10TH-QUATERLY EXAM-2024-TAMIL-ANSWER KEY-PDF-ARIYALUR

 

சேலம் – காலாண்டுத் தேர்வு  -2024

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  3.15 மணி                                                                             மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

அ) வணிக கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

1

2.

ஆ) மணிவகை

1

3.

அ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல்

1

4.

ஈ) சிற்றூர்

1

5.

இ) காசிநகரத்தின் பெருமையைப் பாடும் நூல்

1

6.

ஈ) வானத்தையும் பேரொலியையும்

1

7.

இ) இலா

1

8.

ஈ) மன்னன்; இறைவன் 

1

9.

இ) அன்மொழிதொகை

1

10.

அ) கண்ணன்

1

11.

இ. அறியா வினா, சுட்டு விடை

1

12 .

இ. எம் + தமிழ் +நா

1

13 .

அ) பண்புத்தொகை

1

14 .

ஆ) தமிழ்மொழியை   

1

15

இ) வேற்றுமொழியினர்

1

பகுதி - 2

16

·         வசனம் + கவிதை = வசன கவிதை.

உரைநடையும்,கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை.

1

1

17.

பொருத்தமான விடை எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

2

18.

வரகு, குதிரைவாலி, காடைக்கண்ணி

2

19

அ. திருமால்

ஆ) செய்யுளிசை அளபெடை

2

20

மருத்துவர் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என நோயாளி மருத்துவரை நேசிப்பார்.

2

21.

பண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம்

 கண்ணோட்டம் இல்லாத கண்.

2

பிரிவு - 2

22

அறிவினா, அறியாவினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா

1

1

23

அ) உரையாடல்     ஆ) ஒப்பெழுத்து

1

1

23

செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா

அ. கற்குவியல்               ஆ. பழக்குலை

2

24

அ) விடு என்பதற்கு வீடு என எழுதினான்.

ஆ) கொடு என்பதற்கு கோடு என எழுதினான்.

1

1

25

பொழிந்தபொழி + த்(ந்) + த் + அ

பொழிபகுதி

த்சந்தி ; த் – ந் ஆனது விகாரம்

த்இறந்த கால இடைநிலை

பெயரெச்ச விகுதி

1

1

26

அ) நான் கண்ணும் கருத்துமாய் படித்து போட்டித் தேர்வில் வென்றேன்.

ஆ) இல்லாததை இருப்பதாகக் கூறி கயிறுத்திரிக்கிறான்

1

1

27

அ. சோற்றுக்கு ஒரு சோறு பதம்

ஆ) மருந்தும் மூன்று நாள்/ மூன்று வேளை

1

1

28

தேனிலே ஊறிய செந்தமிழின்சுவை

தேறும் சிலப்பதி காமதை

ஊனிலே எம்முயிர் உள்ளளவும்நிதம்

ஓதி யுர்ந்தின் புறுவோமே

2

பகுதி – 3

29

சோலைக் காற்று :           மின் விசிறிக் காற்றே ! நலமா?

மின் விசிறிக் காற்று :      நான். நலம். உனது  இருப்பிடம் எங்கே?

சோலைக்காற்று :           அருவி, பூஞ்சோலை, மரங்கள். உனது இருப்பிடம் எங்கே?

மின் காற்று :                   அறைகளின் சுவர்களின் இடையில். எனது இருப்பிடம்.

சோலைக்காற்று :           என்னில் வரும் தென்றல் காற்றை அனைவரும் விரும்புவர்.

மின்  காற்று :                  விரும்பியவர்கள் மின் தூண்டுதல் மூலம் என்னைப்

                                       பெறுவர். எண்ணிக்கையின் அடிப்படையில் வேகம்

                                      கொள்வேன்.

சோலைக் காற்று :           இலக்கியங்களில் நான் உலா வருவேன். அனைவரும்

                                      விரும்பும் விதமாக இருப்பேன்.

மின் காற்று :                நான் இல்லாமல் அலுவலகம் இல்லை. மின்சாரம் இல்லையெனில் நான் இல்லை.  என்னை விரும்பும் நேரங்களில் இயக்கிக் கொள்ளலாம்.

3

30

·         ஓரளவு மேம்படுத்துகின்றன.

·         மனிதனுக்கு தேவையான தேவைகளை மேம்படுத்தி இருக்கிறது.

·         மனிதனிடம் இரக்கம், அன்பு போன்றவை இல்லை.

·         மனிதன் இயந்திரத் தனமான வாழ்வை வாழ்கின்றான்.

3

31

அ) 5000         ஆ) ஆங்கிலம்      இ) புதிய சொற்கள் உருவாகி மொழி வளம் ஏற்படுகிறது.

3

பகுதி -3 / பிரிவு - 2

32

v  அன்னை மொழியானவள்.

v  அழகான செந்தமிழானவள்.

v  பழமைக்கு பழமையாய் தோன்றிய நறுங்கனி.

v  பாண்டியன் மகள்.

v  திருக்குறளின் பெருமைக்கு உரியவள்.

v  பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்களையும் கொண்டவள்.

3

33

·           மன்னன் இடைக்காடனார் புலவரின் பாடலை இகழ்ந்தார்.

·           இடைக்காடனார், மன்னன் இகழ்ந்ததை இறைவனிடம் முறையிடுகிறார்.

·           இறைவன் கோவிலை விட்டு நீங்கினார்.

·           மன்னன் இறைவனிடம் தன் பிழையைப் பொறுத்து அருள்புரியுமாறு வேண்டினார்.

·           மன்னன் புலவருக்கு மரியாதை செய்து, மன்னிப்பு வேண்டினார்.

3

34

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ

ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.     குலசேகராழ்வார்

3

34

நீதிவெண்பா

அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி

மருளை அகற்றி மதிக்கும் தெருளை

அருத்துவதும் ஆவிக்கு அருந்துணையாய் இன்பம்

பொருத்துவதும் கல்வியென்றே போற்று.           கா.ப.செய்கு தம்பி பாவலர்

3

பகுதி – 3 / பிரிவு - 3

35

கண்ணே கண்ணுறங்கு

விளித்தொடர்

காலையில் நீயெழும்பு

ஐந்தாம் வேற்றுமைத் தொடர்

மாமழை

உரிச்சொல் தொடர்

மாம்பூவே

விளித்தொடர் தொடர்

  பாடினேன் தாலாட்டு

வினைமுற்றுத் தொடர்

ஆடி ஆடி

அடுக்குத் தொடர்

3

36

இலக்கணம்: இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிக்கூறுதல்.

.கா:

தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால்

..................................................................................

................... கூவினவே கோழிக் குலம்.

விளக்கம்:

அதிகாலை விடிந்து கோழிகளும் இயல்பாக கூவும்.ஆனால் புலவர் தமயந்தியின் துயர் கண்டே கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாகக் கூறுகிறார்.

3

37

சீர்

அசை

வாய்பாடு

செயற்-கை

நிரை – நேர்

புளிமா

அறிந்-த

நிரை – நேர்

புளிமா

கடைத்-தும்

நிரை – நேர்

புளிமா

உல - கத்

நிரை – நேர்

புளிமா

தியற்-கை

நிரை – நேர்

புளிமா

அறிந்-த

நிரை – நேர்

புளிமா

செயல்

நிரை

மலர்

3

பகுதி - 4

38

குறிப்புச் சட்டம்

முன்னுரை

மழை மேகம்

மழைப் பொழிவு

மாலைப் பொழுது

நற்சொல் கேட்டல்

ஆற்றுப்படுத்துதல்

முன்னுரை :

          முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை நாம் கட்டுரை வடிவில் காணலாம்.

மழை மேகம் :

திருமால் மாவலி மன்னனுக்கு நீர் வார்த்துத் தரும் போது விண்ணுக்கும் மண்ணுக்கும் பேருருவம் எடுத்தது போல் மழை மேகம் உயர்ந்து நின்றது.

மழைப் பொழிவு :

கடலின் குளிர் நீரைப் பருகி, மலையைச் சூழ்ந்து விரைந்த வேகமாய் பெருமழைப் பொழிகிறது.

மாலைப் பொழுது :

வண்டுகளின் ஆரவாரம் கொண்ட அரும்புகள்.

முது பெண்கள் மாலை வேளையில் முல்லைப் பூக்களோடு, நெல்லையும் தெய்வத்தின் முன் தூவினர்.

நற்சொல் கேட்டல் :

முதுபெண்கள் தலைவிக்காக கோவிலில் நற்சொல் கேட்டு நிற்பர்.

இது விரிச்சி என அழைக்கப்படும்.

ஆற்றுப்படுத்துதல் :

·      இடைமகள் பசியால் வாடிய இளங்கன்றை காணல்.

·      உம் தாயர்  இப்போது வந்து விடுவர் இடையர் எனக் கூறல்.

·      முதுப் பெண்கள் இந்த நற்சொல்லை கேட்டல்.

·      உன் தலைவன் வந்து விரைந்து வந்துவிடுவான் என ஆற்றுப்படுத்துதல்.

முடிவுரை :

        இவ்வாறு முல்லைப் பாட்டில் மழைமேகம், மழைப்பொழிவு, மாலைப் பொழுது, நற்சொல் கேட்டல், ஆற்றுப்படுத்துதல் என செய்திகளைக் கண்டோம்.

5

38ஆ

திரண்ட கருத்து:

Ø  நிலவையும்,நட்சத்திரங்களையும் வரிசையாக வைப்போம்.

Ø  அமுத குழம்பினைக் குடிப்போம்.

Ø  பட்டாம் பூச்சியை எங்கு வேண்டுமானாலும் பறக்க வைப்போம்.

Ø  பலாக்கனிகள் ஏற்றிவரும் வாகனத்தில் வண்டின் ஓசையைக் கேட்போம்.

மையக் கருத்து:

நிலவிலும், நட்சத்திர ஒளியிலும், காற்றிலும், அமுதத்தைப் பருகி மனதை இலேசாக்கி எங்கும் பறந்து இனிமை நிறைந்த பலாவினைச் சுவைத்து இன்பம் பெறுவோம்.

மோனை:

          முதலெழுத்து ஒன்றி வருவது மோனை.

                   நிலாவையும்நேர்ப்பட

எதுகை :

          முதலெழுத்து அளவொத்து நிற்க இரண்டாமெழுத்து ஒன்றி வருவது எதுகை.

                   நிலாவையும் -        குலாவும்

இயைபு :

          செய்யுளில் ஒவ்வொரு அடியிலும் இறுதியில் வரும் எழுத்தோ, சீரோ,அசையோ ஒன்றி வருவது.

          வெறிபடைத்தோம் -        மகிழ்ந்திடுவோம்

அணி நயம்:

          இப்பாடலில் மனதைச் சிறு பறவையாக உருவகம் செய்யப்பட்டுள்ளமையால் இதில் உருவக அணி வந்துள்ளது.

தலைப்பு:

இயற்கை இன்பம்

5

39அ

சேலம்

03-03-2024

அன்புள்ள நண்பனுக்கு,

          நான் நலம். நீ அங்கு நலமா? என அறிய ஆவல். மாநில அளவில் நடைபெற்ற மரம் இயற்கையின் வரம் என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியில் நீ முதல் பரிசு பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மனமார வாழ்த்துகிறேன். நீ இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,

உன் அன்பு நண்பன்,

அ அ அ அ அ அ அ .

உறைமேல் முகவரி;

        பெறுதல்

                   திரு.இரா.இளங்கோ,

                   100,பாரதி தெரு,  சேலம்.

 

5

39ஆ

அனுப்புநர்

          அ அ அ அ அ,

          100,பாரதி தெரு,

          சக்தி நகர்,

          சேலம் – 636006.

பெறுநர்

          உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

          உணவு பாதுகாப்பு ஆணையம்,

          சென்னை – 600001

ஐயா,

பொருள்: தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதி மீது நடவடிக்கை எடுக்க   

               வேண்டுதல்சார்பு

        வணக்கம். நான் நேற்று சேலத்தில் அன்பு உணவகத்தில் கோழி பிரியாணி உண்டேன். அது கெட்டுப் போனதாகவும் மேலும் அதன் விலைப்பட்டியலைவிட விலைக் கூடுதலாகவும் இருந்தது. இத்துடன் அந்த உணவிற்கான விலை இரசீது நகல் மற்றும் உணவு பட்டியல் நகலையும் இணைத்துள்ளேன். தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி.

இணைப்பு:                                                                     இப்படிக்கு,

1. விலை இரசீதுநகல்                                                                     தங்கள்உண்மையுள்ள,

2. விலைப்பட்டியல்நகல்                                                                 அ அ அ அ அ.

இடம் : சேலம்        

நாள் : 04-03-2024

உறை மேல் முகவரி:

பெறுநர்

        உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

உணவு பாதுகாப்பு ஆணையம்,

சென்னை – 600001.

5

40

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத        

என்னை எழுது என்று

சொன்னது இந்தக் காட்சி

நாய் என் பசியைப் பற்றி எழுது என்றது

சிறுமி என் வறுமையைப் பற்றி எழுது என்றாள்

நான் எழுதுகிறேன் வறுமையிலும்

பிறர் பசிப்போக்குவதே சிறந்தப் பண்பு  என்று

5

41

கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முழுமையாக அனைத்துப் பகுதியினையும் நூலக உறுப்பினர் படிவத்தில் பதிவு செய்து இருப்பின் முழு மதிப்பெண் வழங்குக

5

42அ

பள்ளியில் நான்

வீட்டில் நான்

1.  நேரத்தைச் சரியாகக் கடைபிடிப்பேன்.

1. அதிகாலையில் எழுதல்.

2.  ஆசிரியர் சொல்படி நடப்பேன்.

2.  பெற்றோர் சொல்படி நடப்பேன்.

3. ஆசிரியரிடம் பணிவுடன் நடந்துகொள்வேன்.

3. பெரியவர்களிடம் பணிவுடன் நடந்துகொள்வேன்.

4. நண்பர்களுடன்  கலந்து உரையாடுவேன்.

4. உறவினர்களுடன் கலந்து உரையாடுவேன்.

5. நண்பர்களுக்கு உதவிகள் செய்வேன்.

5. பெற்றோருக்கு உதவிகள் செய்வேன்.

5

42ஆ

பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண் மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை உண்டாக்குகிறது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து ,சுகந்தம் வீசின. காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது.

5

45

செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

1. கோடை

 2. பனிப்பகுதியிலிருந்து வீசுவதால் ஊதைக்காற்று என அழைக்கப்படுகிறது.

 3. குடக்கு

4. வடக்கு  

5. காற்றின் பெயர்கள்

5

பகுதி - 5

43அ

 தமிழ்மொழி சொல் வளமுடையதென்றும், தமிழ்நாடு பொருள் வளமுடையது என்றும் தெளிவாக விளக்குவதற்கு காரணங்களை தொகுத்து எழுத்து எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

( தமிழ் சொல் வளம் – என்ற நெடு வினா விடையும் பொருந்தும் )

8

43ஆ

குறிப்புச்சட்டம்

போராட்டக் கலைஞர்

 பேச்சுக் கலைஞர்

 நாடகக் கலைஞர்

 திரைக் கலைஞர்

இயற்றமிழ்க் கலைஞர்  

முன்னுரை :

        போராட்டக் கலைஞர், பேச்சுக் கலைஞர், நாடகக் கலைஞர், திரைக்கலைஞர், இயற்றமிழ் கலைஞர்  என கலைஞரின் பன்முகத்தன்மையை நாம் இக்கட்டுரையில் காண்போம்.

போராட்டக் கலைஞர் :

Ø  பள்ளி வயதிலியே போராடியவர் கலைஞர்.

Ø  இந்தி திணிப்பை எதிர்த்து போராட மாணவர்களைத் திரட்டி திருவாரூர் வீதிகளில் போராடியவர்.

Ø  “ வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம் “ எனப் பாடலைப் பாடிக்கொண்டே ஊர்வலம் நடத்தினார்.

பேச்சுக் கலைஞர் :

Ø  தந்தை பெரியார், பட்டுக்கோட்டை அழகிரி, அறிஞர் அண்ணா ஆகியோரின் பேச்சாற்றல் கலைஞரைக் கவர்ந்தது.

Ø  மேடைப் பேச்சில் பெருவிருப்பம் கொண்டவர். “ நட்பு “ என்னும் தலைப்பில் கலைஞர் ஆற்றிய சொற்பொழிவை பலரும் பாராட்டினர்

நாடகக் கலைஞர் :

Ø  1944 இல் “பழநியப்பன்“ என்னும் முதல் நாடகத்தை எழுதி அரங்கேற்றினார்.

Ø  சாம்ராட் அசோகன், மணிமகுடம், வெள்ளிக்கிழமை, காகிதப்பூ, தூக்கு மேடை  முதலிய நாடகங்களை எழுதியுள்ளார்.

Ø  தூக்குமேடை நாடகத்தில்  மாணவராக நடித்து “ கலைஞர் “ என்னும் சிறப்பு பட்டம் பெற்றார்.

திரைக் கலைஞர் :

Ø  “ ராஜகுமாரி “ திரைப்படம் மூலம் வசன எழுத்தாளாராக அறிமுகமானார்.

Ø  மருதநாட்டு இளவரசி, நாம், பூம்புகார், மந்திரிகுமாரி போன்ற பல படங்களுக்கு கதை மற்றும் வசனங்களை எழுதியுள்ளார்.

 

இயற்றமிழ் கலைஞர்:

Ø  நளாயினி, சித்தார்த்தன் சிலை, சந்தனக் கிண்ணம், தாய்மை, புகழேந்தி முதலிய சிறுகதைகள் எழுதியுள்ளார்.

Ø  ரோமாபுரி பாண்டியன், பொன்னர் சங்கர், தென்பாண்டி சிங்கம் உள்ளிட்ட புதினங்களையும் எழுதியுள்ளார்.

Ø  தொல்காப்பிய பூங்கா, குறளோவியம் முதலிய தமிழ் இலக்கிய நூல்களையும் எழுதி தம் இயற்றமிழ் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.

முடிவுரை :

        அரசியல் மட்டுமன்றி, கலைத்துறை, பேச்சுக்கலை, பட்டிமன்றம், கவியரங்கம் என பலத்துறைகளிலும் தன்னுடைய பன்முக ஆற்றலை வெளிப்படுத்தி பல்துறை வித்தகராக விளங்கினார் கலைஞர்.

 

44அ

குறிப்புச் சட்டம்

முன்னுரை

தேசாந்திரி

கருணை அன்னமய்யா

முடிவுரை

முன்னுரை :

        பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற மனித நேயம் விருந்தோம்பல்.இக்கட்டுரையில் கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பலைக் காணலாம்.

தேசாந்திரி:

Ø  சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி.

Ø  அன்னமய்யாவுடன் ஒரு ஆள் வந்தான்.

Ø  அவன் மிக சோர்வாக இருந்தான்.

Ø  லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான்.

Ø  குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது.

Ø  வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான்.

கருணை அன்னமய்யா:

Ø  அவன் பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும் கூறினான்.

Ø  அன்னமய்யா ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும், துவையலும் வைத்துக் கொடுத்தார்.

Ø  கடுமையான பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி உறங்கினான்.

Ø  ஆனந்த உறக்கம் கண்டான்.

முடிவுரை:

        பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது.

8

44ஆ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

மேரி

அவமானம்

புதிய நம்பிக்கை

கல்வி

உதவிக்கரம்

மேல்படிப்பு

முடிவுரை

முன்னுரை :

        மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மேரி :

·         சாம் – பாட்ஸி இணையருக்கு மகளாகப் பிறந்தவள் மேரி.

·         பருத்திக்காட்டில் வேலை செய்து தங்கள் குடும்பத்தை நடத்துகிறார்கள்.

அவமானம் :

·         மேரி பாட்ஸியுடன் பென்வில்ஸன் வீட்டிற்கு செல்கிறார்கள்.

·         மேரி அந்த வீட்டின் அலமாரியிலிருந்த புத்தகத்தை எடுக்கிறாள்.

·         பென்வில்ஸன் இளையமகள் அவளிடமிருந்து புத்தகத்தை பிடிங்கினாள்.

·         உனக்கு படிக்கத் தெரியாது என கூறினாள்.

·         மேரி மனம் துவண்டாள்.

புதிய நம்பிக்கை

·         மேரிக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உணடானது.

·         ஒரு நாள் மிஸ் வில்ஸன் என்பவர் “ உன் போன்ற குழந்தைகள் படிக்க வேண்டும். நீ சீக்கிரமாக மேயெஸ் வில்லிக்கு வர வேன்டும்.

·         மேரிக்கு புதிய நம்பிக்கை பிறந்தது.

கல்வி

·         மேரி ஐந்து மைல்கள் நடந்து சென்று கல்வி கற்றாள்.

·         சில வருடங்கள் கழித்து மேரிக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

·         அதில் “ இந்த பட்டம் பெறும் மாணவர் எழுதவும் படிக்கவும் கூடியவர் “ என எழுதப்பட்டிருந்தது.

உதவிக்கரம்

·         மிஸ்வில்சன் மூலம் மேரிக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி

·         அவளின் மேல்படிப்பு செலவுக்காக மேற்குப் பகுதியில் வாழ்கின்ற வெள்ளைக்கார பெண் மணி பணம் அனுப்பி இருக்கிறார்.

·         அவள் மேல் படிப்புக்காக டவுணுக்கு செல்கிறாள்.

மேல்படிப்பு

·         மேரியை மேல்படிப்பு படிப்பதற்காக இரயில் நிலையத்தில் அவளது கிராமமே வழியனுப்ப திரண்டு வந்தது.

·         மிஸ் வில்ஸனும் இரயில் நிலையத்தில் வந்தார்கள்.

முடிவுரை

        எப்படிப்பட்ட நிலையிலும் கல்வி நம்மை உயர்த்தும் என்பதற்கு மேரியின் வாழ்க்கையை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். மேரியிடமிருந்து பறிக்கப்பட்டப் புத்தகம் அவள் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றியது என்பதனை இக்கட்டுரை வழியாகக் கண்டோம்.

8

45அ

சான்றோர் வளர்த்த தமிழ்

குறிப்புச்சட்டகம்

முன்னுரை

தமிழின் தொன்மை

சான்றோர்களின் தமிழ்ப்பணி

தமிழின் சிறப்பு

முடிவுரை

முன்னுரை:

        குமரிக்கடல் முனையையும், வேங்கட மலைமுகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவ திருநாட்டிற்குப் புகழ்தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும்.எழில்சேர் கன்னியாய் என்றும்திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத்தமிழ் பேசி,சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி அழகூட்டி அகம் மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள். இக்கருத்தைக் கருவாகக்கொண்டு சான்றோர் வளர்த்த தமிழ் என்ற தலைப்பில் இக்கட்டுரையில் நாம் காண்போம்.

தமிழின் தொன்மை:

Ø  தமிழின் தொன்மையைக் கருதி கம்பர் என்றுமுள தென்தமிழ் என்றார்.

Ø  கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ்.

சான்றோர்களின் தமிழ்ப்பணி:

Ø  ஆங்கில மொழியை தாய் மொழியாகக் கொண்ட ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்து உலகறியச் செய்தார்.

Ø  வீரமாமுனிவர் தமிழில் முதல் சதுரகராதி வெளியிட்டார்.

Ø  தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதன் அவர்கள் ஓலைச்சுவடியிலிருந்த பல தமிழ் நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்.

தமிழின் சிறப்புகள்:

Ø  தமிழ் இனிமையான மொழி. பல இலக்கிய, இலக்கணங்களைக் கொண்ட மொழி.

Ø  இயல்,இசை,நாடகம் என முத்தமிழ் உடையது.

Ø  தமிழ் மூன்று சங்கங்களைக் கண்டு வளர்ந்தது.

முடிவுரை:

        குமரிக்கடல் முனையையும், வேங்கட மலை முகட்டையும் எல்லையாகக் கொண்ட தென்னவ திருநாட்டிற்குப் புகழ்தேடித்தந்த பெருமை, தகைசால் தமிழன்னையைச் சாரும்.எழில்சேர் கன்னியாய் என்றும் திகழும் அவ்வன்னைக்கு, பிள்ளைத்தமிழ் பேசி,சதகம் சமைத்து, பரணி பாடி, கலம்பகம் கண்டு, உலாவந்து, அந்தாதி கூறி, கோவை யாத்து, அணியாகப் பூட்டி அழகூட்டி அகம் மகிழ்ந்தனர் செந்நாப் புலவர்கள். இக்கருத்தைக் கருவாகக்கொண்டு சான்றோர் வளர்த்த தமிழ் என்ற தலைப்பில் இக்கட்டுரையில் நாம் கண்டோம்.

8

45ஆ

குறிப்புச் சட்டம்

முன்னுரை

பிறப்பும்,கல்வியும்

விண்வெளிப் பயணம்

இறப்பு

விருது

முடிவுரை

முன்னுரை :

        விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய பெண் வீராங்கனை கல்பனா சாவ்லா குறித்து நாம் இக்கட்டுரையில் காணலாம்.

பிறப்பும், கல்வியும் :

பிறப்பு : இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் கர்னலில் ஜூலை 1,1961 இல் பிறந்தார்.

          பெற்றோர் : பனாரஸ்லால் - சன்யோகிதா தேவி

கல்வி :       கர்னலில் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியல் துறையில் இளங்கலைப் பட்டம்

·         டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம்.

·         . 1986-ஆம் ஆண்டு கொலராடோ பல்கலைக் கழகத்தில் 2-ஆவது முதுகலைப்பட்டம்.   

·         பிறகு 1988-ஆம் ஆண்டு விண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

விண்வெளிப் பயணம்:

·         1995 இல் நாசா விண்வெளி வீரர் பயிற்சியில் இணைந்து கொலம்பிய விண்வெளி ஊர்தி எஸ்,டி,எஸ்-87 இல் பயணம் செய்தார்,

·         சுமார் 372 மணிநேரம் விண்வெளியில் இருந்து சாதனையுடன் பூமி திரும்பினார்.

வீர மரணம் :

·         2003இல் ஜனவரி 16 ந் தேதி அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பிய விண்கலம் எஸ்.டி.எஸ் 107 இல மீண்டும் பயணம் செய்தார்.

·         அந்த விண்கலம் ஆய்வை முடித்து திரும்பிய போது பிப்ரவரி -1 இல் டெக்சாஸ் வான்வெளியில் வெடித்துச் சிதறியதில் கல்பனா சாவ்லாவுடன் உடன் பயணித்த 7 வீரர்களும் மரணமடைந்தனர்

விருது:

·         நியூயார்க் நகரின் ஒரு சாலைக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

·         பிப்ரவரி 1ந் தேதி கல்பனா சால்வலா நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

·         2011 முதல் வீரதீர சாதனைப் புரிந்த பெண்களுக்கு “ கல்பனா சாவ்லா விருது “ அரசு வழங்கி வருகிறது.

முடிவுரை:

        மாணவர்களாகிய நாமும் இவரைப் போன்றவர்களை உதாரணமாகக் கொண்டு விடாமுயற்சியுடன் படித்தால் அனைத்தையும் சாதிக்கமுடியும்.

 

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, வளையசெட்டிப்பட்டி

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.

சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

KINDLY WAIT FOR 10 SECONDS


 

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post