9th-tamil-1st mid term-answerkey-slm dt-2024

 

 சேலம் -முதல் இடைத் தேர்வு  -2024

ஒன்பதாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  1.30 மணி                                                                              மதிப்பெண் : 50

பகுதி – 1

மதிப்பெண்கள் - 8

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

 

1.

இ) சிற்றிலக்கியம்

1

 

2.

அ) கீழே

1

 

3.

இ) புவி

1

 

4.

ஆ) வளம்

1

 

5.

இ) சென்றனர்

1

 

6.

அ) ஆறு

1

 

7.

இ) சேக்கிழார்

1

 

8.

அ) வேறுபடுத்துவது

1

 

பகுதி – 2

9

v  திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது.

2

 

10

v  இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை.

2

 

11.

வீணையோடு வந்தாள்     – வேற்றுமைத் தொடர்

கிளியே பேசு                    – விளித்தொடர்

2

 

12.

குளம், குட்டை

2

 

13

வாளை மீன்கள் துள்ளி எழுந்து பாக்கு மரத்தில் பாய்வதற்கு ஒப்பிடுகிறது.

2

 

14

அ) ஒப்பிலக்கணம்                ஆ) நீர் மேலாண்மை

2

 

15.

அ) கல்     ஆ) இடமெல்லாம் சிறப்பு

2

 

பகுதி – 3

16.

மூன்று – தமிழ்

          மூணு – மலையாளம்

          மூடு – தெலுங்கு

          மூரு – கன்னடம்

          மூஜி - துளு

3

 

17.

தன்வினை

பிறவினை

எழுவாய் ஒரு வினையை செய்தல்

எழுவாய் ஒரு வினையை செய்ய வைத்தல்

எ.கா : பந்து உருண்டது

எ,கா: பந்தை உருட்ட வைத்தான்

 அவன் திருந்தினான்

  அவனைத் திருந்தச் செய்தான்

3

 

18

Ø  நிலம் குழிந்த இடங்கள் தோறும் நீர்நிலைகளைப் பெருகச் செய்தல் வேண்டும்.

Ø  நிலத்துடன் நீரைக் கூட்டியோர் மூவகை இன்பத்தையும், நிலைத்த புகழையும் பெறுவர்

3

 

19

Ø  மொட்டைக் கிளையோடு, வெட்ட ஒரு நாள் வரும் என வருத்தமடைந்தது.

Ø  இலைகளும், கிளைகளும் வெந்து கருகியதால் இந்த நிலை வந்ததோ என வருத்தமுற்றது.

Ø  பட்டுக் கருதியதன் காரணமாக கட்டை என பெயர் வந்ததோ என வருத்தமுற்றது.

Ø  மரப்பட்டைகள் எல்லாம் விழுந்ததனால் வருத்தமுற்றது.

3

 

20

Ø  முல்லை நில ஆயர்கள் ஏறுதழுவுதலில் பங்கேற்கும் நிகழ்வினை கலித்தொகையில் குறிப்பிடுகிறது.

Ø  முல்லை நில வேளாண் குடிகளின்  வாழ்வோடும் உழைப்போடும் பிணைந்து கிடந்த மாடுகளுடன் அவர்கள் விளையாடி மகிழும்  மரபாக உருகொண்டது ஏறு தழுவுதல்.

3

 

பகுதி – 4

21.

·         முத்திக் கனியே ! முத்தமிழே ! உன்னோடு  மகிழ்ந்து சொல்லும் விண்ணப்பம் உண்டு கேள்.

·         புலவர்கள் குறம், பள்ளு பாடி தமிழிடமிருந்து சிறப்பு பெறுகின்றனர். அதனால் உனக்கும் பா வகைக்கும் உறவு உண்டு.

·         தமிழே ! சிந்தாமணியாய் இருந்த உன்னைச் சிந்து என்று அழைப்பவர் நா இற்று விழும்.

·         தேவர்கள் கூட மூன்று குணங்கள் தான் பெற்றுள்ளனர். ஆனால் தமிழே! நீ மட்டும் பத்து குணங்களைப் பெற்றுள்ளாய்.

·         மனிதர் உண்டாக்கிய வண்ணங்கள்  கூட ஐந்து தான்,. ஆனால் தமிழே ! நீ மட்டும் நூறு வண்ணங்களைப் பெற்றுள்ளாய்.

·         உணவின் சுவையோ ஆறு தான். ஆனால், தமிழே ! நீயோ ஒன்பது சுவைகளைப் பெற்றுள்ளாய்.

·         மற்றையோர்க்கு அழகு ஒன்று தான். ஆனால் தமிழே! நீயோ எட்டு வகையான அழகினைப் பெற்றுள்ளாய்.

5

 

22.

குறிப்புச் சட்டம்

முன்னுரை

மழைநீர்

உணவெனப்படுவது நீர்

பல்லுயிர் பாதுகாப்பு

முடிவுரை

முன்னுரை :

நம்முன்னோர்கள் பல்வேறு நீர்நிலை வடிவங்களை அமைத்து நீரைப் பாதுகாத்தனர். நாமும் இனிவரும் தலைமுறையினர்க்கு நீரைப் பாதுகாத்து வைக்க வேண்டும்.

மழை நீர் :
மழை உழவுத் தொழிலுக்கு உதவுகிறது. விதைத்து வாழ வேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன.

உணவெனப்படுவது நிலத்தொடு நீரே:
உணவெனப்படுவது நிலத்தோடு நீரே என்னும் சங்கப்பாடல், நீரின் இன்றியமையாத் தேவையை எடுத்துரைக்கிறது.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண்’

என்னும் குறளில் நாட்டின் சிறந்த அரண்களுள் நீருக்கே முதலிடம் தருகிறார்.

பல்லுயிர்ப் பாதுகாப்பு :
உலகின் பல்லுயிர்ப் பாதுகாப்பிற்கு அடிப்படை தண்ணீர் நமது முன்னோர்கள் கண்டுணர்ந்த வாழ்வியல் அணுகுமுறைகளைப் பின்பற்ற வேண்டும். குளம், ஏரி, கால்வாய், கிணறு போன்ற நீர்நிலைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்க வேண்டும்.

முடிவுரை :

v  உணவு உற்பத்திக்கு அடிப்படை நீர். அந்த நீரே உணவாகவும் இருக்கிறது. எனவே நீரின் அவசியம் உணர்ந்து பாதுகாக்க வேண்டும்

5

 

23.

ü  காவிரி ஆறு புதிய பூக்களை அடித்து வர அதனை வண்டுகள் மொய்த்து ஆராவாரம் செய்கின்றன.

ü  நட்டபின் வயலில் வளர்ந்த நாற்றின் முதல் இலை சுருள் விரிந்து. இதனைக் கண்ட உழவர் இது தான் களை பறிக்கும் பருவம் என்று அறிந்தனர்.

ü  காடுகளில் எல்லாம் கரும்புகள் உள்ளன.

ü  வயல்களில் சங்குகள் நெருங்கி உள்ளன.

ü  சோலைகள் எல்லாம் செடிகளின் புதிய கிளைகளில் அரும்புகள் உள்ளன.

ü  பக்கங்களில் எல்லாம் குவளை மலர்கள் உள்ளன.

ü  கரை எங்கும் இளைய அன்னங்கள் உலவுகின்றன.

ü  குளங்கள் எல்லாம் கடல் போல் பெரிதாக உள்ளன.

ü  அன்னங்கள் விளையாடும் நீர் நிலைகளில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும். அதனால் அதில் உள்ள வாளை மீன்கள் அருகில் உள்ள பாக்கு  மரங்கள் மீது பாயும் இக்காட்சியை நிலையான வானத்தில் தோன்றி மறையும் வானவில் போன்றுள்ளது.

ü  செந்நெல்லின் சூடுகள், பலவகைப்பட்ட மீன்கள் ,முத்துக்கள், மலர்த் தொகுதிகள் ஆகியவற்றைத் திருநாட்டில் குவித்து வைத்திருந்தனர்.

ü  தென்னை, செருந்தி, அரசமரம், கடம்பமரம்,பச்சிலை மரம், குராமரம், பனை,சந்தனம், நாகம், வஞ்சி,காஞ்சி மலர்கள் நிறைந்த கோங்கு முதலியன எங்கும் நிறைந்தது  இந்த திருநாட்டில்.

5

 

24

முன்னுரை :

           கந்தர்வன் எழுதிய தண்ணீர் என்ற இக்கதையில் நீரின் அவசியமும், நீருக்காக கிராம மக்கள் படும் பாட்டையும் அழகாக எழுதியுள்ளார். அதை இக்கட்டுரையில் காணலாம்.

கிராமத்தின் நிலை :

          கதையின் கிராமத்தில் குடிப்பதற்கு நீர் பக்கத்து ஊருக்கு செல்ல வேண்டும். அந்த கிராமம் குடிநீருக்காக பிலாப்பட்டிக்கு செல்ல வேண்டும். நிலத்தடி நீர் வற்றி ஆண்டுகள் பல ஆயிற்று.

இரயில் நீர் :

            அந்த ஊருக்கு வரும் இரயிலின் ஊதல் ஒலிக் கேட்டு அந்த கிராம மக்கள் தண்ணீருக்காக பெண்கள் ஒருவருக்கு ஒருவர் முண்டியடித்துக் கொண்டு ஓடுவர். ஸ்டேசன் மாஸ்டர் மிரட்டியும் பயன் இல்லை. இரயிலை விட்டால் பிலாப்பட்டிக்கு போக வேண்டும்.

இந்திரா :

          இளம் பெண் இந்திரா தன்னை திருமணம் செய்து கொடுத்தால் நீர் இருக்கும் ஊருக்கு தான் கல்யாணம் பண்ணிக்க வேண்டும் என நினைத்துக் கொண்டே இரயில் பெட்டியில் நுழைந்தாள்.

மக்கள் தேடல் :

          வீட்டில் நீர் இல்லை என்பதை நினைத்துக் கொண்டே நீர் பிடித்திருந்த இந்திரா இரயில் நகர்ந்ததை கவனிக்கவில்லை.

            இந்திராவின் தாய் புலம்புகிறாள். இந்திராவைத் தேடி இராமநாதபுரம் பேருந்து நிலையம் சென்று தேடிப் பார்த்தனர். எங்கும் காணவில்லை.

திரும்பிய இந்திரா:

          தண்டாவளத்தில் சிறிது தூரத்தில் பெண் ஒருத்தி தென்பட்டாள். அவள் இந்திரா. ஒரு குடம் நீர் பிடிக்க இரயிலிலேயே உள்ள நீர் பிடித்து அதனை சிந்தாமல் கொண்டு வந்து சேர்த்தாள்.

முடிவுரை :

தண்ணீர் வாழ்வில் மிக முக்கியம். அதனை அறிந்து நீரினை சேமிப்போம். சிக்கனமாகப் பயன்படுத்துவோம். நீர் மேலாண்மையைக் கட்டமைப்போம்.

 

 

பகுதி – 5

25.

தித்திக்கும் தெள்அமுதாய்த் தெள்அமுதின் மேலான

முத்திக் கனியேஎன் முத்தமிழே – புத்திக்குள்

 உண்ணப் படும்தேனே உன்னோடு உவந்துஉரைக்கும்

விண்ணப்பம் உண்டு விளம்பக்கேள் – மண்ணில்

குறம்என்றும் பள்ளுஎன்றும் கொள்வார் கொடுப்பாய்க்கு

உறவுஎன்று மூன்றுஇனத்தும் உண்டோ – திறம்எல்லாம்

வந்துஎன்றும் சிந்தா மணியாய் இருந்த உனைச்

சிந்துஎன்று சொல்லிய நாச்சிந்துமே*

5

 

26அ

அரசினர் உயர்நிலைப் பள்ளி,

வளைய செட்டிப்பட்டி,

சேலம் மாவட்டம்.

28.9.2021 அன்று பள்ளியில் நடைபெற்ற சிறந்த பள்ளிகளுக்கான பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்ட மாவட்டக் கல்வி அலுவலர்  திருமிகு. கு.சிவானந்தன் அவர்களுக்கு வழங்கிய வரவேற்பு மடல்

தமிழகம் பெற்ற தவப்புதல்வரே!  

    வருக! வருக! வணக்கம்.

     மாவட்ட அளவில் நடைபெற்ற சுற்றுசூழல் பாதுகாப்புப் பற்றிய ஆய்வில் எம் பள்ளி முதலிடம் பெற்றதாகத் தாங்கள் அறிவித்து கண்டு, பெருமகிழ்ச்சி அடைகின்றோம். தங்களை வரவேற்கும் பேறு பெற்றமைக்குப் பெரிதும்  உவகை கொள்கிறோம்!

பள்ளியின் சுற்றுபுறத்தைப் பேணிகாப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினோம்!

    எங்கள் வகுப்பறையைப் போலவே ஆய்வுக்கூடம், விளையாட்டிடம், கழிப்பறை ஆகிய அனைத்தையும் நீங்கள் கூறிய வழிமுறைகளை  நாளும் கடைப்பிடித்து வருகிறோம்.

நீங்கள் பள்ளிக்கு முதற்பரிசு கொடுத்துப் பாராட்டியதற்கு, நன்றியை நவில்கின்றோம்.

                                 நன்றி, வணக்கம்

வளைய செட்டிப் பட்டி

28.9.2021.                                                     தங்கள் அன்புள்ள,                                

                                                                      விழாக்குழுவினர்.

 

8

 

26ஆ

12, தெற்கு வீதி,

மதுரை-2

                                                                              28,செப்டம்பர் 2021.

அன்புள்ள நண்பனுக்கு,              

        வணக்கம் . நலம். நலமறிய ஆவல்  என்னுடைய பிறந்தநாள்  பரிசாக நீ அனுப்பிய  எழுத்தாளர் எஸ் . இராமகிருஷ்ணன் எழுதிய  கால் முளைத்த கதைகள் என்ற கதைப்புத்தகம்  கிடைத்தது. மிக்க மகிழ்ச்சி அடைந்தேன்.

      இந்நூலில் பூனையை நாய் ஏன் துரத்துகிறது? போன்ற தலைப்புகளில் உள்ள  கதைகள்  விரும்பிப் படிப்பதற்கு ஏற்ற வகையில் இனிய எளிய சொற்களால், கதைகள் சிறியனவாக அமைந்துள்ளன. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

நன்றி,

இப்படிக்கு,

    அன்பு 10th-tamil-1st mid term-answerkey-slm dt-2024நண்பன்,                                                                                                                                             

         அ.கபிலன்

உறைமேல் முகவரி:

பெறுதல்

வெ.ராமகிருஷ்ணன்,

2,நெசவாளர் காலணி,

சேலம் – 1

 

 

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி,  வளைய செட்டிப்பட்டி

www.tamilvithai.com                                                                        www.kalvivithaigal.com

click here to get pdf

click here

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post