10TH-TAMIL-2ND REVISION - MODEL QUESTION PAPER - 2025

 

மாதிரி இரண்டாம் திருப்புதல் தேர்வு - ஜனவரி- 2025

வினாத்தாள் - 1

 மொழிப்பாடம் – தமிழ்

பத்தாம் வகுப்பு

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                              மதிப்பெண் : 100

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

அ) சரியான விடையைத் தேர்வு செய்க.                                                                                   15×1=15

1.  குயில்களின் கூவலிசை,புள்ளினங்களின் மேய்ச்சலும் இலைகளின் அசைவுகள், சூறைக்காற்றின் ஆலோலம்

அ) மொட்டின் வருகை                      ஆ) வனத்தின் நடனம்

இ)  உயிர்ப்பின் ஏக்கம்                        ஈ) நீரின் சிலிர்ப்பு

2. தமிழினத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதியது.

அ) திருக்குறள்           ஆ) புறநானூறு            இ) கம்பராமாயணம்                  ஈ) சிலப்பதிகாரம்

3. போரில் வெற்றி பெற்ற மன்னன் சூடிக் கொள்ளும் பூவைத் தேர்க

அ)  கரந்தைப் பூ            ஆ) வாகைப் பூ          இ) தும்பைப்பூ                          ஈ) நொச்சிப்பூ

4. தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே

   வேளாண்மை என்னும் செருக்கு – இக்குறட்பாவில் இடம் பெறும் அடி எதுகைச் சொற்களைத் தேர்க

அ) தாளாண்மை – தகைமைக்கண்   ஆ) தாளாண்மை – வேளாண்மை

 இ) தகைமைக்கண் - தங்கிற்றே                   ஈ) வேளாண்மை - செருக்கு

5. ‘ எய்துவர் எய்தாப் பழி’ – இக்குறளடிக்கு பொருந்தும் வாய்பாடு எது?

அ) கூவிளம் தேமா மலர்         ஆ) கூவிளம் புளிமா நாள்      

இ) தேமா புளிமா காசு              ஈ) புளிமா தேமா பிறப்பு

6. கீதாஞ்சலி என்ற நூலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர்

அ) ராகுல் சாங்கிருத்யாயன்                ஆ) கணமுத்தையா    

இ) யூமா வாசுகி                                   ஈ) இரவீந்தநாத் தாகூர்

7. ஆண் குழந்தையை “ வாடிச் செல்லம் “ என்று கொஞ்சுவது

அ) பால் வழுவமைதி  ஆ) திணை வழுவமைதி          இ) மரபு வழுவமைதி ஈ) கால வழுவமைதி

8. இரு நாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடிப் போரிடுவதன் காரணம்

அ) நாட்டைக் கைப்பற்றல்                  ஆ) ஆநிரை கவர்தல் 

இ) வலிமையை நிலைநாட்டல்            ஈ) கோட்டையை முற்றுகையிடல்

9 மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் புகழ்மிக்க பகுதியில் உள்ள தமிழ் தெரு   _______

அ) கரிகாலன் தெரு               ஆ) இராஜேந்திர சோழன் தெரு        

இ) இராச சோழன் தெரு         ஈ) குலோத்துங்கன் தெரு

10. சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி ‘ என்னும் அடியில் பாக்கம் என்பது --------

அ) புத்தூர்        ஆ) மூதூர்       இ) பேரூர்        ஈ) சிற்றூர்

 11. இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும்,எழுதுவதும்  _

அ) வழாநிலை   ஆ) வழுநிலை     இ) வழுவமைதி ஈ) கால வழுவமைதி

பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

‘ முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்

 மெத்த வணிகலமும் மேவலால் – நித்தம்

அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு

இணைகிடந்த தேதமிழ் ஈண்டு “

12.இப்பாடல் இடம் பெற்ற நூல்

அ. நற்றிணை             ஆ. முல்லைப்பாட்டு          இ. குறுந்தொகை     ஈ.தனிப்பாடல் திரட்டு

13. பாடலில் இடம் பெற்றுள்ள பொருத்தமான அணி

அ. இரட்டுற மொழிதல் அணி  ஆ, தீவக அணி             இ. வஞ்சப்புகழ்ச்சி அணி       ஈ. நிரல் நிறை அணி

14. தமிழுக்கு இணையாய்ப் பாடலில் பொருத்தப்படுவது

அ. சங்கப் பலகை        ஆ. கடல்         இ. அணிகலன்                        ஈ. புலவர்கள்

15. தொழிற்பெயர் அல்லாத சொல்

அ. துய்த்தல்                ஆ. அணிகலன்           இ. மேவல்                  ஈ. காணல்

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                                   4×2=8

(21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.)

16. குறிப்பு வரைக:- அவையம்

17. விடைக்கேற்ற வினா அமைக்க.

       அ) உண்மையான செல்வம் என்பது பிறர்துன்பம் தீர்ப்பதுதான் என்கிறார் நல்வேட்டனார்

       ஆ) சாலைகளின் இடப்பக்கம் வண்டிகள் செல்வதே சாலை விதிகளில் முதன்மையான விதி.

18. மருத்துவத்தில் மருந்துடன் அன்பும் நம்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.

19. எதற்காக எழுதுகிறேன்? என்று ஜெயகாந்தன் கூறிய காரணம் ஒன்றினைக் குறிப்பிடுக.

20. மன்னும் சிலம்பே!மணிமே கலைவடிவே!

   முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! – இவ்வடிகளில் இடம் பெற்றுள்ள ஐம்பெருங்காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

21. ‘ செயல் ‘ முடியும் திருக்குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                          5×2=10

22. மாடிலிருந்து இறங்கினார் முகமது. அவர் பாடகர். பாடல்களைப் பாடுவதும் கேட்பதும் அவருக்குப் பொழுதுபோக்கு. இப்பத்தியில் தடித்த எழுத்துகளில் உள்ள தொடர்களின் வகைகளை எடுத்தெழுதுக.

23. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.

அ) இயற்கை  - செயற்கை               ஆ) விடு – வீடு

24. குறள் வெண்பாவின் இலக்கணத்தை எழுதுக.

25. கலைச்சொல் தருக:- அ) cabinet              ஆ) Vowel

26. ஆலும் வேலும் பல்லுக்குறுதி,நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி

-இத்தொடகள் உணர்த்தும் மரங்களின் பெயர்களையும், தமிழெண்களையும் குறிப்பிடுக.

27. இந்த அறை இருட்டாக இருக்கிறது. மின் விளக்கின் சொடுக்கி எந்தப் பக்கம் இருக்கிறது? இதோ…… இருக்கிறதே! சொடுக்கியைப் போட்டாலும் வெளிச்சம் வரவில்லையே! மின்சாரம் இருக்கிறதா? இல்லையா?.  மேற்கண்ட உரையாடலில் உள்ள வினாக்களின் வகைகளை எடுத்தெழுதுக.

குறிப்பு :- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

தொடரில் விடுபட்ட சொற்கள் குறிக்கும் வண்ணங்களின் பெயர்களை எழுதுக.

கண்ணுக்கு குளுமையாக இருக்கும் ________ புல்வெளிகளில் கதிரவனின் _____ வெயில் பரவிக் கிடக்கிறது.

28. புறத்திணைகளில் எதிரெதிர் திணைகளை அட்டவணைப்படுத்துக.

 

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                                       2×3=6

29. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்து சிந்தனைகளை முன்வைத்து எழுதுக..

30. உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

தமிழர்,போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர்.போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது. போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள்,நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது. தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிடுகிறார்.

அ) போர் அறம் என்பது எதைக் குறிக்கிறது?

ஆ) யாரோடு போர் செய்வது கூடாது என்று ஆவூர் மூலங்கிழார் குறிப்பிடுகிறார்?

இ) எவ்வாறு போர் புரிய வேண்டும்?

31. “ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் “ – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                     2×3=6

              ( 34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.)

32. மன்னன் இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்பு செய்தது ஏன்? விளக்குக.

33. தமிழழகனார் தமிழையும், கடலையும் இரட்டுற மொழியும் பாங்கினை எழுதுக

34.  அ ) ‘ விருந்தினனாக ‘ – எனத் தொடங்கும் காசிகாண்டம் பாடல்    (அல்லது)

ஆ) “நவமணி “–எனத் தொடங்கும்  தேம்பாவணி பாடல்.

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                                    2×3=6

35 தீவக அணியை விளக்கி,அதன் வகைகளை எழுதுக.

36. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

    இன்மை புகுத்தி விடும் – இக்குறட்பாவில் அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி எழுதுக

37 நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்

      நாள்தொறும் நாடு கெடும் – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க.

                                                        பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                       5×5=25

38. அ) வள்ளுவம்,சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள் வழி விளக்குக.     ( அல்லது )

ஆ) காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.

கவிஞன் யானோர் காலக் கணிதம்

            கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!

            புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்

            பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!

            இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்

            இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!

            ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்

            அவனும் யானுமே அறிந்தவை;அறிக!           -கண்ணதாசன்.

39. அ) மாநில அளவில் நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம் “ எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.( அல்லது )

ஆ. “ பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல் “ என்ற செயல்திட்டம் ஒன்றை உருவாக்கி அது உங்கள் பள்ளியில் தலைமையாசிரியர் ஒப்புதலுடன் செயல்படுத்திட அனுமதி வேண்டி தலைமையாசிரியருக்கு கடிதம் எழுதுக.

40. அ) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக…..


41. எண்-6,பாரதியார் தெரு, நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தமிழரசுவின் மகள் பூங்கொடி.கணினிப் பயிற்றுநர் பணி வேண்டி தன் விவரப் பட்டியல் நிரப்புகிறார். தேர்வர் தன்னை பூங்கொடியாகப் பாவித்து பணிவாய்ப்பு வேண்டி தன் விவரப் பட்டியலை நிரப்புக.

42. அ) மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் அட்டவணைப்படுத்துக. (அல்லது )

ஆ) மொழிபெயர்க்க:-

Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had  the most fertile lands. The properity of a farmer depended on getting the necessary sunlight,seasonal rains and the fertility of the soil.Among these elements of nature,sunlight was considered indispensible by the ancient Tamils.

குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

 உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

          கருத்தாழமும் வாசக சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ஜெயகாந்தன். சமூக அமைப்பின் சமூக முரண்பாடுகளை எழுத்திலே அப்பட்டமாகக் காட்டியவர் ஜெயகாந்தன். நேர்முக, எதிர்முக விளைவுகளைப் பெற்ரவர். உள்ளடக்க விரிவால் மனிதாபி – மானத்தை வாசகர் நெஞ்சங்களில் விதைத்தவர். இவருடைய படைப்புகளுக்குக் குடியரசுத் தலைவர் விருது., சாகித்திய அகாதெமி விருது, சோவியத்  நாட்டு விருது மற்றும் ஞானபீட விருது,தாமரைத் திரு விருதுகளும் கிடைத்துள்ளன. “ நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு. என் எழுத்துக்கு ஒரு இலட்சியமும் உணடு. நான் எழுதுவது, முழுக்க முழுக்க வாழ்க்கையிருந்து நான் பெறும் கல்வியின் விளைவும், எனது தனி முயற்சியின் பயனுமாகும்” என்று கூறுகிறார் ஜெயகாந்தன். ‘ அர்த்தமே படைப்பின் வடிவத்தை வளமாக்குகிறது’ என்பது அன்னாரின் அசைக்க முடியாத நம்பிக்கை.

( I ). ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் யாவை?

( ii ). மனிதாபிமானத்தை வாசகர் நெஞ்சில் விதைத்தவர் யார்?

( iii ) வாசகர் மனதில் ஜெயகாந்தன் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தினார்?

( iv ) எது படைப்பின் வடிவத்தை வளமாக்குகிறது?.

( v )  உரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு தருக..

                                                        பகுதி -V ( மதிப்பெண்கள் : 24)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                        3×8=24

43.அ) போராட்டக் கலைஞர் – பேச்சுக் கலைஞர் – நாடகக் கலைஞர் – திரைக் கலைஞர் – இயற்றமிழ்க் கலைஞர் ஆகிய தலைப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக    (அல்லது)

ஆ) சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக

44.அ) புயலிலே ஒரு தோணி – கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன.?     (அல்லது)

ஆ) அன்னமய்யா என்னும் பெயருக்கும், அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் ‘ கோபல்லபுரத்து மக்கள் ‘ கதைப் பகுதி கொண்டு விவரிக்க.

45.அ) குமரிக் கடல் முனையையும் வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவர் திருநாட்டிற்குப் புகழ் தேடித் தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும். எழில் சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்குப் பிள்ளைத் தமிழ் பேசி, சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலா வந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி, அழகூட்டி அகம் மிக மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள்.

இக்கருத்தைக் கருவாகக் கொண்டு “ சான்றோர் வளர்த்த தமிழ் “ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.   (அல்லது)

ஆ)  பின்வரும் குறிப்புகளைக் கொண்டு போதை இல்லா புது உலகைப் படைப்போம் என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.

குறிப்புகள் : முன்னுரை – போதைப் பொருட்கள் – போதை பொருளும் சமுதாயமும் – போதை எனும் ஆயுதம் – உடல் நலப் பிரச்சனைகள் – முடிவுரை.

________________________________________________________________________________

 

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

 

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.

சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்.

 CLICK HERE TO GET PDF
CLICK HERE

குடியரசு தின சிறப்புச் சலுகை

20-1-2025 முதல் 31-01-2025 வரை மட்டுமே……

இளந்தமிழ் வழிகாட்டி மற்றும் வினா வங்கி.

சலுகை விபரங்கள் பெற தொடர்புக் கொள்ளவும் : 80724-26391

நிபந்தனைகளுக்கு உட்பட்டது.*

 

 


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post