ஒரு
மதிப்பெண் தேர்வு – 2024
10 -ஆம் வகுப்பு தமிழ் இயல் : 1,2,3
நேரம்
: 45 மணித்துளிகள் மதிப்பெண்
: 30
அ.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:- 18×1=18
1. எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும் _________
அ) எந் + தமிழ் + நா ஆ) எந்த
+ தமிழ் + நா
இ) எம் + தமிழ் + நா ஈ)
எந்தம் + தமிழ் + நா
2. “ சாகும் போது தமிழ்படித்துச் சாக வேண்டும் – என்றன்
சாம்பலும் தமிழ்
மணந்து வேக வேண்டும்” – என்று கூறியவர்
அ) பெருஞ்சித்திரனார் ஆ) க.சச்சிதானந்தன் இ) தேவநேய பாவாணர் ஈ) அப்பாத்துரையார்
3. “நாடும் மொழியும் நமதிரு
கண்கள்” எனக் கூறியவர்___________
அ) பாரதிதாசன் ஆ) தேவநேய பாவாணர் இ) பாரதியார் ஈ) பெருஞ்சித்திரனார்
4.
‘ மெத்த வணிகலன் ‘ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது
__
அ) வணிக கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்
ஈ)
வணிக கப்பல்களும் அணிகலன்களும்
5. உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக
மாநாடு நடத்திய முதல் நாடு____________
அ) சீனா ஆ) சிங்கப்பூர் இ) மலேசியா ஈ) இந்தியா
6.
கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது – தொடரில் இடம்
பெற்றுள்ள தொழிற்பெயரும்,
வினையாலணையும் பெயரும் முறையே __________
அ) பாடிய;கேட்டவர் ஆ)
பாடல்;பாடிய
இ)
கேட்டவர்;பாடிய ஈ)
பாடல்;கேட்டவர்
7.
வேர்கடலை,மிளகாய்விதை,மாங்கொட்டை
ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை ________
அ) குலை வகை ஆ) மணிவகை இ)
கொழுந்து வகை ஈ) இலை வகை
8.
காய்ந்த இலையும்,காய்ந்த
தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள்.
இத்தொடரில்
அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது ___
அ) இலையும்,சருகும் ஆ)
தோகையும் சண்டும்
இ) தாளும்
ஓலையும் ஈ)
சருகும் சண்டும்
9.
செய்தி 1 – ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 15ஐ உலகக் காற்று நாளாக
கொண்டாடி வருகிறோம்.
செய்தி 2 – காற்றாலை
மின் உற்பத்தியில் இந்தியாவில் தமிழகம் இரண்டாமிடம் என்பது எனக்குப் பெருமையே
செய்தி 3 – காற்றின்
ஆற்றலைப் பயன்படுத்திக் கடல்கடந்து வணிகம்செய்து அதில் வெற்றி கண்டவர்கள் தமிழர்கள்!
அ) செய்தி 1 மட்டும் சரி ஆ) செய்தி 1,2 ஆகியன சரி
இ)
செய்தி 3 மட்டும் சரி ஈ) செய்தி
1,3 ஆகியன சரி
10.
பெரிய மீசை சிரித்தார். தடித்தச்
சொல்லுக்கான தொகையின் வகை எது?
அ) பண்புத்தொகை ஆ)
உவமைத்தொகை
இ) அன்மொழித்தொகை ஈ)
உம்மைத்தொகை
11.
உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்
உனக்குப்
புகழ்ச்சிகள் கூறுகிறோம் – பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?
அ) உருவகம்,எதுகை ஆ) மோனை,எதுகை
இ) முரண்,இயைபு ஈ)
உவமை,எதுகை
12.
பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ)
கொண்டல் - 1. மேற்கு ஆ) கோடை - 2. தெற்கு
இ)
வாடை - 3.
கிழக்கு ஈ) தென்றல் - 4.
வடக்கு
அ)
1,2,3,4 ஆ) 3,1,4,2 இ) 4,3,2,1 ஈ) 3,4,1,2
13. எறும்புந்தன் கையால் எண்சாண் –
எண்ணுப்பெயரை காண்க.
அ) ரு ஆ) க இ)
உ ஈ)
அ
14. அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும் – எனக் கூறும்
நூல்
அ) புறநானூறு ஆ)
நற்றிணை இ) குறுந்தொகை ஈ) பொருநராற்றுப்படை
15.‘விருந்தினரைப் பேணுவதற்குப் பொருள் தேவைப்பட்டதால், தன்
கருங்கோட்டுச் சீறியாழைப் பணையம் வைத்து விருந்தளித்தான் என்கிறது புறநானூறு’ – இச்செய்தி
உணர்த்தும் விருந்து போற்றிய நிலை
அ) நிலத்திற்கேற்ற விருந்து ஆ) இன்மையிலும் விருந்து
இ) அல்லிலும் விருந்து ஈ) உற்றாரின் விருந்து
16. கொடுக்கப்பட்டுள்ள பழமொழிகளுள் உணவு தொடர்பான பழமொழியைத்
தேர்ந்தெடுக்கவும்.
அ) அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
ஆ) அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.
இ) வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்
ஈ) ஆடிக்காற்றில் அம்மியும் நகரும்.
17. கீழ்கண்டவற்றில் தவறானது எது?
அ) Monolingual - ஒரு மொழி
ஆ) Conversation - உரையாடல்
இ) Consonant - உயிரெழுத்து
ஈ) Discussion - கலந்துரையாடல்
18. எய்துவர் எய்தாப் பழி – இக்குறளடிக்கு பொருந்தும் வாய்பாடு
எது?
அ) கூவிளம் தேமா மலர் ஆ)
கூவிளம் புளிமா நாள்
இ) தேமா புளிமா காசு ஈ) புளிமா தேமா பிறப்பு
ஆ. பாடலைப் படித்து வினாக்களுக்கு விடை தருக:- 12×1=12
“ அன்று அவண் அசைஇ, அல்சேர்ந்து
அல்கி,
கன்று எரி ஒள்இணர் கடும்பொடு மலைந்து
சேந்த
செயலைச் செப்பம் போகி,
அலங்கு
கழை நரலும் ஆரிப்படுகர்ச்
சிலம்பு
அடைந்திருந்த பாக்கம் எய்தி
நோனாச்
செருவின் வலம்படு நோன்தாள்
மான
விறல்வேள் வயிரியம் எனினே,”
19
‘ அசைஇ’ இச்சொல்லின் இலக்கணக் குறிப்பு
அ.
வினைத்தொகை ஆ. பண்புத்தொகை
இ.
சொல்லிசை அளபெடை ஈ. செய்யுளிசை
அளபெடை
20.
‘ சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி ‘ – இவ்வடியில் ‘ பாக்கம் ‘ என்னும் சொல்லின்
பொருள்
அ.
சிற்றூர் ஆ. பேரூர் இ. கடற்கரை ஈ.
மூதூர்
21.
பாடல் இடம் பெற்ற நூல்
அ.
சிலப்பதிகாரம் ஆ. முல்லைப்பாட்டு
இ.
மலைபடுகடாம் ஈ. காசிக்காண்டம்
22.
பாடலில் இடம்பெற்றுள்ள அடி எதுகைச் சொற்கள்
அ. அன்று,கன்று,அலங்கு,சிலம்பு ஆ. அன்று,அவண்,அசைஇ,அல்கி
இ.
சேந்த,செயலை,செப்பம்,சிலம்பு ஈ. அல்கி,எய்தி,போகி,எனினே
பாடலைப்
படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
‘
முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
மெத்த வணிகலமும் மேவலால் – நித்தம்
அணைகிடந்தே
சங்கத் தவர்காக்க ஆழிக்கு
இணைகிடந்த
தேதமிழ் ஈண்டு “
23.
இப்பாடல் இடம் பெற்ற நூல்
அ.
நற்றிணை ஆ. முல்லைப்பாட்டு ‘
இ.
குறுந்தொகை ஈ.தனிப்பாடல் திரட்டு
24.
பாடலில் இடம் பெற்றுள்ள பொருத்தமான அணி
அ.
இரட்டுற மொழிதல் அணி ஆ, தீவக அணி
இ.
வஞ்சப்புகழ்ச்சி அணி ஈ. நிரல்
நிறை அணி
25.
தமிழுக்கு இணையாய்ப் பாடலில் பொருத்தப்படுவது
அ.
சங்கப் பலகை ஆ. கடல் இ. அணிகலன் ஈ. புலவர்கள்
26.
தொழிற்பெயர் அல்லாத சொல்
அ.
துய்த்தல் ஆ. அணிகலன்
இ. மேவல் ஈ. காணுதல்
பாடலைப்
படித்து வினாக்களுக்கு விடையளிக்க.
“
நனந்தலை உலகம் வளைஇ நேமியோடு
வலம்புரி
பொறித்த மாதாங்கு தடக்கை
நீர்செல,
நிமிர்ந்த மாஅல் போல,
பாடுஇமிழ்
பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,
கோடு
கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி
பெரும்பயல்
பொழிந்த சிறுபுன் மாலை”
27.
இப்பாடல் இடம் பெற்ற நூல்
அ.
முல்லைப்பாட்டு ஆ. மலைபடுகடாம்
இ.
நற்றிணை ஈ. குறுந்தொகை
28.
நனந்தலை உலகம் – இத்தொடரின் பொருள்
அ.
சிறிய உலகம் ஆ. தலையாய உலகம்
இ.
நனைந்த உலகம் ஈ. அகன்ற உலகம்
29.
பாடலில் இடம்பெற்றுள்ள அடி எதுகைச் சொற்கள்
அ.
பெரும்பெயல், பொழிந்த ஆ. பாடுஇமிழ்,பனிக்கடல்
இ.பாடுஇமிழ்,கோடுகொண்டு ஈ. நீர்செல,நிமிர்ந்த
30.
பாடலில் இடம் பெற்றுள்ள அளபெடை
அ. தடக்கை ஆ. வளைஇ இ. பெரும்பெயல் ஈ. கொடுஞ்செலவு