10TH-TAMIL-1ST REVISION -QUESTION-2025-PDF

 

                               மாதிரி முதல் திருப்புதல் தேர்வு -1 - ஜனவரி- 2025

 மொழிப்பாடம் – தமிழ்

பத்தாம் வகுப்பு

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                   மதிப்பெண் : 100

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

அ) சரியான விடையைத் தேர்வு செய்க.                                                                  15×1=15

1. ‘ காலம் கரந்த பெயரெச்சம்’ என்பது ____________

அ) வினைத்தொகை          ஆ) உம்மைத்தொகை       

இ) பண்புத்தொகை            ஈ) அன்மொழித்தொகை

2. எந்தமிழ்நா  என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்.

) எந் +தமிழ் +நா    ) எந்த + தமிழ் + நா     ) எம் + தமிழ் + நா    ) எந்தம் + தமிழ் + நா

3. இருநாட்டு அரசர்களும் தும்பைப் பூவைச் சூடி போரிடுவதன் காரணம் __________

அ) நாட்டைக் கைப்பற்றல்            ஆ) ஆநிரை கவர்தல்

இ) வலிமையை நிலைநாட்டல்               ஈ) கோட்டையை முற்றுகையிடல்

4. மலர்கள் தரையில் நழுவும். எப்போது?

அ) அள்ளி முகர்ந்தால்        ஆ) தளரப் பிணைத்தால்    

இ) இறுக்கி முடிச்சிட்டால்   ஈ) காம்பு முறிந்தால்

5. தூக்கு மேடை என்னும் நாடகத்தின் பாராட்டு விழாவில் தான் கலைஞர் என்ற சிறப்புப் பெயர் வழங்கப்பட்டது. இத்தொடருக்கான வினா எது?

அ) தூக்கு மேடை நாடகத்தில் நடித்தவர் யார்? 

ஆ) கலைஞர் என்ற சிறப்புப் பெயர் எப்போது வழங்கப்பட்டது?

இ)  தூக்கு மேடை என்பது திரைப்படமா? நாடகமா?                 

ஈ) யாருக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது?

6. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது

அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்

ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்

இ) அறிவியல் முன்னேற்றம்         ஈ) வெளிநாட்டு முதலீடுகள்

7. கொடுக்கப்பட்ட அனைத்துச் சொற்களும் அமைந்த பொருத்தமான தொடரைத் தேர்க.

மலை,மழை,மேகம்,ஆறு,ஏரி,குளம்

அ) மலைமீது மழை பெய்து ஆற்றுவெள்ளம் ஊரின் வழியே பெருக்கெடுத்து ஓடியது.

ஆ) கருத்த மேகம் மலை மீது மழையைப் பொழிய ஆறு,ஏரி,குளம்,அனைத்தும் நீரால் நிரம்பின.

இ) திரண்ட மேகங்கள் மலையில் மாரியாகி ஆறு,ஏரி,குளங்களில் நிறைந்தன.

ஈ) மலைமீது மழைபொழிய ஏரி குளங்கள் நிறைந்து பின் கடலில் சென்று கலந்தது.

8. ‘ சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்

செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் ‘ – பாரதியின் இக்கூற்று உணர்த்தும் கருத்து

அ. பல துறை நூல்கள் தமிழில் உருவாக்கப்பட வேண்டும்.

ஆ. பலகலைகள் தமிழில் புதிததாக தோன்ற வேண்டும்.

இ. உலகெங்கும் காணப்படும் செல்வங்கள் தமிழகத்தில் வந்து சேர்தல் வேண்டும்

ஈ. கலைச் செல்வங்களை உலகம் முழுவதும் பயணம் செய்து கண்டுகளிக்க வேண்டும்.

9 திணை வழுவமைதி –

அ) ‘ இந்த பாப்பா தூங்கமாட்டாள் ‘ என்று தன்னையே குழந்தை குறிப்பிடுவது.

ஆ) இரவெல்லாம் நாய் கத்திக் கொண்டே இருந்தது.

இ) ‘ வாடா செல்லம் ‘ என்று தாய் மகளை அழைப்பது.

ஈ) ‘ என் தங்கை வந்தாள் ‘ – என்று பசுவைக் குறிப்பிடுவது.

10. வாய்மையே மழைநீராகி – இத்தொடரில் வெளிப்படும் அணி

அ) உவமை   ஆ) தற்குறிப்பேற்றம்          இ) உருவகம்             ஈ) தீவகம்

11. வெஃஃகுவார்க்கில்லை,உரனசைஇ – இச்சொற்களில் உள்ள அளபெடைகள்

அ) ஒற்றளபெடை,சொல்லிசை அளபெடை  ஆ) இன்னிசை அளபெடை,சொல்லிசை அளபெடை

இ) சொல்லிசை அளபெடை, ஒற்றளபெடை        ஈ) ஒற்றளபெடை, இன்னிசை அளபெடை

பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

‘உறங்கு கின்ற கும்ப கன்ன வுங்கண் மாய வாழ்வெல்லாம்

இறங்கு கின்ற தின்று காணெ ழுந்தி ராயெ ழுந்திராய்

கறங்கு போல விற்பி டித்த கால தூதர் கையிலே

உறங்கு வாயு றங்கு வாயினிக்கி டந்து றங்குவாய்

12.இப்பாடலில் யாருடைய வாழ்வு இறங்குவதாக கூறப்பட்டுள்ளது

அ. இராமன்   ஆ. கம்பன்    இ. கும்பகன்னன்    ஈ. லட்சுமணன்

13. பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை சொற்களை எழுதுக

அ. உறங்கு – இறங்கு                  ஆ, கறங்கு  – வாயு

 இ. வாழ்வெல்லாம்  - கையிலே       ஈ. கால தூதர் – கிடந்து

14. இப்பாடலை  இயற்றியவர்

அ.நப்பூதனார்          ஆ. குமரகுருபரர்      இ. அதிவீர ராம பாண்டியர்   ஈ.கம்பர்

15. இப்பாடல் இடம் பெற்ற நூல்  ___

அ. கம்பராமாயணம்   ஆ. முல்லைப்பாட்டு    இ. பரிபாடல்          ஈ. சிலப்பதிகாரம்

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                                  4×2=8

(21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.)

16. விடைக்கேற்ற வினா அமைக்க.

அ.  நாயக்கர் ,மராட்டியர் ஆட்சிக் காலங்களில் மிகுதியான சத்திரங்கள் வழிச்செல்வோர்காகக் கட்டப்பட்டன.

ஆ. கம்பன் இசைத்த கவியெல்லாம் நான் என்று பாரதி பெருமைப்படுகிறார்.

17.  காற்றின் ஆற்றல்,வேகம் இலக்கியங்களில் எவ்வாறு குறிப்பிடப்படுகின்றன?

18. செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக

19. அவையம் – குறிப்பு வரைக

20. “கரப்பிடுப்பை இல்லார்” – இத்தொடரின் பொருள் கூறுக.

21.  குன்றேறி – எனத் தொடங்கும் குறளை எழுதுக.ம்

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                                 5×2=10

22. வேங்கை என்பதைத் தொடர்மொழியாகவும், பொது மொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக

23. மரபுத்தொடர்களைப் பொருளறிந்து தொடரில் அமைக்க.

அ) கண்ணும் கருத்தும்                         ஆ) மனக்கோட்டை

24. பகுபத உறுப்பிலக்கணம் தருக : உரைத்த

25. கலைச்சொற்கள் தருக.

அ) Epic literature                          ஆ) Homograph

26. தொடரில் விடுபட்டுள்ள வண்ணச்சொற்களை உங்கள் எண்ணங்களால் பொருத்தமுற நிரப்புக.

அ) வானம் ________________ தொடங்கியது. மழை வரும் போலிருக்கிறது.

ஆ) கண்ணுக்குக் குளுமையாக இருக்கும் ______________ புல்வெளிகளில் கதிரவனின் ______________ வெயில் பரவிக் கிடக்கிறது

27. நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு. இத்தொடரை இரு தொடர்களாக்குக.

குறிப்பு :- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

1.     எதிர்மறையான சொற்கள் தருக.   அ) மீளாத் துயர்                  ஆ) புயலுக்கு பின்

28. அடைப்புக் குறிக்குள் உள்ளவாறு மாற்றுக.

          அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது. அக்கா புறப்படும் போது அம்மா வழியனுப்பியது.

               ( வழுவை வழாநிலையாக மாற்றுக )

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                                2×3=6

29. வாழை இலையில் விருந்து என்பது தமிழர் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்று என்பதை விளக்குக.

30. உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

கண்ணுக்குக் காட்சியையும் சிந்தைக்குக் கருத்தினையும் கலைத்திறனோடு தந்து இன்றளவும் தொடர்வன நிகழ்த்துகலைகள். கிராமப்புற/சிற்றூர் மக்களின் கலை, அழகியல், பண்பாடு ஆகியவற்றின் எச்சங்களாக இருப்பவை இவை. வடிவங்களைக் கொண்டு நிகழ்த்துகலைகளை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

அ) கரகாட்டம், காவடியாட்டம் – தலையில்/தோளில் கருவியைச் சுமந்தபடி ஆடுபவை

ஆ) மயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், புலியாட்டம் – வேடம்கட்டி ஆடுபவை

இ) ஒயிலாட்டம்,தப்பாட்டம், தேவராட்டம், சேர்வையாட்டம் – குழுவாக ஆடுபவை

ஈ) தெருக்கூத்து, தோற்பாவைக் கூத்து – கதையைத் தழுவி ஆடும் ஆட்டங்கள்.

          i) நிகழ்த்துகலைகள் என்றால் என்ன?

          ii) நிகழ்த்துகலை எத்தனை வகைப்படும்?

          iii) வேடம் கட்டி ஆடும் ஆட்டங்கள் யாவை?

31. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்கு எடுத்துக்காட்டு தந்து விளக்குக.

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.                     2×3=6

              ( 34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.)

32. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

33. முதல் மழை விழுந்ததும் என்னவெல்லாம் நிகழ்வதாக கு.பா.ரா “ ஏர் புதிதா?” கவிதையில் கவி பாடுகிறார்?

34. அ) “ சிறுதாம்பு “ எனத் தொடங்கும்  முல்லைப்பாட்டு பாடலை  எழுதுக.  (அல்லது )

      ஆ) “செம் பொனடிச்” எனத் தொடங்கும்  பாடலை எழுதுக.

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                            2×3=6

35 அவந்தி நாட்டு மன்னன்,மருத நாட்டு மன்னனுடன் போர் புரிந்து அந்நாட்டை கைப்பற்ற நினைக்கிறான்; அப்போர் நிகழ்வைப் புறப்பொருள் வெண்பாமாலை கூறும் இலக்கணத்தின் வழி விளக்குக

36. கவிஞர் தாம் கூறவிரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக..

1.     37. பண்என்னாம் பாடற் கியைபின்றேல் கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்.     - இக்குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.

                                                        பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                     5×5=25

38. அ) பலரிடம் உதவி பெற்றுக் கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர், அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை. அவருக்கு உணர்த்தும் நோக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை?      ( அல்லது )

ஆ) இறைவன்,புலவர் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் எழுதுக

39. அ) உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக. ( அல்லது )

ஆ. நீங்கள் விரும்பி படித்த நூல் ஒன்றின் சிறப்புகளைக் கூறி,உங்கள் நண்பரையும் அந்நூலினைப் படிக்குமாறுப் பரிந்துரைத்துக் கடிதம் எழுதுக.

40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

 

 

 

 

 

 

41. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அறிவழகனின்  23 வயது மகன் அன்பழகன், இளங்கலை தமிழ் படித்து போட்டித் தேர்வில் பங்கேற்பதற்காக சேலம் மாவட்டத்தில் காமராஜர் நகர், பாரதியார் தெருவில், 51ம் இலக்க எண்ணில்  தனது நண்பர்களுடன் அறை எடுத்து பயில்கிறார். அதற்காக அவர் அங்குள்ள மைய நூலகத்தில் உறுப்பினராக சேர  விரும்புகிறார். திரு.சுந்தர வடிவேலு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் அவருக்கு பிணைப்பாளராக கையொப்பமிடுகிறார்.  தேர்வர் தம்மை அன்பழகனாக கருதி உரிய படிவத்தை நிரப்புக.

42. அ)  தமிழ், தமிழர், தமிழ்நாடு என்று வாழ்ந்து மறைந்தவர் கலைஞர். அவர் எழுதியது தமிழின் சுவையை; அவர் எண்ணியது தமிழரின் உயர்வை; அவர் உயர்த்தியது தமிழ்நாட்டின் கலைகளை! நீங்கள் படித்து முடித்தப்பின் உங்கள் துறையின் அறிவைக் கொண்டு தமிழுக்குச் செய்யக் கூடிய தொண்டுகளை வரிசைப்படுத்துக.   ( அல்லது )

ஆ) மொழிபெயர்க்க:-

Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutham region was fit for cultivation, as it had the most fertile lands. The properity of a  farmer depended on getting the necessary sunlight.Seasonal rains and the fertility of the soil. Among these elements of nature, sunlight was considered indispensable by the ancient Tamils.

குறிப்பு : குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

 உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

மொழி பெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் நாம் எளிதாகப் பெற முடியும். பல அறிவுத் துறைகளுக்கும் தொழில் துறைகளுக்கும் வெளிநாட்டாரை எதிர்பார்க்காமல் நாமே நமக்கு வேண்டிய அனைத்தையும் உருவாக்கிக் கொள்ள முடியும். மனித வளத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியும். வேலைவாய்ப்புத் தளத்தை விரிவாக்க முடியும்.நாடு,இன மொழி எல்லைகள் கடந்து ஓருலகத் தன்மையைப் பெற முடியும். நாடு விடுதலை பெற்ற பிறகு பல நாட்டு தூதரகங்கள் நம் நாட்டில் நிறுவப்பட்டன. அவை தங்களுடைய இலக்கியம், பண்பாடு, தொழில் வளர்ச்சி, கலை போன்ற்வற்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் தத்தம் மொழிகளைக் கற்றுக் கொடுக்கின்ற முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. இதனைச் சார்ந்து பிற மொழிகளைக் கற்றுத்தரும் தனியார் நிறுவனங்களும் உருவாகியுள்ளன. பள்ளிகளிலும் கல்லுரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் பிறமொழிகளைக் கற்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

( I ). ஓரூலகத் தன்மையைப் பெறுவதற்கான முக்கிய வழிமுறையாக எதனைக் கொள்ளலாம்?

( ii ). பிற மொழிகளைக் கற்பதற்கான வாய்ப்புகளைத் தருவன எவை?

( iii ) தூதரங்களின் முதன்மையான பணிகளில் ஒன்று எது?

( iv ) மொழி பெயர்ப்புக் கல்வியின் பயங்களை எழுதுக.

( v )  இப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு இடுக.

                                                        பகுதி -V ( மதிப்பெண்கள் : 24)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                      3×8=24

43.அ) நம் முன்னோர் அறிவியல் கருத்துகளை இயற்கையுடன் இணைத்துக் கூறுவதாகத் தொடங்குகின்ற பின்வரும் சொற்பொழிவைத் தொடர்ந்து நிறைவு செய்க.

பேரன்பிற்குரிய அவையோர் அனைவருக்கும் வணக்கம்! இன்று இயல், இசை,நாடகம் என்னும் முத்தமிழுடன் அறிவியலை நான்காம் தமிழாகக் கூறுகின்றனர். ஆதிகாலந்தொட்டு இயங்கி வரும் தமிழ்மொழியில் அறிவியல் என்பது தமிழர் வாழ்வியலோடு கலந்து கரைந்து வந்துள்ளதை இலக்கியங்கள் மூலம் அறிகிறோம். அண்டத்தை அளந்தும், புவியின் தோற்றத்தை ஊகித்தும் கூறும் அறிவியல் செய்திகள் இலக்கியங்களில் உள்ளன. சங்க இலக்கியமான பரிபாடலில்…….   (அல்லது)

ஆ) நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டின் முன்னேற்றத்தில் மாணவர் பங்கு . குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் “ மாணவப் பருவமும் நாட்டுப்பற்றும் “ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக.

44.அ) “ பாய்ச்சல் “ சிறுகதையில் அழகுவின் கதாப்பாத்திரம் போல், நீங்கள் கண்டு மகிழ்ந்த பகல்வேடக் கலைஞர் குறித்த நிகழ்வுகளை ஒப்பிட்டும் அவர்கள் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் குறித்தும் விரிவாக எழுதுக   (அல்லது)

ஆ) ஒரு பக்க அளவில் உரையாடல் எழுதுக.

குறிப்பு : வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின் மகளுக்குத் தமிழ் மொழியைப் பேச மட்டுமே தெரியும். ஆங்கில இலக்கியம் படித்த அவரிடம் தமிழ் உரைநடையின் சிறப்புப் பற்றி உரையாடுதல்

45.அ) உழவே தமிழர் பண்பாட்டின் மகுடம் – உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் – சுழன்றும் ஏர் பின்னது உலகம்

-              இக்குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று எழுதி பொருத்தமான தலைப்பிடுக.

   (அல்லது)

ஆ)  கீழ்க்காணும் குறிப்பைப் பயன்படுத்திக் கட்டுரை  வரைக.

( முன்னுரை – நெகிழிப்பை  – தீமைகள்  – தடுக்கும் முறைகள் – நாம் முன்னெடுக்க வேண்டியவை  – முடிவுரை.)

 

 

FOR MORE EDUCATION MATERIALS

WWW.TAMILVITHAI.COM                                                                       WWW.KALVIVITHAIGAL.COM

WAIT FOR 10 SECONDS



நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post