9TH-TAMIL-MODEL QUARETLY EXAM -2024 - QUESTIONS-1-PDF

 

மாதிரி காலாண்டுத் தேர்வு – 2024

வினாத்தாள் - 1

 மொழிப்பாடம் – தமிழ்

வகுப்பு : 9

நேரம் : 3.00 மணி                                                                             மதிப்பெண் : 100

______________________________________________________________________

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

குறிப்புகள் :  I ) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.

                II) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் ஏற்புடைய விடையினைத் தேர்ந்தெடுத்து

                      எழுதுக.

அ) சரியான விடையைத் தேர்வு செய்க.                                                                  15×1=15

1. . காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! – எந்த

   காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!............. இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்

) முரண்,எதுகை,இரட்டைதொடை   ) இயைபு,அளபெடை,செந்தொடை

) மோனை,எதுகை,இயைபு                ஈ) மோனை,முரண்,அந்தாதி

2 முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக

) தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்

) தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான

) தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்

ஈ) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்

3. “ மிசை “ என்பதன் எதிர்சொல் என்ன?

அ) கீழே                ஆ) மேலே             இ) இசை   ஈ) வசை

4. மல்லல் மூதூர் வயவேந்தே – கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

) மறுமை            ஆ) பூவரசு மரம்              ) வளம்     ) பெரிய

5. மணிமேகலை காப்பியத்தின் ஆசிரியர் யார்?

அ) இளங்கோவடிகள்                ஆ) கம்பர்    

இ) சீத்தலைச் சாத்தனார்            ஈ) சேக்கிழார்

6. தீரா இடும்பை தருவது எது?

அ. ஆராயாமை, ஐயப்படுதல்               ஆ. குணம், குற்றம்

இ. பெருமை, சிறுமை                          ஈ. நாடாமை, பேணாமை

7. வையக விரிவு வலை ( www ) வழங்கியை உருவாக்கியவர்……

அ) மைகேல் ஆல்ட்ரிச்               ஆ) டிம் பெர்னெர்ஸ் லீ

இ) ஜான் ஷெப்பர்டு பாரன்          ஈ) ஹாங்க் மாக்னஸ்கி

8. தண்டமிழ் ஆசான் என அழைக்கப்படுபவர் ____

அ) இளங்கோவடிகள்       ஆ) சீத்தலைச் சாத்தனார் இ) குடபுலவியனார் ஈ) சேக்கிழார்

9. பின்வரும் தொடர்களைப் படித்து ‘நான்’ யார் என்று கண்டுபிடிக்க .

அறிவியல் வாகனத்தில் நிறுத்தப்படுவேன்  எல்லாக் கோளிலும் ஏற்றப்படுவேன் இளையவர் கூட்டம் என்னை ஏந்தி நடப்பர்

அ) இணையம்       ஆ) தமிழ்     இ) கணினி   ஈ) ஏவுகணை

10. பொருந்தாத இணை எது?

அ) ஏறுகோள் – எருதுகட்டி       ஆ) திருவாரூர் – கரிக்கையூர்   

இ) ஆதிச்ச நல்லூர் – அரிக்க மேடு   ஈ) பட்டிமன்றம் – பட்டிமண்டபம்  

11. திறன் அட்டை என்பவை கீழ்க்கண்டவற்றுள் எதனைக் குறிப்பிடுகிறது?

அ) வங்கி அட்டை                        ஆ) ஆதார் அட்டை

இ) குடும்ப அட்டை                      ஈ) ஓட்டுநர் உரிமம்

பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

தோரணவீதியும் தோம்அறு கோட்டியும்

பூரண கும்பமும் பொலம்பா லிகைகளும்

பாவை விளக்கும் பலவுடன் பரப்புமின்;

காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்  

12. இப்பாடல் இடம் பெற்ற நூல்

அ. தமிழ்விடுதூது             ஆ. புறநானூறு

இ. பெரியபுராணம்             ஈ. மணிமேகலை

13. இப்பாடலை இயற்றியவர்___________

அ. குடபுலவியனார்          ஆ. சேக்கிழார்

இ. சீத்தலைச் சாத்தனார்  ஈ. சமண முனிவர்கள்

14. ‘ கமுகு ‘ என்பது எதனைக் குறிக்கிறது__________

அ. பூஞ்செடி          ஆ. வாழை மரம்

இ. பாக்கு மரம்          ஈ. தென்னை

15. ‘ வாழையும் வஞ்சியும்‘ – என்பதன் இலக்கணக் குறிப்பு

அ. பண்புத் தொகை                   ஆ. வினைத் தொகை              

இ. உம்மைத் தொகை                ஈ. எண்ணும்மை

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 )

பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.          4×2=8

(21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.)

16. விடைக்கேற்ற வினா அமைக்க.

அ. செஸ்டர் கார்ல்சன் என்பவர் நியூயார்க்கைச் சேர்ந்த காப்புரிமை சட்ட வல்லுநர்.

ஆ. மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகள் உணவு, உடை, உறைவிடம் என்பனவாகும்.

17. கணினி சார்ந்து நீங்கள் அறிந்த எவையேனும் ஐந்து தமிழ்ச் சொற்களைத் தருக.

18. “ கூவல் “ என்று அழைக்கப்படுவது எது?

19. நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரிய புராணம் எதனை ஒப்பிடுகிறது?

20. தொல்லியல் சான்றுகள் காணப்படும் இடங்களை அகழாய்வு செய்ய வேண்டும். ஏன்?

21.  மிகுதியான் – எனத் தொடங்கும் குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                         5×2=10

22. வல்லினம் மிகும் இடங்களுக்கு இரண்டு சான்றுகள் தருக.

23. மரபு இணைச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

        1. மேடும் பள்ளமும்                              2. நகமும் சதையும்

24. கலைச்சொல்  தருக:

          அ) Hero stone                   ஆ) Inscription

25. செய்வினையைச் செயபாட்டு வினையாக மாற்றும் துணைவினைகள் இரண்டினை எடுத்துக்காட்டுடன் எழுதுக

26. தொடரைப் பழமொழிகொண்டு நிறைவு செய்க.

1. இளமையில் ________         

2. சித்திரமும் கைப்பழக்கம் ­­­­­­­___________

27. பிழை நீக்கி எழுதுக.

அ. மழையே பயிர்க்கூட்டமும் உயிர்க்கூட்டமும் வாழப் பெருந்துணை புரிகின்றன.

ஆ. மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு குளிர வைத்தாள்.

குறிப்பு :- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

பொருள் எழுதி தொடரமைக்க:-

கரை; கறை குளவி; குழவி

28. வினையடிகளை முதல்வினையாகவும் துணைவினையாகவும் அமைத்துத் தொடர்களை உருவாக்குக.

வினையடி – வா, போ

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )

பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                          2×3=6

29. மூன்று என்னும் எண்ணுப்பெயர் பிற திராவிட மொழிகளில் எவ்வாறு இடம் பெற்றுள்ளது?

30. சோழர்காலக் குமிழித்தாம்பு  எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?

31. பத்தியைப் படித்து பதில் தருக

        சல்லிக்கட்டு பேச்சு வழக்கில் திரிபுற்று ஜல்லிக்கட்டு என அழைக்கப்படுகிறது. சல்லி என்பது மாட்டின் கழுத்தில்  கட்டப்படுகின்ற வளையத்தினைக் குறிக்கும். புளியங்கொம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணிவிக்கும் வழக்கம் தற்போதும் உள்ளது. அக்காலத்தில் புழங்கிக் கொண்டிருந்த சல்லி நாணயங்களை, துணியில் முடிந்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கமும் இருந்தது.மாட்டைத் தழுவும் வீரருக்கு அந்தப் பணமுடிப்புச் சொந்தமாகும்.

அ) சல்லி என்பது யாது?

ஆ) காளையின் கழுத்தில் வளையம் எவ்வாறு அணிவிக்கப்படுகிறது?

இ) மாட்டைத் தழுவும் வீரருக்கு கிடைக்கும் பரிசு யாது?

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.          2×3=6

              ( 34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.)

32. உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திர விழா நிகழ்களுடன் ஒப்பிடுக.

33. பட்ட மரத்தின் வருத்தங்கள் யாவை?

34. அ) “ ஒன்றறிவதுவே “ எனத் தொடங்கும் உயிர்வகைப் பாடலை அடிமாறாமல்  எழுதுக

(அல்லது )

      ஆ) “காடெல்லாம் ” எனத் தொடங்கும் பெரிய புராணம்  பாடலை எழுதுக.

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                     2×3=6

35. வளரும் செல்வம் – உரையாடலில் குறிப்பிடப்படும் பிறமொழிச் சொற்களைத் தொகுத்து அவற்றிற்கு இணையான தமிழ்ச்சொற்களைப் பட்டியலிடுக.

சைபர்பேஸ்                      -        இணைய வெளி.

36. தன்வினை, பிறவினை – எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்திக் காட்டுக.

37. வல்லினம் இட்டும் நீக்கியும் எழுதுவதன் இன்றியமையாமையை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

                                                        பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                5×5=25

38. அ) பெரியபுராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக. ( அல்லது )

ஆ) கேளவி செல்வமே சிறந்த செல்வம் என திருக்குறள் கூறும் கருத்துகளைக் கூறுக

39. உங்கள் நண்பர், பிறந்த நாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணனின் “ கால் முளைத்த கதைகள் “ என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.

          ( அல்லது )

ஆ. சுற்றுச் சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில் மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக் கொண்டாடும் விழாவில் கலந்துகொள்ளும் மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல் ஒன்றை எழுதுக.

40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.

 

 

 


                  

41. மொழிபெயர்க்க:-

Bottle xylophone: Make music with bottles You will need: 6 glass bottles, Wooden spoon, Water, Food coloring.

1. Fill one bottle with water, then fill each other bottle with slightly less than the bottle next to it.

2. Add some food coloring to help you to see the different levels of water.

3. Tap the bottles with the end of a wooden spoon. Can you play a tune?

Water music

 Hitting the bottles with the spoon makes them vibrate and produce a sound. The more the bottle vibrates, the higher the note will be. The more water in a bottle, the less it vibrates, so less water means higher notes.

42. அ) பா நயம் பாராட்டுக

கல்லும் மலையும் குதித்துவந்தேன் – பெருங்

காடும் செடியும் கடந்துவந்தேன்;

எல்லை விரிந்த சமவெளி – எங்கும்நான்

இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்.

ஏறாத மேடுகள் ஏறிவந்தேன்-பல

ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்; ஊறாத

ஊற்றிலும் உட்புகுந்தேன்-மணல்

ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்.கவிமணி                   ( அல்லது )

ஆ) என் பொறுப்புகள்…

          உன் பெற்றோரை மகிழ்வுற செய்யுமாறு நீ செய்யும் செயல்பாடுகளை பட்டியலிடுக.

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

கதையைப் படித்து உரையாடலாக மாற்றுக.

ஒரு சிப்பி, இன்னொரு சிப்பியிடம் சொன்னது – ‘ஐயோ, என்னால் வலி தாங்கமுடியவில்லையே '. ‘ஏன்? என்னாச்சு? ’ என்று விசாரித்தது இரண்டாவது சிப்பி.எனக்குள் ஏதோ ஒரு கனமான உருண்டை, பந்து உருள்வதுபோல் இருக்கிறது. ரொம்ப வலி. ’ இதைக் கேட்டதும் இரண்டாவது சிப்பிக்கு மிகுந்த மகிழ்ச்சி. பெருமையுடன் நெஞ்சு நிமிர்த்தி, 'ஆகா! நான் எந்த வலியும் இல்லாமல், நலமாக இருக்கிறேன்' என்றது உற்சாகமாக. இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு நண்டு, இரண்டாவது சிப்பியிடம் சொன்னது–உனக்கு எந்த வலியும் இல்லை என்பது உண்மையாக இருக்கலாம். வலியைத் தாங்க விரும்பாத நீ, எப்பொழுதும் இப்படியே வெறுமையாகக் கிடக்க வேண்டியதுதான். ஆனால், இப்போது சிரமப்படுத்தும் அந்த வலி, இன்னும் சில நாள்களில், ஓர் அழகான முத்தாக உருவெடுக்கும். அது பெருமை தேடித்தரும். ’

 

 

பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                              3×8=24

43. அ) பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப்பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக:-.  ( அல்லது )

ஆ) அன்றாட வாழ்வில் நீங்கள் பயன்படுத்தும் இரண்டு இணையவழிச் சேவைகள் பற்றி விரிவாகத் தொகுத்து எழுதுக.

44. அ 'தண்ணீர்’ கதையைக் கருப்பொருள் குன்றாமல் சுருக்கித் தருக.    ( அல்லது )

இந்திய விண்வெளித் துறை பற்றிய செய்திகளை விவரிக்க

45. அ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

முன்னுரை – ஏறுதழுதல் – பண்பாட்டு அடையாளம் – தமிழர் அறம் – நம் கடமை –   முடிவுரை  ( அல்லது )

ஆ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

முன்னுரை – நீரின்றி இயங்காது உலகு – நீரின் இன்றியமையாமை – நீர் நிலைகள் – நீர் பற்றாக்குறை ஏற்படக் காரணம் -  நீரைச் சேமித்தல் – நிலத்தடி நீர் மட்டம் – முடிவுரை

 

 

 KINDLY WAIT FOR 10 SECONDS


நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post