தூத்துக்குடி – காலாண்டுத் தேர்வு -2024
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம்
: 3.15 மணி மதிப்பெண் : 100
பகுதி
– 1 மதிப்பெண்கள்
- 15 |
||||||||||||||||||||||||||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
||||||||||||||||||||||||
1. |
ஈ) பாடல்;
கேட்டவர் |
1 |
||||||||||||||||||||||||
2. |
அ) கடல் நீர் ஆவியாகி
மேகமாதல் |
1 |
||||||||||||||||||||||||
3. |
இ)
இன்மையிலும் விருந்து |
1 |
||||||||||||||||||||||||
4. |
இ) பால்
வழுவமைதி, திணை வழுவமைதி |
1 |
||||||||||||||||||||||||
5. |
அ) அருமை + துணை |
1 |
||||||||||||||||||||||||
6.
|
ஈ) கூற்று 1 மற்றும்
2 சரி |
1 |
||||||||||||||||||||||||
7. |
ஈ) அங்கு வறுமை
இல்லாததால் |
1 |
||||||||||||||||||||||||
8. |
ஆ) ஆகஸ்ட் 7 |
1 |
||||||||||||||||||||||||
9. |
இ) அறியா வினா,
சுட்டு விடை |
1 |
||||||||||||||||||||||||
10. |
ஆ) தமிழ் |
1
|
||||||||||||||||||||||||
11.
|
அ)
வேற்றுமை உருபு |
1
|
||||||||||||||||||||||||
12
. |
அ) சங்க இலக்கியம் |
1
|
||||||||||||||||||||||||
13
. |
ஆ)
திணை |
1
|
||||||||||||||||||||||||
14
. |
இ) கூத்தராற்றுப்படை |
1
|
||||||||||||||||||||||||
15
|
ஈ) சொல்லிசை அளபெடை |
1 |
||||||||||||||||||||||||
பகுதி
- 2 |
||||||||||||||||||||||||||
16 |
பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக.
|
1 1 |
||||||||||||||||||||||||
17. |
காலை
நேரம் தொடர்வண்டியில் வந்து இறங்கினார் தமிழறிஞர் கி.வா.ஜகந்நாதன் . அவரை மாலையிட்டு
வரவேற்றனர் .அப்போது கி.வா.ஜ "அடடே! காலையிலேயே மாலையும்
வந்துவிட்டதே!" என்றார் . |
2 |
||||||||||||||||||||||||
18. |
நிலம், நீர், வானம், நெருப்பு, காற்று |
2 |
||||||||||||||||||||||||
19 |
மருத்துவர் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே
என நோயாளி மருத்துவரை நேசிப்பார். |
2 |
||||||||||||||||||||||||
20 |
1. கண்காணிப்பு கருவிகள்
( மறைக்காணி ) 2. நவீன திறன்பேசி |
2 |
||||||||||||||||||||||||
21. |
அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை
முயற்சி தரும் |
2 |
||||||||||||||||||||||||
பிரிவு
- 2 |
||||||||||||||||||||||||||
22 |
அ) இயற்கை என்பதற்கு செயற்கை என எழுதினான். ஆ) விதி என்பதற்கு வீதி என எழுதினான் |
1 1 |
||||||||||||||||||||||||
23 |
அ) ஒரு சோறு பதம் ஆ) மருந்தும் மூன்று நாள் / வேளை |
1 1 |
||||||||||||||||||||||||
24. |
அமர்ந்தான் – அமர் + த்(ந்)+த்+ ஆன் அமர் – பகுதி த்(ந்) – சந்தி ந் – ஆனது விகாரம் த் – இறந்த கால இடைநிலை ஆன் – ஆண்பால் வினை முற்று விகுதி |
2 |
||||||||||||||||||||||||
25 |
அ. ஒப்பெழுத்து ஆ. மீநுண் தொழில்நுட்பம் |
1 1 |
||||||||||||||||||||||||
26 |
அழைப்புமணி ஒலித்தும்
கயல்விழி கதவைத் திறந்தவர். |
2 |
||||||||||||||||||||||||
27 |
v தண்ணீரைக் குடி – அவன் தண்ணீரைக் குடித்தான். v தயிரை உடைய குடம் – கமலா தயிர்க்குடத்திலிருந்து தயிரை ஊற்றினாள். |
1 1 |
||||||||||||||||||||||||
28 |
|
1 1 |
||||||||||||||||||||||||
பகுதி
– 3 |
||||||||||||||||||||||||||
29 |
அ) கடவுச்சொல், கைரேகை ஆ) படம் எடுக்கும் காட்சியை அடையாளம்
கண்டு அதற்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்கிறது. இ) முகத்தை அடையாளம் கண்டு திறப்பது. |
3 |
||||||||||||||||||||||||
30 |
Ø கல்வி நமக்கு மகிழ்ச்சியான வாழ்வைத் தரும். Ø சமூகத்தில் நற்பெயருடன் இருக்கக் கல்வி அவசியம். Ø பிறருடைய உதவி நாடாமல் சுயமாக வாழ கல்வி அவசியம். Ø கல்வி நமக்கு உறுதியான பாதுகாப்பு தரும். |
3 |
||||||||||||||||||||||||
31 |
·
காட்டில் பனைவடலி
நடப்பட்டது ·
தோட்டத்தில் மாங்கன்று
நடப்பட்டது. ·
சோளப் பைங்கூழ்
வளர்ந்து வருகிறது ·
புளியங்கன்று சாலை ஓரத்தில் வளர்ந்து வருகிறது. ·
தோட்டத்தில் தென்னம்பிள்ளை
வளர்த்தேன். |
3 |
||||||||||||||||||||||||
பகுதி
-3 / பிரிவு - 2 |
||||||||||||||||||||||||||
32 |
·
நீயும் அந்த வள்ளலிடம்
சென்று வளம் பெற்று வாழ்வாயாக என கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துதல்
ஆற்றுப்படை. ·
நன்னன் எனும் மன்னனிடம்
பரிசில் பெற்ற கூத்தர், மற்றொரு கூத்தரிடம் பரிசில் பெறுவதற்கான வழியினை கூறுகிறது. ·
உணவினைப் பெறுவதற்கான
வழியினைக் கூறல். |
3 |
||||||||||||||||||||||||
33
|
v
அன்னை மொழியானவள். v
அழகான செந்தமிழானவள். v
பழமைக்கு பழமையாய்
தோன்றிய நறுங்கனி. v
பாண்டியன் மகள். v
திருக்குறளின் பெருமைக்கு
உரியவள். v
பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்களையும்
கொண்டவள். |
3 |
||||||||||||||||||||||||
34 |
அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம் பொருத்துவதும் கல்வியென்றே போற்று. கா.ப.செய்கு தம்பி பாவலர் |
3 |
||||||||||||||||||||||||
34 |
தண்டலை மயில்க ளாடத் தாமரை விளக்கந் தாங்கக் கொண்டல்கண் முழவி
னேங்கக் குவளைகண் விழித்து நோக்கத் தெண்டிரை யெழினி
காட்ட தேம்பிழி மகரயாழின் வண்டுக ளினிது பாட மருதம்வீற் றிருக்கு மாதோ |
|
||||||||||||||||||||||||
பகுதி
– 3 / பிரிவு - 3 |
||||||||||||||||||||||||||
35 |
பயின்று வரும் அணி : உவமை அணி அணி விளக்கம் : புலவர் தாம்சொல்ல எடுத்துக்
கொண்ட பொருளை வேறு ஒரு பொருளுடனோ பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு,தொழில், பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு இயைபுபடுத்தி இரு பொருள்களுக்கும்
இடையே உள்ள ஒப்புமை புலப்படும்படி பாடுவது உவமை அணியாகும். அணிப் பொருத்தம் : அரசன்
ஒருவன் தன் அதிகாரத்தினைப் பயன்படுத்தி வரியின் மூலம் மக்களிடம் பணம்
வசூலிப்பது, வேல் முதலிய ஆயுதங்களைக்
கொண்ட ஒரு வழிப்பறி செய்வதற்குச் சமம் ஆகும். உவமானம் - வேலொடு
நின்றான் இடுஎன்றது. உவமேயம் - கோலொடு
நின்றான் இரவு.
உவம உருபு – போலும் |
3 |
||||||||||||||||||||||||
36 |
Ø
ஆற்றுநீர் பொருள்கோள் Ø விளக்கம் : பாடலின் தொடக்கம் முதல் இறுதி வரை நேராக பொருள் கொள்ளுமாறு அமைவது. பொருத்தம் : முயற்சி ஒருவனுக்கு செல்வத்தைப் பெருக்கும். முயற்சி இல்லாதிருந்தால்
வறுமை சேரும். இக்குறள் தொடக்கம்
முதல் இறுதி வரை நேராக பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளது |
3
|
||||||||||||||||||||||||
37
|
|
3 |
||||||||||||||||||||||||
பகுதி
- 4 |
||||||||||||||||||||||||||
38அ |
“ பிறந்து சிறந்த மொழிகளிலே சிறந்தே பிறந்தது தமிழ் மொழி “ என்பதற்கிணங்க மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய்
வாழ்த்துப்பாடலையும், பெருஞ்சித்திரனார் தமிழ் வாழ்த்தினையும் ஒப்பிட்டு பேச
உங்கள் முன் நிற்கிறேன். மனோன்மணீயம் சுந்தரனார் வாழ்த்து : ·
தமிழ் அன்னை கடலை ஆடையாக அணிந்துள்ளாள். அவளின் முகமாக நமது பாரத கண்டம்
திகழ்கிறது. ·
அவளின் நெற்றியாக தக்காணம் அழகு சேர்கிறது. ·
அந்த நெற்றியில் நறுமணம் மிக்க குங்குமம் வைத்தாற் போல அவளை மேலும் அழகுற
செய்கிறது தமிழ்நாடு. ·
குங்கும பொட்டின் மணம் அனைவரையும் இன்புறச் செய்கிறது. அது போல
தமிழ்அன்னை எல்லாத் திசைகளிலும் புகழ் பெற்றவளாக திகழ்கிறாள். ·
உலகின் மூத்த மொழியாக உள்ள தமிழ் அன்னை என்றும் இளமையாக திகழ்கிறாள். ·
தமிழன்னையின் வளம் என்றும் குறையாமல் பெருகுகின்றதை எண்ணியும், உன் இளமை என்றுமே நிலைத்திருக்கும்படி சுந்தரனார் வாழ்த்துகிறார். பெருஞ்சித்திரனார் வாழ்த்து : ·
தமிழன்னை செந்தமிழானவள். பழமையின் நறுங்கனியே ·
குமரிக் கண்டத்தில் நிலையாக இருந்த மண்ணுலக பேரரசியே! ·
பாண்டியன் மகளாக திகழ்பவளே ·
திருக்குறளின் மாண்புகளே! பத்துப்பாட்டே! எட்டுத்தொகையே! ·
பதினெண்கீழ்க்கணக்கே! நிலையான சிலப்பதிகாரமே! ·
அழகான மணிமேகலையே ·
இத்தகைய நினைவுகளால் தலை பணிந்து உன்னை வாழ்த்துகிறோம். என
பெருஞ்சித்திரனார் வாழ்த்துகிறார். |
5
|
||||||||||||||||||||||||
38ஆ |
குறிப்புச்சட்டம்
முன்னுரை : கபிலரின் நண்பர் இடைக்காடனாரை மன்னன் இகழ்ந்ததன் பொருட்டு
இறைவன் புலவனின் குரலுக்குச் செவி சாய்த்த நிகழ்வை இக்கட்டுரையில் காண்போம். மன்னனும் இடைக்காடனும் ·
மன்னன் குசேலப்
பாண்டியன் முன் இடைக்காடன் தன் கவிதையைப் பாடினார். ·
மன்னன் அதனை பொருட்படுத்தாமல் இகழ்ந்தார். ·
புலவன் அங்கிருந்து வெளியேறினார். இறைவனிடம் முறையிடல் ·
இடைக்காடன் இறைவனிடம்
முறையிடல். ·
மன்னன் தன்னை
இகழவில்லை. ·
இறைவனான உன்னை
இகழ்ந்தான். இறைவன் நீங்குதல் ·
இறைவன் இதனைக் கண்டு
கடம்பவன கோயிலை விட்டு நீங்கினார். ·
வையை ஆற்றின் தென்
பக்கத்தே ஒரு திருக்கோயிலில் சென்றார். மன்னன் முறையிடல் : ·
மன்னன் இறைவன் நீங்கியதைக்
கண்டு வருத்தம் அடைந்தான். ·
இடைக்காடன் பாடலை
இகழ்ந்தது தவறு தன்னைப் பொறுத்தருள
வேண்டினான். புலவனுக்குச் சிறப்பு செய்தல் ·
மன்னன் இடைக்காடனாரிடம்
தன்னைப் பொறுத்துக் கொள்ள வேண்டுதல். ·
இறைவன் சொல் கேட்டு
இடைக்காடனுக்கு மன்னன் சிறப்பு செய்தான். முடிவுரை : மன்னனின் சொல் கேட்ட புலவர்களின் கோபம் தணிந்தது. இடைக்காடனார்
புலவரின் பாடலை இகழ்ந்ததன் காரணமாக இறைவன் புலவனின் குரலுக்குச் செவிசாய்த்தார், |
5
|
||||||||||||||||||||||||
39அ |
சேலம் 03-03-2024 அன்புள்ள நண்பனுக்கு, நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல். மாநில அளவில் நடைபெற்ற ” மரம் இயற்கையின் வரம் “ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியில் நீ முதல் பரிசு பெற்றது
மிக மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன். இப்படிக்கு, உன் அன்பு நண்பன், அ அ அ அ அ அ அ . உறைமேல் முகவரி; பெறுதல் திரு.இரா.இளங்கோ, 100,பாரதி தெரு, சேலம். |
5 |
||||||||||||||||||||||||
39ஆ |
அனுப்புநர் அ அ அ அ அ, 100,பாரதி தெரு, சக்தி நகர், சேலம் – 636006. பெறுநர் உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள், உணவு பாதுகாப்பு ஆணையம், சென்னை – 600001 ஐயா, பொருள்: தரமற்ற உணவு வழங்கிய
உணவு விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல் – சார்பு வணக்கம். நான் நேற்று சேலத்தில் அன்பு உணவகத்தில் கோழி பிரியாணி உண்டேன். அது கெட்டுப் போனதாகவும்
மேலும் அதன் விலைப்பட்டியலைவிட விலைக் கூடுதலாகவும் இருந்தது. இத்துடன் அந்த உணவிற்கான
விலை இரசீது நகல் மற்றும் உணவு பட்டியல் நகலையும் இணைத்துள்ளேன். தகுந்த நடவடிக்கை
எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன். நன்றி. இணைப்பு: இப்படிக்கு, 1. விலை இரசீது – நகல் தங்கள்உண்மையுள்ள, 2. விலைப்பட்டியல்–நகல் அ அ அ அ அ. இடம் : சேலம் நாள் : 04-03-2024 உறை மேல் முகவரி: பெறுநர் உணவு பாதுகாப்பு
ஆணையர் அவர்கள், உணவு பாதுகாப்பு
ஆணையம், சென்னை – 600001. |
5 |
||||||||||||||||||||||||
40 |
|
5 |
||||||||||||||||||||||||
41 |
கொடுக்கப்பட்ட தரவுகளைக்
கொண்டு முழுமையாக அனைத்துப் பகுதியினையும் நூலக உறுப்பினர் படிவத்தில் பதிவு செய்து
இருப்பின் முழு மதிப்பெண் வழங்குக |
5 |
||||||||||||||||||||||||
42அ |
1.குழு விளையாட்டுகள் விளையாடுதல். 2.உலக நிகழ்வுகளைப் பற்றிக்
கலந்துரையாடுதல். 3.விளையாட்டுக் களத்திற்குச் சென்று விளையாடுதல். 4நூல்களைப் படித்தல். 5.திறன்பேசியின் தீமைகளை எடுத்துரைத்தல், அதன் பயன்பாட்டைக்
குறைக்கச் செய்தல். |
5 |
||||||||||||||||||||||||
42ஆ |
மரியாதைக்குரியவர்களே! என் பெயர் இளங்கோவன். நான் பத்தாம் வகுப்பு
படிக்கிறேன். நான் தமிழ் பண்பாட்டைப்
பற்றி சில வார்த்தைகளைக் கூறுகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்பாட்டிலும், நாகரிகத்திலும்
சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. மொழிக்கு இலக்கணம்
வகுத்தவர்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர். தமிழர்களின் பண்பாடு இந்தியா, ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத்
தரத்தில் வேரூன்றி உள்ளது. நம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில்
மேம்படுத்தி உள்ளது. நாம் நம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். எல்லோருக்கும் நன்றி |
5 |
||||||||||||||||||||||||
பகுதி
- 5 |
||||||||||||||||||||||||||
43அ |
‘ செயற்கை நுண்ணறிவின்
எதிர்கால வெளிபாடுகள் ‘ குறிப்புச் சட்டம்
முன்னுரை :- ஒரு குழந்தையைத் தூக்கவும் கீழே விழுந்த ஒரு தேனீர்க் கோப்பையை எடுக்கவும்
மென்பொருள் அக்கறை கொள்ளுமா? வெறும் வணிகத்துடன் நின்று விடுமா? என்றால் அதன் வெளிப்பாடுகள் அதிகமாக
இருக்கும் என்பதனை இக்கட்டுரை வாயிலாகக் காணலாம். ஊர்திகளில் வெளிப்பாடு : எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவுடன்
கூடிய ஊர்திகள் வந்து விடும். இவற்றின் மூலம் ·
போக்குவரத்து நெரிசல் குறையும். ·
பயண நேரம் குறையும். ·
எரிபொருள் மிச்சமாகும். கல்வித்துறையில் : கல்வித்துறையில்
இத்தகைய தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகின் அதிசயங்களை நாம் இங்கிருந்தே
கண்டு கற்கலாம். பிறச் செயல்பாடுகள்: ·
மனிதர்களிடம் போட்டியிடலாம். ·
பல்வேறு இடங்களில் மனிதர்கள் வழங்கும் சேவைகளை
வழங்கலாம். ·
சாக்கடைகளைச் சுத்தம் செய்யும் இயந்திர
மனிதன் கண்டுபிடிக்கலாம். முடிவுரை : செயற்கை நுண்ணறிவுக்
கருவிகளால் மனிதர்களின் வேலைப்பளு குறைந்துள்ளது. கால விரயம் தடுக்கப்பட்டுள்ளது. |
8 |
||||||||||||||||||||||||
43ஆ |
குறிப்புச்சட்டம்
முன்னுரை : போராட்டக் கலைஞர், பேச்சுக் கலைஞர், நாடகக் கலைஞர், திரைக்கலைஞர்,
இயற்றமிழ் கலைஞர் என கலைஞரின் பன்முகத்தன்மையை
நாம் இக்கட்டுரையில் காண்போம். போராட்டக் கலைஞர் : Ø பள்ளி வயதிலியே போராடியவர் கலைஞர். Ø இந்தி திணிப்பை எதிர்த்து போராட மாணவர்களைத் திரட்டி திருவாரூர்
வீதிகளில் போராடியவர். Ø
“ வாருங்கள் எல்லோரும்
போருக்குச் சென்றிடுவோம் “ எனப் பாடலைப் பாடிக்கொண்டே
ஊர்வலம் நடத்தினார். பேச்சுக் கலைஞர் : Ø தந்தை பெரியார், பட்டுக்கோட்டை அழகிரி, அறிஞர் அண்ணா ஆகியோரின்
பேச்சாற்றல் கலைஞரைக் கவர்ந்தது. Ø மேடைப் பேச்சில் பெருவிருப்பம் கொண்டவர். “ நட்பு “
என்னும் தலைப்பில் கலைஞர் ஆற்றிய சொற்பொழிவை பலரும் பாராட்டினர் நாடகக் கலைஞர் : Ø 1944 இல் “பழநியப்பன்“ என்னும் முதல் நாடகத்தை எழுதி
அரங்கேற்றினார். Ø சாம்ராட் அசோகன், மணிமகுடம், வெள்ளிக்கிழமை, காகிதப்பூ,
தூக்கு மேடை முதலிய நாடகங்களை எழுதியுள்ளார். Ø தூக்குமேடை நாடகத்தில் மாணவராக நடித்து “ கலைஞர் “ என்னும் சிறப்பு
பட்டம் பெற்றார். திரைக் கலைஞர் : Ø
“ ராஜகுமாரி “ திரைப்படம் மூலம் வசன எழுத்தாளாராக அறிமுகமானார். Ø
மருதநாட்டு இளவரசி,
நாம், பூம்புகார், மந்திரிகுமாரி போன்ற பல படங்களுக்கு கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார். இயற்றமிழ் கலைஞர்: Ø
நளாயினி, சித்தார்த்தன்
சிலை, சந்தனக் கிண்ணம், தாய்மை, புகழேந்தி முதலிய சிறுகதைகள் எழுதியுள்ளார். Ø
ரோமாபுரி பாண்டியன்,
பொன்னர் சங்கர், தென்பாண்டி சிங்கம் உள்ளிட்ட புதினங்களையும் எழுதியுள்ளார். Ø
தொல்காப்பிய பூங்கா,
குறளோவியம் முதலிய தமிழ் இலக்கிய நூல்களையும் எழுதி தம் இயற்றமிழ் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். முடிவுரை : அரசியல் மட்டுமன்றி, கலைத்துறை, பேச்சுக்கலை, பட்டிமன்றம்,
கவியரங்கம் என பலத்துறைகளிலும் தன்னுடைய பன்முக ஆற்றலை வெளிப்படுத்தி பல்துறை வித்தகராக
விளங்கினார் கலைஞர். |
|
||||||||||||||||||||||||
44அ |
முன்னுரை : பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து
காக்கின்ற மனித நேயம் விருந்தோம்பல்.இக்கட்டுரையில் கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பலைக்
காணலாம். தேசாந்திரி: Ø சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி. Ø அன்னமய்யாவுடன் ஒரு ஆள் வந்தான். Ø அவன் மிக சோர்வாக இருந்தான். Ø லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான். Ø குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது. Ø வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான். கருணை அன்னமய்யா: Ø அவன் பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும்
கூறினான். Ø அன்னமய்யா ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும், துவையலும் வைத்துக்
கொடுத்தார். Ø கடுமையான பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி
உறங்கினான். Ø ஆனந்த உறக்கம் கண்டான். முடிவுரை: பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து
காக்கின்ற கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது. |
8
|
||||||||||||||||||||||||
44ஆ |
குறிப்புச்சட்டம்
முன்னுரை : மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின்
வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம். மேரி : ·
சாம் – பாட்ஸி இணையருக்கு
மகளாகப் பிறந்தவள் மேரி. ·
பருத்திக்காட்டில்
வேலை செய்து தங்கள் குடும்பத்தை நடத்துகிறார்கள். அவமானம் : ·
மேரி பாட்ஸியுடன்
பென்வில்ஸன் வீட்டிற்கு செல்கிறார்கள். ·
மேரி அந்த வீட்டின்
அலமாரியிலிருந்த புத்தகத்தை எடுக்கிறாள். ·
பென்வில்ஸன் இளையமகள்
அவளிடமிருந்து புத்தகத்தை பிடிங்கினாள். ·
உனக்கு படிக்கத்
தெரியாது என கூறினாள். ·
மேரி மனம் துவண்டாள். புதிய நம்பிக்கை ·
மேரிக்கு படிக்க
வேண்டும் என்ற ஆர்வம் உணடானது. ·
ஒரு நாள் மிஸ் வில்ஸன்
என்பவர் “ உன் போன்ற குழந்தைகள் படிக்க வேண்டும். நீ சீக்கிரமாக மேயெஸ் வில்லிக்கு
வர வேன்டும். ·
மேரிக்கு புதிய
நம்பிக்கை பிறந்தது. கல்வி ·
மேரி ஐந்து மைல்கள்
நடந்து சென்று கல்வி கற்றாள். ·
சில வருடங்கள் கழித்து
மேரிக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. ·
அதில் “ இந்த பட்டம்
பெறும் மாணவர் எழுதவும் படிக்கவும் கூடியவர் “ என எழுதப்பட்டிருந்தது. உதவிக்கரம் ·
மிஸ்வில்சன் மூலம்
மேரிக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி ·
அவளின் மேல்படிப்பு
செலவுக்காக மேற்குப் பகுதியில் வாழ்கின்ற வெள்ளைக்கார பெண் மணி பணம் அனுப்பி இருக்கிறார். ·
அவள் மேல் படிப்புக்காக
டவுணுக்கு செல்கிறாள். மேல்படிப்பு ·
மேரியை மேல்படிப்பு
படிப்பதற்காக இரயில் நிலையத்தில் அவளது கிராமமே வழியனுப்ப திரண்டு வந்தது. ·
மிஸ் வில்ஸனும்
இரயில் நிலையத்தில் வந்தார்கள். முடிவுரை எப்படிப்பட்ட நிலையிலும் கல்வி நம்மை உயர்த்தும் என்பதற்கு
மேரியின் வாழ்க்கையை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். மேரியிடமிருந்து பறிக்கப்பட்டப்
புத்தகம் அவள் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றியது என்பதனை இக்கட்டுரை வழியாகக்
கண்டோம். |
8 |
||||||||||||||||||||||||
45அ |
குறிப்புச்
சட்டம்
முன்னுரை : விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய பெண் வீராங்கனை
கல்பனா சாவ்லா குறித்து நாம் இக்கட்டுரையில் காணலாம். பிறப்பும், கல்வியும் : பிறப்பு : இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் கர்னலில் ஜூலை 1,1961
இல் பிறந்தார். பெற்றோர்
: பனாரஸ்லால் - சன்யோகிதா தேவி கல்வி : கர்னலில் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியல்
துறையில் இளங்கலைப் பட்டம் ·
டெக்சாஸ்
பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம். ·
. 1986-ஆம் ஆண்டு கொலராடோ பல்கலைக் கழகத்தில் 2-ஆவது முதுகலைப்பட்டம். ·
பிறகு 1988-ஆம் ஆண்டு விண்வெளி பொறியியல் துறையில்
முனைவர் பட்டம் பெற்றார். விண்வெளிப் பயணம்: ·
1995 இல் நாசா விண்வெளி
வீரர் பயிற்சியில் இணைந்து கொலம்பிய விண்வெளி ஊர்தி எஸ்,டி,எஸ்-87 இல் பயணம் செய்தார், ·
சுமார் 372 மணிநேரம்
விண்வெளியில் இருந்து சாதனையுடன் பூமி திரும்பினார். வீர மரணம் : ·
2003இல் ஜனவரி
16 ந் தேதி அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பிய விண்கலம் எஸ்.டி.எஸ்
107 இல மீண்டும் பயணம் செய்தார். ·
அந்த விண்கலம் ஆய்வை
முடித்து திரும்பிய போது பிப்ரவரி -1 இல் டெக்சாஸ் வான்வெளியில் வெடித்துச் சிதறியதில்
கல்பனா சாவ்லாவுடன் உடன் பயணித்த 7 வீரர்களும் மரணமடைந்தனர் விருது: ·
நியூயார்க் நகரின்
ஒரு சாலைக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ·
பிப்ரவரி 1ந் தேதி
கல்பனா சால்வலா நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. ·
2011 முதல் வீரதீர
சாதனைப் புரிந்த பெண்களுக்கு “ கல்பனா சாவ்லா விருது “ அரசு வழங்கி வருகிறது. முடிவுரை: மாணவர்களாகிய நாமும் இவரைப் போன்றவர்களை
உதாரணமாகக் கொண்டு விடாமுயற்சியுடன் படித்தால் அனைத்தையும் சாதிக்கமுடியும். |
8 |
||||||||||||||||||||||||
45ஆ |
நீரின்றி இயங்காது உலகம், நீர்நிலைகள் அடிப்படை நீர்ப்பற்றாக்குறை ஏற்பட காரணம் நீரைச் சேமிக்கும் வழிகள் மழைநீரைச் சேமித்தல் நிலத்தடி நீரைச் சேமிக்கும் வழிமுறைகள் மரம் வளர்ப்போம் மழைபெறுவோம் முடிவுரை மேற்க்ண்ட தலைப்புகளில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் |
8 |
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, வளையசெட்டிப்பட்டி
www.tamilvithai.com
www.kalvivithaigal.com
மேலும் பல்வேறு
கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.
சராசரி
மற்றும் மெல்லக் கற்கும்
மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும்.
மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற
சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும்
போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா
வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக்
கொள்ளவும். நன்றி, வணக்கம்
KINDLY WAIT FOR 10 SECONDS