மாதிரி
காலாண்டுத் தேர்வு – 2024
வினாத்தாள்
- 2
மொழிப்பாடம் – தமிழ்
வகுப்பு : 9
நேரம் : 3.00 மணி மதிப்பெண் : 100
______________________________________________________________________
பகுதி
– I ( மதிப்பெண்கள் : 15 )
குறிப்புகள் : I ) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.
II) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் ஏற்புடைய
விடையினைத் தேர்ந்தெடுத்து
எழுதுக.
அ) சரியான விடையைத் தேர்வு செய்க.
15×1=15
1. தமிழ்விடுதூது ____ என்னும் இலக்கிய வகையைச் சேர்ந்தது.
அ) தொடர்நிலைச் செய்யுள் ஆ) புதுக்கவிதை
இ) சிற்றிலக்கியம் ஈ)
தனிப்பாடல்
2 ஐம்பெருங்குழு, எண்பேராயம் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்
அ) திசைச்சொற்கள்
ஆ) வடசொற்கள்
இ) உரிச்சொற்கள் ஈ)
தொகைச்சொற்கள்
3. ஒன்றறிவதுவே
உற்றறிவதுவே இரண்டறிவதுவே அதனொடு நாவே இவ்வடிகளில் அதனொடு என்பது எதைக்
குறிக்கிறது?
அ) நுகர்தல் ஆ) தொடு உணர்வு இ)
கேட்டல் ஈ) காணல்
4. திராவிடம் என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தியவர்
அ) ச. அகத்திய லிங்கம் ஆ) குமரிலபட்டர்
இ) ஹீராஸ் பாதிரியார்
ஈ) வில்லியம் ஜோன்ஸ்
5. தமிழ்நாடு அரசு
கிராமப்புற மாணவர்களுக்கு நடத்தும் திறனாய்வுத் தேர்வு எது?
அ) தேசியத்
திறனறித் தேர்வு ஆ)
ஊரகத் திறனறித் தேர்வு
இ) தேசியத் திறனறி, கல்வி உதவித் தொகைத்
தேர்வு ஈ) மூன்றும் சரி
அ) நீரின்று அமையாது உலகு - திருவள்ளுவர்
ஆ) நீரின்று அமையாது யாக்கை - ஓளவையார்
இ) மாமழை போற்றுதும் - இளங்கோவடிகள்
க) அ,இ ௨)
ஆ,இ ௩) அ,ஆ ௪) அ,ஆ,இ
7. பொருந்தாத இணை எது?
அ) ஏறுகோள் – எருதுகட்டி ஆ)
திருவாரூர் – கரிக்கையூர்
இ)
ஆதிச்ச நல்லூர் – அரிக்க மேடு ஈ) பட்டிமன்றம்
– பட்டிமண்டபம்
8. பகுதிக்கும் விகுதிக்கும் இடையில்
நின்று காலம் காட்டும் பகுபத உறுப்பு _____
அ) பகுதி ஆ) விகுதி இ) இடைநிலை ஈ) சந்தி
9. கீழ்க்காணும்
மூன்று தொடர்களுள் –
அ) இருந்த இடத்திலிருந்தே பயணச்சீட்டு எடுப்பதை எளிதாக்கிய மிகப் பெரிய
இந்திய நிறுவனம் இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம்
ஆகும்.
ஆ) வங்கி அட்டை
இல்லை என்றால் அலைபேசி எண்,
வங்கிக் கணக்கு எண் ஆகியவற்றைக் கொண்டு பணம் செலுத்துதல் இயலாது.
இ) திறன்
அட்டைகள் என்பவை குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக வழங்கப்பட்டனவாகும்.
i) அ, ஆ ஆகியன சரி; இ தவறு ii) அ, இ ஆகியன சரி; ஆ தவறு
iii) அ தவறு; ஆ, இ ஆகியன சரி iv) மூன்றும் சரி
10. இந்திய நீர்ப் பாசனத்தின் தந்தை என அறியப்படுபவர்_____
அ) ஜான் பென்னி குவிக் ஆ)
சர் ஆர்தர் காட்டன்
இ) பிரான்சிஸ் எல்லீஸ் ஈ) ஹோக்கன்
11. விடை வரிசையைத்
தேர்க .
அ) இது செயற்கைக்
கோள் ஏவு ஊர்தியின் செயல்பாட்டை முன்கூட்டியே கணிக்கும்.
ஆ) இது கடல்பயணத்துக்காக
உருவாக்கப்பட்ட செயலி.
௧) நேவிக், சித்தாரா ௨) நேவிக்,
வானூர்தி
௩) வானூர்தி, சித்தாரா ௪) சித்தாரா,
நேவிக்
பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-
மொட்டைக் கிளையோடு
நின்று
தினம்பெரு
மூச்சு
விடும்மரமே!
வெட்டப் படும் ஒரு
நாள்வரு
மென்று
விசனம்
அடைந்தனையோ?
12.
இப்பாடல் இடம் பெற்ற நூல்
அ.
தமிழ்ஒளியின் கவிதைகள் ஆ. புறநானூறு
இ.
பெரியபுராணம் ஈ. மணிமேகலை
13.
இப்பாடலை இயற்றியவர்___________
அ. குடபுலவியனார்
ஆ. தமிழ்ஒளி
இ. சீத்தலைச் சாத்தனார் ஈ. சமண முனிவர்கள்
14.
‘ விசனம் ‘ என்பது எதனைக் குறிக்கிறது__________
அ.
கவலை ஆ. வியப்பு
இ.
ஆச்சரியம் ஈ. மகிழ்ச்சி
15.
பாடலில் வரும் வினாச்சொல்லைக் காண்க
அ.
கிளையோடு ஆ. மரமே!
இ.
நாள் ஈ. அடைந்தனையோ?
பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 )
பிரிவு – 1
எவையேனும்
நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 4×2=8
(21
ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.)
16.
விடைக்கேற்ற வினா அமைக்க.
அ. கி.பி. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் சேக்கிழார்.
ஆ. எட்டுத் தொகை நூல்களில் ஒன்று புறநானூறு.
17. உங்கள் பள்ளியைச் சுற்றியுள்ள நீர்நிலைகளின் பெயர்களைக்
குறிப்பிடுக.
18. கூட்டுப்
புழுவை எடுத்துக்காட்டிக் கவிஞர் உணர்த்தும் கருத்துகளை எழுதுக. .
19. மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண் – இக்குறள் கூறும்
நாட்டின் அரண்கள் யாவை?
20. பட்டிமண்டபம், பட்டிமன்றம் – இரண்டும் ஒன்றா? விளக்கம் தருக.
21. எனைத்தானும் – எனத் தொடங்கும் குறளை
எழுதுக.
பிரிவு – 2
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5×2=10
22. ஒரே சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக.
எண்ணெய்
ஊற்றி _____விளக்கு ஏற்றியவுடன், இடத்தைவிட்டு ____.
23. வீணையோடு வந்தாள், கிளியே பேசு – தொடரின் வகையைச் சுட்டுக.
24. தொடர் தரும் பொருளைக் கூறுக :
அ)
சின்னக்கொடி , சின்ன கொடி
ஆ)
நடுக்கல் , நடுகல்
25. கலைச்சொல் தருக.
அ)
Download ஆ) Excavation
26. அடைப்புக்குள் உள்ள சொற்களைப் பொருத்தமான வினைமுற்றாக மாற்றி, கோடிட்ட
இடங்களில் எழுதுக.
1. இந்திய மொழிகளின் மூலமும் வேருமாகத் தமிழ் _______ ( திகழ் )
2. வைதேகி நாளை நடைபெறும் கவியரங்கில் _________ ( கலந்துகொள் )
1. சர் ஆர்தர் காட்டன்
கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டியது.
2. .
மழையே
பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன.
குறிப்பு
:- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
சொல்லுக்குள்
சொல் தேடுக.
அ) கடையெழுவள்ளல்கள் ஆ) எடுப்பார்கைப்பிள்ளை
28. மரபு
இணைச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. மேடும் பள்ளமும் 2. நகமும் சதையும்
பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )
பிரிவு – I
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:- 2×3=6
29. ஏறுதழுவுதல், திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருந்தது?
30.
பள்ளி
மாணவர்களுக்கான தமிழக அரசின் இணைய வழிச் சேவைகளை எழுதுக.
31.
பத்தியைப் படித்து பதில் தருக
இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கேல் ஆல்ட்ரிச் 1979இல் இணைய வணிகத்தைக்
கண்டுபிடித்தார். இது இணைய உலகின் மற்றொரு பாய்ச்சலாகக் கருதப்படுகிறது. 1989இல் அமெரிக்காவில்
இணைய வழி மளிகைக்கடை தொடங்கப்பட்டது. 1991 இல் இணையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
அ)
இணைய வணிகத்தைக் கண்டுபிடித்தவர் யார்?
ஆ)
அமெரிக்காவில் இணைய வழி மளிகைக்கடை எப்போது தொடங்கப்பட்டது?
இ)
எந்த ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இணையம் வந்தது?
பிரிவு – II
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
( 34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க
வேண்டும்.)
32. 'என் சம காலத் தோழர்களே' கவிதையில் கவிஞர்
விடுக்கும் வேண்டுகோள் யாது?
33. காலந்தோறும் தமிழ்மொழி தன்னை எவ்வாறு புதுப்பித்துக் கொள்கிறது?
34.
அ) “ தித்திக்கும் “ எனத் தொடங்கும் தமிழ்விடுதூது பாடலை அடிமாறாமல் எழுதுக
(அல்லது )
ஆ) “நீரின்றி ” எனத் தொடங்கும் புறநானூறு பாடலை எழுதுக.
பிரிவு -III
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
35. வல்லினம் மிகா இடங்களுக்கு மூன்று சான்று தருக.
36. துணைவினையின் பண்புகள் யாவை?
37.
அடைப்புக் குறிக்குள் கேட்டுள்ளவாறு தொடர்களை மாற்றி எழுதுக.
அ) நம் முன்னோர் இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தினர் ( வினாத்தொடர் )
ஆ) இசையின்றி அமையாது பாடல் ( உடன்பாட்டு
தொடர் )
இ) நீ இதைச் செய் எனக் கூறினேன்
அல்லவா? ( கட்டளைத் தொடர் )
பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்க. 5×5=25
38. அ) இந்திர விழாவைக் காண வந்தோர் பற்றியும் விழா முன்னேற்பாடுகள்
பற்றியும் மணிமேகலை கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக. ( அல்லது )
ஆ) தூது அனுப்பத் தமிழே சிறந்தது – தமிழ்விடுதூது
காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக
39. உங்கள் நண்பர், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர்
எஸ்.இராமகிருஷ்ணனின் “ கால் முளைத்த கதைகள் “ என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக
எழுதுக.
( அல்லது )
ஆ. உங்கள் பள்ளி இலக்கிய மன்றத்தின் சார்பில் நடைபெறவிருக்கும் உலகத் தாய்மொழி
நாள் ( பிப்ரவரி 21 ) விழாவிற்கான நிகழ்ச்சி நிரல் ஒன்றை வடிவமைக்க
40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.
41.
மொழிபெயர்க்க:-
1. Every flower is a soul blossoming in
nature – Gerard De Nerval
2. Sunset is still my favourite colour,
and rainbow is second - Mattie Stepanek
3. An early morning walk is a blessing
for the whole day – Henry David Thoreau
4. Just living is not enough… One must
have sunshine, freedom, and a little flower – Hans Christian Anderson
42.
அ) பா நயம் பாராட்டுக
பொங்கியும்
பொலிந்தும் நீண்ட புதுப்பிடர் மயிர்சி லிர்க்கும்
சிங்கமே! வான
வீதி திகுதிகு எனஎ ரிக்கும்
மங்காத தணற்பி
ழம்பே ! மாணிக்கக் குன்றே ! தீர்ந்த
தங்கத்தின்
தட்டே! வானத் தகளியிற் பெருவி ளக்கே!
கடலிலே கோடி
கோடிக் கதிர்க்கைகள் ஊன்று கின்றாய்
நெடுவானில் கோடி
கோடி நிறைசுடர்க் கைகள் நீட்டி
இடைப்படு மலையோ
காடோ இல்லமோ பொய்கை ஆறோ
அடங்கநின் ஒளிஅ
ளாவ அமைந்தனை ! பரிதி வாழி! – பாரதிதாசன் ( அல்லது )
ஆ)
என்
பொறுப்புகள்…
அ) தண்ணீரைச்
சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.
ஆ) ஆசைப்படும் பொருட்களை முயன்று உழைத்து அவற்றை என்னுடைய பணத்தில் வாங்குவேன்.
இ)__________________
ஈ)__________________
உ)__________________
ஊ)___________________
குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
பின்வரும்
கருத்துகளை உள்வாங்கிக் கண்டு, வரிசைப் படுத்தி முறையான பத்தியாக்குக.
1. உலகின் மிகப்பெரிய கல்மரப்
படிமமும் இங்கே தான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
2. டைனோசர்கள் உலாவித் திரிந்த
தமிழ்மண் என்று அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடல்பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள
ஆதாரங்கள் உறுதி செய்கின்றன.
3. இங்குக் கல்லாகிப் போன
டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை,
டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின்
பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன.
4. தமிழ்மக்களின்
தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும்
தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன.
பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )
அனைத்து
வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. 3×8=24
43. அ
ஏறுதழுவுதல்
தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரிக்க. ( அல்லது )
ஆ) திராவிட
மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதனை எடுத்துக்காட்டுடன்
விளக்குக.?
44. அ 'தண்ணீர்’ கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக. ( அல்லது
)
ஆ
சொற்கள்
புலப்படுத்தும் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை வளரும் செல்வம் என்னும் உரையாடலில் உள்ள
செய்திகளை தொகுத்து எழுதுக.
45.
அ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
முன்னுரை
– அகழாய்வு – அகழாய்வின் சிறப்பு – கீழடி அகழாய்வு – அகழாய்வின் தேவை – பயன் - முடிவுரை
( அல்லது )
ஆ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
முன்னுரை – சுற்றுச்சூழல்
– தூய்மையின் அவசியம் – நீர் தூய்மை – நிலத் தூய்மை - காற்றுத்தூய்மை – சூழல் பாதுகாப்பு நம் பொறுப்பு
– முடிவுரை
ஆக்கம்
திரு.வெ.ராமகிருஷ்ணன்
M.A.,B.ED.,D.TED.,
அரசு
உயர்நிலைப் பள்ளி,
வளைய
செட்டிப்பட்டி.