10TH-QUATERLY EXAM-2024-TAMIL-ANSWER KEY-PDF-TENKASI

 தென்காசி – காலாண்டுத் தேர்வு  -2024

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  3.15 மணி                                                                             மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

ஈ) சருகும் சண்டும்

1

2.

ஆ) மாலை

1

3.

இ) ஐ,கு

1

4.

அ) கொன்றை வேந்தன்

1

5.

ஈ) வானத்தையும் போரொலியையும்

1

6.

ஈ) வாட்சன்

1

7.

அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது

1

8.

இ) அறியா வினா, சுட்டு விடை

1

9.

ஆ) தளரப் பிணைத்தால்

1

10.

ஆ) கூற்று 1 மற்றும் 2 சரி

1

11.

அ) கூவிளம் தேமா மலர்

1

12 .

ஆ) கம்பராமாயணம்

1

13 .

ஈ) கம்பர்

1

14 .

அ) தண்டலை,கொண்டல் 

1

15

ஆ) மேகம்

1

பகுதி - 2

16

பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக.

1

1

17.

·         வருக, வணக்கம்.

·         வாருங்கள்.

·         அமருங்கள், நலமா?

·         நீர் அருந்துங்கள்.

2

18.

·         ஜப்பானில் சாப்ட்வங்கி உருவாக்கிய இயந்திர மனிதன் பெப்பர்.

2

19

மருத்துவர் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என நோயாளி மருத்துவரை நேசிப்பார்.

2

20

Ø  அறிவைத் திருத்தி சீராக்குவோம்.

Ø  கல்வி பெற்று மயக்கம் அகற்றுவோம்.

2

21.

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்

  தியற்கை அறிந்து செயல்.

2

பிரிவு - 2

22

v  உடுப்பதூஉம் உண்பதூஉம்இன்னிசை அளபெடை.

v  செய்யுளில் ஓசை குறையாத இடத்தும் இனிய ஓசைக்காக அளபெடுப்பது இன்னிசை அளபெடை.

1

1

23

அ) கருக்க

ஆ) சிவந்தது

1

1

24.

அ. இயற்கை என்பதற்கு செயற்கை என எழுதினான்.

ஆ) சிறு என்பதற்கு சீறு என எழுதினான்

2

25

அ. மீநுண் தொழில்நுட்பம்    

ஆ. கதை சொல்லி

1

1

26

உவகைக் காரணமாக சிரித்துச் சிரித்து பேசினார்

2

27

அ) ஒரு சோறு பதம்

ஆ) உள்ளளவும் நினை

1

1

28

பொழிந்த – பொழி +த்(ந்)+த்+அ

பொழிபகுதி

த்சந்தி ; த் – ந் ஆனது விகாரம்

த்இறந்த கால இடைநிலை

பெயரெச்ச விகுதி

1

1

பகுதி – 3

29

·         காட்டில் பனைவடலி நடப்பட்டது

·         தோட்டத்தில் மாங்கன்று நடப்பட்டது.

·         சோளப் பைங்கூழ் வளர்ந்து வருகிறது

·         புளியங்கன்று சாலை ஓரத்தில் வளர்ந்து வருகிறது.

தோட்டத்தில் தென்னம்பிள்ளை வளர்த்தேன்.

3

30

Ø  கல்வி நமக்கு மகிழ்ச்சியான வாழ்வைத் தரும்.

Ø  சமூகத்தில் நற்பெயருடன் இருக்கக கல்வி அவசியம்.

Ø  பிறருடைய உதவி நாடாமல் சுயமாக வாழ கல்வி அவசியம்.

Ø  கல்வி நமக்கு உறுதியான பாதுகாப்பு தரும்.

3

31

அ) தமிழர்கள்

ஆ) வலப்பக்கம்

இ) வலது கை

3

பகுதி -3 / பிரிவு - 2

32

·         நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துதல் ஆற்றுப்படை.

·         நன்னன் எனும் மன்னனிடம் பரிசில் பெற்ற கூத்தர், மற்றொரு கூத்தரிடம் பரிசில் பெறுவதற்கான வழியினை கூறுகிறது.

·         உணவினைப் பெறுவதற்கான வழியினைக் கூறல்.

3

33

v  மன்னன் இடைக்காடனார் புலவரின் பாடலை இகழ்ந்தார்.

v  இடைக்காடனார், மன்னன் இகழ்ந்ததை இறைவனிடம் முறையிடுகிறார்.

v  இறைவன் கோவிலை விட்டு நீங்கினார்.

v  மன்னன் இறைவனிடம் தன் பிழையைப் பொறுத்து அருள்புரியுமாறு வேண்டினார்.

v  மன்னன் புலவருக்கு மரியாதை செய்து, மன்னிப்பு வேண்டினார்.

3

34

விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்

திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்

          எழுதல் முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்

          போமெனில் பின் செல்வதாதல்

பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்

          ஒழுக்கமும் வழிபடும் பண்பே

3

34

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று.           கா.ப.செய்கு தம்பி பாவலர்

3

பகுதி – 3 / பிரிவு - 3

35

கண்ணே கண்ணுறங்கு

விளித்தொடர்

காலையில் நீயெழும்பு

ஐந்தாம் வேற்றுமைத் தொடர்

மாமழை

உரிச்சொல் தொடர்

மாம்பூவே

விளித்தொடர் தொடர்

  பாடினேன் தாலாட்டு

வினைமுற்றுத் தொடர்

ஆடி ஆடி

அடுக்குத் தொடர்

3

36

பயின்று வரும் அணி : உவமை அணி

அணி விளக்கம் :

        புலவர் தாம்சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை வேறு ஒரு பொருளுடனோ பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு,தொழில், பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு இயைபுபடுத்தி இரு பொருள்களுக்கும் இடையே உள்ள ஒப்புமை புலப்படும்படி பாடுவது உவமை அணியாகும்.

அணிப் பொருத்தம் :

அரச‌ன் ஒருவ‌ன் த‌ன் அ‌திகார‌த்‌தினைப் பய‌‌ன்படு‌த்‌தி வ‌ரியின் மூலம் ம‌க்க‌ளிட‌ம் பண‌ம் வசூ‌லி‌ப்பது, வே‌ல் முத‌லிய ஆயுத‌ங்களைக் கொ‌ண்ட ஒரு வ‌ழி‌ப்ப‌றி செ‌ய்வத‌ற்குச் சம‌ம் ஆகு‌ம்.

உவமானம்    - வேலொடு நின்றான் இடுஎன்றது.

உவமேய‌ம்    - கோலொடு நின்றான் இரவு.  

உவம உருபு போலும்

3

37

சீர்

அசை

வாய்பாடு

பொரு-ளல்

நிரை – நேர்

புளிமா

லவ-ரைப்

நேர் - நேர்

தேமா

பொரு-ளா-கச்

நேர் – நேர்-நேர்

தேமாங்காய்

செய்-யும்

நேர்-நேர்

தேமா

பொரு-ளல்-ல

நேர் – நேர்-நேர்

தேமாங்காய்

தில்-லை

நேர் - நேர்

தேமா

பொருள்

நிரை

மலர்

3

பகுதி - 4

38

குறிப்புச் சட்டம்

முன்னுரை

மழை மேகம்

மழைப் பொழிவு

மாலைப் பொழுது

நற்சொல் கேட்டல்

ஆற்றுப்படுத்துதல்

முன்னுரை :

          முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை நாம் கட்டுரை வடிவில் காணலாம்.

மழை மேகம் :

திருமால் மாவலி மன்னனுக்கு நீர் வார்த்துத் தரும் போது விண்ணுக்கும் மண்ணுக்கும் பேருருவம் எடுத்தது போல் மழை மேகம் உயர்ந்து நின்றது.

மழைப் பொழிவு :

கடலின் குளிர் நீரைப் பருகி, மலையைச் சூழ்ந்து விரைந்த வேகமாய் பெருமழைப் பொழிகிறது.

மாலைப் பொழுது :

வண்டுகளின் ஆரவாரம் கொண்ட அரும்புகள்.

முது பெண்கள் மாலை வேளையில் முல்லைப் பூக்களோடு, நெல்லையும் தெய்வத்தின் முன் தூவினர்.

நற்சொல் கேட்டல் :

முதுபெண்கள் தலைவிக்காக கோவிலில் நற்சொல் கேட்டு நிற்பர்.

இது விரிச்சி என அழைக்கப்படும்.

ஆற்றுப்படுத்துதல் :

·      இடைமகள் பசியால் வாடிய இளங்கன்றை காணல்.

·      உம் தாயர்  இப்போது வந்து விடுவர் இடையர் எனக் கூறல்.

·      முதுப் பெண்கள் இந்த நற்சொல்லை கேட்டல்.

·      உன் தலைவன் வந்து விரைந்து வந்துவிடுவான் என ஆற்றுப்படுத்துதல்.

முடிவுரை :

        இவ்வாறு முல்லைப் பாட்டில் மழைமேகம், மழைப்பொழிவு, மாலைப் பொழுது, நற்சொல் கேட்டல், ஆற்றுப்படுத்துதல் என செய்திகளைக் கண்டோம்.

5

38ஆ

Ø  மயில்கள் அழகுற ஆடுகிறது.

Ø  தாமரை மலர்கள் விளக்கு போல் விரிகிறது.

Ø  மேகங்களின் இடி மத்தளமாய் ஒலிக்கிறது.

Ø  குவளை மலர்கள் கண்கள் விழித்துப் பார்ப்பது போல உள்ளது.

Ø  அலைகள் திரைச்சீலைகளாய் விரிகிறது.

Ø  வண்டுகளின் ரீங்காரம் மகர யாழின் இசை போல இருக்கிறது.

5

39அ

இடம், நாள்

விளித்தல்

கடிதப் பகுதி

இப்படிக்கு

உறைமேல் முகவரி

1

1

1

1

1

39ஆ

அனுப்புநர்

அ அ அ அ அ,      

100,பாரதி தெரு,

சக்தி நகர்,

சேலம் – 636006.

பெறுநர்

மின்வாரிய அலுவலர் அவர்கள்,

மின்வாரிய அலுவலகம்,

சேலம் – 636001.

ஐயா,

பொருள்: மின்விளக்கு சரி செய்ய வேண்டுதல்சார்பு

வணக்கம். எங்கள் தெருவில் 100 குடும்பங்கள் உள்ளன. எங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. இதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே பழுதடைந்த மின்விளக்குகளைச் சரி செய்து கொடுக்க வேண்டுமாய்த் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.       

நன்றி.

இடம் : சேலம்                                                                                இப்படிக்கு,

நாள் : 04-03-2024                                                              தங்கள் உண்மையுள்ள,                                                                                                         அ அ அ அ அ.

உறை மேல் முகவரி:

பெறுநர்

மின்வாரிய அலுவலர் அவர்கள்,

மின்வாரிய அலுவலகம்,

சேலம் – 636001.

5

40

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத        

என்னை எழுது என்று

சொன்னது இந்தக் காட்சி

அர்த்தமுள்ள காட்சி

மரம் என் அழிவைப் பற்றி எழுது என்றது

மனிதன் என் அறியாமையைப் பற்றி எழுது என்றான்

நான் எழுதுகிறேன்  மரமே வரம் என்று

 

5

41

கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முழுமையாக அனைத்துப் பகுதியினையும் நூலக உறுப்பினர் படிவத்தில் பதிவு செய்து இருப்பின் முழு மதிப்பெண் வழங்குக

5

42அ

பள்ளியில் நான்

வீட்டில் நான்

1.  நேரத்தைச் சரியாகக் கடைபிடிப்பேன்.

1. அதிகாலையில் எழுதல்.

2.  ஆசிரியர் சொல்படி நடப்பேன்.

2.  பெற்றோர் சொல்படி நடப்பேன்.

3. ஆசிரியரிடம் பணிவுடன் நடந்துகொள்வேன்.

3. பெரியவர்களிடம் பணிவுடன் நடந்துகொள்வேன்.

4. நண்பர்களுடன்  கலந்து உரையாடுவேன்.

4. உறவினர்களுடன் கலந்து உரையாடுவேன்.

5. நண்பர்களுக்கு உதவிகள் செய்வேன்.

5. பெற்றோருக்கு உதவிகள் செய்வேன்.

5

42ஆ

1. Education is what remains after one has forgotten what one has learned in school – Albert Einstein

பள்ளியில் கற்றபின் எது நமது நினைவில் நிற்கின்றதோ அதுவே கல்விஆல்பிரட் ஐன்ஸ்டீன்

2. Tomorrow is often the busiest day of the week – Spanish proverb

நாளையே இந்த வாரத்தின் மிகப் பரபரப்பான நாள்ஸ்பானிஷ் பழமொழி

3. It is during our darkest moment that we must focus to see the light – Aristotle

நம் வாழ்வில் மிகவும் இருண்ட காலத்தில் தான் நாம் அகவொளியைக் காண முற்பட வேண்டும் - அரிஸ்டாட்டில்

4. Success is not final,failure is not fatal.It is the courage to continue that counts – Winston Churchill

வெற்றி என்பது முடிவல்ல தோல்வி என்பது மரணமல்ல தொடர்ந்து முனைகின்ற துணிவே கணக்கில் உள்ளதுவின்ஸடன் சர்ச்சில்.

(காலாண்டு தேர்வுக்கு முதல் 6 இயல் மட்டுமே – இது ஒன்பதாவது இயல் )

5

பகுதி - 5

43அ

குறிப்புச் சட்டம்

வரவேற்பு

விருந்து உபசரிப்பு

நகர் வலம்

இரவு விருந்து

பிரியா விடை

வரவேற்பு :

·         என் இல்லத்திற்கு வந்த உறவினர்களை வருக,வருக என மகிழ்ச்சியாக வரவேற்றேன்.

·         அவர்கள் அமர்வதற்கு இருக்கையை சுத்தப்படுத்திக் கொடுத்தேன்.

·         வந்தவர்களுக்கு முதலில் நீர் அருந்தத் தந்தேன்.

விருந்து உபசரிப்பு :

·         வந்தவர்களுக்கு கறியும், மீனும் வாங்கி வந்தேன்.

·         மாமிச உணவை வாழை இலையில் பரிமாறினேன்.

·         அவர்கள் உண்ணும் வரை அருகில் இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்து கவனித்தேன்.

நகர்வலம் :

·         விருந்து முடித்து, எங்கள் ஊரின் சிறப்புகளைக் கூறினேன்.

·         ஊரின் சிறப்புமிக்க இடங்களுக்குச் சென்று அவற்றை உறவினர்களோடு கண்டு களித்தேன்.

இரவு விருந்து :

·         நகர்வலம் முடித்து, இரவு விருந்துக்குத் தேவையானவற்றை செய்தேன்.

·         இரவில் இரவு நேரத்திற்கு ஏற்ற உணவுகளை விருந்து படைத்தேன்.

பிரியா விடை :

·         இரவு விருந்து முடித்து அவர்கள் தங்கள் ஊருக்குச்  செல்வதாகக் கூறினர்.

·         எனக்குப் பிரிய மனமில்லாமல் அவர்கள் கூடவே பேருந்து நிறுத்தம் வரை சென்று வழி அனுப்பிவிட்டு வந்தேன்.

8

43ஆ

குறிப்புச்சட்டம்

போராட்டக் கலைஞர்

 பேச்சுக் கலைஞர்

 நாடகக் கலைஞர்

 திரைக் கலைஞர்

இயற்றமிழ்க் கலைஞர்  

முன்னுரை :

        போராட்டக் கலைஞர், பேச்சுக் கலைஞர், நாடகக் கலைஞர், திரைக்கலைஞர், இயற்றமிழ் கலைஞர்  என கலைஞரின் பன்முகத்தன்மையை நாம் இக்கட்டுரையில் காண்போம்.

போராட்டக் கலைஞர் :

Ø  பள்ளி வயதிலியே போராடியவர் கலைஞர்.

Ø  இந்தி திணிப்பை எதிர்த்து போராட மாணவர்களைத் திரட்டி திருவாரூர் வீதிகளில் போராடியவர்.

Ø  “ வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம் “ எனப் பாடலைப் பாடிக்கொண்டே ஊர்வலம் நடத்தினார்.

பேச்சுக் கலைஞர் :

Ø  தந்தை பெரியார், பட்டுக்கோட்டை அழகிரி, அறிஞர் அண்ணா ஆகியோரின் பேச்சாற்றல் கலைஞரைக் கவர்ந்தது.

Ø  மேடைப் பேச்சில் பெருவிருப்பம் கொண்டவர். “ நட்பு “ என்னும் தலைப்பில் கலைஞர் ஆற்றிய சொற்பொழிவை பலரும் பாராட்டினர்

நாடகக் கலைஞர் :

Ø  1944 இல் “பழநியப்பன்“ என்னும் முதல் நாடகத்தை எழுதி அரங்கேற்றினார்.

Ø  சாம்ராட் அசோகன், மணிமகுடம், வெள்ளிக்கிழமை, காகிதப்பூ, தூக்கு மேடை  முதலிய நாடகங்களை எழுதியுள்ளார்.

Ø  தூக்குமேடை நாடகத்தில்  மாணவராக நடித்து “ கலைஞர் “ என்னும் சிறப்பு பட்டம் பெற்றார்.

திரைக் கலைஞர் :

Ø  “ ராஜகுமாரி “ திரைப்படம் மூலம் வசன எழுத்தாளாராக அறிமுகமானார்.

Ø  மருதநாட்டு இளவரசி, நாம், பூம்புகார், மந்திரிகுமாரி போன்ற பல படங்களுக்கு கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார்.

இயற்றமிழ் கலைஞர்:

Ø  நளாயினி, சித்தார்த்தன் சிலை, சந்தனக் கிண்ணம், தாய்மை, புகழேந்தி முதலிய சிறுகதைகள் எழுதியுள்ளார்.

Ø  ரோமாபுரி பாண்டியன், பொன்னர் சங்கர், தென்பாண்டி சிங்கம் உள்ளிட்ட புதினங்களையும் எழுதியுள்ளார்.

Ø  தொல்காப்பிய பூங்கா, குறளோவியம் முதலிய தமிழ் இலக்கிய நூல்களையும் எழுதி தம் இயற்றமிழ் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.

முடிவுரை :

        அரசியல் மட்டுமன்றி, கலைத்துறை, பேச்சுக்கலை, பட்டிமன்றம், கவியரங்கம் என பலத்துறைகளிலும் தன்னுடைய பன்முக ஆற்றலை வெளிப்படுத்தி பல்துறை வித்தகராக விளங்கினார் கலைஞர்.

 

44அ

குறிப்புச் சட்டம்

முன்னுரை

புயல் வருணனை

அடுக்குத் தொடர்

ஒலிக் குறிப்பு

முடிவுரை

முன்னுரை :

        புயலிலே ஒரு தோணியில் பா.சிங்காரம் எழுதியுள்ள புயல் வருணனை, அடுக்குத் தொடர், ஒலிக் குறிப்பு பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

புயல் வருணனை :

·         கொளுத்தும் வெயில்.

·         மேகங்கள் கும்மிருட்டு.

·         இடி முழக்கம் வானத்தைப் பிளந்தது.

·         மலைத் தொடர் போன்ற அலைகள்.

·         வெள்ளத்தால் உடை உடலை ரம்பமாய் அறுக்கிறது.

அடுக்குத் தொடர் :

·         நடுநடுங்கி

·         தாவித் தாவி

·         குதி குதித்தது

·         இருட்டிருட்டு

·         விழுவிழுந்து

ஒலிக் குறிப்பு :

·         கடலில் சிலுசிலு, மரமரப்பு.

·         ஙொய்ங், புய்ங் ஙொய்ங் புய்ங் ஙொய்ங் புய்ங்.

முடிவுரை :

·         பகல் இரவாகி உப்பக்காற்று உடலை வருடியது.

·         அடுத்த நாள் பினாங்கு துறைமுகத்தை அணுகினார்கள்.

·         இவ்வாறாக வருணனைகளோடு, அடுக்குத் தொடர்களையும், ஒலிக் குறிப்புகளையும் கொண்டு தோணி படும் பாட்டை பா.சிங்காரம் விவரித்துள்ளார்.

8

44ஆ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

மேரி

அவமானம்

புதிய நம்பிக்கை

கல்வி

உதவிக்கரம்

மேல்படிப்பு

முடிவுரை

முன்னுரை :

        மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மேரி :

·         சாம் – பாட்ஸி இணையருக்கு மகளாகப் பிறந்தவள் மேரி.

·         பருத்திக்காட்டில் வேலை செய்து தங்கள் குடும்பத்தை நடத்துகிறார்கள்.

அவமானம் :

·         மேரி பாட்ஸியுடன் பென்வில்ஸன் வீட்டிற்கு செல்கிறார்கள்.

·         மேரி அந்த வீட்டின் அலமாரியிலிருந்த புத்தகத்தை எடுக்கிறாள்.

·         பென்வில்ஸன் இளையமகள் அவளிடமிருந்து புத்தகத்தை பிடிங்கினாள்.

·         உனக்கு படிக்கத் தெரியாது என கூறினாள்.

·         மேரி மனம் துவண்டாள்.

புதிய நம்பிக்கை

·         மேரிக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உணடானது.

·         ஒரு நாள் மிஸ் வில்ஸன் என்பவர் “ உன் போன்ற குழந்தைகள் படிக்க வேண்டும். நீ சீக்கிரமாக மேயெஸ் வில்லிக்கு வர வேன்டும்.

·         மேரிக்கு புதிய நம்பிக்கை பிறந்தது.

கல்வி

·         மேரி ஐந்து மைல்கள் நடந்து சென்று கல்வி கற்றாள்.

·         சில வருடங்கள் கழித்து மேரிக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

·         அதில் “ இந்த பட்டம் பெறும் மாணவர் எழுதவும் படிக்கவும் கூடியவர் “ என எழுதப்பட்டிருந்தது.

உதவிக்கரம்

·         மிஸ்வில்சன் மூலம் மேரிக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி

·         அவளின் மேல்படிப்பு செலவுக்காக மேற்குப் பகுதியில் வாழ்கின்ற வெள்ளைக்கார பெண் மணி பணம் அனுப்பி இருக்கிறார்.

·         அவள் மேல் படிப்புக்காக டவுணுக்கு செல்கிறாள்.

மேல்படிப்பு

·         மேரியை மேல்படிப்பு படிப்பதற்காக இரயில் நிலையத்தில் அவளது கிராமமே வழியனுப்ப திரண்டு வந்தது.

·         மிஸ் வில்ஸனும் இரயில் நிலையத்தில் வந்தார்கள்.

முடிவுரை

        எப்படிப்பட்ட நிலையிலும் கல்வி நம்மை உயர்த்தும் என்பதற்கு மேரியின் வாழ்க்கையை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். மேரியிடமிருந்து பறிக்கப்பட்டப் புத்தகம் அவள் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றியது என்பதனை இக்கட்டுரை வழியாகக் கண்டோம்.

8

45அ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு

சாலை விதிகள்

ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்

விபத்துகளை தவிர்ப்போம், விழிப்புணர்வு தருவோம்

முடிவுரை

முன்னுரை:                                   

      சாலை விபத்துக்கள் நமது சமுதாயத்திற்கும், காவல்துறைக்கும், சட்டத்துக்கும் ஒரு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. தினந்தோறும் செய்தித்தாள்கள் மூலமாகவும், தொலைக்காட்சிகள் மூலமாகவும் சாலைவிபத்துகளைப் பற்றிய செய்திகளை நாம் மிகுதியாக அறிகிறோம். இக்காலகட்டத்தில் மிகுதியான சாலை விபத்துக்கள் நடைபெறுகின்றன. சாலை விதிகளை நாம் மதிக்காமல் நடப்பது இதற்கெல்லாம் காரணம் ஆகும். சாலை பாதுகாப்பின் அவசியம் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு:

       சாலையில் விபத்துகள் நிகழாத வண்ணம் தடுப்பதற்காக, போக்குவரத்து காவல்துறையினர் பணி செய்கின்றனர். அதற்காக மக்கள் பின்பற்ற வேண்டிய சில சாலை விதிகளை அரசு வரையறுத்துள்ளது. அறிவிப்புப் பலகைகள் மூலமாகவும், விளம்பரங்கள் மூலமாகவும், ஓட்டுனர்பயிற்சி பெறும்போதும் சாலை விதிகள் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்படுகிறது. சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும்.

சாலை விதிகள்:

      சாலையில் பயணம் செய்வோர் அனைவரும் அடிப்படையான சாலை விதிகள் அனைத்தையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். நடைமேடையைப் பயன்படுத்துதல், நகரப்பகுதிகளில் சாலையைக் கடக்க சுரங்க நடைபாதைகள் பயன்படுத்துதல், வெள்ளைக் கோடுகள் போடப்பட்ட இடத்தில் சாலையைக் கடத்தல், வாகன ஓட்டிகள் முறையான இடங்களில் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட அடிப்படை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும்.

 

 

ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்:

v  சிவப்பு வண்ண விளக்கு" நில்" என்ற கட்டளையையும், மஞ்சள் வண்ண விளக்கு, தயாராக இரு என்ற கட்டளையையும், பச்சை வண்ண விளக்கு"புறப்படு" என்ற கட்டளையையும் நமக்குத் தருகிறது. அதைச் சரியாகப் பின்பற்ற வேண்டும்.

v  போக்குவரத்துக் காவல் துறையினரின் கட்டளையை மீறி நாம் செல்லக்கூடாது. வாகனங்களில் அதிவேகம் இருக்கக்கூடாது.

v  சாலையில் அந்தந்த வாகனங்களுக்கு உரிய வாகனப்பதிவு சான்று மற்றும் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வண்டி ஓட்டக் கூடாது. நெடுஞ்சாலைகளில் பயணிக்கும்போது ஒரு வாகனம் மற்றொரு வாகனத்தை முந்த முயற்சி செய்யக்கூடாது. இருசக்கர வாகனங்களில் இருவருக்குமேல் பயணிக்கக் கூடாது.

v  வாகனஓட்டிகள் மது அருந்திவிட்டு வண்டி ஓட்டுதல் சட்டப்படி குற்றமாகும். பள்ளிகள், மருத்துவமனை, முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு அருகில் அதிகமான ஒலி அளவில் ஒலிப்பானை ஒலிக்கக் கூடாது.

விபத்துகளை தவிர்ப்போம், விழிப்புணர்வு தருவோம் :

v  சாலை விதிகளை அறிந்து வாகனத்தினை ஓட்ட வேண்டும்.

v  ஊர்தி ஓட்டுநருக்கான  நெறிகள் அறிந்து முறையாக வாகனத்தை செலுத்த வேண்டும்.

v  நமக்கும் சாலையில் பயணிக்கும் பிறருக்கும் விபத்து ஏற்படா வண்ணம் பாதுகாப்பாக ஊர்திகளை இயக்க வேண்டும்.

v  விபத்துகளைக் கண்டால் முதலுதவி, பிணியாளர் ஊர்தியை அழைத்தல் போன்ற நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும்.

v  விபத்துகளை கண்டதும் திறன்பேசியில் படமெடுத்து சமூக வலைத்தளங்களில் போடுதல் போன்ற பொறுப்பற்ற செயல்களைக் கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.

முடிவுரை:

                                          "சாலைவிதிகளை மதிப்போம்

                                  விலைமதிப்பில்லாத உயிர்களைக் காப்போம்"

     என்பதை அனைவரும் மனதிற்கொண்டு சாலை விதிகளை கடைபிடித்து, சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம். சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு என்பதை உணர்வோம்.

8

45ஆ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

அறிவிப்பு

அமைப்பு

கரகாட்டம், காவடியாட்டம்

பொய்க்கால் குதிரையாட்டம்

கூத்துகள் அரங்கு

சிற்ப அரங்கு

முடிவுரை

முன்னுரை:

          கிராமப்புற/சிற்றூர் மக்களின் கலை, அழகியல், பண்பாடு ஆகிய்வற்றின் எச்சங்களாக இருப்பவை கலைகள். எங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத் திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாகக் காணலாம்.

அறிவிப்பு:

“ கலைத்திருவிழாவிற்கு  வந்தது தூது

இதனையொட்டி எங்கள் ஊர் சேலத்தில் அரசு சார்பில் கலைத்திருவிழா மூன்று நாட்கள் நடப்பதற்கான அறிவிப்பு வந்தது. நிச்சயம் இந்த கலைத்திருவிழா எனக்கு உதவும் என்ற எண்ணத்தில் நான் கண்ட கலைத்திருவிழா நிகழ்வினைக் காணலாம்.

அமைப்பு:

           சேலத்தில் நேரு கலையரங்கத்தில் கலைகளுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு நிகழ்கலைகளுக்கான அரங்குகள் எத்திசையில் எங்கெங்கு அமைக்கப்ப்பட்டுள்ளன என்பதற்கான வரைபடமும் இருந்தது.

கரகாட்டம், காவடியாட்டம் :

“ கண்களை கவருது கரகாட்டம்

ஆட துடிக்குது காவடியாட்டம் “

        கலைஞர்கள் பலர் பலவிதமான கரகத்துடன், அழகிய ஒப்பனைகளுடன் ஆடிய கரகாட்டம் கண்ணைக் கவர்ந்தது. தோளில் காவடியைச் சுமந்தவாறு ஒய்யாரமாக ஆடும் காவடியாட்டமும் மனதைக் கவர்ந்தது.

பொய்க்கால்  குதிரையாட்டம்:

பொய்க்கால்கள் கொண்டு ஆடியதோ குதிரையாட்டம்”

                   குதிரை வடிவக் கூட்டுக்குள் இருந்து, பாதத்துக்குக் கீழ் கட்டையைக் கட்டிக் கொண்டு ஆடிய பொய்க்கால் குதிரையாட்டமும் உற்சாகம் தரக்கூடிய நிகழ்த்துகலைகளாக இருந்தன,

கூத்துகள் அரங்கு:

          ஆடல் பாடலுடன் தோலால் செய்த வெட்டு வரைபடங்களைத் திரைசீலையில்  ஒளி  ஊடுருவும் வகையில் நாடகம் போல நிகழ்த்துவது தோற்பாவைக் கூத்து. கூத்துகள் அனைத்தும் சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு என்ற கருத்தையொட்டி அமைந்திருந்தது.

சிற்ப அரங்கு :

                                        கல்லிலே கலைவண்ணம் கண்டான்

                                        தன் திறனை அனைவருக்கும் படைத்தான்

    சிற்ப அரங்கில் சென்றால் சுண்ணக்கட்டியில் சிற்பம், காய்கறியில் சிற்பம், களிமண்ணில் சிற்பம், மண்ணில் சிற்பம், சோப்பில் சிற்பம்  என பலவிதங்களில் பல்வேறு விதமான சிற்பங்கள் சிறப்பாகவும், வியப்பாகவும் அமைந்தது.

முடிவுரை:

”ஆவலுடன் அங்கு சென்றேன்

                  அங்கிருந்து  வர மனமில்லாமல் வந்தேன்”

         அரசு நடத்தி வரும் இந்த கலைத்திருவிழா கூடத்தில் பல்வேறு விதமான அரங்குகள் இருந்தன. இந்த அரங்குகள் எல்லாம் சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு ஒரே மையக் கருத்தை மையமாகக் கொண்டு நிகழ்த்தப்பட்டன.

8

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, வளையசெட்டிப்பட்டி

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.

சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

 KINDLY WAIT FOR 10 SECONDS


 

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post