6TH-TAMIL-MODEL QUATERLY EXAM -2024 - QUESTIONS

 மாதிரி முதல் பருவம் – தொகுத்தறித் தேர்வு – 2024

6 -ஆம் வகுப்பு                              தமிழ்                                         

நேரம் : 2.00 மணி                                                                    மதிப்பெண் : 60

பிரிவு - I

அ. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                       8×1=8

1. நாள் முழுவதும் வேலை செய்து களைத்தவர்க்கு ------ ஆக இருக்கும்

அ) மகிழ்ச்சி             ஆ) கோபம்              இ) வருத்தம்           ஈ) அசதி

2. தாய்மொழியில் படித்தால் ____________ அடையலாம்.

அ) பன்மை             ஆ) மேன்மை          இ) பொறுமை          ஈ) சிறுமை

3 தட்பவெப்பம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

அ) தட்பம் + வெப்பம் ஆ) தட்ப + வெப்பம் இ) தட் + வெப்பம் ஈ) தட்பு + வெப்பம்

4. வெண்குடை என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.

 அ) வெண் + குடை           ஆ) வெண்மை + குடை      இ) வெம் + குடை     ஈ) வெம்மை + குடை

5. நண்பர்களுடன் ____________ விளையாடு

அ) ஒருமித்து           ஆ) மாறுபட்டு          இ) தனித்து             ஈ) பகைத்து

6. “ மா “ என்னும் சொல்லின் பொருள்_____

அ) மாடம்      ஆ) வானம்    இ) விலங்கு  ஈ) அம்மா

7. சிட்டுக்குருவி வாழ முடியாத பகுதி __________

அ) துருவப் பகுதி     ஆ) இமயமலை       இ) இந்தியா             ஈ) தமிழ்நாடு

8. நுட்பமாகச் சிந்தித்து அறிவது _________________.

 அ) நூலறிவு ஆ) நுண்ணறிவு      இ) சிற்றறிவு ஈ) பட்டறிவு

ஆ. கோடிட்ட இடங்களை நிரப்புக                                                                 5×1=5

9. தமிழில் நமக்கு கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் _____________

10. தானியங்கிகளுக்கும்எந்திரமனிதர்களுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடு _______

11. மொழியைக் கணினியில் பயன்படுத்த வேண்டுமெனில் அது _____ அடிப்படையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

12. இரண்டு மாத்திரை அளவுள்ள ஒரெழுத்துச் சொல்____________

13. ‘சோபியா’ ரோபோவுக்குக் குடியுரிமை வழங்கிய நாடு  _______

இ) பொருத்துக.                                                                                      3×1=3

14. முத்துச்சுடர்போல - மாடங்கள்

15. தூய நிறத்தில் - தென்றல்

16.. சித்தம் மகிழ்ந்திட – நிலாஒளி

ஈ) எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளி:-                                   5×2=10

17. பாரதிதாசன் தமிழுக்கு சூட்டியுள்ள பெயர்கள் யாவை?

18 மனிதர்களுக்கு மருந்தாக விளங்குவது எது?

19. அன்பிலார், அன்புடையார் செயல்கள் யாவை?

20. உயிருள்ள உடல் எது?

21. நாளைய மனிதனின் வாழ்வு எவ்வாறு இருக்கும்?

22. பறவைகள் எக்காரணங்களுக்காக இடம் பெயர்கின்றன?

23. தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

உ) எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடையளி:-                                 3×3=9

24. தமிழ்மொழி இனிய மொழி என்பதற்கான காரணம் தருக.

25. வலசைப் பறவைகளின் பயணம் பற்றி நீங்கள் அறிந்தவை யாவை?

26. எந்திர மனிதனின் பயன்களை விளக்குக.

27. எவற்றுக்குப் புதிய கண்டுபிடிப்புகள் தேவை என்பது பற்றிச் சிந்தித்து எழுதுக

ஊ. அடிமாறாமல் எழுதுக                                                                           4+2=6

28.” தமிழுக்கும் அமுதென்று “ எனத் தொடங்கும் பாடலை எழுதுக. (அல்லது )

      “ மாமழை” எனத் தொடங்கும் சிலப்பதிகாரப் பாடலை எழுதுக.

29. பிறர்க்கு……என முடியும் திருக்குறளை எழுதுக.

எ. ஏதேனும் ஒன்றனுக்கு  விடையளி:-                                                                 1×7=7

30. அ) அத்தையின் கடித கருத்தைச் சுருக்கி எழுதுக ( அல்லது )

ஆ) உங்களுக்கென ஒரு எந்திர மனிதன் இருந்தால் அதை எதற்கெல்லாம் பயன்படுத்துவீர்கள் எனச் சிந்தித்து எழுதுக.

ஏ) ஏதேனும் ஒன்றனுக்கு  விடையளி:-                                                                 1×7=7

31. விடுப்பு வேண்டி உன் வகுப்பாசிரியருக்கு விடுப்பு விண்ணப்பம் எழுதுக.  ( அல்லது )

32. அறிவியல் ஆக்கங்கள் என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.

ஐ) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                    5×1=5

33.  பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

1. பரந்து விரிந்து இருப்பதால் கடலுக்குப் _____ என்று பெயர். (பறவை / பரவை)

2. இலக்கிய மன்ற விழாவில் முகிலன் சிறப்பாக ____ ஆற்றினார். (உரை / உறை)

34. பொருத்தமான சொற்களால் கட்டங்களை நிரப்புக.

          அ) புள் என்பதன் வேறு பெயர்    

        ஆ) சரணாலயம் என்பதன் வேறு பெயர்

35. கலைச்சொல் தருக.

          அ) Super Computer           ஆ) SATELITE

36. கீழ்க்காணும் சொற்களில் உள்ள எழுத்துகளைக் கொண்டு புதிய சொற்களை உருவாக்குக.

          அ) கரும்பு                        ஆ) கவிதை

37. வரிசை மாறியுள்ள சொற்களைச் சரியான வரிசையில் அமைத்து எழுதுக.

1. இளங்கோவடிகள் காப்பியத்தை என்னும் இயற்றியவர் சிலப்பதிகாரம்.

 2. மனிதன் உலகில் இல்லாத பறவை வாழ முடியாது.


KINDLY WAIT FOR 10 SECONDS



நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post