10TH-TAMIL-PUBLIC EXAM -2025 - MODEL QUESTION - 1

 

மாதிரி அரசு பொதுத் தேர்வு -வினாத்தாள்-1- 2025

 மொழிப்பாடம் – தமிழ்

பத்தாம் வகுப்பு

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                   மதிப்பெண் : 100

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

அ) சரியான விடையைத் தேர்வு செய்க.                                                                  15×1=15


1.கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்

ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்

இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்

ஈ) அங்கு வறுமை இல்லாததால்

2. நீதிநெறி விளக்கம் என்ற நூலின்  ஆசிரியர் யார்?

) ஒளவையார்  ) அதிவீரராம பாண்டியர்   ) குமரகுருபரர்   ) கம்பர்

3. திருக்குறளிலும்  நாலடியாரிலும் அமைந்த பாவினம்

அ) வெண்பா   ஆ) ஆசிரியப்பா   இ) கலிப்பா        ஈ) வஞ்சிப்பா

4. அறியாத ஒன்றை அறிந்து கொள்வதற்காக வினவும் வினா எது?

அ) அறிவினா  ஆ) அறியா வினா  இ) ஐய வினா   ஈ) கொடை வினா

5. ’ வீட்டைத் துடைத்து சாயம் அடித்தல் ‘ – இவ்வடிகள் குறிப்பிடுவது ---

அ) காலம் மாறுவதை                              ஆ) வீட்டைத் துடைப்பதை

இ) இடையறாது அறப்பணி செய்தலை      ஈ) வண்ணம் பூசுவதை

6. பின் வருவனவற்றுள் கூரான ஆயுதம் எதுவென்று செந்நாப் போதார் கூறுகிறார்?

அ. பெரிய கத்தி                                              ஆ. இரும்புஈட்டி

இ. உழைத்ததால் கிடைத்த ஊதியம்                  ஈ. வில்லும் அம்பும்

7. ‘ இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்’  – என மெச்சிக் கொள்பவர்

அ) பெருஞ்சித்திரனார்   ஆ) பாரதியார்  இ) கண்ணதாசன்    ஈ) பாரதிதாசன்

8. அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

  மருளை அகற்றி மதிக்கும் தெருளை”  -என்று இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?

அ) தமிழ்          ஆ) அறிவியல்            இ) கல்வி        ஈ) இலக்கியம்

9 இளைய தலைமுறையே; எழுவாய்! செயப்படுபொருள் பயனிலையேல் விழுவாய்! என தனக்கே உரிய நடையில் பேசுபவர்

அ) பாரதியார்    ஆ) கண்ணதாசன்      இ) ம.பொ.சி     ஈ) கலைஞர்

10. கம்பன் இசைத்த கவியெல்லாம் நான் – எனப் பெருமைப் படுபவர் _________

அ) பாரதியார்    ஆ) பாரதிதாசன்    இ) குலோத்துங்கன்          ஈ) தனிநாயகம்.

 11. வேர்கடலை,மிளகாய்விதை,மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை ________

) குலை வகை         ) மணிவகை            ) கொழுந்து வகை    ) இலை வகை

பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

விரிந்தன கொம்பில் கொய்த

    வீயென உள்ளம் வாட

எரிந்தன நுதிநச்சு அம்புண்டு

   இரும்புழைப் புண்போல் நோக

பிரிந்தன புள்ளின் கானில்

   பெரிதழுது இரங்கித் தேம்பச்

சரிந்தன அசும்பில் செல்லும்

   தடவிலா தனித்தேன் அந்தோ!

12. மலர் என்னும் பொருள் தரும் சொல் எது?

அ. கொம்பு      ஆ. வீ         இ. கான்        ஈ. அசும்பு

13. இப்பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை சொற்கள்

அ. விரிந்தன – எரிந்தன     ஆ. கொம்பு  – நோக  

இ. இரும்புழை – சரிந்தன   ஈ.  தடவிலா  - தேம்ப

14. இப்பாடல் இடம் பெற்ற நூல் ?

அ. கம்பராமாயணம்   ஆ. தேம்பாவணி      இ. சிலப்பதிகாரம்     ஈ. நீதிவெண்பா

15. இப்பாடலின் ஆசிரியர்

அ. வீரமாமுனிவர்     ஆ. கம்பர்      இ. இளங்கோவடிகள்          ஈ. குலசேகரராழ்வார்

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                                  4×2=8

(21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.)

16. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு எடுத்துக்காட்டுத் தருக.

17. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்கு சான்று தருக,

18. வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?

19. விடைக்கேற்ற வினா அமைக்க.

       அ) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலை எழுதியவர் கால்டுவெல்.     

      ஆ) அறிவியலின் வளர்ச்சி மனிதனின் அறிவை விரிவாக்குகிறது

20. மொழிபெயர்ப்பு என்றால் என்ன ?

21. நற்பண்புடையோரின் நட்பை கைவிடுவது பலமடங்கு தீமை தரும் என உணர்த்தும் திருக்குறளை எழுதுக

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                 5×2=10

22. மரபு வழுவமைதி என்றால் என்ன? அதற்கான சான்று தருக.

23. “ அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

        பண்பும் பயனும் அது “  - இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?

24. பகுபத உறுப்பிலக்கணம் தருக : பதிந்து

25. கலைச்சொல் தருக:- அ) SCREEN PLAY        ஆ) EPIC LITERATURE

26. தொடரில் விடுபட்ட வண்ணங்களை உங்களின் எண்ணங்களால் நிரப்புக.

அ) ____________ மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம் .


ஆ) வெயிலில் அலையாதே; உடல் ____________________

27. ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.

அ) மயிலாப்பூர்                ஆ) நாகப்பட்டினம்

குறிப்பு :- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.

. கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.

ஆ. மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்

28. “ கலைஞர், பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர். படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்”- பேராசிரியர் அன்பழகனார். இக்கூற்றை அயற்கூற்றாக எழுதுக

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                                2×3=6

29. நான்கு திசைகளிலுருந்தும் வீசும் காற்றின் பெயர்களையும் அவற்றின் பயன்களையும் எழுதுக 30. உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

ஆஸ்டிரியா நாட்டுத் தலைநகரமான வியன்னாவில்  அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் பேபிரஸ் தாளில் எழுதப்பட்ட அரிய கையெழுத்துச் சுவடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இச்சுவடி சேர நாட்டுத் துறைமுகமான முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகருக்கும் எகிப்து நாட்டின் அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் வாழ்ந்த கிரேக்க வணிகருக்கும் இடையிலான வணிக ஒப்பந்தம்.இது கி.பி.2ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.

அ) சேர நாட்டின் துறைமுகம் எது?

ஆ) அரிய கையெழுத்துச் சுவடி எந்தத் தாளில் எழுதப்பட்டது?

இ) எகிப்து நாட்டில் உள்ள துறைமுகத்தின் பெயர் யாது?

31. ‘ சுற்றுச் சூழலைப் பேணுவதே இன்றைய அறம் ‘ என்ற தலைப்பில்,பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக. ( குறிப்பு – சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் )

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                     2×3=6

              ( 34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.)

32. பலரிடம் உதவி பெற்றுக் கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர், அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை. அவருக்கு உணர்த்தும் நோக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை?

33. எவையெல்லாம் அறியேன் என்று கருணையன் கூறுகிறார்?

34.  அ )  “மாற்றம்“–எனத் தொடங்கும்  காலக்கணித பாடல்.  (அல்லது)

ஆ) ‘விருந்தினனாக ‘ – எனத் தொடங்கும் காசிகாண்டப் பாடல்

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                            2×3=6

35 கொண்டுக்கூட்டுப் பொருள்கோளை விளக்குக..

36. கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது;மலைப்பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.” – காலப் போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.

37.செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்

     எஃகதனிற் கூரிய தில்  – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.

                                                        பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                     5×5=25

38. அ) பொருளின் சிறப்பை பொருள் செயல் வகையில் என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் கூறியுள்ள கருத்துகளை எழுதுக.    ( அல்லது )

ஆ) சிலப்பதிகார மருவூர்ப் பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.

39. அ) மாநில அளவில் நடைபெற்ற கலைத்திருவிழா ஓவியப்போட்டியில் வெற்றி பெற்ற உனது நண்பனை வாழ்த்தி மடல் எழுதுக.    ( அல்லது )

ஆ.நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் ‘ உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் ‘ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி, அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.

40. அ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக…..

41. வேலூர்  மாவட்டம், ஆனந்தம் நகர், திரு.வி.க. தெருவிலுள்ள 72 ஆம் இலக்க வீட்டில் குடியிருக்கும் இராமன் மகள் ஜோதி, அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறார். அவர் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உறுப்பினராகச் சேர்ந்து கோ-கோ விளையாட்டில் பயிற்சி பெற விரும்புகிறார். தேர்வர் தம்மை ஜோதியாகக் கருதி, கொடுக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தை நிரப்புக.

42. அ)  மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடுக   ( அல்லது )

ஆ) மொழிபெயர்க்க:-

Respected ladies and gentleman. I am Ilangaovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammer for language have also defined grammer for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, Engaland and Worldwide. Though our culture is very old,it has been updates consistently. We should feel proud about our culture. Thank you one and all.

குறிப்பு : குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

 உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

        கருத்தாழமும் வாசக சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ஜெயகாந்தன். சமூக அமைப்பின் சமூக முரண்பாடுகளை எழுத்திலே அப்பட்டமாகக் காட்டியவர் ஜெயகாந்தன். நேர்முக, எதிர்முக விளைவுகளைப் பெற்ரவர். உள்ளடக்க விரிவால் மனிதாபி – மானத்தை வாசகர் நெஞ்சங்களில் விதைத்தவர். இவருடைய படைப்புகளுக்குக் குடியரசுத் தலைவர் விருது., சாகித்திய அகாதெமி விருது, சோவியத்  நாட்டு விருது மற்றும் ஞானபீட விருது,தாமரைத் திரு விருதுகளும் கிடைத்துள்ளன. “ நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு. என் எழுத்துக்கு ஒரு இலட்சியமும் உணடு. நான் எழுதுவது, முழுக்க முழுக்க வாழ்க்கையிருந்து நான் பெறும் கல்வியின் விளைவும், எனது தனி முயற்சியின் பயனுமாகும்” என்று கூறுகிறார் ஜெயகாந்தன். ‘ அர்த்தமே படைப்பின் வடிவத்தை வளமாக்குகிறது’ என்பது அன்னாரின் அசைக்க முடியாத நம்பிக்கை.

( I ). ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் யாவை?

( ii ). மனிதாபிமானத்தை வாசகர் நெஞ்சில் விதைத்தவர் யார்?

( iii ) வாசகர் மனதில் ஜெயகாந்தன் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தினார்?

( iv ) எது படைப்பின் வடிவத்தை வளமாக்குகிறது?.

( v )  உரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு தருக..

                                                        பகுதி -V ( மதிப்பெண்கள் : 24)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                      3×8=24

43.அ) ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை, வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது. அதற்கான சுவரொட்டியை வடிவமைத்து அளிக்க.  (அல்லது)

ஆ) வீட்டில் திண்ணை அமைத்த காரணம் – விருந்தினர் பேணுதல் – தமிழர் பண்பாட்டில் ஈகை – பசித்தவருக்கு உணவிடல் குறிப்புகளைக் கொண்டு உங்கள் வீட்டுக்கு வந்த உறவினவிருக்கு மேற்கொண்ட விருந்தோம்பல் நிகழ்வினை எழுதுக.

44.அ) இராமானுசர் நாடகத்தில் வெளிப்படும் மனித நேயத்தை வெளிப்படுத்துக   (அல்லது)

ஆ) ‘ கற்கை நன்றே கற்கை நன்றே

        பிச்சை புகினும் கற்கை நன்றே ‘ என்கிறது வெற்றி வேற்கை. மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட   புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச்சுடரை ஏற்றிய கதையைப் பற்றிய உங்களின் கருத்துகளை விவரிக்க.

45.அ)  குமரிக் கடல் முனையையும் வேங்கட மலை முகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ் தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும்.எழில் சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத் தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலா வந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து , அணியாகப் பூட்டி அழகூட்டி அகம்மிக மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள்.

இக்கருத்தைக் கருவாகக் கொண்டு ‘ சான்றோர் வளர்த்த தமிழ் ‘ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.    (அல்லது)

ஆ) போராட்டக் கலைஞர் – பேச்சுக் கலைஞர் – நாடகக் கலைஞர் – திரைக் கலைஞர் – இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக 

-------------------------------------------------------------------------------

எங்களது தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் குழுவில் இணைந்து பல பயனுள்ள கற்றல் வளங்களை பெற கீழ் உள்ள QR CODE மூலம் வருடி குழுவில் இணையவும்.

வாட்ஸ் அப் சேனல்             வாட்ஸ் அப் குரூப்             டெலிகிராம்                 முகநூல்



     JOIN NOW                         JOIN NOW                      JOIN NOW                  JOIN NOW

 

முயற்சி + பயிற்சி = வெற்றி

 

இளந்தமிழ் – வழிகாட்டி மற்றும் வினாவங்கி வேண்டுவோர் தொடர்புக் கொள்ளவும்.

தொடர்பு கொள்ள : 8072426391

CLICK HERE


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post