10TH-TAMIL-MODEL 3RD - REVISION EXAM - QUESTION - 2025

 

மாதிரி மூன்றாம் திருப்புதல் தேர்வு -பிப்ரவரி- 2025

 மொழிப்பாடம் – தமிழ்

பத்தாம் வகுப்பு

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                   மதிப்பெண் : 100

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

அ) சரியான விடையைத் தேர்வு செய்க.                                                                  15×1=15


1.‘ மெத்த வணிகலன் ‘ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது  __

அ) வணிக கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்

இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்

ஈ) வணிக கப்பல்களும் அணிகலன்களும்

2. அறிஞருக்கு நூல்,அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது.

) வேற்றுமை உருபு  ) எழுவாய்  ) உவம உருபு   ) ரிச்சொல்

3. அருந்துணை என்பதைப் பிரித்தால் _______________

அ) அருமை + துணை   ஆ) அரு + துணை  இ) அருமை + இணை     ஈ) அரு + இணை

4. முல்லை நில மக்களின் உணவுப் பொருள்கள்_____

அ) வெண்நெல்,வரகு                  ஆ) மலைநெல்,திணை      இ) வரகு,சாமை   ஈ) மீன்,செந்நெல்

5. ’ வீட்டைத் துடைத்து சாயம் அடித்தல் ‘ – இவ்வடிகள் குறிப்பிடுவது ---

அ) காலம் மாறுவதை                              ஆ) வீட்டைத் துடைப்பதை

இ) இடையறாது அறப்பணி செய்தலை      ஈ) வண்ணம் பூசுவதை

6. “ காலின் ஏழடிப் பின் சென்று “ – என்னும் பொருநராற்றுப் படை உணர்த்தும் செய்தி

அ. விருந்தினரின் காலைத் தொட்டு வணங்கினர்

ஆ. விருந்தினரை ஏழு அடி வரை நடந்து சென்று வழியனுப்பினர்

இ. எழுவர் விருந்தினரின் பின் சென்று வழியனுப்பினர்

ஈ. ஏழுநாள்கள் விருந்தளித்துப் பின் விருந்தினரை வழியனுப்பினர்

7. உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம்                                                         

 ) செய்யுள் ) பாடல்     ) கவிதை     ) வசன கவிதை

8. இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்

  இன்மையே இன்னா தது.- இக்குறளில் பயின்று வரும் அணியைத் தேர்க

அ. உவமை அணி                                 ஆ. வஞ்சப் புகழ்ச்சி அணி   

இ. சொற்பொருள் பின்வருநிலை அணி    ஈ. எடுத்துக்காட்டு உவமை அணி

9 அமெரிக்க வானியல் வல்லுநர் எட்வின் ஹப்பிள் எந்த ஆண்டு நம் பால் வீதி போன்று பல பால் வீதிகள் உள்ளன என நிரூபித்தார்

) 1934                 ) 1944               ) 1914        ) 1924

10. தொடரைப் படித்து விடையைக் கண்டறிக.

கல் சிலைஆகும் எனில் நெல் _______________

அ) சோறு               ஆ) கற்றல்    இ) எழுத்து             ஈ) பூவில்

 11. காற்றின்  ஆற்றலை “ வளி மிகின் வலி இல்லை” எனக் கூறியவர்.

அ) இளநாகனார்      ஆ) ஐயூர் முடவனார்   இ) ஒளவையார்      ஈ) வெண்ணிக்குயத்தியார்

பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

“ இந்தி ரன்முதற் திசாபாலர் எண் மரும்ஒரு வடிவாகி

வந்தபடி யென நின்று மனுவாணை தனி நடாத்திய

படியானையே பிணிப்புண்பன

வடிமணிச் சிலம்பே யரற்றுவன

செல்லோடையே கலக்குண்பன

வருபுனலே சிறைப்படுவன

மாவே வடுப்படுவன

மாமலரே கடியவாயின “

12. யார் இங்கு பிணிக்கப்படுவதாக கூறப்படுகிறது?

அ. மன்னன்    ஆ. இறைவன்       இ. மக்கள்     ஈ. யானை

13. இப்பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை சொற்கள்

அ. வந்தபடி - நின்று          ஆ. சிலம்பு – அரற்றுவன   

இ. படியானை – வடிமணி    ஈ. செல்லோடை - சிறை

14. பாடலில் குறிப்பிடப்படும் திசைபாலகர் எத்தனை பேர்?

அ. 10           ஆ. 9                        இ. 8                    ஈ. 7

15. இலக்கண குறிப்புத் தருக : வருபுனல்

அ. உவமைத் தொகை  ஆ. பண்புத்தொகை  இ. வினைத் தொகை  ஈ. அன்மொழித்தொகை

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                                  4×2=8

(21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.)

16. நமக்கு உயிர் காற்று

  காற்றுக்கு வரம் மரம்மரங்களை

  வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம்இது போன்று உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான

  இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக

17. குறிப்பு வரைக – “ சதாவதானம்”

18. வறுமையின் காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை எள்ளி நகையாடுவது குறித்துக் குறளின் கருத்து என்ன?

19. விடைக்கேற்ற வினா அமைக்க.

       அ) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலை எழுதியவர் கால்டுவெல்.     

      ஆ) அறிவியலின் வளர்ச்சி மனிதனின் அறிவை விரிவாக்குகிறது

20. மெய்க்கீர்த்தி பாடப்படுவதன் நோக்கம் யாது?

21. ‘ விடல் ‘ எனத் முடியும் திருக்குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                 5×2=10

22. கீழ்க்காணும் சொற்களின் கூட்டப்பெயர்களைக் கண்டுபிடித்து எழுதுக.   

        கல், பழம் ,புல்,ஆடு

23. “ அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

        பண்பும் பயனும் அது “  - இக்குறளில் பயின்று வந்துள்ள அணியின் இலக்கணம் யாது?

24. பகுபத உறுப்பிலக்கணம் தருக : அமர்ந்தான்

25. கலைச்சொல் தருக:- அ) Philosopher   ஆ) Land breeze

26 நயமிகு தொடர்களைப் படித்து ஏற்ற தலைப்புகளை எடுத்தெழுதுக.

( வனத்தின் நடனம், மிதக்கும் வாசம், காற்றின் பாடல், மொட்டின் வருகை, உயிர்ப்பின் ஏக்கம், நீரின் சிலிர்ப்பு)

அ) கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது.வானம் இருண்டது.வாடைக் காற்று வீசியது.


ஆ) நின்று விட்ட மழை தரும் குளிர் ; சொட்டுச் சொட்டாக விளிம்புகளிலிருந்தும் மரங்களிலிருந்தும் விழும் மழைநீர்பட்டுச் சிலிர்க்கும் உயிரினம்.

27. உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் உருவாக்குக.

அ) சிலை மேல் எழுத்து போல                ஆ) தாமரை இலை நீர் போல

குறிப்பு :- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.

. கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.

ஆ. மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்

28. வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும். துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உரியது. இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                                2×3=6

29. புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர்.திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களை அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காணமுடிகிறது.

இப்படியாக காலமுற்றம், தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகளை எழுதுக.

30. உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

ஆஸ்டிரியா நாட்டுத் தலைநகரமான வியன்னாவில்  அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் பேபிரஸ் தாளில் எழுதப்பட்ட அரிய கையெழுத்துச் சுவடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. இச்சுவடி சேர நாட்டுத் துறைமுகமான முசிறியில் வாழ்ந்த தமிழ் வணிகருக்கும் எகிப்து நாட்டின் அலெக்ஸாண்டிரியா துறைமுகத்தில் வாழ்ந்த கிரேக்க வணிகருக்கும் இடையிலான வணிக ஒப்பந்தம்.இது கி.பி.2ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது.

அ) சேர நாட்டின் துறைமுகம் எது?

ஆ) அரிய கையெழுத்துச் சுவடி எந்தத் தாளில் எழுதப்பட்டது?

இ) எகிப்து நாட்டில் உள்ள துறைமுகத்தின் பெயர் யாது?

31. ‘ சுற்றுச் சூழலைப் பேணுவதே இன்றைய அறம் ‘ என்ற தலைப்பில்,பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பேசுவதற்கான உரைக்குறிப்பு ஒன்றை உருவாக்குக. ( குறிப்பு – சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்கச் சட்டங்கள் இயற்றப்பட்டிருந்தாலும், ஒவ்வொருவரின் உள்ளத்திலும் ஏற்படும் மாற்றமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் )

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                     2×3=6

              ( 34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.)

32. சித்தாளின் மனச் சுமைகள்

     செங்கற்கள் அறியாது – இடஞ்சுட்டிப் பொருள் தருக.

33. கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலைக் கூத்தராற்றுப் படை எவ்வாறு காட்டுகிறது?

34.  அ )  “தூசும் துகிரும்“–எனத் தொடங்கும்  சிலப்பதிகாரம் பாடல்.  (அல்லது)

ஆ) ‘அருளைப் பெருக்கி ‘ – எனத் தொடங்கும் நீதிவெண்பா பாடல்

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                            2×3=6

35 விடையின் வகைகளை எழுதி,அதில் வெளிப்படை விடைகளைப் பற்றி எடுத்துக்காட்டுடன் விளக்குக.

36. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

   இன்மை புகுத்தி விடும். - இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.

37. ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

      தாழா துஞற்று பவர்  – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.

                                                        பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                     5×5=25

38. அ) ‘ பெரியாரைத் துணைகோடல் ‘ என்ற அதிகாரத்தில் வள்ளுவரின் கூற்றினை விளக்கி, உங்கள் கருத்தை எழுதுக.    ( அல்லது )

ஆ) பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள மெய்க்கீர்த்திப் பாடலின் நயத்தை விளக்குக.

39. அ) நீங்கள் படித்த நூல் ஒன்றின் சிறப்புகளைக் குறிப்பிட்டு அந்நூலைப் படிக்குமாறு பரிந்துரை செய்து உங்கள் நண்பருக்குக் கடிதம் ஒன்று எழுதுக.    ( அல்லது )

ஆ. “ பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல் “ என்ற செயல்திட்டம் ஒன்றை உருவாக்கி அது உங்கள் பள்ளியில் தலைமையாசிரியர் ஒப்புதலுடன் செயல்படுத்திட அனுமதி வேண்டி தலைமையாசிரியருக்கு கடிதம் எழுதுக

40. அ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக…..

41. வேலூர்  மாவட்டம், ஆனந்தம் நகர், திரு.வி.க. தெருவிலுள்ள 72 ஆம் இலக்க வீட்டில் குடியிருக்கும் இராமன் மகள் ஜோதி, அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறார். அவர் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உறுப்பினராகச் சேர்ந்து கோ-கோ விளையாட்டில் பயிற்சி பெற விரும்புகிறார். தேர்வர் தம்மை ஜோதியாகக் கருதி, கொடுக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தை நிரப்புக.

42. அ) தொலைக்காட்சி நிகழ்வுகளையே பார்த்துக் கொண்டிருக்கும் தம்பி; திறன் பேசியிலேயே  விளையாடிக் கொண்டிருக்கும் தங்கை; காணொளி விளையாட்டுகளில் மூழ்கியிருக்கும் தோழன். எப்போதும் சமூக ஊடகங்களில் இயங்கியபடி இருக்கும் தோழி. இவர்கள் எந்நேரமும் நடப்புலகில் இருக்காமல் கற்பனை உலகில் மிதப்பவர்களாக இருக்கிறார்கள்! இவர்களை நெறிப்படுத்தி நடைமுறை உலகில் செயல்பட நீங்கள் செய்யும் முயற்சிகளை பட்டியலிடுக.     ( அல்லது )

ஆ) மொழிபெயர்க்க:-

Malar: Devi,switch off the lights when you leave the room

Devi : Yeah! We have to save electricity

Malar : Our nation spends a lot of electricity for lighting up our streets in the night.

Devi: Who knows? In future our country may launch artificial moons to light our night time sky!

Malar: I have read some other countries are going to launch these types of illumination satellites near future.

Devi: Superb news! If we launch artificial moons,they can assist in disaster relief by beaming light on areas that lost power!

குறிப்பு : குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

 உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

        கருத்தாழமும் வாசக சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ஜெயகாந்தன். சமூக அமைப்பின் சமூக முரண்பாடுகளை எழுத்திலே அப்பட்டமாகக் காட்டியவர் ஜெயகாந்தன். நேர்முக, எதிர்முக விளைவுகளைப் பெற்ரவர். உள்ளடக்க விரிவால் மனிதாபி – மானத்தை வாசகர் நெஞ்சங்களில் விதைத்தவர். இவருடைய படைப்புகளுக்குக் குடியரசுத் தலைவர் விருது., சாகித்திய அகாதெமி விருது, சோவியத்  நாட்டு விருது மற்றும் ஞானபீட விருது,தாமரைத் திரு விருதுகளும் கிடைத்துள்ளன. “ நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு. என் எழுத்துக்கு ஒரு இலட்சியமும் உணடு. நான் எழுதுவது, முழுக்க முழுக்க வாழ்க்கையிருந்து நான் பெறும் கல்வியின் விளைவும், எனது தனி முயற்சியின் பயனுமாகும்” என்று கூறுகிறார் ஜெயகாந்தன். ‘ அர்த்தமே படைப்பின் வடிவத்தை வளமாக்குகிறது’ என்பது அன்னாரின் அசைக்க முடியாத நம்பிக்கை.

( I ). ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் யாவை?

( ii ). மனிதாபிமானத்தை வாசகர் நெஞ்சில் விதைத்தவர் யார்?

( iii ) வாசகர் மனதில் ஜெயகாந்தன் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தினார்?

( iv ) எது படைப்பின் வடிவத்தை வளமாக்குகிறது?.

( v )  உரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு தருக..

                                                        பகுதி -V ( மதிப்பெண்கள் : 24)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                      3×8=24

43.அ) போராட்டக் கலைஞர் – பேச்சுக் கலைஞர் – நாடகக் கலைஞர் – திரைக் கலைஞர் – இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக  (அல்லது)

ஆ) தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில்  பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.

44.அ) “ மங்கையராய்ப் பிறப்பதற்கே “ என்னும் பாடத்தில் இடம் பெற்றுள்ள மூவர் பற்றி சுருக்கி எழுதுக.   (அல்லது)

ஆ) அழகர்சாமியின் ‘ ஒருவன் இருக்கிறான் ‘ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் குறித்து எழுதுக.

45.அ)  கீழ்க்காணும் தலைப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

முன்னுரை – வெள்ளி விழா கண்ட வள்ளுவர் சிலை –திருவள்ளுவரின் பெருமை – விழா ஏற்பாடுகள் – சிறப்பு விருந்தினர்களின் சிறப்புரை – முடிவுரை (அல்லது)

ஆ) மனித நேயமிக்க ஆளுமை ஒருவருக்கு குறிப்புகளைப் பயன்படுத்தி நினைவிதழ் ஒன்று உருவாக்குக.

முன்னுரை – என் இளமைப் பருவம் – விடுதலைப் போராட்டத்தில் நான் – பொது நலமே தன்னலம் – எளிமையே அறம் – நாட்டின் முன்னேற்றமே நோக்கம் – எளியோரின் அன்பே சொத்து – முடிவுரை

எங்களது தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் குழுவில் இணைந்து பல பயனுள்ள கற்றல் வளங்களை பெற கீழ் உள்ள QR CODE மூலம் வருடி குழுவில் இணையவும்.

வாட்ஸ் அப் சேனல்             வாட்ஸ் அப் குரூப்             டெலிகிராம்                 முகநூல்

            

     JOIN NOW                         JOIN NOW                      JOIN NOW                  JOIN NOW

 CLICK HERE TO GET PDF

CLICK HERE

முயற்சி + பயிற்சி = வெற்றி

 

இளந்தமிழ் – வழிகாட்டி மற்றும் வினாவங்கி வேண்டுவோர் தொடர்புக் கொள்ளவும்.

தொடர்பு கொள்ள : 8072426391

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post