10TH-TAMIL-UNIT -6 - KATTURAI - PDF

  

 

இயல் – 6

வினா எண் : 45

பொதுக்கட்டுரை – எட்டு மதிப்பெண்

கலைத்திருவிழா கட்டுரை

உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

குறிப்புச்சட்டம்

முன்னுரை

அறிவிப்பு

அமைப்பு

கரகாட்டம், காவடியாட்டம்

ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம்

கூத்துகள் அரங்கு

சிற்ப அரங்கு

முடிவுரை

முன்னுரை:

”எண்ணங்களின் வெளிபாடு எல்லை

அதுவே நிகழ்கலை”

    கண்ணுக்குக் காட்சியும். சிந்தைக்குக் கருத்தினையும் கலைத்திறனோடு தந்து இன்றளவும் தொடர்வன நிகழ்த்துகலைகள். கிராமப்புற/சிற்றூர் மக்களின் கலை, அழகியல், பண்பாடு ஆகிய்வற்றின் எச்சங்களாக இருப்பவை கலைகள். எங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத் திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாகக் காணலாம்.

அறிவிப்பு:

“ கலைத்திருவிழாவிற்கு  வந்தது தூது

எப்போது செல்வோம் ஏங்குது மனது “

          பள்ளிகளில் ஆண்டுதோறும் கலைத்திருவிழாவிற்கான அறிவிப்பு இந்த ஆண்டும் வந்தது. இதில் பல்வேறு விதமான போட்டிகள் இடம் பெற்றிருந்தது. இதனையொட்டி எங்கள் ஊர் சேலத்தில் அரசு சார்பில் கலைத்திருவிழா மூன்று நாட்கள் நடப்பதற்கான அறிவிப்பு வந்தது. நிச்சயம் இந்த கலைத்திருவிழா எனக்கு உதவும் என்ற எண்ணத்தில் நான் கண்ட கலைத்திருவிழா நிகழ்வினைக் காணலாம்.

அமைப்பு:

”அனைத்து கலைகளும் சங்கமித்தது

                என் மனமும் அங்கேயே நிலையாய் நின்றது”

      சேலத்தில் நேரு கலையரங்கத்தில் கலைகளுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. -பார்வையாளருக்கு வசதியாக ஒவ்வொரு நிகழ்கலைகளுக்கான அரங்குகள் எத்திசையில் எங்கெங்கு அமைக்கப்ப்பட்டுள்ளன என்பதற்கான வரைபடமும் இருந்தது. அது அனைவருக்கும் உதவியாக இருந்தது.

கரகாட்டம், காவடியாட்டம் :

“ கண்களை கவருது கரகாட்டம்

ஆட துடிக்குது காவடியாட்டம் “

        தலையில் கரகம் என்னும் குடத்தை வைத்துக் கொண்டு ஆடும் ஆட்டம் கரகாட்டம். மாணவர்கள் பலர் பலவிதமான கரகத்துடன், அழகிய ஒப்பனைகளுடன் ஆடிய கரகாட்டம் கண்ணைக் கவர்ந்தது. தோளில் காவடியைச் சுமந்தவாறு ஒய்யாரமாக ஆடும் காவடியாட்டமும் மனதைக் கவர்ந்தது.

ஒயிலாட்டம், பொய்க்கால்  குதிரையாட்டம்:

“ மயில் போல உள்ளது ஒயிலாட்டம்

பொய்க்கால்கள் கொண்டு ஆடியதோ குதிரையாட்டம்”

                   இசைக்கேற்ப துணியை வீசிக் கொண்டு குழுவாக ஆடும் ஆட்டம் ஒயிலாட்டம்.

மாணவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குழுவாக தலையில் துணியைக் கட்டிக் கொண்டும், கையில் துணியை வீசிக் கொண்டும் இசைக்கேற்ப ஒன்று போல ஆடுயது கண்களையும், மனதையும் கவர்ந்தது.

                   குதிரை வடிவக் கூட்டுக்குள் இருந்து, பாதத்துக்குக் கீழ் கட்டையைக் கட்டிக் கொண்டு ஆடிய பொய்க்கால் குதிரையாட்டமும் உற்சாகம் தரக்கூடிய நிகழ்த்துகலைகளாக இருந்தன,

கூத்துகள் அரங்கு:

” கருத்தை எழுதுவது ஆனந்தம்

                நடிப்பதில் கிடைக்கிறது பேரானந்தம் ”

          கதையில் இசை, வசனம், ஆடல், பாடல், மெய்ப்பாடு ஆகியவை இணைந்த வடிவமே தெருக்கூத்து. இதே ஆடல் பாடலுடன் தோலால் செய்த வெட்டு வரைபடங்களைத் திரைசீலையில்  ஒளி  ஊடுருவும் வகையில் நாடகம் போல நிகழ்த்துவது தோற்பாவைக் கூத்து. இந்த கூத்து அரங்கில் பாவைக் கூத்தும் நடைபெற்றது. கூத்துகள் அனைத்தும் சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு என்ற கருத்தையொட்டி அமைந்திருந்தது.

சிற்ப அரங்கு :

                                        கல்லிலே கலைவண்ணம் கண்டான்

                                        தன் திறனை அனைவருக்கும் படைத்தான்

    கல்லில் தான் சிற்பங்களை கண்டேன். சிலை அரங்கில் சென்றால் சுண்ணக்கட்டியில் சிற்பம், காய்கறியில் சிற்பம், களிமண்ணில் சிற்பம், மண்ணில் சிற்பம், சோப்பில் சிற்பம்  என பலவிதங்களில் பல்வேறு விதமான சிற்பங்கள் சிறப்பாகவும், வியப்பாகவும் அமைந்தது.

முடிவுரை:

”ஆவலுடன் அங்கு சென்றேன்

                  அங்கிருந்து  வர மனமில்லாமல் வந்தேன்”

         இன்னும் பலவிதமான அரங்குகள் அமைக்கப்பட்டுருந்தன. நான் கண்டது சிறிதளவே. அரசு நடத்தி வரும் இந்த கலைத்திருவிழா கூடத்தில் பல்வேறு விதமான அரங்குகள் இருந்தன. இந்த அரங்குகள் எல்லாம் சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு ஒரே மையக் கருத்தை மையமாகக் கொண்டு நிகழ்த்தப்பட்டன. நாமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பினை உணர்ந்து நடப்போம், செயல்படுவோம்.

 


KINDLY WAIT FOR 10 SECONDS



நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post