8TH-TAMIL-QUATERLY EXAM-2024-TAMIL-ANSWER KEY-PDF-SALEM

 

 சேலம் – காலாண்டுத் தேர்வு  -2023

எட்டாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  3.00 மணி                                                                    மதிப்பெண் : 100

பகுதி – 1

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக                                                  10 × 1 = 10

1.

ஆ. வட்டெழுத்து

1

2.

ஆ. உ,ஊ

1

3.

ஆ. ஓடை

1

4.

இ. பிணி

1

5.

அ. இரண்டு + திணை

1

6

அ.தாவரங்களை

1

7

ஆ. எச்சம்

1

8.

ஈ. கல்வி

1

9.

இ. இடமெங்கும்

1

10.

ஈ. தொழிலில்

1

II) கோடிட்ட இடம் நிரப்புக                                                                                          5 × 1 = 5

11

வீரமாமுனிவர்

1

12.

மார்பு

1

13

அறிவியல்

1

14.

வையம்

1

15.

தாயாக

1

III) பொருத்துக                                                                                                           5 × 1 = 5

16.

இராமனுக்குத் தம்பி இலக்குவன்

1

17.

பாரியினது தேர்

1

18.

பத்துப்பாட்டு

1

19.

கம்பராமாயணம்

1

20.

வாழ்க

1

பகுதி - 2

IV.  அடிமாறாமல் எழுதுக                                                                                    4+2 = 6

21  .

உடலின் உறுதி உடையவரே

          உலகின் இன்பம் உடையவராம்

இடமும் பொருளும் நோயாளிக்கு

           இனிய வாழ்வு தந்திடுமோ?

சுத்தம் உள்ள இடமெங்கும்

          சுகமும் உண்டு நீயதனை

நித்தம் நித்தம் பேணுவையேல்

          நீண்ட ஆயுள் பெறுவாயே !

4

21  .

ஓடை ஆட உள்ளம் தூண்டுதே! – கல்லில்

உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும்

   பாட இந்த ஓடை எந்தப்

பள்ளி சென்று பயின்ற தோடி!

   ஏடு போதா இதன்கவிக் கார்

ஈடு செய்யப் போரா ரோடி!

4  

22   

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்

2

பகுதி -3

V.  எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி                                         5 × 2 = 10

23

தமிழ் உலகம் முழுவதும் புகழ் கொண்டு வாழ்கிறது

2

24

ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என  உருவான நிலையை ஒலி எழுத்து நிலைஎன்பர்.

2

25.

ஓடைஎழுப்பும் ஒலிக்கு வள்ளைப்பாட்டின் இசையை உவமையாக வாணிதாசன் குறிப்பிடுகிறார்.

2

26

தூய்மையான காற்று, நல்ல குடிநீர், உடற்பயிற்சி

2

27 .

§  நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி

§  அளவான உணவு

§  சத்தான உணவு

2

28.

கற்றவருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை

2

29.

தாய்நாடு என்னும் பெயர் தாய்மொழியைக் கொண்டே பிறக்கிறது.

2

VI. எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி                                                       5× 2 = 10

30

உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு, தலை, கழுத்து, மூக்கு ஆகிய நான்கு இடங்களுள் ஒன்றில்  பொருந்தி, இதழ், நாக்கு, பல், மேல்வாய்ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத் தோன்றுகின்றன. இதனையே எழுத்துகளின் பிறப்பு என்பர்.

2

31.

க, இய, இயர்,அல்

2

32.

ஒரு வினைமுற்று எச்சப்பொருள் தந்து மற்றொரு வினைமுற்றைக் கொண்டு முடிவது முற்றெச்சம் எனப்படும்.

சான்று : வள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்.

    இத்தொடரில் படித்தனள் என்னும் சொல் படித்து என்னும் வினையெச்சப் பொருளைத் தருகிறது

2

33

எழுவாயுடன் வேற்றுமை உருபுகள் எதுவும் இணையாமல், எழுவாய் தனித்து நின்று, இயல்பான பொருளைத் தருவது எழுவாய் வேற்றுமை என்பர்.இதனை 'முதல் வேற்றுமை' என்றும் கூறுவர்.     எடுத்துக்காட்டு: பாவை வந்தாள்,

2

34.

பொருள் முற்றுப் பெறாமல் எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும். இது பெயரெச்சம், வினையெச்சம் என்று இருவகைப்படும்.

2

35

    வினை கொண்டு முடிகிற பொருளைத் தன்னிடத்தும் உடன் நிகழ்கிறதாக உடையது உடனிகழ்ச்சி ஆகும்.

    ஓடு, ஓடு ஆகிய மூன்றாம் வேற்றுமை உருபுகள் உடனிகழ்ச்சிப் பொருளில் வரும்.

எடுத்துக்காட்டு :   தாயோடு குழந்தை சென்றது.

2

36.

செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறினையும் வெளிப்படுமாறு அமைவது தெரிநிலை வினைமுற்று எனப்படும்.

 

VII. எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளி                                       6 × 3 = 18

37

·         நெடிலைக் குறிக்க ஒற்றைப் புள்ளிகளுக்குப் பதிலாக துணைக்கால் இடப்பட்டது

·         ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு இரட்டைப் புள்ளிகளுக்குப் பதிலாக இணைக்கொம்பு ()  பயன்படுகின்றது.

·         ஔகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக கொம்புக்கால் (ள) பயன்படுகின்றது.

3

38

·         எல்லா காலத்திலும் நிலைபெற்றது.

·         எல்லாவற்றையும் அறிந்துரைக்கிறது.

·         ஏழு கடல்களால் குழப்பட்ட நிலம் முழுவதும் புகழ்கொண்டது.

·         உலகம் உள்ளவரையிலும் வாழும்.

·         எங்கும் உள்ள அறியாமை இருள் நீக்கும்.

·         துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிர,  தமிழே! வாழ்க.

3

39.

·         வாங்கல் ஊரில் வைக்கப்பட்ட தென்னம் பிள்ளைகள் வீணாயின.

·         தொண்டைமான் நாட்டில்  வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன.

3

40

Ø ஏரிகளில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள், எம்மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை நினைவு கூர்பவை.

Ø நீரின் முனுமுனுப்புகள் எம்பாட்டன்மார்களின் குரல்கள்.

ஆறுகள் யாவும் எம் உடன் பிறந்தவர்கள், இவர்கள் தாம் எமது தாகத்தைத் தீர்க்கிறார்கள்

3

41.

·         அகற்றுவதற்கு அரியவை பிறவித்துன்பங்கள் ஆகும். இவற்றைத்தீர்க்கும் மருந்துகள் மூன்று.

·         நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம் என்பவையேஅம்மருந்துகள்.

·         இவற்றை ஏற்றோர் பிறவித்துன்பத்திலிருந்து நீங்கி உயரிய இன்பத்தை அடைவர்.

3

42.

·         சரியான உணவு, சரியான உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய மூன்றும் உங்களை நலமாக வாழவைக்கும்.

·          விலை உயர்ந்த உணவுதான் சரியான உணவு என்று எண்ணாதீர்கள்.

·         எளிமையாகக் கிடைக்கக்கூடிய காய்கறிகள், கீரைகள், பழங்கள், சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

·         கணினித்திரையிலும் கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள்

3

43

·         கண்ணியம் தவறாமல் எடுத்த செயலில் தன்னுடைய திறமையைக் காட்டவேண்டும்.

·         அறிவுக்கு வேலை கொடுத்துஅமைதி காக்க வேண்டும்.

·         பகைவன் அடிக்க வந்தாலும், அவரிடம் அன்பு காட்டி அரவணைக்க வேண்டும்.

·         மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கல் போன்றது.இதனை மறந்து வாழ்ந்தவன் வாழ்க்கை, தடம் தெரியாமல் மறைந்து போய்விடும்.

·         வாழும் வாழ்க்கை சில காலமே! அதற்குள் ஏன் அகம்பாவம்? இதனால் எந்த இலாபமும் கிடைக்காது.

·         அகம்பாவத்தைக் காட்டாமல் வாழ வேண்டும்.

3

44

·         கலப்பில் வளர்ச்சி உண்டு என்பது இயற்கை நுடபம். தமிழை வளர்க்கும் முறையிலும் அளவிலும் கலப்பைக் கொள்வது சிறப்பு.ஆகவே, தமிழ்மொழியில் அறிவுக்கலைகள் இல்லை என்னும் பழம்பாடடைநிறுத்தி, அக்கலைகளைத் தமிழில் பெயர்த்து எழுதித் தாய்மொழிக்கு ஆக்கம் தேடுவோம் என்னும் புதுப்பாட்டு பாடுமாறு சகோதரர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

·          கலைகள் யாவும் தாய்மொழி வழி மாணாக்கர்களுக்கு அறிவுறுத்தப்படும் காலமே தமிழ்த்தாய் மீண்டும் அரியாசனம் ஏறும் காலமாகும் என்று திரு.வி.க. கூறுகின்றார்.

3

VIII. எவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளி                                          6× 2 = 12

45.

அ. பருகு

ஆ, கொய்

1

1

 

46.

அ. உயிரெழுத்து பிறக்கும் இடம் கழுத்து ஆகும்.

ஆ. தமிழ் அம்புவிடும் கலையை ஏகலை என்றது.

1

1

47.

அ. விழைவுத் தொடர்

ஆ. வினாத் தொடர்

1

1

48

அ. நோய்

ஆ. சீர்திருத்தம்

1

1

49

அ. ௧௬

ஆ. ரு

1

1

50

அ. திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது.

ஆ. திரு. வி. க, எழுதிய 'பெண்ணின் பெருமை" என்னும் நூல் புகழ்பெற்றது

1

1

51

உடலும் உயிரும் போல கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் நட்புடன் திகழ்ந்தனர்

2

பகுதி - 4

XI.  அனைத்து வினாவிற்கும் விடையளிக்க                                                     3× 8= 24

52.அ

எழுத்து - தொடக்க நிலை :

v  மனிதன் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பி, அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான்.

v  இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும்.

ஓவிய எழுத்து :

v  தொடக்கக் காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ, வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.

 

ஒலி எழுத்து நிலை :

v  ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகியசொல்லைக் குறிப்பதாக மாறியது.

v  ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் முதல் ஓசையைக் குறிப்பதாயிற்று.

v  ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை “ஒலி எழுத்து நிலை" என்பர்.

8

52ஆ

v தமிழரது நிலம்,நிறைந்த பண்பாடுகளும் தத்துவங்களும் அடங்கியது. தமிழர் தத்துவங்களான சாங்கியம், ஆசீவகம் போன்றவை உடலுக்கும் பிரபஞ்சத்துக்கும் உள்ள ஒற்றுமையைக் கண்டறிந்து, உடலில் ஐம்பூதங்களினால் ஏற்படும் மாற்றங்களை விளக்கின.

v நோயை இயற்கையில் கிடைக்கும் பொருள்கள், அப்பொருள்களின் தன்மை,சுவை இவற்றைக்கொண்டே குணப்படுத்த முடியும் என்ற உண்மையை மிகத்தெளிவாக விளக்கினர். தமிழர் மருத்துவம் பண்பாட்டுக்கூறாக ஆகும்போது நாட்டு வைத்தியமாகவும் பாட்டி வைத்தியமாகவும் மரபுசார்ந்த சித்த வைத்தியமாகவும் உணவு சார்ந்த மருத்துவமாகவும், பண்பாடு சார்ந்த மருத்துவமாகவும் விரிந்திருக்கிறது.

8

53அ

v  கிராமத்தில் பணி புரியும் ஆசிரியரின் வேட்டி களவாடப்பட்டிருந்தது.

v  அதை அக்கிராமத்தைச் சேர்ந்த சிகாமணிதான் எடுத்திருப்பார் என கிராம மக்கள் கூறுகிறார்கள். ஆசிரியருக்கும் அதே சந்தேகம். ஆனால் கேட்க மனமில்லை.சிகாமணியின் மகன் சகாதேவன் அந்த ஆசிரியரிடம் மாணவனாகப் பயின்று வருகின்றான்.

v  வகுப்பில், திருக்குறளில், 'பண்புடைமை' என்னும் அதிகாரத்தில் உள்ள, அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் எனும் குறளினை நடத்துகிறார். சிறந்த குடியில் பிறத்தல் என்னும் கருத்தினை சொல்ல ஆசிரியருக்குத் தயக்கம்.

v  சிறந்த குடியை உருவாக்குதல் என மாற்றிக் கூறினார்.  அதற்கு காரணம், சகாதேவனின் குடும்ப பின்னணியே ஆகும்.திருடன் மகன் திருடன் என்று பெயர் எடுத்தல் கூடாது. அதை வழிவழியாகத் தொடராமல், தான் நல்வழியில் வாழ்தல் தான் சிறந்த குடிபிறப்பு என்று கூறினார்.

v  அவன் தகப்பன் கெட்டவன். மகன் நல்லவன் என்று கூறுதல் வேண்டும். அவ்வாறு பெயர் எடுக்கவேண்டும் என்று ஆசிரியர் பாடம் நடத்தினார்.

v  மனம் திருந்திய சகாதேவன், அவ்வூரில் உள்ள கிருஷ்ணமூர்த்தியிடம், அவ்வேட்டியினைக் கொடுத்து அனுப்பினான்.

v  கிருஷ்ணமூர்த்தி, ஆசிரியரிடம் அதைக் கொடுத்துவிட்டு, அவன் அப்பா வீட்டில் மறைத்து வைத்த வேட்டியைத் தங்களிடம் தருமாறு சகாதேவன் கூறினான் பெற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறினான்

v  ஆசிரியர் மகிழ்ச்சி அடைந்தார் தான் வகுப்பில் நடத்திய பாடம். மாணவனின் மனதை மாற்றியுள்ளதே என நினைத்து பூரித்துப்போனார்

v  மேலும், அவனுக்கு அவன் அப்பாவால் தண்டனை கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக, ஊர் மக்களிடம், இதோடு, இப்பிரச்சனையை விட்டுவிடுமாறு வேண்டினார்.

ஆம்! குழந்தைகளே, ஆசிரியர் நடத்தும் பாடத்தை வாழ்வில் கடைப்பிடித்து, நல்லவர்களாக வாழ்வோம்.

8

53 ஆ

குறிஞ்சிப் புதரின் கிளையில் பச்சை வெட்டுக்கிளி ஒன்று வசித்து வந்தது. அது ஒரு வாயாடி.  ஒரு மாலை நேரம் கூரன் என்ற பெண் சருகுமானை வெட்டுக்கிளி பார்த்தது. "என்ன கூரன், பார்த்து வெகுநாள் ஆயிற்று! இவ்வளவு நாடகள் எங்கே போயிருந்தாய்? ஏன் இங்கும் அங்குமாய் வேகமாக ஓடுகிறாய்?' அதற்கு சருகுமான், இப்பொழுது உள்னிடம் பேச எனக்கு நேரமில்லை. பித்தக்கண்ணு என்னைத் துரத்திக்கொண்டு வருகிறது. தலையை மட்டும் தூக்கி வெட்டுக்கிளியை எச்சரித்தது. பித்தக்கண்ணு உன்னிடம் என்னைப் பற்றிக் கேட்டால் வாயைத் திறந்து எதையும் சொல்லிவிடாதே என்றது.

வெட்டுக்கிளியும் பித்தக்கண்ணும்:

    கூரனைத் தேடிக் கொண்டு பித்தக்கனானும் ஓடைப் பக்கம் வந்தது. வெட்டுக்கிளி அதன் கண்ணில் பட்டதும் அதைப் பார்த்து உறுமியது. 'கூரன் இங்கு வந்தாளா?" என்றது. வெட்டுக்கிளிக்கு உற்சாகம் தலைக்கு ஏறியது. பித்தக்கண்ணுவை இவ்வளவு  பக்கத்தில் பார்ப்பது இதுதாள் முதல்முறை, பித்தக்கண்ணுவைப் பார்த்ததால் ஏற்பட்ட பரவசத்தை அடக்க இயலாமல் தன்னை அறியாமல் கூரன் ஒளிந்திருந்த இடத்தருகே குதித்துக் குதித்துச் சென்றது. அதைக்கண்ட பித்தக்கண்ணு, கூரன் பதுங்கி இருந்த மரத்தடிப்பக்கம் சென்று மோப்பமிட்டது. அங்கு புனுகுப் பூனையின் துர்நாற்றமே எட்டியது.

உயிர்பிழைத்த கூரன் :

கூரன் வெளியே வந்தது. தன் மறைவிடத்தை ஏறக்குறையக் காட்டிக் கொடுத்ததற்காக வெட்டுக்கிளி மீது அதற்குக் கோபமான கோபம், அதற்கு ஒரு பாடம் கற்பித்தாக வேண்டும் என்று எண்ணியது. 'இனி இப்படிச் செய்தால், திரும்பி வந்து உன்னை என் கால்களால் மிதித்து நசுக்கிவிடுவேன்' என்று கூறிக் காட்டுக்குள் ஓடியது.

வெட்டுக்கிளியின் பயம்

 அன்றிலிருந்து கூரனின் கூர்ப்பாதங்கள் எங்கே தன்மீது பட்டுவிடுமோ என்ற அச்சத்திலேயே வெட்டுக்கிளி வாழ்ந்து வருகிறது. இதனால் தாள் இன்றும் கூட வெட்டுக் கிளிகள் ஓர் இடத்தில் நிலைத்து இருக்க முடியாமல் குதித்த வண்ணமுள்ளன.

8

54 அ.

முன்னுரை:     

இருபதாம் நூற்றாண்டின் விடிவெள்ளி, புதுமைக் கவிஞர், தேசியக் கவி, மகாகவி எனப் பாராட்டப்பட்டவர் நம் பாரதியாரே ஆவார்.

பிறப்பும் இளமையும்

          பாரதியார் எட்டயபுரத்தில் 11.12.1882 ஆம் நாளில் பிறந்தார். இவரின் பெற்றோர் சின்னசாமி, இலக்குமி அம்மையார் ஆவார்.. தமது பதினோறாம் வயதில் பாரதி என்னும் பட்டம் சான்றோர்களால் வழங்கப்பட்டது

விடுதலை வேட்கை: 

'பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு' என்றார். இப்படிப்பட்ட நம் உயர்ந்த பாரதம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருப்பதைஎண்ணி 'நெஞ்சு பொறுக்குதில்லையே' என பாடினார். விடுதலை உணர்வு மிக்க பாடல்களைப் பாடி மக்களைத் தட்டி எழுப்பினார்.

ஒருமைப்பாட்டுணர்வு:

 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே எனப் பாடி மக்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தினார்.

மொழிப்பற்று:

          பல மொழிகளைக் கற்றிருந்த பாரதி யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்றுதமிழின்சிறப்பைஎடுத்துரைத்தார்.

நாட்டுப்பற்று                                                                                                                                                           .  சமுதாயத் தொண்டு: சாதிக் கொடுமைகள், பெண்ணடிமை, சமூக ஏற்றத்தாழ்வுகள் போன்றவை இந்நாட்டிலிருந்து விலக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மதவெறிப் பிடித்து அலைபவர்களின் போக்கினைக் கண்டித்தார்.

படைப்புகள்: 

பாரதியார் எண்ணற்ற கவிதை, உரைநடை நூல்களைப் படைத்துள்ளார். குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், ஞானரதம், தராசு போன்ற எண்ணற்ற படைப்புகளைப் படைத்துள்ளார்.

முடிவுரை: 

 வளமான, வலிமையான பாரதத்திற்குத் தேவையான சிறந்த வழிகள் யாவும் அவருடைய பாடல்களில் உள்ளன. அவற்றை பின்பற்றினால் அவர் கனவு கண்ட பாரதத்தை நம்மால் உருவாக்க முடியும்

 

 

 

8

 

54ஆ

முன்னுரை:

        “நூலகம் அறிவின் ஊற்று

        ”வீட்டிற்கு ஒரு நூலகம் அமைப்போம்

என்று கூறுகிறார் பேரறிஞர் அண்ணா. இக்கட்டுரையில் நூலகத்தின் தேவை குறித்தும், அதன் வகைகள் குறித்தும், அதை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? என்பது குறித்தும் நாம் காண இருக்கிறோம்.

நூலகத்தின் தேவை:

       “ சாதாரண மாணவர்களையும் 

         சாதனை மாணவர்களாக மாற்றுவது நூலகம்” 

    ஏழை மாணவர்களும், இளைஞர்களும் படிப்பதற்கு தேவையான நூல்களை விலை கொடுத்து வாங்க முடிவதில்லை. சில நூல்களின் விலை மிகவும் அதிகமாக உள்ளது. நூல்களைப் படிக்க நூலகம் தேவைப்படுகின்றது .

நூலகத்தின் வகைகள்:

      மாவட்ட மைய நூலகம், மாவட்ட கிளை நூலகம், ஊரக நூலகம், தனியார் நூலகம், கல்லூரி நூலகம்,பள்ளி நூலகம், பல்கலைக்கழக நூலகம், நடமாடும் நூலகம், மின்நூலகம் என நூலகம் பலவகைப்படும்.

நூலகத்தில் உள்ளவை:

     மொழி சார்ந்த நூல்கள், அறிவியல், வணிகம், நிர்வாகம், கதைகள், சட்டம் போன்ற எண்ணற்ற பிரிவுகளின் அடிப்படையில் நூல்களானது நூலகத்தில் இடம் பெற்றிருக்கும்.

 படிக்கும் முறை:

     நூலகத்தில் நூல்களை எடுத்து அமைதியாக படிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் அமர்ந்து படிக்க வேண்டும் நூல்களைக் குறிக்கும் சேதப்படுத்துவது படித்த முடித்தவுடன் மீண்டும் உரிய இடத்தில் நூலை வைக்க வேண்டும்.

முடிவுரை:

             “என்னை தலைகுனிந்து படித்தால்,

              உன்னை நான் தலை நிமிரச் செய்வேன்

     ன்று புத்தகம் மனிதர்களைப் பார்த்துக் கூறுவதாக புகழ் பெற்ற தொடர் உண்டு. நூலகமே என்றும் நிலையானது. அதன் மூலமே மனிதன் ஆழ்ந்த அறிவைப் பெறமுடியும் என்பதை நாம் உணர வேண்டும்.

 

8

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும். சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

 KINDLY WAIT FOR 10 SECONDS


 

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post