10th-tamil-1st mid term-answerkey-slm dt-2024

 

 சேலம் -முதல் இடைத் தேர்வு  -2024

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் :  1.30 மணி                                                                              மதிப்பெண் : 50

பகுதி – 1

மதிப்பெண்கள் - 9

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

) மணிவகை

1

2.

அ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல்

1

3.

ஆ) பண்புத்தொகை

1

4.

) வனத்தின் நடனம் 

1

5.

ஈ) சிற்றூர்

1

6.

ஈ.தனிப்பாடல் திரட்டு

1

7.

அ. இரட்டுற மொழிதல் அணி

1

8.

ஆ. கடல்

1

9

ஆ. வங்கம்

1

பகுதி – 2

10

v  வசனம் + கவிதை = வசன கவிதை.

v  உரைநடையும்,கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை.

2

11

v  வருக, வணக்கம்.

v  வாருங்கள்.

v  அமருங்கள், நலமா?

v  நீர் அருந்துங்கள்.

2

12.

மாமிசத்தையும், தினைச் சோற்றையும்  உணவாகப் பெறுவீர்கள்.

2

13.

குதிரை வாலி, திணை, வரகு,சம்பா

2

14

பிறருக்கு உதவி செய்யாதவன்.

2

15

v  கவிஞர்       பெயர்ப் பயனிலை

v  சென்றார்     வினைப் பயனிலை

v  யார்?            - வினா பயனிலை

2

16.

மயங்கியமயங்கு + இ (ன்) + ய் + அ

மயங்குபகுதி

இ(ன்)இறந்த கால இடைநிலை;

ன்’-புணர்ந்து கெட்டது.

ய்உடம்படு மெய்  பெயரெச்சவிகுதி

2

17

அ) சுழல் காற்று                   ஆ) நாட்டுப்புற இலக்கியம்

2

18

இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும்.

2

19

அ) மலைக்கு மாலை என எழுதினான்.

ஆ) விடு என்பதற்கு வீடு என எழுதினான்.

2

20

அ) ரு       ஆ) ச

2

21

v  சீவக சிந்தாமணி    

v  குண்டலகேசி

v  வளையாபதி

2

பகுதி – 3

22

சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்

உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்

நடுங்கு சுவல் அசைத்த கையள், “ கைய

கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர

இன்னே வருகுவர்,தாயார்” என்போள்

நன்னர் நன்மொழி கேட்டனம்

4

23

பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே

 நல்லார் தொடர்கை விடல்.

2

பகுதி – 4

24.

·         நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துதல் ஆற்றுப்படை.

·         நன்னன் எனும் மன்னனிடம் பரிசில் பெற்ற கூத்தர், மற்றொரு கூத்தரிடம் பரிசில் பெறுவதற்கான வழியினை கூறுகிறது.

·         உணவினைப் பெறுவதற்கான வழியினைக் கூறல்.

4

25.

v  அன்னை மொழியானவள்

v  அழகான செந்தமிழானவள்

v  பழமைக்கு பழமையாய் தோன்றிய நறுங்கனி

v  பாண்டியன் மகள்

v  திருக்குறளின் பெருமைக்கு உரியவள்

v  பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்களையும் கொண்டவள்.

4

26.

 

பயின்று வரும் அணி : உவமை அணி

அணி விளக்கம் :

        புலவர் தாம்சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை வேறு ஒரு பொருளுடனோ பல பொருளுடனோ அப்பொருளின் பண்பு,தொழில், பயன் என்பவற்றைக் காரணமாகக் கொண்டு இயைபுபடுத்தி இரு பொருள்களுக்கும் இடையே உள்ள ஒப்புமை புலப்படும்படி பாடுவது உவமை அணியாகும்.

அணிப் பொருத்தம் :

அரச‌ன் ஒருவ‌ன் த‌ன் அ‌திகார‌த்‌தினைப் பய‌‌ன்படு‌த்‌தி வ‌ரியின் மூலம் ம‌க்க‌ளிட‌ம் பண‌ம் வசூ‌லி‌ப்பது, வே‌ல் முத‌லிய ஆயுத‌ங்களைக் கொ‌ண்ட ஒரு வ‌ழி‌ப்ப‌றி செ‌ய்வத‌ற்குச் சம‌ம் ஆகு‌ம்.

உவமானம்    - வேலொடு நின்றான் இடுஎன்றது.

உவமேய‌ம்    - கோலொடு நின்றான் இரவு.  

உவம உருபு – போலும்

 

4

பகுதி – 5

27.

குறிப்புச் சட்டம்

முன்னுரை

மழை மேகம்

மழைப் பொழிவு

மாலைப் பொழுது

நற்சொல் கேட்டல்

ஆற்றுப்படுத்துதல்

முன்னுரை :

          தமிழர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை வாழ்ந்தனர். இதனால் அவர்களை காலங்களை வகுத்து முறையாக வாழ்ந்தனர். அவ்வகையில் முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை நாம் கட்டுரை வடிவில் காணலாம்.

மழை மேகம் :

·         திருமால் மாவலி மன்னனுக்கு நீர் வார்த்துத் தரும் போது விண்ணுக்கும் மண்ணுக்கும் பேருருவம் எடுத்தது போல் மழை மேகம் உயர்ந்து நின்றது.

·         அகன்ற உலகத்தை வளைத்துப் பெருமழை உருவாக்குகிறது வானம்.

மழைப் பொழிவு :

·         கடலின் குளிர் நீரைப் பருகி, மலையைச் சூழ்ந்து விரைந்த வேகமாய் பெருமழைப் பொழிகிறது.

மாலைப் பொழுது :

·         வண்டுகளின் ஆரவாரம் கொண்ட அரும்புகள்.

·         முது பெண்கள் மாலை வேளையில் காவல் உடைய ஊர்ப் பக்கம் சென்றனர்.

·         முல்லைப் பூக்களோடு, நெல்லையும் தெய்வத்தின் முன் தூவினர்.

நற்சொல் கேட்டல் :

·         முதுபெண்கள் தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்.

·         இது விரிச்சி என அழைக்கப்படும்.

·         விரிச்சி :

o   ஏதேனும் ஒரு செயல் நன்றாக முடியுமோ? முடியாதோ என ஐயம் கொண்ட பெண்கள், மக்கள் நடமாட்டம் குறைவாக உள்ள ஊர்ப்பக்கம் சென்று தெய்வத்தின் முன் தொழுது நிற்பர். அயலாரின் சொல்லைக் கூர்ந்து கேட்பர். அவர்கள் நல்ல சொற்கள் கூறின் தம் செயல் நன்மையில் முடியும் என்றும், தீமொழிக் கூறின் தீதாய் முடியும் என்றும் கொள்வர்.

 

ஆற்றுப்படுத்துதல் :

·           சிறுதாம்பில் இளங்கன்று கட்டப்பட்டு இருந்தது. பசியால் வாடி நின்றது.

·           இடைமகள் பசியால் வாடிய இளங்கன்றை காணல்.

·           உம் தாயர்  இப்போது வந்து விடுவர் இடையர் அழைத்து வருவர் எனக் கூறல்.

·           முதுப் பெண்கள் இந்த நற்சொல்லை கேட்டல்.

·           உன் தலைவன் வந்து விரைந்து வந்துவிடுவான் என ஆற்றுப்படுத்துதல்.

முடிவுரை :

        முல்லைப்பாட்டின் மூலம் கார்காலம் என்பது மிகுந்த மழைப்பொழிவு தரும் மாதங்களாக இருந்தததையும், அம்மாதங்களில் மழை எவ்வாறு பொழிகிறது என்பதனையும், கார்காலத்தில் மாலைப் பொழுதில் நடைபெறும் நிகழ்வுகள், விரிச்சி என்பதன் பொருள், தலைவியை எவ்வாறு முதுமக்கள் ஆற்றுப்படுத்துகின்றனர் என்பதனையும் அறிந்து கொண்டோம்.

7

குறிப்புச் சட்டம்

முன்னுரை

தேசாந்திரி

கருணை அன்னமய்யா

முடிவுரை

முன்னுரை :

        பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற மனித நேயம் விருந்தோம்பல்.இக்கட்டுரையில் கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பலைக் காணலாம்.

தேசாந்திரி:

Ø  சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி.

Ø  அன்னமய்யாவுடன் ஒரு ஆள் வந்தான்.

Ø  அவன் மிக சோர்வாக இருந்தான்.

Ø  லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான்.

Ø  குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது.

Ø  வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான்.

கருணை அன்னமய்யா:

Ø  அவன் பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும் கூறினான்.

Ø  அன்னமய்யா ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும், துவையலும் வைத்துக் கொடுத்தார்.

Ø  கடுமையான பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி உறங்கினான்.

Ø  ஆனந்த உறக்கம் கண்டான்.

முடிவுரை:

        பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து காக்கின்ற கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் போற்றுதலுக்கு

7

விடைக்குறிப்பு தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர்,

அரசு உயர்நிலைப்பள்ளி,  வளைய செட்டிப்பட்டி

www.tamilvithai.com                                                                        www.kalvivithaigal.com

click here to get pdf

click here

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post