மாதிரி முதல் பருவம் – தொகுத்தறித் தேர்வு – 2024
7 -ஆம் வகுப்பு தமிழ்
நேரம் : 2.00 மணி மதிப்பெண் : 60
அ. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:- 5×1=5
1. 'நெறி' என்னும் சொல்லின் பொருள் _________.
அ) வழி ஆ) குறிக்கோள் இ) கொள்கை ஈ) அறம்
2. வானில் ____________ கூட்டம் திரண்டால் மழை பெய்யும்.
அ) அகில் ஆ) துகில் இ) முகில் ஈ) துயில்
3. முத்துராமலிங்கர் நடத்திய இதழின் பெயர் ____________
அ) இராஜாஜி ஆ) நேதாஜி இ) காந்திஜி ஈ) நேருஜீ
4. ஒலியின் வரிவடிவம் _________ ஆகும்.
அ) பேச்சு ஆ) எழுத்து இ) குரல் ஈ) பாட்டு
5. வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _________
அ) வான்ஒலி ஆ) வானொலி இ) வாவொலி ஈ) வானெலி
ஆ. கோடிட்ட இடங்களை நிரப்புக:- 5×1=5
6. . பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம்
7. ஊர்வலத்தின் முன்னால் ________________ அசைந்து வரும்.
8. ‘ காட்டின் வளத்தைக் குறிக்கும் குறியீடு ‘ என்று அழைக்கப்படும் விலங்கு ___________.
9. ‘காடெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _________
10. தமிழகத்தில் புலிகள் காப்பகம் அமைந்துள்ள இடம் _________
இ. பொருத்துக:- 4×1=4
11. பொக்கிஷம் - அழகு
12. சாஸ்தி - செல்வம்
13. விஸ்தாரம் - மிகுதி
14. சிங்காரம் – பெரும்பரப்பு
ஈ. ஏவையேனும் ஆறு வினாக்களுக்கு விடையளி 6×2=12
15. தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக.
16. பாஞ்சாலங்குறிச்சியின் கோட்டைகள் பற்றிக் கூறுக.
17. சிறுவர்களுக்கு நாவற்பழம் கிடைக்க உதவியோர் யாவர்?
18. மொழியின் இரு வடிவங்கள் யாவை?
19. முத்துராமலிங்கத் தேவரைப் பாராட்டிப் பெரியார் கூறியது யாது?
20. மானின் வகைகள் சிலவற்றின் பெயர்களை எழுதுக.
21. வழக்கு என்றால் என்ன?
22. எப்போது தன்நெஞ்சே தன்னை வருத்தும்?
உ) எவையேனும் ஒன்றனுக்கு மட்டும் விடையளி 2×3=6
23. ‘எங்கள் தமிழ்’ பாடலில் நாமக்கல் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக
24. பாஞ்சாலங்குறிச்சியின் வீரத்திற்குச் சான்றாகும் நிகழ்வுகள் பற்றி எழுதுக.
25. புலிகள் குறித்து நீங்கள் அறிந்துகொண்ட செய்திகளைத் தொகுத்து எழுதுக.
26. நேதாஜியுடன் முத்துராமலிங்கத் தேவர் கொண்ட தொடர்புப்பற்றி எழுதுக.
ஊ) அடிமாறாமல் எழுதுக 2+4=6
27. ‘ உள்ளத்தால் ‘ எனத் தொடங்கும் குறளை எழுதுக.
28. அ) ‘ சிற்றில் நற்றூண் ‘ எனத் தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக. ( அல்லது )
ஆ) ‘ அருள் நெறி ‘ எனத் தொடங்கும் பாடலை எழுதுக
எ) கடிதம் எழுதுக. 1×5=5
29. அ) நீங்கள் சென்று வந்த சுற்றுலா குறித்து உங்கள் நண்பனுக்குக் கடிதம் எழுதுக.
எ) கட்டுரை / கடிதம் எழுதுக 1×7=7
30. அ) நான் விரும்பும் தலைவர் ( அல்லது )
ஆ) கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக. தாய்மொழிப் பற்று
(முன்னுரை – மொழி பற்றிய விளக்கம் – தாய்மொழி – தாய்மொழிப் பற்று - தாய்மொழிப் பற்றுக் கொண்ட சான்றோர் – சாதுவன் வரலாறு – நமது கடமை – முடிவுரை)
ஐ) அனைத்து வினாக்களுக்கும் விடையளி. 5×2=10
31. தொகைச் சொற்களை விரித்து எழுதுக:-
அ) முக்கனி ஆ) நாற்றிசை
அ) Island ஆ) Slogan
33. எதிர்பாலுக்குரிய பெயர்களை எழுதுக.
அ) பெண் × _________ ஆ) மாணவன் ×________
34. அகம் என முடியும் சொற்கள் இரண்டு எழுதுக.
35. கோடிட்ட இடங்களைத் தமிழ் எண் கொண்டு நிரப்புக.
அ) எனது வயது _____ ஆ) நான் படிக்கும் வகுப்பு ____________