10TH-QUATERLY EXAM-2024-TAMIL-ANSWER KEY-PDF-KRISHNAGIRI

 

 தஞ்சாவூர் – காலாண்டுத் தேர்வு  -2024

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  3.15 மணி                                                                             மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

அ) வணிக கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

1

2.

இ. அன்மொழித் தொகை

1

3.

ஈ) வானத்தையும் பேரொலியையும்

1

4.

ஈ) இலா

1

5.

அ) அருமை + துணை

1

6.

ஆ) நற்றிணை

1

7.

இ) காடு

1

8.

அ) 105     

1

9.

ஆ) தளரப் பிணைத்தால்

1

10.

இ) பாசப் பறவைகள்

1

11.

இ. அறியா வினா, சுட்டு விடை

1

12 .

இ. மலைபடுகடாம்

1

13 .

ஆ. அன்று,கன்று

1

14 .

இ. சொல்லிசை அளபெடை   

1

15

அ. சிற்றூர்

1

பகுதி - 2

16

பொருத்தமான விடை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக.

1

1

17.

·         வசனம் + கவிதை = வசன கவிதை.

·         உரைநடையும்,கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை.

2

18.

மாமிசத்தையும்தினைச் சோற்றையும்  உணவாகப் பெறுவீர்கள்.

2

19

1. கண்காணிப்பு கருவிகள் ( மறைக்காணி )     2. நவீன திறன்பேசி

2

20

நிலம், நீர், காற்று, வானம், நெருப்பு எனும் ஐம்பெரும் பூதங்கள்

2

21.

அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்

   பெருமை முயற்சி தரும்

2

பிரிவு - 2

22

உவகைக் காரணமாக சிரித்துச்சிரித்துப் பேசினார்.

1

1

23

உறுதித்தன்மை நோக்கி சொல்லப்பட்டதால் கால வழுவமைதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1

1

24.

அமர்ந்தான் – அமர் + த்(ந்)+த்+ ஆன்

அமர் – பகுதி

த்(ந்) – சந்தி

ந் – ஆனது விகாரம்

த் – இறந்த கால இடைநிலை

ஆன் – ஆண்பால் வினை முற்று விகுதி

2

25

தாழைப் பூச்செடியைப் பார்த்தவாறே பரதவர் கடலுக்குச் சென்றனர்.

1

1

26

அ. ஊட்டமிகு உணவு உண்டவர் நீண்ட வாழ்நாள் பெற்றார்.         

ஆ. நேற்று என்னைச் சந்தித்தவர் என் நண்பர்.

1

1

27

அ. நான்கு  ௪       ஆ. எட்டு - 

1

1

28

அ. நிழல் தரும் மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

ஆ) ஒழுக்கமான கல்வியே ஒருவருக்கு உயர்வு தரும்

1

1

28

செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா

அ. கற்கூட்டம்                ஆ. பழக்குலை

2

பகுதி – 3

29

Ø  காட்டில் பனைவடலி நடப்பட்டது

Ø  தோட்டத்தில் மாங்கன்று நடப்பட்டது.

Ø  சோளப் பைங்கூழ் வளர்ந்து வருகிறது

Ø  புளியங்கன்று சாலை ஓரத்தில் வளர்ந்து வருகிறது.

Ø  தோட்டத்தில் தென்னம்பிள்ளை வளர்த்தேன்

3

30

அ. அக்டோபர் முதல் டிசம்பர்    ஆ. வேளாண்மை       இ. எழுபது

3

31

·         கல்வித்துறையை பள்ளிக்கல்வி, உயர்கல்வி என இரண்டாகப் பிரித்தார்.

·         “ தமிழ் வளர்ச்சித் துறை “ எனப் புதியதாக ஒரு துறையை உருவாக்கினார்.

·         தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை அனைத்து அரசு விழாக்களிலும் தொடக்கப் பாடலாக பாடச் செய்தார்.

·         2010 இல் கோவையில் “ உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை “ நடத்தி தமிழின் பெருமையை உலகறியச் செய்தார்.

3

பகுதி -3 / பிரிவு - 2

32

தமிழ்

கடல்

1. முத்தமிழாக வளர்ந்தது.

1. முத்தினைத் தருகிறது.

2. முச்சங்களால் வளர்க்கப்பட்டது.

2. மூன்று சங்குகளைத் தருகிறது.

3. ஐம்பெருங்காப்பியங்கள்.

3. பெரும் வணிகக் கப்பல்.

4. சங்கப் புலவர்களால் காக்கப்பட்டது.

4. சங்கினைத் தடுத்து காக்கிறது.

3

33

மருத்துவர் கத்தியால் அறுத்துச் சுட்டாலும் அது நன்மைக்கே என நோயாளி மருத்துவரை நேசிப்பார்அதுபோல நீங்காத துன்பத்தை எனக்குத் தந்தாலும் உன் அருளையே எதிர்பார்த்து வாழ்கிறேன் என்பது உவமை சுட்டும் செய்தி.

3

34

வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா! நீ

ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே.     குலசேகராழ்வார்

3

34

காசிக்காண்டம்

விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்

வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்

திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்

          எழுதல் முன் மகிழ்வன செப்பல்

பொருந்து மற்றுஅவன் தன்அருகுற இருத்தல்

          போமெனில் பின் செல்வதாதல்

பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்

          ஒழுக்கமும் வழிபடும் பண்பே      - அதிவீரராம பாண்டியர்

 

பகுதி – 3 / பிரிவு - 3

35

மல்லிகைப்பூ

இருபெயரொட்டுப் பண்புத்தொகை

மல்லிகையான பூ

பூங்கொடி

உவமைத் தொகை

பூப் போன்ற கொடி

ஆடுமாடு

உம்மைத் தொகை

ஆடும்,மாடும்

தண்ணீர்த் தொட்டி

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

தண்ணீரை உடையத் தொட்டி

குடிநீர்

வினைத்தொகை

குடித்தநீர்குடிக்கின்ற நீர்,குடிக்கும் நீர்

சுவர்க்கடிகாரம்

ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

சுவரின் கண் கடிகாரம்

மணி பார்த்தாள்

இரண்டாம் வேற்றுமைத் தொகை

மணியைப் பார்த்தாள்

3

36

Ø  ஆற்றுநீர் பொருள்கோள்

Ø  விளக்கம் : பாடலின் தொடக்கம் முதல் இறுதி வரை நேராக பொருள் கொள்ளுமாறு அமைவது.

பொருத்தம் : முயற்சி ஒருவனுக்கு செல்வத்தைப் பெருக்கும்முயற்சி இல்லாதிருந்தால் வறுமை சேரும்இக்குறள் தொடக்கம் முதல் இறுதி வரை நேராக பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளது

3

37

இலக்கணம்: இயல்பாக நிகழும் நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிக்கூறுதல்.

.கா:

தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால்

..................................................................................

................... கூவினவே கோழிக் குலம்.

விளக்கம்:

அதிகாலை விடிந்து கோழிகளும் இயல்பாக கூவும்.ஆனால் புலவர் தமயந்தியின் துயர் கண்டே கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாகக் கூறுகிறார்.

3

பகுதி - 4

38

v  அவன் திருவடிகளில் அணிந்த பொன்னாலாகிய கிண்கிணிகளோடு சிலம்புகளும் சேர்ந்து ஆடுகின்றன.

v  இடையில் அரைஞாண் மணியோடு ஒளி வீசுகின்ற அரைவடங்கள் ஆடுகின்றன.

v  நெற்றியில் சுட்டிப் பதிந்தாடுகின்றன.

v  காதுகளில் குண்டலமும்குழையும் அசைந்தாடுகின்றன.

5

38ஆ

·         அன்னை மொழியானவள்

·         அழகான செந்தமிழானவள்

·         பழமைக்கு பழமையாய் தோன்றிய நறுங்கனி

·         பாண்டியன் மகள்

·         திருக்குறளின் பெருமைக்கு உரியவள்

·         பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,பதினெண் கீழ்கணக்குஐம்பெரும் காப்பியங்களையும் கொண்டவள்

5

39அ

சேலம்

03-03-2024

அன்புள்ள நண்பனுக்கு,

          நான் நலம்நீ அங்கு நலமாஎன அறிய ஆவல்மாநில அளவில் நடைபெற்ற ” மரம் இயற்கையின் வரம் “ என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியில் நீ முதல் பரிசு பெற்றது மிக மகிழ்ச்சியாக உள்ளதுமனமார வாழ்த்துகிறேன்நீ இன்னும் பல பரிசுகள் பெற வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,

உன் அன்பு நண்பன்,

அ அ அ அ அ அ அ .

உறைமேல் முகவரி;

        பெறுதல்

                   திரு.இரா.இளங்கோ,

                   100,பாரதி தெரு,  சேலம்.

 

5

39ஆ

அனுப்புநர்

          அ அ அ அ அ,

          100,பாரதி தெரு,

          சக்தி நகர்,

          சேலம் – 636006.

பெறுநர்

          உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

          உணவு பாதுகாப்பு ஆணையம்,

          சென்னை – 600001

ஐயா,

பொருள்தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதி மீது நடவடிக்கை எடுக்க   

               வேண்டுதல் – சார்பு

        வணக்கம்நான் நேற்று சேலத்தில் அன்பு உணவகத்தில் கோழி பிரியாணி உண்டேன்அது கெட்டுப் போனதாகவும் மேலும் அதன் விலைப்பட்டியலைவிட விலைக் கூடுதலாகவும் இருந்ததுஇத்துடன் அந்த உணவிற்கான விலை இரசீது நகல் மற்றும் உணவு பட்டியல் நகலையும் இணைத்துள்ளேன்தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி.

இணைப்பு:                                                                     இப்படிக்கு,

1. விலை இரசீது – நகல்                                                                     தங்கள்உண்மையுள்ள,

2. விலைப்பட்டியல்நகல்                                                                 அ அ அ அ அ.

இடம் : சேலம்        

நாள் : 04-03-2024

உறை மேல் முகவரி:

பெறுநர்

        உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

உணவு பாதுகாப்பு ஆணையம்,

சென்னை – 600001.

5

40

ஏடு எடுத்தேன் கவி ஒன்று எழுத        

 என்னை எழுது என்று

சொன்னது இந்தக் காட்சி

திறன்பேசி என் ஆளுமையைப் பற்றி எழுது என்றது

மனிதன் என் அடிமைத்தனத்தை பற்றி எழுது என்றான்

 நான் எழுதுகிறேன் திறன்பேசிக்கு

அடிமையாகாதே என்று

 

5

41

கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முழுமையாக அனைத்துப் பகுதியினையும் நூலக உறுப்பினர் படிவத்தில் பதிவு செய்து இருப்பின் முழு மதிப்பெண் வழங்குக

5

42அ

1.       தேவையான உணவுப்பொருட்களைப் பாதுகாப்பான இடத்தில் வைத்துக்கொள்வேன்.

2.     குடிநீரைச் சேமித்து வைத்துக்கொள்வேன்.

3.     உணவைச் சிக்கனமாக பயன்படுத்துவேன்.

4.     நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவேன்.

5.   வானொலியில் தரும் தகவல்களைக் கேட்டுஅதன்படி நடப்பேன்

5

42ஆ

மரியாதைக்குரியவர்களே! என் பெயர் இளங்கோவன்நான் பத்தாம் வகுப்பு படிக்கிறேன்நான் தமிழ் பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகளைக் கூறுகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பண்பாட்டிலும்நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க இலக்கியம் கூறுகிறதுமொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள் வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர்தமிழர்களின் பண்பாடு இந்தியா, ஸ்ரீலங்கா, மலேசியாசிங்கப்பூர்இங்கிலாந்து மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தில் வேரூன்றி உள்ளதுநம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில் மேம்படுத்தி உள்ளதுநாம் நம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும்எல்லோருக்கும் நன்றி

5

45

செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

1. மீண்டும் மீண்டும்

 2. தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. 

 3. பெய்மழை

4. நீருக்கும் ஆற்றல் உண்டு  

5. ஐம்பூதங்கள்

5

பகுதி - 5

43அ

“ பிறந்து சிறந்த மொழிகளிலே

      சிறந்தே பிறந்தது தமிழ் மொழி “

 என்பதற்கிணங்க  மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலையும்பெருஞ்சித்திரனார் தமிழ் வாழ்த்தினையும் ஒப்பிட்டு பேச உங்கள் முன் நிற்கிறேன்.

மனோன்மணீயம் சுந்தரனார் வாழ்த்து :

·                தமிழ் அன்னை கடலை ஆடையாக அணிந்துள்ளாள். அவளின் முகமாக நமது பாரத கண்டம் திகழ்கிறது.

·                அவளின் நெற்றியாக தக்காணம் அழகு சேர்கிறது.

·                அந்த நெற்றியில் நறுமணம் மிக்க குங்குமம் வைத்தாற் போல அவளை மேலும் அழகுற செய்கிறது தமிழ்நாடு.

·                குங்கும பொட்டின் மணம் அனைவரையும் இன்புறச் செய்கிறது. அது போல தமிழ்அன்னை எல்லாத் திசைகளிலும் புகழ் பெற்றவளாக திகழ்கிறாள்.

·                உலகின் மூத்த மொழியாக உள்ள தமிழ் அன்னை என்றும் இளமையாக திகழ்கிறாள்.

·                தமிழன்னையின் வளம் என்றும் குறையாமல் பெருகுகின்றதை எண்ணியும்உன் இளமை என்றுமே நிலைத்திருக்கும்படி சுந்தரனார் வாழ்த்துகிறார்.

பெருஞ்சித்திரனார் வாழ்த்து :

·                தமிழன்னை செந்தமிழானவள். பழமையின் நறுங்கனியே

·                குமரிக் கண்டத்தில் நிலையாக இருந்த மண்ணுலக பேரரசியே!

·                பாண்டியன் மகளாக திகழ்பவளே

·                திருக்குறளின் மாண்புகளே! பத்துப்பாட்டே! எட்டுத்தொகையே!

·                பதினெண்கீழ்க்கணக்கே! நிலையான சிலப்பதிகாரமே!

·                அழகான மணிமேகலையே

·                இத்தகைய நினைவுகளால் தலை பணிந்து உன்னை வாழ்த்துகிறோம். என பெருஞ்சித்திரனார் வாழ்த்துகிறார்.

ஓப்பீடு ( சுருக்கம் ) :

சுந்தரனார் வாழ்த்து

பெருஞ்சித்திரனார் வாழ்த்து

கடலெனும் ஆடை உடுத்திய நிலமகளுக்கு முகம் பாரத கண்டம்

மண்ணுலகப் பேரரசியாக திகழ்பவள்

நெற்றியில் மணம் வீசும் திலகமாக தமிழ்நாடு

சங்க இலக்கியங்கள் அணிகலன்களாக உள்ளது.

எல்லா திசைகளில் உன் புகழ்

தும்பி போல உன்னை சுவைத்து உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம்

8

43ஆ

குறிப்புச் சட்டம்

உறவினர்

வருகை

வரவேற்பு

விருந்து உபசரிப்பு

நகர் வலம்

இரவு விருந்து

பிரியா விடை

முடிவுரை

உறவினர் :

        நீண்ட நாட்களாக நாங்கள் பார்க்க எண்ணிய எங்கள் சித்தப்பாவின் குடும்பம் எங்கள் ஊர் மாரியம்மன் பண்டிகைக்கு ஊருக்கு வருவதாக அறிந்த நாங்கள் மிக மகிழ்ச்சி அடைந்தோம். அவர்களின் வருகையை நானும், என் குடும்ப உறுப்பினர் அனைவரும் மிகுந்த ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருந்தோம்.

வருகை:

        எங்கள் ஊரின் மாரியம்மன் பண்டிகையும் வந்தது. எங்கள் சித்தப்பாவும்அவர்களின் குடும்பமும் காலைப் பொழுதிலேயே வந்தார்கள். அவர்கள் வீட்டிற்கு வந்ததிலிருந்து அவர்கள் ஊருக்கு திரும்பி செல்லும் வரை நாங்கள் அவர்களை உபசரித்து அளித்த விதத்தை காணலாம்.

வரவேற்பு :

·         என் இல்லத்திற்கு வந்த உறவினர்களை வருகவருக என மகிழ்ச்சியாக வரவேற்றோம்.

·         அவர்களை மிகவும் அன்போடும்மகிழ்ச்சியோடும் வீட்டிற்குள் வருக எனக் கூறினோம்.

·         அவர்கள் அமர்வதற்கு இருக்கையை சுத்தப்படுத்திக் கொடுத்தோம்..

·         நீண்ட தூரம் பயணம் மேற்கொண்டதில் களைப்பு இருக்கும். ஆகையால் அவர்களை அமரவைத்து மின் விசிறியை சுழல விட்டோம்.

·         வந்தவர்களுக்கு முதலில் நீர் அருந்தத் தந்தோம்.

விசாரிப்பு :

·         உறவினர்களையும்அவர்களின் குடும்ப நலனையும் விசாரித்தோம்.

·         அவர்தம் தொழில்குழந்தைகளின் படிப்புகள் ஆகியவற்றிலும் அக்கறையுடன் உரையாடினோம்.

·         அவர்களின் வருகை எங்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளித்தது.

·         அடுத்ததாக அவர்களின் பசியினைப் போக்க அறுசுவை உணவினை தயார் செய்ய ஆயத்தமானோம்.

விருந்து உபசரிப்பு :

·         வந்தவர்களுக்கு கறியும், மீனும் வாங்கி வந்தோம்.

·         மாமிச உணவை வாழை இலையில் பரிமாறினோம்.

·         அவர்கள் உண்ணும் வரை அருகில் இருந்து அவர்களுக்குத் தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்து கவனித்தோம்.

·         உணவு பரிமாறும் விதத்தை அறிந்து உறவினர்களுக்கு அறுசுவை உணவு பரிமாறினோம்.

நகர்வலம் :

·         விருந்து முடித்து, எங்கள் ஊரின் சிறப்புகளைக் கூறினோம்

·         ஊரின் சிறப்புமிக்க இடங்களுக்குச் சென்று அவற்றை உறவினர்களோடு கண்டு களித்தோம்.

·         ஊரில் மாரியம்மன் பண்டிக்கை கொண்டாடும் விதம் மற்றும் பழக்கத்தை உறவினர்களுக்கு எடுத்துக் கூறினோம்.

இரவு விருந்து :

·         நகர்வலம் முடித்து, இரவு விருந்துக்குத் தேவையானவற்றை செய்தோம்.

·         இரவில் இரவு நேரத்திற்கு ஏற்ற உணவுகளை விருந்து படைத்தோம்.

·         உணவு உண்ட பின் எங்கள் ஊர் பற்றி அவர்கள் நினைப்பதைப் பற்றியும்இதே போன்று அவர்களின் ஊரில் உள்ள சிறப்பு மிகு இடங்களின் பெருமைகளையும் கேட்டு கலந்துரையாடினோம்.

பிரியா விடை :

·         இரவு விருந்து முடித்து அவர்கள் தங்கள் ஊருக்குச்  செல்வதாகக் கூறினர்.

·         அவர்களின் வருகை எவ்வளவு மகிழ்ச்சி அளித்ததோ அந்தளவு வருத்தம் அடைந்தது மனம். அவர்களின் பிரிவினை மனம் ஏற்க சற்று கால அவகாசம் எடுத்துக் கொண்டது.

·         அடுத்த முறை பள்ளி விடுமுறை நாளில் நாங்களும் வந்து உறவுகளை புதுப்பித்துக் கொள்கிறோம் எனக் கூறினோம்.

·         எங்களுக்கு  பிரிய மனமில்லாமல் அவர்கள் கூடவே பேருந்து நிறுத்தம் வரை சென்று வழி அனுப்பிவிட்டு வந்தோம்.

முடிவுரை :

        இன்றைய காலச் சூழ்நிலையில் உறவுகள் தனித்தனியாக வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது. வேலை பளுவும் ஒருவருக்கொருவரை அன்பு பாராட்ட மறுக்கிறது. இந்த உலகில் பிறந்த அனைவரும் ஏதேனும் ஒரு அன்பு உறவால் இணைக்கப்பட்டுகிறது. அந்த உறவுகளை மதித்துஅவர்களுக்கு காசிக்காண்டம் கூறிய வழிகளைப் பின்பற்றி விருந்தோம்பலை மேற்கொண்ட விதம் எங்களுக்கு மன நிறைவை தருகிறது.

 

44அ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

ஸ்டீபன் ஹாக்கிங்

பேரண்டம்

கருந்துளைகள்

கருந்துளை கோட்பாடுகள்

தலைவிதி

திரும்புதல்

முடிவுரை

முன்னுரை :

          அறிவியலின் வளர்ச்சி மனிதனின் அறிவை விரிவாக்குகிறது. ஐயங்களை நீக்குகிறது. தவறான புரிதல்களை நீக்குகிறது. எண்ணங்களை மாற்றுகிறது. அறிவியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் என்பவருடன் விண்வெளிப் பயணம் செய்தஅனுபவத்தையும்கிடைத்த கருத்தையும் இக்கட்டுரை வாயிலாகக் காணலாம்.

ஸ்டீபன் ஹாக்கிங்

        இங்கிலாந்து மருத்துவமனை ஒன்றில் 1963இல் பக்கவாதம் என்னும் நரம்பு நோய் பாதிப்புடன் 21 வயது இளைஞர் அனுமதிக்கப்பட்டார். இவர் இன்னும் சில திங்களே உயிரோடு இருப்பார் என கூறிய மருத்துவ உலகத்திற்கு மிரண்டு போகுமளவு 53 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். அவர்தான் தற்காலத்தின் ஐன்ஸ்டைன் என புகழப்படும் ஸ்டீபன் ஹாக்கிங். அவருடன் நாங்கள் விண்வெளி பயணம் மேற்கொள்வது ஓர் அரிய வாய்ப்பு.

பேரண்டம் :

        ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களுடன் விண்வெளிக்கு செல்ல தயாரான விமானத்தில் ஏறினோம். பூமியை விட்டு அண்டப் பகுதிக்கு செல்லுகையில்இப்பேரண்டம் பெருவெடிப்பினால் உருவானது என்பதற்கானச் சான்றுகளைக் கணிதவியல் அடிப்படையில் எங்களுக்கு விளக்கினார். “ பிரபஞ்சத்தை இயக்கும் ஆற்றலாகக் கடவுள் என்ற ஒருவரைக் கட்டமைக்க வேண்டியதில்லை”  என்றார்.

விண்மீன்கள்:

        நமது பால்வீதியில் கோடிக்கணக்கான விண்மீன்கள் ஒளிர்கின்றன. அவற்றுள் ஞாயிறும் ஒரு விண்மீன். ஒரு விண்மீன் ஆயுள் கால முடிவில் உள்நோக்கிய ஈர்ப்பு விசை கூடுகிறது. அதனால் விண்மீன் சுருங்கத் தொடங்குகிறது. இதனால் அதன் ஈர்ப்பாற்றல் உயர்ந்து கொண்டே செல்கிறது என விளக்கினார்.

கருந்துளைகள்:

        “ சில நேரங்களில் உண்மை புனைவை விடவும் வியப்பூட்டுவதாக அமைந்து விடுகிறது. அப்படி ஓர் உண்மைதான் கருத்துளைகள் பற்றியதும்” என்றார். அமெரிக்க அறிவியலாளர் ஜான் வீலர் என்பவர் ,” விண்மீனின் ஈர்ப்பெல்லைக்குள் செல்கிற எதுவும்ஒளி கூடத் தப்ப முடியாது. இவ்வாறு உள்ளே சென்ற யாவையும் வெளிவர முடியாததால் இதனை கருந்துளை என்றார்.” என்பதனை ஹாக்கிங் எங்களுக்கு விளக்கினார்.

கருந்துளை கோட்பாடுகள் :

        ஸ்டீபன் ஹாக்கிங் உடன் விண்வெளி பயணம் மிகவும் பயனுள்ளதாகவும் அதே சமயம் ஆச்சரியமூட்டுவதாகவும் அமைந்தது. அவர் கருந்துளைப் பற்றி மேலும் எங்களுக்கு விளக்கினார்.

Ø  கருந்துளையினுள் செல்லும் எந்த ஒன்றும் தப்பித்து வெளியே வரமுடியாது.

Ø  கருந்துளையின் ஈர்ப்பு எல்லையிலிருந்து கதிர்வீச்சுகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

Ø  கருந்துளை உண்மையிலேயே கருப்பாக இருப்பதில்லை.

Ø  ஒரு கட்டத்தில் கதிர்வீச்சும்அணுத்துகள்களும் கசியத் தொடங்கி இறுதியில் கருந்துளை வெடித்துவிடும்.

தலைவிதி :

        இன்று உங்களுடன் நாங்கள் பேசுவது மட்டும் இல்லாமல் உங்களோடு விண்வெளியில் பயணம் செய்வது என்பது எங்கள் பாக்கியம். என் நண்பனை அழைத்தும் அவன் வர இயலவில்லை. அது அவன் தலைவிதி என்றேன். அதற்கு அவர்“ தலைவிதி ஒன்று இல்லை. தலைவிதி தான் நம்மை தீர்மானிக்கிறது என்றால் சாலையைக் கடக்கும் போது ஏன் இருபுறமும் பார்த்துக் கடக்கிறீர்கள்?எனக் கேட்டு எங்களைச் சிந்திக்க வைத்தார்.

திரும்புதல் :

        ஹாக்கிங் அவர்களுடன் விண்வெளிப் பயணம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அண்டப்பகுதிகளின் காட்சிகளும்அதற்கு அவர் தம் விளக்கங்களும் எங்கள் வாழ்வில் என்றும் மறக்க இயலாது. பல்வேறு விதமான நிகழ்வுகளைக் கண்டும் அவற்றை அறிந்தும் பூமியை வந்தடைந்தோம்.

முடிவுரை :

         ஸ்டீபன் ஹாக்கிங் வியத்தக்க மனிதர் மட்டுமல்ல. சமூக உளவியல் அடிப்படையிலும் தன்னம்பிக்கையின் சிகரமாக விளங்கியவர். அறிவுத் தேடலில் உடல்உள்ளத் தடைகளைத் தகர்த்த மாமேதை ஸ்டீபன் ஹாக்கிங். ஸ்டீபன் ஹாக்கிங் அவர்களுடன் விண்வெளிப் பயணம் செய்து விண்வெளியைப் பற்றி அறிந்துகொள்ள ஒரு அரிய வாய்ப்பாக எங்களுக்கு அமைந்தது.

8

44ஆ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

மேரி

அவமானம்

புதிய நம்பிக்கை

கல்வி

உதவிக்கரம்

மேல்படிப்பு

முடிவுரை

முன்னுரை :

        மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றிய கதையைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

மேரி :

·         சாம் – பாட்ஸி இணையருக்கு மகளாகப் பிறந்தவள் மேரி.

·         பருத்திக்காட்டில் வேலை செய்து தங்கள் குடும்பத்தை நடத்துகிறார்கள்.

அவமானம் :

·         மேரி பாட்ஸியுடன் பென்வில்ஸன் வீட்டிற்கு செல்கிறார்கள்.

·         மேரி அந்த வீட்டின் அலமாரியிலிருந்த புத்தகத்தை எடுக்கிறாள்.

·         பென்வில்ஸன் இளையமகள் அவளிடமிருந்து புத்தகத்தை பிடிங்கினாள்.

·         உனக்கு படிக்கத் தெரியாது என கூறினாள்.

·         மேரி மனம் துவண்டாள்.

புதிய நம்பிக்கை

·         மேரிக்கு படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உணடானது.

·         ஒரு நாள் மிஸ் வில்ஸன் என்பவர் “ உன் போன்ற குழந்தைகள் படிக்க வேண்டும். நீ சீக்கிரமாக மேயெஸ் வில்லிக்கு வர வேன்டும்.

·         மேரிக்கு புதிய நம்பிக்கை பிறந்தது.

கல்வி

·         மேரி ஐந்து மைல்கள் நடந்து சென்று கல்வி கற்றாள்.

·         சில வருடங்கள் கழித்து மேரிக்கு பட்டமளிப்பு விழா நடந்தது.

·         அதில் “ இந்த பட்டம் பெறும் மாணவர் எழுதவும் படிக்கவும் கூடியவர் “ என எழுதப்பட்டிருந்தது.

உதவிக்கரம்

·         மிஸ்வில்சன் மூலம் மேரிக்கு மீண்டும் ஒரு நல்ல செய்தி

·         அவளின் மேல்படிப்பு செலவுக்காக மேற்குப் பகுதியில் வாழ்கின்ற வெள்ளைக்கார பெண் மணி பணம் அனுப்பி இருக்கிறார்.

·         அவள் மேல் படிப்புக்காக டவுணுக்கு செல்கிறாள்.

மேல்படிப்பு

·         மேரியை மேல்படிப்பு படிப்பதற்காக இரயில் நிலையத்தில் அவளது கிராமமே வழியனுப்ப திரண்டு வந்தது.

·         மிஸ் வில்ஸனும் இரயில் நிலையத்தில் வந்தார்கள்.

முடிவுரை

        எப்படிப்பட்ட நிலையிலும் கல்வி நம்மை உயர்த்தும் என்பதற்கு மேரியின் வாழ்க்கையை நாம் உதாரணமாகக் கொள்ளலாம். மேரியிடமிருந்து பறிக்கப்பட்டப் புத்தகம் அவள் வாழ்க்கையில் கல்விச் சுடரை ஏற்றியது என்பதனை இக்கட்டுரை வழியாகக் கண்டோம்.

8

45அ

குறிப்புச் சட்டம்

முன்னுரை

பிறப்பும்,கல்வியும்

விண்வெளிப் பயணம்

இறப்பு

விருது

முடிவுரை

முன்னுரை :

        விண்வெளிக்கு பயணம் செய்த முதல் இந்திய பெண் வீராங்கனை கல்பனா சாவ்லா குறித்து நாம் இக்கட்டுரையில் காணலாம்.

பிறப்பும், கல்வியும் :

பிறப்பு : இந்தியாவில் ஹரியானா மாநிலத்தில் கர்னலில் ஜூலை 1,1961 இல் பிறந்தார்.

          பெற்றோர் : பனாரஸ்லால் - சன்யோகிதா தேவி

கல்வி :       கர்னலில் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் விமான ஊர்தியியல் துறையில் இளங்கலைப் பட்டம்

·         டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் விண்வெளி பொறியியல் துறையில் முதுகலைப் பட்டம்.

·         1986-ஆம் ஆண்டு கொலராடோ பல்கலைக் கழகத்தில் 2-ஆவது முதுகலைப்பட்டம்.   

·         பிறகு 1988-ஆம் ஆண்டு விண்வெளி பொறியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்றார்.

விண்வெளிப் பயணம்:

·         1995 இல் நாசா விண்வெளி வீரர் பயிற்சியில் இணைந்து கொலம்பிய விண்வெளி ஊர்தி எஸ்,டி,எஸ்-87 இல் பயணம் செய்தார்,

·         சுமார் 372 மணிநேரம் விண்வெளியில் இருந்து சாதனையுடன் பூமி திரும்பினார்.

வீர மரணம் :

·         2003இல் ஜனவரி 16 ந் தேதி அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பிய விண்கலம் எஸ்.டி.எஸ் 107 இல மீண்டும் பயணம் செய்தார்.

·         அந்த விண்கலம் ஆய்வை முடித்து திரும்பிய போது பிப்ரவரி -1 இல் டெக்சாஸ் வான்வெளியில் வெடித்துச் சிதறியதில் கல்பனா சாவ்லாவுடன் உடன் பயணித்த 7 வீரர்களும் மரணமடைந்தனர்

விருது:

·         நியூயார்க் நகரின் ஒரு சாலைக்கு அவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

·         பிப்ரவரி 1ந் தேதி கல்பனா சால்வலா நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

·         2011 முதல் வீரதீர சாதனைப் புரிந்த பெண்களுக்கு “ கல்பனா சாவ்லா விருது “ அரசு வழங்கி வருகிறது.

முடிவுரை:

        மாணவர்களாகிய நாமும் இவரைப் போன்றவர்களை உதாரணமாகக் கொண்டு விடாமுயற்சியுடன் படித்தால் அனைத்தையும் சாதிக்கமுடியும்.

8

45ஆ

குறிப்புச்சட்டம்

முன்னுரை

அறிவிப்பு

அமைப்பு

கரகாட்டம், காவடியாட்டம்

பொய்க்கால் குதிரையாட்டம்

கூத்துகள் அரங்கு

சிற்ப அரங்கு

முடிவுரை

முன்னுரை:

          கிராமப்புற/சிற்றூர் மக்களின் கலை, அழகியல், பண்பாடு ஆகிய்வற்றின் எச்சங்களாக இருப்பவை கலைகள். எங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத் திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாகக் காணலாம்.

அறிவிப்பு:

“ கலைத்திருவிழாவிற்கு  வந்தது தூது

இதனையொட்டி எங்கள் ஊர் சேலத்தில் அரசு சார்பில் கலைத்திருவிழா மூன்று நாட்கள் நடப்பதற்கான அறிவிப்பு வந்தது. நிச்சயம் இந்த கலைத்திருவிழா எனக்கு உதவும் என்ற எண்ணத்தில் நான் கண்ட கலைத்திருவிழா நிகழ்வினைக் காணலாம்.

அமைப்பு:

           சேலத்தில் நேரு கலையரங்கத்தில் கலைகளுக்கான அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு நிகழ்கலைகளுக்கான அரங்குகள் எத்திசையில் எங்கெங்கு அமைக்கப்ப்பட்டுள்ளன என்பதற்கான வரைபடமும் இருந்தது.

கரகாட்டம், காவடியாட்டம் :

“ கண்களை கவருது கரகாட்டம்

ஆட துடிக்குது காவடியாட்டம் “

        கலைஞர்கள் பலர் பலவிதமான கரகத்துடன், அழகிய ஒப்பனைகளுடன் ஆடிய கரகாட்டம் கண்ணைக் கவர்ந்தது. தோளில் காவடியைச் சுமந்தவாறு ஒய்யாரமாக ஆடும் காவடியாட்டமும் மனதைக் கவர்ந்தது.

பொய்க்கால்  குதிரையாட்டம்:

பொய்க்கால்கள் கொண்டு ஆடியதோ குதிரையாட்டம்”

                   குதிரை வடிவக் கூட்டுக்குள் இருந்து, பாதத்துக்குக் கீழ் கட்டையைக் கட்டிக் கொண்டு ஆடிய பொய்க்கால் குதிரையாட்டமும் உற்சாகம் தரக்கூடிய நிகழ்த்துகலைகளாக இருந்தன,

கூத்துகள் அரங்கு:

          ஆடல் பாடலுடன் தோலால் செய்த வெட்டு வரைபடங்களைத் திரைசீலையில்  ஒளி  ஊடுருவும் வகையில் நாடகம் போல நிகழ்த்துவது தோற்பாவைக் கூத்து. கூத்துகள் அனைத்தும் சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு என்ற கருத்தையொட்டி அமைந்திருந்தது.

சிற்ப அரங்கு :

                                        கல்லிலே கலைவண்ணம் கண்டான்

                                        தன் திறனை அனைவருக்கும் படைத்தான்

    சிற்ப அரங்கில் சென்றால் சுண்ணக்கட்டியில் சிற்பம், காய்கறியில் சிற்பம், களிமண்ணில் சிற்பம், மண்ணில் சிற்பம், சோப்பில் சிற்பம்  என பலவிதங்களில் பல்வேறு விதமான சிற்பங்கள் சிறப்பாகவும், வியப்பாகவும் அமைந்தது.

முடிவுரை:

”ஆவலுடன் அங்கு சென்றேன்

                  அங்கிருந்து  வர மனமில்லாமல் வந்தேன்”

         அரசு நடத்தி வரும் இந்த கலைத்திருவிழா கூடத்தில் பல்வேறு விதமான அரங்குகள் இருந்தன. இந்த அரங்குகள் எல்லாம் சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு ஒரே மையக் கருத்தை மையமாகக் கொண்டு நிகழ்த்தப்பட்டன.

 

 

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி, வளையசெட்டிப்பட்டி

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.

சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

KINDLY WAIT FOR 10 SECONDS



நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post