பாடம் : தமிழ் மொத்த மதிப்பெண் : 50
I. அ) சரியான விடையைத் தேர்ந்தெடு:- 5×1=5
1. கலைஞரின் கதை வசனங்களில் பெண்கள் முன்னேற்றம் பற்றி பேசிய படம்
அ) பராசக்தி ஆ) அரசிளங்குமரி
இ) பாசப்பறவைகள் ஈ) மருதநாட்டு இளவரசி
2 மலர்கள் தரையில் நழுவும். எப்போது?
அ) அள்ளி முகர்ந்தால் ஆ) தளரப் பிணைத்தால்
இ) இறுக்கி முடிச்சிட்டால் ஈ) காம்பு முறிந்தால்
3. பொருத்தமான வண்ணச் சொல்லைக் கொண்டு நிரப்புக.
_________ மனம் உள்ளவரை அப்பாவி என்கிறோம்.
அ) கருத்த ஆ) சிவந்த இ) வெள்ளந்தி ஈ) இரக்க
4. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
ஈ) அங்கு வறுமை இல்லாததால்
5. முல்லைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர் – தொடரில் பொருந்தாத கருப்பொருள் எது?
அ) முல்லைப்பூ ஆ) செடி இ) பரதவர் ஈ) கடல்
II) பாடலைப் படித்து வினாக்களுக்கும் விடையளி:- 4×1=4
“ செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடக்
திருவரை யரைஞா ணரைமணி யொடுமொளி திகழரை வடமாடப்
பைம்பொ னசும்பிய தொந்தி யொடுஞ்சிறு பண்டி சரிந்தாடப்
பட்ட நுதற்பொலி பொட்டொடு வட்டச் சுட்டி பதிந்தாடக்
கம்பி விதம்பொதி குண்டல முங்குழை காது மசைந்தாடக் “
6. இப்பாடலின் ஆசிரியர்
அ. கீரந்தையார் ஆ. குமரகுருபரர் இ. நம்பூதனார் ஈ. செய்குதம்பிப் பாவலர்
7. இப்பாடலில் இடம் பெற்றுள்ள பிள்ளைத் தமிழ் பருவம்
அ. அம்மானை ஆ. சப்பாணி இ. சிறுதேர் ஈ. செங்கீரை
8. ‘ குண்டமும் குழைகாதும் ‘ – இலக்கணக் குறிப்பு தருக.
அ. எண்ணும்மை ஆ. உம்மைத்தொகை
இ. பண்புத் தொகை ஈ. அடுக்குத் தொடர்
9. கிண்கிணி, அரைநாண்,சுட்டி என்பன முறையே
அ. காலில் அணிவது, இடையில் அணிவது, தலையில் அணிவது
ஆ. நெற்றியில் அணிவது,இடையில் அணிவது,தலையில் அணிவது
இ. காலில் அணிவது, இடையில் அணிவது, நெற்றியில் அணிவது
ஈ. இடையில் அணிவது, காதில் அணிவது, தலையில் அணிவது
III) எவையேனும் மூன்று வினாக்களுக்கும் விடையளி:- 3×2=6
( வினா எண் 13 கட்டாயமாக விடையளிக்க வேண்டும் )
10. விடைக்கேற்ற வினா அமைக்க:-
அ. ‘ கம்பன் இசைத்த கவியெல்லாம் நான் ‘ என்று பாரதி பெருமைப்படுகிறார்.
ஆ. பொய்க்கால் குதிரையாட்டம் புரவி ஆட்டம்,புரவி நாட்டியம் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.
11. இருபாலருக்கும் பொதுவான பிள்ளைப் பருவங்கள் யாவை?
12. “ கலைஞர் பழுமரக்கனிப் பயன் கொள்ளும் பேச்சாளர். படித்தவரைக் கவரும் ஆற்றல் கொண்ட எழுத்தாளர்” – பேராசிரியர் அன்பழகனார். இக்கூற்றை அயற்கூற்றாக எழுதுக.
13. குற்றம் இல்லாமல் தன் குடிபெருமையை உயரச்செய்து வாழ்பவரை உலகத்தார் உறவாகக் கொண்டு போற்றக்கூடிய குறளை எழுதுக.
IV) அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 4×2=8
14. அ) ஓடிக் கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன் அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது. இத்தொடரைத் தனிச்சொற்றொடர்களாக மாற்றுக.
ஆ) அழைப்பு மணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார் – தனிச் சொற்றொடர்களைக் கலவைத் தொடராக்குக.
15. கலைச்சொல் தருக:- அ. ARTIFACTS ஆ. MYTH
16. பகுபத உறுப்பிலக்கணம் தருக:- பதிந்து
17. காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற் பொருள், கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.
V) எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி:- 2×3=6
( வினா எண் – 20 கட்டயமாக விடையளிக்க வேண்டும் ) பிரிவு -1
18. வைத்தியநாதபுரி முருகன் குழந்தையாக அணிந்திருக்கும் அணிகலன்களுடன் செங்கீரை ஆடிய நயத்தை விளக்குக.
19. தமிழ்மொழிக்காகக் கலைஞர் செய்த சிறப்புகளுள் நீங்கள் அறிந்த இரண்டினை எழுதுக.
20. “ தண்டலை “ எனத் தொடங்கும் கம்பராமாயணப் பாடலை எழுதுக.
பிரிவு -2
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி;- 2×3=6
21. “ கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது;மலைப்பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.” – காலப் போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும், பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய வளர்ச்சியையும் எழுதுக.
22. வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
டைந்துடன் மாண்ட தமைச்சு – அலகிட்டு வாய்பாடு காண்க
23. மொழிபெயர்க்க:-
Kalaignar karunanidhi is known for his contributions to Tamil literature. His contributions cover a wide range; poems, letters, screenplays, novels, biographies, historical novels, stage-plays, dialogues and movie songs. He has written Kuraloviam for Thirukural, Tholkaappiya Poonga, Poombukar, as well as many poems, essays and books. Apart from literature, Karunanidhi has also contributed to the Tamil language through art and architecture. Like the Kuraloviyam, in which Kalaignar wrote about Thirukkural, through the construction of Valluvar Kottam he gave an architectural presence to Thiruvalluvar, in Chennai. At Kanyakumari, Karunanidhi constructed a 133-foot-high statue of Thiruvalluvar in honour of the scholar.
VI) அனைத்து வினாக்களுக்கு விடையளி 3×5=15
24. நாமக்கல் மாவட்டம்,வ.உ.சி.நகர், காந்தித் தெரு,கதவிலக்க எண்50 இல் வசிக்கும் இளமாறன் மகள் யாழினி பத்தாம் வகுப்பு முடித்து அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பில் வேதியியல் பாடப்பிரிவில் தமிழ் வழியில் சேர விரும்புகிறார். அவர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எண் 13156071 அவரின் மதிப்பெண் பட்டியல் தமிழ் – 97, ஆங்கிலம் -80, கணிதம் – 90, அறிவியல் – 80, சமூக அறிவியல் - 90. தேர்வர் தம்மை யாழினியாக நினைத்துக் கொண்டு உரியப் படிவத்தை நிரப்புக.
25. அ) நெகிழிப் பைகளின் தீமையைக் கூறும் பொம்மலாட்டம் உங்கள் பள்ளியின் ஆண்டு விழாவில் நிகழ்த்தப்படுகிறது.அதற்குப் பாராட்டுரை ஒன்றினை எழுதுக. (அல்லது )
ஆ) உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்கு சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
26. அ) நிகழ்கலை வடிவங்கள் – அவை நிகழும் இடங்கள் – அவற்றின் ஒப்பனைகள் – சிறப்பும் பழைமையும் – இத்தகைய மக்கள் கலைகள் அருகிவருவதற்கான காரணங்கள் – அவற்றை வளர்த்தெடுக்க நாம் செய்ய வேண்டுவன – இவை குறித்து நாளிதழுக்கான தலையங்கம் எழுதுக. ( அல்லது )
ஆ ) சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் என்ற தலைப்பில் இலக்கிய உரை எழுதுக.
அன்பும் பண்பும் குணச்சித்திரமும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம், இயற்கை கொலு வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலைநிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும் கவி..... தண்டலை மயில்கள் ஆட....... இவ்வுரையைத் தொடர்க.