத் சன்னியாசி என்பது ____________ சொல்

அ) உருது                   ஆ) பாரசீகம்                 இ) தமிழ்          ஈ) அரேபியம்

60. ’ மயலுறுத்து ‘ என்பதன் பொருள்________

அ. விளங்கச் செய்      ஆ. மயங்கச் செய்        இ. அடங்கச் செய்                   ஈ. சீராக

61. தேர்ப்பாகன் – இத்தொடரில் அமைந்துள்ள தொகையைத் தெரிவு செய்க.

அ) வினைத்தொகை  ஆ) உருபும் பயனும் உடன்தொக்க தொகை

இ) பண்புத் தொகை    ஈ) இருபெயரொட்டுப் பண்புத் தொகை

62. ‘ செங்காந்தள் ‘ என்ற சொல்லில் அமைந்துள்ள தொகையைத் தேர்க.

அ) உவமைத் தொகை   ஆ) பண்புத் தொகை  இ) உம்மைத் தொகை         ஈ) வேற்றுமைத் தொகை

63. சொற்பொழிவாற்றுவது போல ஓசை தருவது____________

அ) செப்பலோசை       ஆ) துள்ளலோசை      இ) அகவலோசை       ஈ) தூங்கலோசை

64. எண்ணமும் எழுத்தும் உயர்ந்திருக்கும் – ஏழை

     கண்ணீரும் பாடலிலே கலந்திருக்கும்  என்ற ஜெயகாந்தன் கவிதையில் இடம் பெறும் கவிஞர்

அ. மருதகாசி   ஆ. பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்  இ. கண்ணதாசன்  ஈ. பாரதியார்

65. கிறித்துவின் வருகையை அறிவித்த முன்னோடி

            அ) வீரமாமுனிவர்       ஆ) அருளப்பன்   இ) சாந்தா சாகிப்     ஈ) ஜி.யு.போப்

66. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

     பண்பும் பயனும் அது – இக்குறளில் பயின்று வரும் அணி

அ) தன்மையணி   ஆ) தீவக அணி     இ) தற்குறிப்பேற்ற அணி  ஈ) நிரல்நிறை அணி

67. எள்ளிலிருந்து எண்ணெய் எடுத்தலின் மிஞ்சுவதைக் குறிக்கும் சரியான சொல்_____

அ) எள்கசடு    ஆ) பிண்ணாக்கு                     இ) ஆமணக்கு                        ஈ) எள்கட்டி

68 கொடுக்கப்பட்ட அனைத்துச் சொற்களும் அமைந்த பொருத்தமான தொடரைத் தேர்க.

மலை,மழை,மேகம்,ஆறு,ஏரி,குளம்

அ) மலைமீது மழை பெய்து ஆற்றுவெள்ளம் ஊரின் வழியே பெருக்கெடுத்து ஓடியது.

ஆ) கருத்த மேகம் மலை மீது மழையைப் பொழிய ஆறு,ஏரி,குளம்,அனைத்தும் நீரால் நிரம்பின.

இ) திரண்ட மேகங்கள் மலையில் மாரியாகி ஆறு,ஏரி,குளங்களில் நிறைந்தன.

ஈ) மலைமீது மழைபொழிய ஏரி குளங்கள் நிறைந்து பின் கடலில் சென்று கலந்தது.

69. சோலையில் பூத்த மணமலர்களில் சுரும்புகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன.இத்தொடரில் அடிக்கோடிட்ட சொற்களுக்குப் பொருத்தமான வேறு சொற்களை எழுதுக.

அ) பூஞ்சோலைகள் – அரும்புகள்                  ஆ) மலை – எறும்புகள் – தேன்

இ) பூஞ்சோலையில் – வண்டுகள் – தேன்     ஈ) கானகம் – வண்டுகள் - நீர்

70. புதிருக்கான விடையை வரிசைப்படி தேர்ந்தெடுக்க.

தவழும்போது ஒரு பெயர்

விழும்போது ஒரு பெயர்

உருளும்போது ஒரு பெயர்

திரண்டோடும் போது ஒரு பெயர் – அவை என்ன?

அ) நீர்,மழை,ஆறு,ஓடை                     ஆ) மேகம்,மழை,நீர்,வெள்ளம். 

இ) மாரி,கார்,நீர், புனல்                          ஈ) மழை,புனல்,மேகம்,நீர்

71. வெட்டிய மரங்களுக்கு ஈடாக ____________ நட்டனர்.

அ) கொடிகளை                      ஆ) நாற்றுகளை         இ) மரங்களை             ஈ) மரக்கன்றுகளை

72. விடுபட்ட உணவு வகைகளை வரிசைப்படுத்துக.

பச்சரிசியைக் கொண்டு _________ செய்து பாசிப்பருப்பினை வறுத்து ________ பிடித்து கேரட்டைத் துருவி நெய்யிட்டு _______ செய்து முடித்த அம்மா, இறுதியாக உருளைக் கிழங்கைச் சீவி _________ செய்து அனைவரையும் உணவு உண்ண அழைத்தார்.

அ) பொங்கள்,உருண்டை,சீவல்,அல்வா                     ஆ) சீவல்,உருண்டை,அல்வா,சீவல்

இ) பொங்கல், உருண்டை,அல்வா,சீவல்                    ஈ) உருண்டை,சீவல்,அல்வா, பொங்கல்

73. மரபுத் தொடருக்கான பொருளைத் தேர்க.            கண்ணும் கருத்தும்

அ) பாதுகாப்பு               ஆ) கவனம்     இ) வேகம்                   ஈ)  சிந்தனை

74. “ காற்றுள்ள போதே தூற்றிக் கொள் “ – இப்பழமொழி உணர்த்தும் சரியான பொருள்

அ) காலம் வருமென்று காத்திருந்தால் செயல் கெட்டு விடும்

ஆ) உரிய காலத்தில் ஒரு செயலை முழுமையாகச் செய்து விட வேண்டும்.

இ) உரிய காலத்தில் காற்றைப் போல செயல்பட வேண்டும்.

ஈ) உரிய காலத்தில் உணர்ந்து உரிய செயலைத் தேட வேண்டும்.

75. மதிநுட்பம் நூலோ டுடையார்க் ____________

    ______ முன்நிற் பவை – விடுபட்ட இடத்தில் பொருத்தமான சீரைத் தேர்க

அ) கதிநுட்பம், யாவுள    ஆ) சதிநுட்பம், யாவும் இ) யாவுள, அறிவு நுட்பம்  ஈ) யாவுள, உலகம்

76. தடக்கை – இச்சொல்லின் இலக்கண குறிப்பு

அ) பண்புத் தொகை                                        ஆ) வினைத் தொகை

இ) மூன்றாம் வேற்றுமைத் தொகை               ஈ) உரிச்சொல் தொடர்

77. கரிகால் பெருவளத்தானைப் புகழ்ந்துப் பாடியவர்

அ) ஒளவையார்           ஆ) வெண்ணிக் குயத்தியார்   இ) ஐயூர் முடவனார்    ஈ) நல்லந்துவனார்

78.உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்

    வடுக்காண் வற்றாகும் கீழ் – இக்குறளில் அமைந்துள்ள அளபெடையைத் தேர்க.

அ) செய்யுளிசை         ஆ) இன்னிசை           இ) சொல்லிசை            ஈ) ஒற்றளபெடை

79. திருவள்ளுவர் தவச்ச்சாலை அமைந்துள்ள ஊர்

அ) மல்லூர்      ஆ) அல்லூர்               இ) நெல்லூர்               ஈ) தேவூர்

80. நாடும் மொழியும் நமதிரு கண்கள் – எனப் பாடியவர்

அ) கண்ணதாசன்       ஆ) பாரதியார்               இ) தேவநேய பாவாணர்           ஈ) இளங்குமரனார்

பகுதி – 2 ( மதிப்பெண் – 20 )

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க                                                                 20×1=20         


ஆ) பாடலைப் படித்து வினாக்களுக்கு (81,82,83,84) விடையளிக்க:-

“ இந்தி ரன்முதற் திசாபாலர் எண் மரும்ஒரு வடிவாகி

வந்தபடி யென நின்று மனுவாணை தனி நடாத்திய

படியானையே பிணிப்புண்பன

வடிமணிச் சிலம்பே யரற்றுவன

செல்லோடையே கலக்குண்பன

வருபுனலே சிறைப்படுவன

மாவே வடுப்படுவன

மாமலரே கடியவாயின “

81. யார் இங்கு பிணிக்கப்படுவதாக கூறப்படுகிறது?

அ. மன்னன்                ஆ. இறைவன்             இ. மக்கள்        ஈ. யானை

82. இப்பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை சொற்கள்

அ. வந்தபடி - நின்று                          ஆ. சிலம்பு – அரற்றுவன   

இ. படியானை – வடிமணி                   ஈ. செல்லோடை - சிறை

83. பாடலில் குறிப்பிடப்படும் திசைபாலகர் எத்தனை பேர்?

அ. 10               ஆ. 9                              இ. 8                         ஈ. 7

84. இலக்கண குறிப்புத் தருக : வருபுனல்

அ. உவமைத் தொகை  ஆ. பண்புத்தொகை  இ. வினைத் தொகை ஈ. அன்மொழித்தொகை

இ) பாடலைப் படித்து வினாக்களுக்கு(85,86,87,88) விடையளிக்க:-

“ அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

            மருளை அகற்றி மதிக்கும் தெருளை

            அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

            பொருத்துவதும் கல்வியென்றே போற்று “

85. பாடல் இடம் பெற்ற நூல் _____

அ) நீதிவெண்பா         ஆ) புறநானூறு   இ) வெற்றிவேற்கை  ஈ) கொன்றை வேந்தன்

86. பாடலின் சீர் மோனைச் சொற்கள்

அ) அருளை அருத்துவதும்                ஆ) அருளை,அறிவை          

இ) அகற்றி,அருந்துணையாய்            ஈ) அறிவை,அகற்றி

87. அருந்துணையாய் – இச்சொல்லைப் பிரித்தால்

அ) அருந்துணை+யாய்                       ஆ) அருந்து + துணையாய்    

இ) அருமை + துணையாய்                 ஈ) அரு + துணையாய்

88. உயிருக்கு அரிய துணையாய் இன்பம் சேர்ப்பது _______


அ) அன்பு        ஆ) கல்வி       இ) மயக்கம்      ஈ) செல்வம்

ஈ) பாடலைப் படித்து வினாக்களுக்கு (89,90,91,92) விடையளிக்க:-

“ செந்தமிழே! உள்ளுயிரே செப்பரிய நின் பெருமை

எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரை விரிக்கும்?

முத்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்

விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும் “

89) ‘ எந்தமிழ்நா’ என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்:

அ) எந் + தமிழ் + நா       ஆ) எந்த + தமிழ் + நா   இ) எம் + தமிழ் + நா   ஈ) எந்தம் + தமிழ் + நா

90) ‘ செந்தமிழ் ‘ என்பது:

அ) பண்புத்தொகை     ஆ) வினைத்தொகை    இ) உவமைத்தொகை          ஈ) உம்மைத்தொகை

91). ‘ உள்ளுயிரே’ என்று கவிஞர் யாரை அழைக்கிறார்?

அ) தம் தாயை    ஆ) தமிழ் மொழியை     இ) தாய் நாட்டை  ஈ) தம் குழந்தையை

92) “ வேறார் புகழுரையும் “ – இத்தொடரில் ‘ வேறார் ‘ என்பது.

அ) தமிழர்        ஆ) சான்றோர்    இ) வேற்று மொழியினர்          ஈ) புலவர்

உ) பாடலைப் படித்து வினாக்களுக்கு (93,94,95,96) விடையளிக்க:-

“ அன்று அவண் அசைஇ, அல்சேர்ந்து அல்கி,

 கன்று எரி ஒள்இணர் கடும்பொடு மலைந்து

சேந்த செயலைச் செப்பம் போகி,

அலங்கு கழை நரலும்  ஆரிப்படுகர்ச்

சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி

நோனாச் செருவின் வலம்ப்டு நோன்தாள்

மான விறல்வேள் வயிரியம் எனினே,”

93. ‘ அசைஇ’ இச்சொல்லின் இலக்கணக் குறிப்பு

அ. வினைத்தொகை  ஆ. பண்புத்தொகை    இ. சொல்லிசை அளபெடை     ஈ. செய்யுளிசை அளபெடை

94. ‘ சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி ‘ – இவ்வடியில் ‘ பாக்கம் ‘ என்னும் சொல்லின் பொருள்

அ. சிற்றூர்      ஆ. பேரூர்       இ. கடற்கரை               ஈ. மூதூர்

95. பாடல் இடம் பெற்ற நூல்

அ. சிலப்பதிகாரம்         ஆ. முல்லைப்பாட்டு   இ. மலைபடுகடாம்       ஈ. காசிக்காண்டம்

96. பாடலில் இடம்பெற்றுள்ள அடி எதுகைச் சொற்கள்

அ. அன்று,கன்று,அலங்கு,சிலம்பு                   ஆ. அன்று,அவண்,அசைஇ,அல்கி


இ. சேந்த,செயலை,செப்பம்,சிலம்பு                 ஈ. அல்கி,எய்தி,போகி,எனினே

ஊ) பாடலைப் படித்து வினாக்களுக்கு (97,98,99,100) விடையளிக்க:-

“ விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்லக்

கரு வளர் வானத்து இசையில் தோன்றி

உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;

உந்து வளி கிளர்ந்த ஊழி ஊழ் ஊழியும் “

97)  ஊழ் ஊழ் – இலக்கணக் குறிப்பு

அ. இரட்டைக் கிளவி ஆ. பண்புத் தொகை   இ. அடுக்குத் தொடர்   ஈ. வினைத் தொகை

98) பாடலின் ஆசிரியர்

அ. கீரந்தையார்  ஆ. பூதஞ்சேந்தனார் இ. நப்பூதனார்                          ஈ. குலசேகராழ்வார்

99) பாடலில் உணர்த்தப்படும் கருத்து

அ. தத்துவக் கருத்து   ஆ. அறிவியல் செய்தி     இ. நிலையாமை      ஈ. அரசியல் அறம்

100) விசும்பு , இசை , ஊழி – பாடலில் இச்சொற்கள் உணர்த்தும் பொருள்கள் முறையே

அ. காற்று, ஓசை, கடல்  ஆ. மேகம், இடி, ஆழம்  இ. வானம், பேரொலி,யுகம்  ஈ. வானம்,காற்று,காலம்

______________________________________________________________________________

எங்களது தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் குழுவில் இணைந்து பல பயனுள்ள கற்றல் வளங்களை பெற கீழ் உள்ள QR CODE மூலம் வருடி குழுவில் இணையவும்.

வாட்ஸ் அப் சேனல்             வாட்ஸ் அப் குரூப்                 டெலிகிராம்                     முகநூல்

        



  

     JOIN NOW                         JOIN NOW                      JOIN NOW                       JOIN NOW

 CLICK HERE TO GET PDF

CLICK HERE

முயற்சி + பயிற்சி = வெற்றி

 

இளந்தமிழ் – வழிகாட்டி மற்றும் வினாவங்கி வேண்டுவோர் தொடர்புக் கொள்ளவும்.

தொடர்பு கொள்ள : 8072426391


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post