மாதிரி
மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள்-2 - 2025
பத்தாம்
வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 100
_________________________________________________________________________
பகுதி
– I ( மதிப்பெண்கள் : 15 )
அ) சரியான விடையைத் தேர்வு செய்க. 15×1=15
1.
‘ இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்’
– என மெச்சிக் கொள்பவர்
அ) பெருஞ்சித்திரனார் ஆ) பாரதியார்
இ) கண்ணதாசன் ஈ) பாரதிதாசன்
2. காய்ந்த இலையும்,காய்ந்த
தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது
அ) இலையும்,சருகும் ஆ)
தோகையும் சண்டும்
இ) தாளும் ஓலையும் ஈ)
சருகும் சண்டும்
3. தென்னந்தோட்டம் என்பது _______ வழு
அ)
திணை ஆ) பால் இ) காலம் ஈ) மரபு
4. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்________________
அ) அகவற்பா ஆ)
வெண்பா இ) வஞ்சிப்பா ஈ) கலிப்பா
5.
இளைய தலைமுறையே; எழுவாய்! செயப்படுபொருள் பயனிலையேல் விழுவாய்!
என தனக்கே உரிய நடையில் பேசுபவர்
அ)
பாரதியார் ஆ) கண்ணதாசன் இ) ம.பொ.சி ஈ) கலைஞர்
6. சிறுகதை மன்னன் என்ற பட்டத்தைப் பெற்றவர்___________
அ) ஜெயகாந்தன் ஆ) கி.ராஜநாராயணன் இ) புதுமைப்பித்தன் ஈ) அழகிரிசாமி
7. பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ)
கொண்டல் - 1. மேற்கு ஆ) கோடை - 2. தெற்கு
இ)
வாடை - 3.
கிழக்கு ஈ) தென்றல் - 4.
வடக்கு
அ) 1,2,3,4 ஆ)
3,1,4,2 இ) 4,3,2,1 ஈ) 3,4,1,2
8. தொடரைப் படித்து விடையைக் கண்டறிக. கல் சிலைஆகும் எனில் நெல் ____
அ) சோறு ஆ) கற்றல் இ) எழுத்து ஈ) பூவில்
9 சிலப்பதிகாரம் காட்டும் வணிகர்களில் எண்ணெய்
விற்பவரைத் தேர்க
அ) பாசவர் ஆ)
ஓசுநர் இ)
கண்ணுள் வினைஞர் ஈ)
பல்நிணவிலைஞர்
10. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?
அ) துலா ஆ)
சீலா இ) குலா ஈ) இலா
11
சொற்பொழிவாற்றுவது போல ஓசை தருவது____________
அ) செப்பலோசை ஆ)
துள்ளலோசை இ) அகவலோசை ஈ) தூங்கலோசை
பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-
உணர்வினொத்து
உறுப்பும் இல்லா
மெய்முறை அறியேன்; மெய்தான்
விரும்பிய உணவு தேடச்
செய்முறை அறியேன் ; கானில்
செல்வழி அறியேன்; தாய்தன்
கைமுறை அறிந்தேன் தாயும்
கடிந்தெனைத் தனித்துப் போனாள்“
12.
இப்பாடல் இடம் பெற்ற நூல்
அ. சிலப்பதிகாரம் ஆ. முல்லைப்பாட்டு இ. பரிபாடல் ஈ.தேம்பாவாணி
13.
இப்பாடலின் ஆசிரியர்_____
அ. இளங்கோவடிகள் ஆ, வீரமாமுனிவர் இ. குமரகுருபரர் ஈ. கீரந்தையர்
14.
மெய்முறை என்பதன் இலக்கணக் குறிப்பு தருக.
அ. வினைத்தொகை ஆ. வேற்றுமைத்தொகை
இ. உருபும் பயனும் உடன் தொக்கத்தொகை ஈ. உவமைத் தொகை
15.
இப்பாடலில் கான் என்பதன் பொருள்
அ.
உணவு ஆ. காணுதல் இ.
காடு ஈ. வழி
பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1
எவையேனும்
நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 4×2=8
21
ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.
16.
விடைக்கேற்ற வினா அமைக்க.
அ. ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து 5000 நூல்கள்
வரை மொழி பெயர்க்கப்படுகின்றன.
ஆ. 17ஆம் நூற்றாண்டில் படைக்கப்பட்டது
தேம்பாவணி
17. பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ – வினவுவது ஏன்?
18. உறங்குகின்ற கும்பகன்ன ‘ எழுந்திராய் எழுந்திராய்’ காலதூதர்
கையிலே ‘ உறங்குவாய் உறங்குவாய் ‘ கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு
அவனை உறங்கச் சொல்கிறார்கள்?
19. கரப்பிடும்பை இல்லார் – இத்தொடரின்
பொருள் கூறுக
20.
வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.
21. பொருள் – என முடியும் குறளை எழுதுக.
பிரிவு – 2
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5×2=10
22.
புறத்திணைகளில் எதிரெதிர் திணைகளை அட்டவணைப்படுத்துக.
23.
குறள் வெண்பாவின் இலக்கணம் எழுதி எடுத்துக்காட்டுத் தருக.
24.
வினைமுற்றை வினையாலணையும் பெயராக
மாற்றித் தொடர்களை இணைத்து எழுதுக
அ.
.கலையரங்கத்தில் எனக்காகக்
காத்திருக்கிறார்.அவரை அழைத்து வாருங்கள்.
ஆ.
ஊட்டமிகு உணவு உண்டார்.அவர்
நீண்ட வாழ்நாள் பெற்றார்.
25.
கலைச்சொல் தருக அ. Story teller ஆ.
WHIRLWIND
26.
பழமொழியை நிறைவு செய்க.
அ)
உப்பிட்ட வரை ___________ ஆ) விருந்தும்
மருந்தும் _______
27.
தொடர்களைக் கண்டு பொருத்தமான தொடர் அமைக்க.
அ. வரப்போகிறேன் ஆ.
முன்னுக்குப் பின்
குறிப்பு
:- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
கூட்டப்பெயர்களைக்
காண்க :- அ. புல் ஆ)
கல்
28.
சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?
பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )
பிரிவு – I
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:- 2×3=6
29.
சோலைக்(பூங்கா)காற்றும் மின் விசிறிக் காற்றும் பேசிக்கொள்வது போல் ஓர் உரையாடல் அமைக்க.
30.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி
வாய்மையைச்
சிறந்த அறமாகச் சங்க இலக்கியஙகள் பேசுகின்றன.வாய்மை
பேசும் நாவே
உண்மையான நா என்ற கருத்தை, “பொய்யாச் செந்நா”. ,“பொய்படுபறியா வயங்கு செந்நா” என்று இ்லக்கியஙகள்
கூறுகின்றன. நாக்கு ஓர் அதிசயத் திறவுகோல் என்பார்கள். இன்பத்தின் கதவைத் திறப்பதுவும் அதுதான். துன்பத்தின் கதவை
திறப்பதுவும் அதுதான். மெய் பேசும் நா மனிதனை உயர்த்துகிறது. பொய்பேசும் நா மனிதனைத் தாழ்த்துகிறது.,
அ) உண்மையான நா என்பதனை இலக்கியங்கள்
எவ்வாறு கூறுகின்றன?
ஆ) நாக்கு ஓர் அதிசய திறவுகோல் என கருத
காரணம் யாது?
இ) எது சிறந்த அறமாக இலக்கியங்கள் பேசுகின்றன?
31
முன்னுரையில்
முகம் காட்டும் ஜெயகாந்தன் குறித்து எழுதுக.
பிரிவு – II
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
34
ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.
32.
தமிழர்மருத்துவமுறைக்கும்
நவீன மருத்துவமுறைக்கும் உள்ள தொடர்புக் குறித்து எழுதுக.
33.
மன்னன்,
இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்பு செய்தது ஏன்?
34.அ)
“ வாளால் “ எனத் தொடங்கும் பெருமாள் திருமொழி
பாடலை அடிமாறாமல் எழுதுக (அல்லது ) ஆ)
“
தண்டலை “ – எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை எழுதுக.
பிரிவு -III
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
35
தன்மையணி
என்பதனை விளக்கி, அதன் வகைகளை குறிப்பிடுக.
36.
கொண்டு
கூட்டுப் பொருள்கோளினை விளக்கி, எடுத்துக்காட்டு ஒன்று தருக.
37.
தொழுதகை
யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து. – அலகிட்டு வாய்பாடு தருக.
பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்க. 5×5=25
38.
அ) நதியின்
பிழையன்று
நறும்புனலின்மை
அன்றே
பதியின்
பிழையன்று
பயந்த
நம்மைப் புரந்தான்
மதியின்
பிழையன்று
மகன்
பிழையன்று மைந்த
விதியின்
பிழை நீ
இதற்கென்னை
வெகுண்டதென்றன் - கம்பன்
நதிவெள்ளம்
காய்ந்து விட்டால்
நதிசெய்த
குற்றம் இல்லை
விதிசெய்த
குற்றம் இன்றி
வேறு
– யாரம்மா ! -
கண்ணதாசன்
கவிச்
சக்கரவர்த்தியின் கவிதையையும், கவியரசின் கவிதையையும் ஒப்பிட்டுக் கருத்துகளை எழுதுக. ( அல்லது )
ஆ) பொருள் செயல் வகை அதிகாரம் மூலம் திருவள்ளுவர் கூறும் கருத்துகளை
எழுதுக.
39.
“
பள்ளித் தூய்மை – செயல்திட்டம் ‘ ஒன்றை உருவாக்கி மாணவர்களின் சார்பாக மாணவர் தலைவரான
நீங்கள், உங்கள் பள்ளியின் தலைமையாசிரியருக்குக் கடிதம் ஒன்று எழுதுக.(அல்லது)
40.
படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.
42.
அ) தூய்மையான
காற்றைப் பெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளாக நீங்கள் கருதுவனவற்றை ஐந்து தொடர்களில்
பட்டியலிடுக. ( அல்லது )
ஆ)
மொழிபெயர்க்க:-
யாழிசை அறைக்குள்
யாழிசை ஏதென்று சென்று எட்டிப்
பார்த்தேன் பேத்தி, நெட்டுரு
பண்ணினாள் நீதிநூல் திரட்டையே - பாரதிதாசன் |
Its like new lute
music Wondering
at the lute music Coming from the Chamber Entered
I to Look up to in still My grand – daughter Learning
by rote the verses – Of a didactic compilation - Translated
by Kavignar Desini |
அ. Lute music - ஆ.
Grant-daughter - இ. To
look up -
ஈ.
Rote - உ.
Didactic compilation –
குறிப்பு
: செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
உரைப்பத்தியைப்
படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
மொழி
பெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் நாம் எளிதாகப் பெற முடியும்.
பல அறிவுத் துறைகளுக்கும் தொழில் துறைகளுக்கும் வெளிநாட்டாரை எதிர்பார்க்காமல் நாமே
நமக்கு வேண்டிய அனைத்தையும் உருவாக்கிக் கொள்ள முடியும். மனித வளத்தை முழுமையாகப் பயன்படுத்த
முடியும். வேலைவாய்ப்புத் தளத்தை விரிவாக்க முடியும்.நாடு,இன மொழி எல்லைகள் கடந்து
ஓருலகத் தன்மையைப் பெற முடியும். நாடு விடுதலை பெற்ற பிறகு பல நாட்டு தூதரகங்கள் நம்
நாட்டில் நிறுவப்பட்டன. அவை தங்களுடைய இலக்கியம், பண்பாடு, தொழில் வளர்ச்சி, கலை போன்ற்வற்றை
அறிமுகப்படுத்தும் நோக்கில் தத்தம் மொழிகளைக் கற்றுக் கொடுக்கின்ற முயற்சியை மேற்கொண்டு
வருகின்றன. இதனைச் சார்ந்து பிற மொழிகளைக் கற்றுத்தரும் தனியார் நிறுவனங்களும் உருவாகியுள்ளன.
பள்ளிகளிலும் கல்லுரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் பிறமொழிகளைக் கற்கும் வாய்ப்புகள்
உருவாக்கப்பட்டுள்ளன.
(
I ). ஓரூலகத் தன்மையைப் பெறுவதற்கான முக்கிய வழிமுறையாக எதனைக் கொள்ளலாம்?
(
ii ). பிற மொழிகளைக் கற்பதற்கான வாய்ப்புகளைத் தருவன எவை?
(
iii ) தூதரங்களின் முதன்மையான பணிகளில் ஒன்று எது?
(
iv ) மொழி பெயர்ப்புக் கல்வியின் பயங்களை எழுதுக.
(
v ) இப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு இடுக.
பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )
அனைத்து
வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.
3×8=24
43.
அ) நாட்டு
விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு . குறிப்புகளைக்
கொண்டு ஒரு பக்க அளவில் “ மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும் “ என்ற தலைப்பில்
மேடை உரை எழுதுக. ( அல்லது )
ஆ)
உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து
எழுதுக.
( அல்லது )
ஆ
குறிப்புகளைக்
கொண்டு நாடகம் எழுதுக
மாணவன்
– கொக்கைப் போல,கோழியைப்
போல – உப்பைப் போல – இருக்க வேண்டும் – கொக்கு
காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும் – குப்பையைக்
கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழி – கண்ணுக்குத்
தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணரமுடியும் – ஆசிரியர்
விளக்கம் – மாணவன் மகிழ்ச்சி.
45.
அ) குறிப்புகளைக்
கொண்டு கட்டுரை எழுதி தலைப்பு ஒன்று தருக.
முன்னுரை
– மனித வாழ்வு அறம் சார்ந்தது – இலக்கியம் காட்டும் அறம் – அறத்தான் வருவதே இன்பம்
- முடிவுரை
(
அல்லது )
ஆ)
குறிப்புகளைக்
கொண்டு கட்டுரை எழுதுக
குறிப்புகள் : முன்னுரை – காற்று – உயிர் காரணி– மழை காரணி - காற்று மாசுபாடு காரணங்கள் – களையும் வழிகள் – – முடிவுரை