சேலம் -முதல் இடைத் தேர்வு -2024
எட்டாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம்
: 1.30 மணி மதிப்பெண் : 50
மதிப்பெண்கள்
- 50 |
|||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|
1. |
அ. வைப்பு |
1 |
|
2. |
ஆ. விசும்பில் |
1 |
|
3. |
அ. தாயாக |
1 |
|
4. |
இ. நன்மை + செய் |
1 |
|
5. |
ஆ. பருத்தியெல்லாம் |
1 |
|
6. |
கண்ணெழுத்துகள் |
1 |
|
7. |
தலை |
1 |
|
8. |
தந்தை பெரியார் |
1 |
|
9. |
ஓடு |
1 |
|
10. |
படித்தான் |
1 |
|
11 |
*வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி! வாழிய
வாழியவே! வான
மளந்தது அனைத்தும் அளந்திடு வண்மொழி
வாழியவே! ஏழ்கடல்
வைப்பினுந் தன்மணம் வீசி இசைகொண்டு
வாழியவே! எங்கள்
தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி! என்றென்றும்
வாழியவே! * |
3 |
|
12 |
தன்குற்றம்
நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் என்குற்றம்
ஆகும் இறைக்கு |
2 |
|
13 |
தமிழ் உலகம்
முழுவதும் புகழ் கொண்டு வாழ்கிறது. |
2 |
|
14 |
மரபுகளை மாற்றினால்
பொருள் மாறிவிடும் |
2 |
|
15 |
ü ஓகர வரிசை
எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தார். ü 'எ'
என்னும் எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு 'ஏ' எனும் நெடிலாகவும் 'ஒ' என்னும்
எழுத்திற்குச் சுழி இட்டு 'ஓ' என்னும்
எழுத்தாக உருவாக்கினார். |
2 |
|
16. |
ஓடை
கற்களில் உருண்டும் தவழ்ந்தும் நெளிந்தும் ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார் |
2 |
|
17
|
சித்தர்கள் வாழ்ந்ததாக
பாடல் கூறுகிறது. |
2
|
|
18 |
வானம் , காற்றின்
தூய்மை , நீரின் உயர்வு |
2 |
|
19. |
சான்றோர்க்கு
அழகாவது நடுவுநிலைமை |
2 |
|
20 |
ü ஓலைச்சுவடிகளில்
நிறுத்தற் குறிகளும், பத்தி பிரித்தலும் கிடையாது, புள்ளி இடப்பட்டு எழுதப்படும் இடங்களில் புள்ளிகள் தெளிவாகத் தெரியாத
நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா உயிர்மெய்யா, குறிலா
நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது. ü இதனால் படிப்பவர்கள்
பெரிதும் துன்பம் அடைந்தனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று. |
3 |
|
21. |
Ø நன்செய், புன்செய்
நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது. Ø விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து
நாட்டின் வறுமையைப் போக்குகிறது. Ø புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது. Ø நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர்
வெடகப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது. |
3 |
|
22 |
ü வல்லின
மெய்எழுத்துகள் ஆறும் மார்பை இடமாகக் கொண்டு
பிறக்கின்றன. ü மெல்லின
மெய்எழுத்துகள் ஆறும் மூக்கை இடமாகக் கொண்டு
பிறக்கின்றன. ü இடையின
மெய்எழுத்துகள் ஆறும் கழுத்தை இடமாகக் கொண்டு
பிறக்கின்றன. |
3 |
|
23 |
அ)
உயிரொலி ஆ) வெட்டுக்கிளி |
2
|
|
24. |
அ)
உ ஆ) ௧௬ |
2
|
|
25
|
அ) அதிகாலையில் துயில் எழு ஆ) காட்டில் புலி நடமாட்டம் உள்ளதா? |
2
|
|
26.அ |
எழுத்து
- தொடக்க நிலை : v மனிதன் தனது
கருத்துகளைத் தெரிவிக்க விரும்பி, அதற்காகப் பாறைகளிலும் குகைச்
சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். v இதுவே எழுத்து
வடிவத்தின் தொடக்க நிலை ஆகும். ஓவிய
எழுத்து : v தொடக்கக் காலத்தில்
எழுத்து என்பது ஒலியையோ, வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே
இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர். ஒலி எழுத்து நிலை : v ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு
உரிய முழு ஒலியாகியசொல்லைக் குறிப்பதாக மாறியது. v ஒவ்வொரு வடிவமும்
அச்சொல்லின் முதல் ஓசையைக் குறிப்பதாயிற்று. v ஓர் ஒலிக்கு ஓர்
எழுத்து என உருவான நிலையை “ஒலி எழுத்து நிலை" என்பர். |
5 |
|
26
ஆ |
v இந்தப் பூமியின்
ஒவ்வொரு துகளும் எம் மக்களுக்குப் புனிதமானதாகும். v எமது மக்கள். இந்தப்
பூமியை எப்போதும் மறப்பதேயில்லை. ஏனெனில் இதுவே எமக்குத் தாயாகும். v இந்நிலமானது
எங்களுக்கு மிகவும் புனிதமானது என்பதால் இந்நிலத்தை விற்க மதிப்பது என்பது
மிகவும் இயலாத ஒன்றாகும். v நாங்கள் பூமியைத்
தாயாகயும், வானத்தைத் தந்தையாகவும் கருதக்கூடியவர்கள். v எங்கள் கால்களைத்
தாங்கி நிற்கும் இந்த நிலமானது எம்முடைய பாட்டன்மார்கள் எரிந்த சாம்பலால்
ஆனதாகும். v நீங்கள் இதனை உங்கள்
குழந்தைகளுக்குக் கண்டிப்பாகச் சொல்லித்தரவேண்டும். அப்போது தான் அவர்கள்
இந்நிலத்தை மதிப்பார்கள். v இப்பூமியின் மீறு
மக்கள் துப்பக் கூடுமானால் அது அவர்கள் தம் தாய் மீது துப்புவதற்கு ஒப்பானதாகும். v நாங்கள் எப்படிக்
காப்பாற்றி வைத்திருந்தோமோ அப்படியே காப்பாற்றுங்கள். v முழுமையான
விருப்பத்தோடு உங்கள் குழந்தைகளுக்காக இந்நிலத்தைப் போற்றிக் காப்பாற்றுங்கள். v நிலத்தை தேசியுங்கள்.
இயற்கை நம் எல்லோரையும் நேசிப்பது போல என்று சியாட்டல் கூறுகின்றார். |
5
|
|
27அ |
முன்னுரை தமிழ்மொழி செந்தமிழாகவும்
உயிரோட்டத் தமிழாகவும் விளங்குகிறது. தமிழ்மொழி சொல்வளம் மிக்கமொழி என்பதை
இக்கட்டுரையின் மூலம் பார்ப்போம். மொழி
வகை தமிழில் ஓர் எழுத்துமொழி,
ஈரெழுத்து மொழி, இரண்டுக்கு மேற்பட்ட
எழுத்துகள் உடைய மொழி என மூன்று வகையாக உள்ளது. "நெட்டெழுத்து ஏழே
ஓரெழுத்து ஒருமொழி” என்று தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார். ஓரெழுத்து
ஒருமொழி Ø உயிர்
வரிசையில் ஆறு எழுத்துகள் Ø ம
வரிசையில் ஆறு எழுத்துகள். Ø த, ப,
ந என்னும் வரிசைகளில் ஐந்து எழுத்துகள். Ø க, ச. வ
என்னும் வரிசைகளில் நான்கு எழுத்துகள். Ø ய வரிசையில் ஒன்று Ø நாற்பது நெடில்கள் ஓரெழுத்து ஒரு மொழியாக
வரும் என்றார் நன்னூலார் நொ, து என்னும்
குறில்களையும் சேர்த்து நாற்பத்து இரண்டு என்றார். கலைச்சொல்
வடிவம் Ø பூ.கா
என்ற ஒரு இரு ஓரெழுத்து ஒருமொழியை இணைத்து பூங்கா என வழங்கினர். Ø ஆ,மா இரண்டையும் ஆமா என்னும் சொல் உருவாக்கப்பட்டு காட்டுப் பசுவைக்
குறித்தது. Ø மாநிலம்,மாநாடு, மாஞாலம் இச்சொற்களில், மா என்பது பெரிய என்ற பொருளை தந்தது. இக்கால
வழக்கு Ø ஈ
என்ற சொல் ஒலிக்குறிப்பைக் காட்டும்; பூச்சி
வகையைச் சுட்டும், வழங்குதல் என்னும் பொருளை உணர்த்தும். Ø "ஈ
என்று பல்லைக் காட்டாதே” என்று அறிவுரை கூறவும் பயன்படும். மாற்றம்
பெற்றவை Ø ஆன்
மான்,
கோன். தேன். பேய ஆகியவை முறையே ஆ, மா. கோ,
தே. பே என மாறியது. Ø கூடு,
பொருந்து, சேர் என்னும் பொருளை உடைய
"ஏய் அழைத்தல் பொருளைக் குறித்தது. Ø "ஏ"
என வழக்கில் மாறிவிட்டது. ஏவலன், ஏகலை,
ஏகலைவன் என்ற சொற்களும் ஏவை அடிச்சொல்லாக மாற்றம் பெற்றவை. முடிவுரை
தமிழில் ஓரெழுத்து ஒரு மொழிச் சொற்களின பெருக்கம் நம்
மொழியின் பழமை, உயிரோட்டம், பெருவழக்கு
என்பவனவற்றைக் கையில் கனியாகக் காட்டும். இத்தகைய தமிழ்மொழியின் சொற்களை,
மொழிப்பற்றை மீட்டெடுத்தலே வழிகாட்டிகளுக்கு முதல் கடமையாய்
நிற்கிறது. |
5
|
|
27ஆ |
குறிஞ்சிப்
புதரின் கிளையில் பச்சை வெட்டுக்கிளி ஒன்று வசித்து வந்தது. அது ஒரு வாயாடி. ஒரு மாலை நேரம் கூரன் என்ற
பெண் சருகுமானை வெட்டுக்கிளி பார்த்தது. "என்ன கூரன், பார்த்து வெகுநாள் ஆயிற்று! இவ்வளவு நாடகள் எங்கே போயிருந்தாய்? ஏன் இங்கும் அங்குமாய் வேகமாக ஓடுகிறாய்?' அதற்கு
சருகுமான், இப்பொழுது உள்னிடம் பேச எனக்கு நேரமில்லை.
பித்தக்கண்ணு என்னைத் துரத்திக்கொண்டு வருகிறது. தலையை மட்டும் தூக்கி
வெட்டுக்கிளியை எச்சரித்தது. பித்தக்கண்ணு உன்னிடம் என்னைப் பற்றிக் கேட்டால்
வாயைத் திறந்து எதையும் சொல்லிவிடாதே என்றது. வெட்டுக்கிளியும்
பித்தக்கண்ணும்: கூரனைத் தேடிக் கொண்டு பித்தக்கனானும் ஓடைப் பக்கம் வந்தது.
வெட்டுக்கிளி அதன் கண்ணில் பட்டதும் அதைப் பார்த்து உறுமியது. 'கூரன் இங்கு வந்தாளா?" என்றது.
வெட்டுக்கிளிக்கு உற்சாகம் தலைக்கு ஏறியது. பித்தக்கண்ணுவை இவ்வளவு பக்கத்தில் பார்ப்பது இதுதாள்
முதல்முறை, பித்தக்கண்ணுவைப் பார்த்ததால் ஏற்பட்ட பரவசத்தை
அடக்க இயலாமல் தன்னை அறியாமல் கூரன் ஒளிந்திருந்த இடத்தருகே குதித்துக்
குதித்துச் சென்றது. அதைக்கண்ட பித்தக்கண்ணு, கூரன்
பதுங்கி இருந்த மரத்தடிப்பக்கம் சென்று மோப்பமிட்டது. அங்கு புனுகுப் பூனையின்
துர்நாற்றமே எட்டியது. உயிர்பிழைத்த
கூரன் : கூரன் வெளியே வந்தது. தன் மறைவிடத்தை
ஏறக்குறையக் காட்டிக் கொடுத்ததற்காக வெட்டுக்கிளி மீது அதற்குக் கோபமான கோபம்,
அதற்கு ஒரு பாடம் கற்பித்தாக வேண்டும் என்று எண்ணியது. 'இனி இப்படிச் செய்தால், திரும்பி வந்து உன்னை என்
கால்களால் மிதித்து நசுக்கிவிடுவேன்' என்று கூறிக்
காட்டுக்குள் ஓடியது. வெட்டுக்கிளியின்
பயம் அன்றிலிருந்து கூரனின் கூர்ப்பாதங்கள் எங்கே தன்மீது பட்டுவிடுமோ என்ற
அச்சத்திலேயே வெட்டுக்கிளி வாழ்ந்து வருகிறது. இதனால் தாள் இன்றும் கூட வெட்டுக்
கிளிகள் ஓர் இடத்தில் நிலைத்து இருக்க முடியாமல் குதித்த வண்ணமுள்ளன. |
5
|
|
28அ |
நான் விரும்பும் கவிஞர். முன்னுரை: இருபதாம் நூற்றாண்டின் விடிவெள்ளி,
புதுமைக் கவிஞர், தேசியக் கவி, மகாகவி எனப் பாராட்டப்பட்டவர் நம் பாரதியாரே ஆவார். பிறப்பும் இளமையும் பாரதியார் எட்டயபுரத்தில் 11.12.1882
ஆம் நாளில் பிறந்தார். இவரின் பெற்றோர் சின்னசாமி, இலக்குமி அம்மையார் ஆவார்.. தமது பதினோறாம் வயதில் பாரதி என்னும் பட்டம்
சான்றோர்களால் வழங்கப்பட்டது விடுதலை வேட்கை: 'பாருக்குள்ளே
நல்ல நாடு எங்கள் பாரத நாடு' என்றார். இப்படிப்பட்ட நம்
உயர்ந்த பாரதம் ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டிருப்பதைஎண்ணி 'நெஞ்சு
பொறுக்குதில்லையே' என பாடினார். விடுதலை உணர்வு மிக்க
பாடல்களைப் பாடி மக்களைத் தட்டி எழுப்பினார். ஒருமைப்பாட்டுணர்வு: ஒன்றுபட்டால்
உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வே எனப் பாடி
மக்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தினார். மொழிப்பற்று:
பல
மொழிகளைக் கற்றிருந்த பாரதி யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும்
காணோம் என்றுதமிழின்சிறப்பைஎடுத்துரைத்தார்.
நாட்டுப்பற்று . சமுதாயத் தொண்டு: சாதிக்
கொடுமைகள், பெண்ணடிமை, சமூக
ஏற்றத்தாழ்வுகள் போன்றவை இந்நாட்டிலிருந்து விலக வேண்டும் என்பதில் உறுதியாக
இருந்தார். மதவெறிப் பிடித்து அலைபவர்களின் போக்கினைக் கண்டித்தார்.
படைப்புகள்:
பாரதியார்
எண்ணற்ற கவிதை, உரைநடை நூல்களைப்
படைத்துள்ளார். குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், ஞானரதம், தராசு
போன்ற எண்ணற்ற படைப்புகளைப் படைத்துள்ளார்.
முடிவுரை:
வளமான, வலிமையான பாரதத்திற்குத் தேவையான சிறந்த
வழிகள் யாவும் அவருடைய பாடல்களில் உள்ளன. அவற்றை பின்பற்றினால் அவர் கனவு கண்ட
பாரதத்தை நம்மால் உருவாக்க முடியும்.
|
5 |
|
28ஆ |
7, தெற்கு
வீதி, மதுரை-1 11-03-2024. ஆருயிர் நண்பா, நலம் நலமறிய ஆவல். நீ .மாநில
அளவில் நடைபெற்ற சதுரங்கப்போட்டியில்
முதல் பரிசு பெற்றுள்ள செய்தியைத் தொலைக்காட்சி வாயிலாக அறிந்தேன்.மிக்க
மகிழ்ச்சியாக உள்ளது. நீ இதே போன்று பல
வெற்றிகளைபெற எனது மனமார்ந்த வாழ்த்துகள். இப்படிக்கு, உனது
நண்பன் க.முகிலன். உறைமேல் முகவரி: பெறுதல் த.கோவேந்தன்,
12,பூங்கா வீதி,
சேலம்-4 |
5
|
|
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, வளைய செட்டிப்பட்டி
www.tamilvithai.com
www.kalvivithaigal.com
click here to get pdf