பத்தாம் வகுப்பு
– தமிழ்
காலாண்டுத் தேர்வு -
2024
மெல்லக் கற்கும்
மாணவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியப் பகுதிகள்
பகுதி – 1
மாணவர்கள் இந்தப் பகுதியில் குறைந்தது 10 மதிப்பெண்
எடுக்கலாம்
1. ஒரு மதிப்பெண் வினாக்கள் ( புத்தக வினாக்கள், மாதத்தேர்வு, முதல்
பருவத் தேர்வு, வாரத் தேர்வு, அடைவுத் தேர்வு
மற்றும் சில மாதிரி வினாத்தாளில் இடம் பெற்ற ஒரு மதிப்பெண் வினாக்கள் )
பகுதி – 2
மாணவர்கள் இந்தப் பகுதியில்
·
விடைக்கேற்ற வினா – 2
மதிப்பெண்
·
பகுபத உறுப்பிலக்கணம் – 2
மதிப்பெண்
·
திருக்குறள் – 2 மதிப்பெண்
·
கலைச்சொல் அறிக – 2 மதிப்பெண்
ஆக மொத்தம் 8 மதிப்பெண் பெறலாம்
2. இரண்டு மதிப்பெண் வினாக்கள் ( விடைக்கேற்ற வினா அமைக்க, பகுபத
உறுப்பிலக்கணம், கலைச்சொல் அறிக,திருக்குறள் )
பகுதி – 3
மாணவர்கள் இந்தப் பகுதியில்,
·
உரைப்பத்தி வினா – 3
மதிப்பெண்
·
மனப்பாடச் செய்யுள் – 3
மதிப்பெண்
·
அணி – 3 மதிப்பெண்
ஆக மொத்தம் 9 மதிப்பெண் பெறலாம்
3. மூன்று மதிப்பெண் வினாக்கள் ( உரைப் பத்தி வினாக்கள், மனப்பாடச்
செய்யுள், அணி )
பகுதி – 4
மாணவர்கள் இந்தப் பகுதியில்.
·
கடித வினா – 5 மதிப்பெண்
·
கவிதை எழுதுதல் – 5 மதிப்பெண்
·
படிவம் – 5 மதிப்பெண்
·
நிற்க அதற்குத் தக – 5 மதிப்பெண்
ஆக மொத்தம் 20 மதிப்பெண் பெறலாம்
4. ஐந்து மதிப்பெண் வினாக்கள் ( கடிதம் , காட்சியைக் கண்டு கவினுற
எழுதுக , படிவம் )
பகுதி – 5
மாணவர்கள் இந்த பகுதியில்
வினாக்களுக்கு விடைத் தெரியாவிடினும் குறிப்புச் சட்டகத்திற்கு 1 மதிப்பெண்
வழங்குவர். ஆக மூன்று வினாக்களுக்கு குறைந்த பட்சம் 3 மதிப்பெண் எடுக்கலாம்.
துணைப்பாட நெடுவினாவில்
கோபல்லபுரத்து மக்கள், மற்றும், புதிய நம்பிக்கை, புயலிலே ஒரு தோணி கதைப்
பகுதி நிச்சயமாக வரக்கூடும்
5. நெடு வினாக்கள் ( உரைநடை நெடுவினாக்கள், துணைப்பாட வினா,
பொதுக்கட்டுரை )
6. பொதுக்கட்டுரை 3 உள்ளது.
( மொத்தமாகவே )
1. சான்றோர் வளர்த்த தமிழ்
2. விண்வெளியும் கல்பனா சாவலாவும்
3. உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வை
கட்டுரையாக்குக.
மெல்லக் கற்கும்
மாணவர்கள் இந்தப் பகுதியில் நிறைவான பயிற்சி பெறும் போது அவர்கள் பெறும் மதிப்பெண்
பட்டியல்
பகுதி – 1 – ஒரு மதிப்பெண் –
10 மதிப்பெண்கள்
பகுதி – 2 – இரண்டு மதிப்பெண்
–
8 மதிப்பெண்கள்
பகுதி -3 – மூன்று மதிப்பெண் –
9 மதிப்பெண்கள்
பகுதி – 4 – ஐந்து மதிப்பெண் –
20 மதிப்பெண்கள்
பகுதி – 5 – எட்டு மதிப்பெண் - 3 மதிப்பெண்கள்
ஆக மொத்த மதிப்பெண் - 50 மதிப்பெண்கள் பெறக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.
குறிப்பு : மாணவர்கள் இந்த
மதிப்பெண்கள் எழுத்துப்பிழை, வாக்கியப் பிழை, இலக்கணப் பிழை, ஒற்று பிழை என எவ்வித
பிழைகளும் இல்லாமல் எழுதி இருப்பின் முழு மதிப்பெண் அப்படியே கிடைக்கும். பிழைகள்
இல்லாமல் எழுத பயிற்சி எடுக்க வேண்டும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட தேர்வு நேர கால
அட்டவணையைப் பின் பற்றி முழு நிறைவான பயிற்சிப் பெற்றால் இந்த மதிப்பெண்
மட்டுமல்லாமல் இன்னும் சில வினாக்களுக்கான மதிப்பெண்களும் கூடுதலாக கிடைக்கப்
பெறும்.
மாணவ,மாணவியர் அனைவரும்
தங்கள் சந்திக்கும் இந்த காலாண்டுத் தேர்வில் அனைவரும் தேர்ச்சிப் பெற்று நல்ல
மதிப்பெண் பெற வேண்டுமாய் அன்போடு வாழ்த்தும் உங்கள் தமிழ்விதை மற்றும் கல்வி
விதைகள் வலைதளங்கள்.
10 விநாடிகள் காத்திருப்புக்குப்பின் தோன்றும் DOWNLOAD என்பதனை அழுத்தவும்