9TH-TAMIL-QUATERLY EXAM-2024-TAMIL-ANSWER KEY-PDF-SALEM

 

 சேலம் – காலாண்டுத் தேர்வு  -2024

ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  3.00 மணி                                                                            மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

இ) சிற்றிலக்கியம்

1

2.

ஈ) புலரி

1

3.

ஈ) தொகைச்சொற்கள்

1

4.

ஈ) வளம்

1

5.

இ) சீத்தலைச் சாத்தனார்

1

6.

ஆ) ஊரகத் திறனறித் தேர்வு

1

7.

ஆ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

1

8.

இ) முல்லை ( இயல் -6 ) மாணவர்கள் விடை எழுத முயற்சி செய்திருந்தால் மதிப்பெண் வழங்கலாம்

1

9.

அ) ஆராயாமை,ஐயப்படுதல்

1

10.

ஆ) தொடு உணர்வு

1

11.

இ) குடும்ப அட்டை

1

12 .

இ) பெரிய புராணம்

1

13 .

ஆ) சேக்கிழார்

1

14 .

இ. கரும்பு   

1

15

அ. பண்புத்தொகை

1

பகுதி - 2

16

Ø  பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக.

1

1

17.

1. கீபோர்டு – விசைப்பலகை       2. கர்சர் - சுட்டி

3. லேப்டாப் – மடிக்கணினி         4. ப்ரெளசர் – உலாவி

5. சீடி - வட்டு

2

18.

ü  குளம், குட்டை,கிணறு

2

19

வாளை மீன்கள் துள்ளி எழுந்து பாக்கு மரத்தில் பாய்வதற்கு ஒப்பிடுகிறது.

2

20

தம்மை இகழ்பவரையும் பொறுப்பது சிறந்தது

2

21.

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்

 ஆன்ற பெருமை தரும்.

2

பிரிவு - 2

22

·         இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்பட்டு வரும் தொடரில் வல்லினம் மிகும்.

Ø  எட்டு,பத்து ஆகிய எண்ணுப் பெயர்களின் பின் வல்லினம் மிகும்.

1

1

23

அகல்

1

1

24.

அ) நடுகல்              ஆ) பதிவிறக்கம்

2

25

வீணையோடு வந்தாள்     – வேற்றுமைத் தொடர்

கிளியே பேசு                    – விளித்தொடர்

1

1

26

தமிழ்விடுதூது – தமிழ், விடு, தூது

பாய்மரக்கப்பல் – பாய், மரம், கப்பல், மரக்கப்பல், பல், கல்

1

1

27

மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றது.

ஆ. மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தான். 

1

1

28

செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா

அ. கல்              ஆ. செந்தமிழும் நாப்பழக்கம்

1

1

பகுதி – 3

29

மூன்று – தமிழ்      மூணு – மலையாளம்

மூடு – தெலுங்கு     மூரு – கன்னடம்

மூஜி - துளு

3

30

Ø  முல்லை நில ஆயர்கள் ஏறுதழுவுதலில் பங்கேற்கும் நிகழ்வினை கலித்தொகையில் குறிப்பிடுகிறது.

  • முல்லை நில வேளாண் குடிகளின்  வாழ்வோடும் உழைப்போடும் பிணைந்து கிடந்த மாடுகளுடன் அவர்கள் விளையாடி மகிழும்  மரபாக உருகொண்டது ஏறு தழுவுதல்

3

31

அ) காங்கேயம் மாடுகள்

ஆ) காங்கேயம்

இ) மாடுகள் ( ஏற்ற தலைப்பு இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் )

3

பகுதி -3 / பிரிவு - 2

32

ü  கரிகாலன் புகழைக் கணினியுள்ளே பொறுத்துங்கள்.

ü  திசையில் ஏவும் அன்பைப் போல இருந்த இனத்தை மாற்றுங்கள்.

Ø  ஏவுகணையில் தமிழை எழுதி அனைத்து கோள்களிலும் ஏற்றுங்கள்.

3

33

Ø  மொட்டைக் கிளையோடு, வெட்ட ஒரு நாள் வரும் என வருத்தமடைந்தது.

Ø  இலைகளும், கிளைகளும் வெந்து கருகியதால் இந்த நிலை வந்ததோ என வருத்தமுற்றது.

Ø  பட்டுக் கருதியதன் காரணமாக கட்டை என பெயர் வந்ததோ என வருத்தமுற்றது.

மரப்பட்டைகள் எல்லாம் விழுந்ததனால் வருத்தமுற்றது.

3

34

ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அதனொடு நாவே

மூன்றறி வதுவே அவற்றொடு மூக்கே

நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே

 ஐந்தறி வதுவே அவற்றொடு செவியே

ஆறறி வதுவே அவற்றோடு மனனே

நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே*

3

34

நீரின்றி அமையா யாக்கைக்கு எல்லாம்

உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!

உண்டி முதற்றே உணவின் பிண்டம்;

உணவெனப் படுவது நிலத்தொடு நீரே;

நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு

உடம்பும் உயிரும் படைத்திசினோரே!*

3

பகுதி – 3 / பிரிவு - 3

35

1

இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது

வீடு கட்டினான்

2  

வினைத்தொகையில் வல்லினம் மிகாது

ஊறுகாய்

3

அது,இது,எது என்னும் சொற்களின் பின் மிகாது

அது சட்டை

3

36

தன்வினை

பிறவினை

எழுவாய் ஒரு வினையை செய்தல்

எழுவாய் ஒரு வினையை செய்ய வைத்தல்

எ.கா : பந்து உருண்டது

எ,கா: பந்தை உருட்ட வைத்தான்

 அவன் திருந்தினான்

  அவனைத் திருந்தச் செய்தான்

3

37

இ) சுடாத மண்கலத்தில் நீருற்றி வைப்பதைப் போல

அ) ஒருவனின் செயல்பாடுகளே உரசி அறியும் உரைகல்

ஆ) அவ்வளவிற்குப் பெருமை உண்டாகும்

3

பகுதி - 4

38

v  காவிரி ஆறு புதிய பூக்களை அடித்து வர அதனை வண்டுகள் மொய்த்து ஆராவாரம் செய்கின்றன.

v  நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதல் இலை சுருள் விரிந்து. இதனைக் கண்ட உழவர் இது தான் களை பறிக்கும் பருவம் என்று அறிந்தனர்.

v  காடுகளில் எல்லாம் கரும்புகள் உள்ளன.

v  வயல்களில் சங்குகள் நெருங்கி உள்ளன.

v  சோலைகள் எல்லாம் செடிகளின் புதிய கிளைகளில் அரும்புகள் உள்ளன.

v  பக்கங்களில் எல்லாம் குவளை மலர்கள் உள்ளன.

v  கரை எங்கும் இளைய அன்னங்கள் உலவுகின்றன.

v  குளங்கள் எல்லாம் கடல் போல் பெரிதாக உள்ளன.

v  அன்னங்கள் விளையாடும் நீர் நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். அதனால் அதில் உள்ள வாளை மீன்கள் அருகில் உள்ள பாக்கு  மரங்கள் மீது பாயும் இக்காட்சியை நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில் போன்றுள்ளது.

v  செந்நெல்லின் சூடுகள், பலவகைப்பட்ட மீன்கள் ,முத்துக்கள், மலர்த் தொகுதிகள் ஆகியவற்றைத் திருநாட்டில் குவித்து வைத்திருந்தனர்.

v  தென்னை, செருந்தி, அரசமரம், கடம்பமரம்,பச்சிலை மரம், குராமரம், பனை,சந்தனம், நாகம், வஞ்சி,காஞ்சி மலர்கள் நிறைந்த கோங்கு முதலியன எங்கும் நிறைந்தது  இந்த திருநாட்டில்.

5

38ஆ

Ø  ஊர் முழுவதும் தோரணங்கள் கட்டப்பட்டு இருக்கும்.

Ø  அனைத்து வீடுகளும் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.

Ø  முத்துதாமம், தோரணங்கள், பந்தல்கள் போடப்பட்டிருக்கும்.

Ø  முரசறைந்து இந்திர விழா நிகழ்வுகளை மக்களுக்கு தெரிவிப்பர்.

·         இந்திரவிழா 28 நாட்கள் நடைபெறும்

5

39அ

12, தெற்கு வீதி,

மதுரை-2

19,செப்டம்பர் 2024.

 

அன்புள்ள நண்பனுக்கு,              

        வணக்கம் . நலம். நலமறிய ஆவல்  என்னுடைய பிறந்தநாள்  பரிசாக நீ அனுப்பிய  எழுத்தாளர் எஸ் . இராமகிருஷ்ணன் எழுதிய  கால் முளைத்த கதைகள் என்ற கதைப்புத்தகம்  கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

      இந்நூலில் பூனையை நாய் ஏன் துரத்துகிறது? போன்ற தலைப்புகளில் உள்ள  கதைகள்  விரும்பிப் படிப்பதற்கு ஏற்ற வகையில் இனிய எளிய சொற்களால், கதைகள் சிறியனவாக அமைந்துள்ளன. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

நன்றி                                                இப்படிக்கு,                                

                                                                   அன்பு நண்பன்                                                                         முகிலன்

உறைமேல் முகவரி:

பெறுதல்

வெ.ராமகிருஷ்ணன்,

2,நெசவாளர் காலணி,

சேலம் – 1

5

39ஆ

வளையசெட்டிப்பட்டி அரசினர் உயர்நிலைப் பள்ளியில் 05-07-24 அன்று வள்ளுவன் இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. பள்ளி மாணவ – மாணவியர் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடினர்.

    பள்ளித் தலைமையாசிரியர்  சிறப்பான வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக வந்த முனைவர் எ.மாணிக்கம் தாய்மொழியின் மூலமாகத்தான் கருத்துக்களைச் சிறந்த முறையில் வெளியிட முடியும், தாய்மொழி வழியே கற்பதன் மூலமே பாடங்களைச் செம்மையாகவும் திருத்தமாகவும் கற்றுக்கொள்ள முடியும்.

       மாணவர்கள் நாட்டுப்பற்றும் ,மொழிப்பற்றும் கொண்டு ஒழுக்கச் சீலர்களாகத் திகழ வேண்டும் என்று மாணவர்களுக்கு நல்ல அறிவுரைகளைக் கூறி சிறப்புரையாற்றினார்.

     மாணவர் செயலர் நன்றி கூறினார். மாணவிகள் நாட்டுப்பண் பாட விழா இனிதே முடிந்தது.

 

5

40

ஏடெடுத்தேன் கவி ஒன்று எழுத

என்னை எழுது என்று

சொன்னது இந்த காட்சி

விலங்கினை கட்டுப்படுத்தும் நாம்

நம்மையும் கட்டுப்படுத்தும் இயந்திர

 மனிதன் உண்டென உணர்த்தும் காட்சி

5

41

1. A nations’s culture resides in the hearts and in the soul of its people – Mahatma Gandhi

ஒரு நாட்டின் பண்பாடு மக்களின் இதயங்களிலும் ஆன்மாவிலும் தங்கியுள்ளது – மகாத்மா காந்தி

2. The art of people is a true mirror to their minds – Jawaharlal Nehru

          மக்களின் கலை அவர்களின் உண்மையான மனதின் கண்ணாடி – ஜவகர்லால் நேரு

3. The biggest problem is the lack of love and charity – Mother Teresa

          குறைவான அன்பும் இரக்கமும் தான் மிகப்பெரிய பிரச்சனை – அன்னை தெரஸா

4. You have to dream before your dreams can come true – A.P.J.Abdul Kalam

உங்கள் கனவு நனவாகும் வரை கனவு காணுங்கள் -A.P.J.அப்துல் கலாம்

5. Winners don’t do different; they do things differently – Shiv Khera

Ø  வெற்றியாளர்கள் வித்தியாசமானச் செயல்களைச் செய்யாமல் செயல்களை வித்தியாசமாகச் செய்கிறர்கள் - சேவ்கேரா

5

41

1. என் வீட்டின் நிலையறிந்து, தேவையறிந்து பொருள்கள் வாங்குவது.
2. அலைபேசிப் பயன்பாட்டினைப் பத்து நிமிடங்களுக்கு மேல் நீட்டிக்காமல் இருப்பது.
3. தொலைக்காட்சி பார்ப்பதைக் குறிப்பிட்ட நேரமாகக் குறைத்துக் கொள்வது.
4. முயற்சி செய்தால் முடியும், என் வேலையை நானே செய்து தருவேன்.
5. குறித்த நேரங்களில் பள்ளி வீட்டுப்பாடங்களை முடிப்பேன்.
6. பெற்றோரின் சொல் பேச்சைக் கேட்டு நடப்பேன்
.

5

42

திரண்ட கருத்து : 

           மழையானது மலை, காடு, மரம், செடிகொடிகள், மணற்பாங்கான சமவெளிகள் ஆகிய இடங்களில் தவழ்ந்து ஓடிவந்தது. ஏரி, குளம், குட்டைகள், வாய்க்கால், ஓடைகள் ஆகிய இடங்களில் எல்லாம் மழைநீர் ஓடிவந்தது என, மழையின் சிறப்பைப் பாடி உள்ளார்.

மையக்கருத்து :  

காடு, மரம், செடி கொடிகள், ஏரி, குளம், ஓடைகள் எல்லாம் கடந்து மழைநீர் வந்தது.

மோனைத்தொடை :

சீர், அடிகளில் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனைத்தொடையாகும்.

ல்லும் - டந்து, ல்லை - ங்கும், றாத - ரி, ராத - ற்றிலும்.

எதுகைத்தொடை :

அடி, சீர்களில் இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகைத் தொடையாகும்.

 ல்லும் - எல்லை, றாத - ஊறா

 

 

இயைபுத் தொடை :

இறுதி எழுத்தோ, சொல்லோ ஓசை ஒன்றிவரத் தொடுப்பது, இயைபுத் தொடையாகும்.

கடந்து வந்தேன், தவழ்ந்து வந்தேன்

அணிநயம் :

மழைநீரின் ஓட்டத்தை வெகுவாகச் சிறப்பித்துக் கூறுவதால், உயர்வு நவிற்சி அணி பயின்று வந்துள்ளது. வந்தேன், வந்தேன் என்னும் வினைச்சொல், பலமுறை வந்து ஒரே பொருளைத் தருவதால், இது சொற்பொருள் பின்வரு நிலையணியுமாகும்.

சொல்நயம் :

குதித்து, கடந்து, தவழ்ந்து, மேடுகள் ஏறி, நிரப்பி, உட்புகுந்து என, மழைநீர்ச் சிறப்பை உணர்த்தப் பொருள் பொதிந்த சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

5

42

அ) தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.

ஆ) வகுப்பறையில் நண்பர்கள் வைத்திருக்கும் புதிய அழகிய பொருள்களைப் பார்த்தால் ஆசை வரும். அவர்களைப் போல நானும் முயன்று உழைத்து அவற்றை என்னுடைய பணத்தில் வாங்குவேன்.

இ) அறையை விட்டு வெளியே செல்லும்போது மின்விசிறி, மின்விளக்குகளை நிறுத்திவிட்டுச் செல்வேன்

ஈ) அத்தியாவசியமான பொருட்களை மட்டும் வாங்குவேன்

உ) மதிய உணவினை தேவையான அளவு மட்டும் எடுத்துச் செல்வேன்

ஊ) பணத்தை உண்டியலில் சேமிப்பேன்.

5

42

செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

1. டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ்மண் என்று அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் கடல்பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன.

2. இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன.

3. உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கே தான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

4. தமிழ்மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன

5

பகுதி - 5

43அ

ü  ஸ்பெயின் காளைச் சண்டையைத் தேசிய விளையாட்டாக கொண்டுள்ளது.

ü  காளை கொன்று அடக்குபவனே வீரன்

ü  வென்றாலும் தோற்றாலும் போட்டியின் முடிவில் காளையை சில நாடுகளில் கொல்வதும் உண்டு.

ü  இவை வன்மத்தையும் போர்வெறியையும் வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

ü  தமிழகத்தில் ஏறு தழுவுதலில் ஆயுதத்தைப் பயன்படுத்தக் கூடாது.

ü  நிகழ்வின் தொடக்கத்திலும் முடிவிலும் காளைக்கு வழிபாடு செய்வர்.

ü  எவரும் அடக்க முடியாத காளைகள் கூட, வெற்றி பெற்றதாக அறிவிப்பர்.

ü  அன்பையும் வீரத்தையும் ஒன்றாக வளர்த்தெடுக்கும் இவ்விளையாட்டில், காளையை அரவணைத்து அடக்குபவரே வீரராகப் போற்றப்படுவர்

8

43ஆ

அட்டைப் பயன்படுத்தம் இயந்திரம்:-

ü  வங்கி அட்டையைக் கொண்டு இன்று தேவைப்படும் போது தானியங்கு பண இயந்திரம் மூலம் பணம் பெறமுடிகிறது.

ü  இதன் காரணமாக கால விரயம் தவிர்க்கப்படுகிறது.

ü  மேலும் இந்த அட்டை மூலம் பல்வேறு விதமான இணைய வழிச் சேவைகளைப் பெறமுடிகிறது.

ü  சமையல் எரிவாயு முன்பதிவு, இரயிலில் முன்பதிவு, திரையரங்கு காட்சி முன்பதிவு, அரசு பணியாளர் தேர்வாணையத்தில் தேர்வுக்கான கட்டணம் என எல்லாவற்றிற்கும் இந்த அட்டையைக் கொண்டு எளிதில் பணம் செலுத்திவிட முடிகிறது.

ü  வங்கி அனுப்பும் ஒரு முறை பயன்படுத்தும் குறியீட்டைப் பயன்படுத்தி இந்த இணைய வழி சேவைகளைப் பெறலாம்.

திறன் அட்டைக் கருவி:-

·         தமிழகத்தில் குடும்ப அட்டைகள் திறன் அட்டைகளாக மாற்றப்பட்டுள்ளன.

·         குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதார் எண்கள், அலைபேசி எண், முகவரி ஆகிய விவரங்கள் சேர்த்து திறன் அட்டைகள் வழங்கப்படுகின்றன.

·         நியாயவிலைக் கடையில் திறன் அட்டை விற்பனைக்கருவியில் வருடப்படுகின்றன.

·         அங்கு விற்பனை செய்யப்படும் விவரங்கள் குறிப்பாக பதிவு செய்யப்பட்டு அலைப்பேசிக்கு குறுஞ்செய்தியாக வரும்.

 

44அ

முன்னுரை :

         கந்தர்வன் எழுதிய தண்ணீர் என்ற இக்கதையில் நீரின் அவசியமும், நீருக்காக கிராம மக்கள் படும் பாட்டையும் அழகாக எழுதியுள்ளார். அதை இக்கட்டுரையில் காணலாம்.

கிராமத்தின் நிலை :

        கதையின் கிராமத்தில் குடிப்பதற்கு நீர் பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டும். அந்த கிராமம் குடிநீருக்காக பிலாப்பட்டிக்கு செல்ல வேண்டும். நிலத்தடி நீர் வற்றி ஆண்டுகள் பல ஆயிற்று.

இரயில் நீர் :

          அந்த ஊருக்கு வரும் இரயிலின் ஊதல் ஒலிக் கேட்டு அந்த கிராம மக்கள் தண்ணீருக்காக பெண்கள் ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்துக் கொண்டு ஓடுவர். ஸ்டேசன் மாஸ்டர் மிரட்டியும் பயன் இல்லை. இரயிலை விட்டால் பிலாப்பட்டிக்கு போக வேண்டும்.

இந்திரா :

        இளம் பெண் இந்திரா தன்னை திருமணம் செய்து கொடுத்தால் நீர் இருக்கும் ஊருக்கு தான் கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே இரயில் பெட்டியில் நுழைந்தாள்.

மக்கள் தேடல் :

        வீட்டில் நீர் இல்லை என்பதை நினைத்துக் கொண்டே நீர் பிடித்திருந்த இந்திரா இரயில் நகர்ந்ததை கவனிக்கவில்லை.

          இந்திராவின் தாய் புலம்புகிறாள். இந்திராவைத் தேடி இராமநாதபுரம் பேருந்து நிலையம் சென்று தேடிப் பார்த்தனர். எங்கும் காணவில்லை.

திரும்பிய இந்திரா:

        தண்டாவளத்தில் சிறிது தூரத்தில் பெண் ஒருத்தி தென்பட்டாள். அவள் இந்திரா. ஒரு குடம் நீர் பிடிக்க இரயிலிலேயே உள்ள நீர் பிடித்து அதனை சிந்தாமல் கொண்டு வந்து சேர்த்தாள்.

முடிவுரை :

Ø  தண்ணீர் வாழ்வில் மிக முக்கியம். அதனை அறிந்து நீரினை சேமிப்போம். சிக்கனமாகப் பயன்படுத்துவோம். நீர் மேலாண்மையைக் கட்டமைப்போம்.

8

44ஆ

இந்திய விண்வெளித்துறை

முன்னுரை:-

இந்திய விண்வெளித் துறையில் அப்துல்கலாம், மயில்சாமி அண்ணாத்துரை, வளர்மதி, சிவன் ஆகியோரின் பங்கு அளப்பரியதாகும். இந்தியர்கள் வானியியல் வல்லமையை வலுப்படுத்தும் பல்வேறு செயற்கைக்கோள்களை இந்திய விண்வெளித்துறை படைத்துள்ளது.

இஸ்ரோ:-

·           இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) பெங்களூரில் உள்ளது. திரு.கே.சிவன் என்பவர் 14.1.2018 முதல் இதன் தலைவராக உள்ளார்,

·           குறைந்த செலவில் தரமான சேவையைக் கொடுப்பதனை நோக்கமாக இஸ்ரோ கொண்டுள்ளது.

·           இதுவரை 45 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன.

·                இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் உலகின் மிகப் பெரிய விண்வெளி ஆய்வு மையத்தில் ஆறாவது இடத்தை பெற்றுள்ளது.

சாதனைகள்:-

·       1975-ல் இந்தியாவின் முதல் செயற்கைக் கோள் ஆரியப்பட்டா சோவியத் ரஷ்யா உதவியால் விண்ணில் செலுத்தப்பட்டது. விக்ரம் சாராபாய் இதற்கு மூல காரணம் ஆவார்

·       1980-ல் முதல் செயற்கைக் கோள் ரோகிணி விண்ணில் ஏவப்பட்டது.

·       சந்திராயன்-1 நிலவை நோக்கி 2008-ல் விண்ணில் ஏவப்பட்டது.

·       நேவிக் என்ற செயலியைக் கடல் பயணத்திற்கு உருவாக்கியிருக்கிறது.

முடிவுரை:-

நம் நாட்டிற்கு தேவையான செயற்கைக் கோளை விண்ணில் அனுப்பி நம் தேவைகளை நிறைவு செய்வதே இஸ்ரோவின் செயல்பாடு.

8

45அ

குறிப்புச் சட்டம் , தகுந்த உட்தலைப்புகள் இட்டு தலைப்புக்குரிய கருத்துகளை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

8

45ஆ

குறிப்புச் சட்டம் , தகுந்த உட்தலைப்புகள் இட்டு தலைப்புக்குரிய கருத்துகளை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

8

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, வளையசெட்டிப்பட்டி

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும். சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

KINDLY WAIT FOR 10 SECONDS


நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post