மாதிரி காலாண்டுத் தேர்வு – 2024
வினாத்தாள் - 3
மொழிப்பாடம் – தமிழ்
பத்தாம் வகுப்பு
நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண் : 100
______________________________________________________________________
பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )
அ) சரியான விடையைத் தேர்வு செய்க. 15×1=15
1. ‘ மெத்த வணிகலன் ‘ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது __
அ) வணிக கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்
ஈ) வணிக கப்பல்களும் அணிகலன்களும்
2. கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?
அ) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்
ஆ) ஊரில் விளைச்சல் இல்லாததால்
இ) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்
ஈ) அங்கு வறுமை இல்லாததால்
3. அறிஞருக்கு நூல்,அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது.
அ) வேற்றுமை உருபு ஆ) எழுவாய் இ) உவம உருபு ஈ) உரிச்சொல்
4 அருந்துணை என்பதைப் பிரித்தால் _______________
அ) அருமை + துணை ஆ) அரு + துணை
இ) அருமை + இணை ஈ) அரு + இணை
5. . மலர்கள் தரையில் நழுவும். எப்போது?
அ) அள்ளி முகர்ந்தால் ஆ) தளரப் பிணைத்தால்
இ) இறுக்கி முடிச்சிட்டால் ஈ) காம்பு முறிந்தால்
6. “ உனதருளே பார்ப்பன் அடியேனே” – யார் யாரிடம் கூறியது?
அ) குலசேகராழ்வாரிடம் இறைவன் ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார் இ) மருத்துவரிடம் நோயாளி ஈ) நோயாளியிடம் மருத்துவர்
7. பழமொழியை நிறைவு செய்க:- ஒரு பானை_______________
அ) ஒரு சோறு பதம் ஆ) ஒரு வீடு
இ) ஒரு குடும்பம் ஈ) ஒரு மண் சட்டி
8. கலைஞரின் கதை வசனங்களில் பெண்கள் முன்னேற்றம் பற்றி பேசிய படம்
அ) பராசக்தி ஆ) அரசிளங்குமரி
இ) பாசப் பறவைகள் ஈ) மருதநாட்டு இளவரசி
9. தமிழெண்ணைத் தேர்க : ஐந்து சால்பு ஊன்றிய தூண்
அ) க ஆ) உ இ) எ ஈ) ரு
10. பொருந்தும் விடை வரிசையைத் தேர்ந்தெடுக்க.
1) வினைமுற்று - I ) கெடு
2. தொழிற்பெயர் - ii) கட்டு
3. முதனிலைத் தொழிற்பெயர் - iii) எய்தல்
4. வினையடி - iv) வந்தான்
அ) (1) – (iv) (2) – (iii) (3) – (ii) (4) – (i)
ஆ) (1) – ( iii) (2) – ( i) (3) – (iv) (4) – (ii)
இ) (1) – (iv) (2) – (iii) (3) – (i) (4) – (ii)
ஈ) (1) – ( i) (2) – (iii) (3) – (ii) (4) – (iv)
11. “ நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்ப்பட வைத்தாங்கே
குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு
கோல வெறிபடைத்தோம்” – பாரதியார்
இப்பாடலில் இடம் பெற்றுள்ள அடிஎதுகைச் சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்.
அ) வானத்து – வைத்தாங்கே ஆ) காற்றையும் – குடித்தொரு
இ) நிலாவையும் – குலாவும் ஈ) வைத்தாங்கே – வெறிப்படைத்தோம்
பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-
“ செந்தமிழே! உள்ளுயிரே செப்பரிய நின் பெருமை
எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரை விரிக்கும்?
முத்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்
விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும் “
12) ‘ எந்தமிழ்நா’ என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்:
அ) எந் + தமிழ் + நா ஆ) எந்த + தமிழ் + நா
இ) எம் + தமிழ் + நா ஈ) எந்தம் + தமிழ் + நா
13) ‘ செந்தமிழ் ‘ என்பது:
அ) பண்புத்தொகை ஆ) வினைத்தொகை
இ) உவமைத்தொகை ஈ) உம்மைத்தொகை
14. ‘ உள்ளுயிரே’ என்று கவிஞர் யாரை அழைக்கிறார்?
அ) தம் தாயை ஆ) தமிழ் மொழியை
இ) தாய் நாட்டை ஈ) தம் குழந்தையை
15) “ வேறார் புகழுரையும் “ – இத்தொடரில் ‘ வேறார் ‘ என்பது.
இ) வேற்று மொழியினர் ஈ) புலவர்
பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 4×2=8
(21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.)
16. விடைக்கேற்ற வினா அமைக்க.
அ. நாடும் மொழியும் நமதிரு கண்கள் என்கிறார் பாரதியார்
ஆ. வித்துவகோடு கேரள மாநிலத்தில் உள்ளது.
17. வசன கவிதை – குறிப்பு வரைக.
18. குறிப்பு வரைக – “ சதாவதானம்”
19 மருத்துவத்தில் மருந்துடன் அன்பும்,நம்ப்பிக்கையும் ஆற்றும் பாங்கினை எழுதுக.
20. பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? – ஆகிய தொடர்களில் எழுவாயுடன் பயனிலைகள் யாவை?
21. விடல் – என முடியும் குறளை எழுதுக.
பிரிவு – 2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5×2=10
22. வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய் மொழிக்குச் செல்கிறேன் – இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?
23. பகுபத உறுப்பிலக்கணம் தருக : பொறித்த
24. கலைச்சொல் தருக:- அ) VOWEL ஆ) SEA BREEZE
25. . கீழ்க்காணும் ஊர்ப்பெயர்களின் மரூஉவை எழுதுக.
அ) உதக மண்டலம் ஆ) திருநெல்வேலி
இ) சைதாப்பேட்டை ஈ) கும்பகோணம்
26. அடிக்கோடிட்ட தொகைநிலைத் தொடர்களை வகைப்படுத்துக.
அன்புச்செல்வன் திறன்பேசியின் தொடுதிரையில் படித்துக் கொண்டிருந்தார்,
27 “ சீசர் எப்போதும் என் சொல்பேச்சைக் கேட்பான். புதியவர்களைப் பார்த்துக் கத்துவானே தவிர கடிக்க மாட்டான்” என்று இளமாறன் தன்னுடைய வளர்ப்பு நாயைப் பற்றிப் பெருமையாகக் கூறினான். – இதில் உள்ள திணை வழுக்களைத் திருத்தி எழுதுக
குறிப்பு :- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
குறிப்பைப் பயன்படுத்தி விடைதருக.
குறிப்பு : எதிர்மறையாக மாற்றுக.
(அ) பார்த்த படம் (ஆ) எழுதாக்கவிதை
28. . தஞ்சம் எளியர் பகைக்கு – இவ்வடிக்குரிய அசைகளையும் வாய்பாடுகளையும் எழுதுக.
பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )
பிரிவு – I
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:- 2×3=6
29. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்குப் பருவக்காற்றாகவும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவக்காற்றாகவும் வீசுகிறேன். இவ்வாறாக மழைப்பொழிவைத் தருகின்றேன். இந்தியாவின் முதுகெலும்[பு வேளாண்மை தானே!.இவ்வேளாண்மை சிறப்பதிலும் நாடு தன்னிறைவு பெறுவதிலும் நான் பங்கெடுக்கின்றேன். இந்தியாவிற்குத் தேவையான எழுபது விழுக்காடு மழையளவினைத் தென்மேற்குப் பருவக்காற்றாகக் கொடுக்கின்றேன்.
அ). இந்தியாவின் முதுகெலும்பு எது?
ஆ). வடகிழக்கு பருவக்காற்று வீசும் காலம் எது?
இ). இந்தியாவிற்கு தென்மேற்குப் பருவக்காற்று கொடுக்கும் மழையின் அளவு யாது?
30. . சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.
31. சோலைக்( பூங்கா) காற்றும் மின் விசிறிக் காற்றும் பேசிக் கொள்வது போல் ஓர் உரையாடல் அமைக்க.
பிரிவு – II
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
( 34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.)
32. பெருமாள் திருமொழி – நூற் குறிப்பு வரைக.
33. “ மகரந்த தூளைச் சுமந்து கொண்டு,
மனத்தை மயலுறுத்துகின்ற இனிய
வாசனையுடன் வா” – என்ற பாடல் அடிகளில்
(அ) அடிமோனைச் சொற்களை எடுத்து எழுதுக.
(ஆ) பாரதியார் எதனை வாசனையுடன் வரச் சொல்லுகிறார்?
(இ) சுமந்துகொண்டு – என்ற சொல்லைக் கொண்டு தொடர் ஒன்றை அமைக்க.
34. அ) “ சிறுதாம்பு “ எனத் தொடங்கும் முல்லைப்பாட்டு பாடலை அடிமாறாமல் எழுதுக
(அல்லது )
ஆ) “விருந்தினனாக” எனத் தொடங்கும் பாடலை எழுதுக.
பிரிவு -III
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
35. ‘ கண்ணே கண்ணுறங்கு!
காலையில் நீயெழும்பு!
மாமழை பெய்கையிலே
மாம்பூவே கண்ணுறங்கு!
பாடினேன் தாலாட்டு!
ஆடி ஆடி ஓய்ந்துறங்கு! – இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.
36. கவிஞர், தாம் கூற விரும்பும் கருத்திற்கு ஏற்றவாறு தற்குறிப்பேற்ற அணி அமைவதை எடுத்துக்காட்டுக.
37. கொண்டுக்கூட்டுப் பொருள்கோளை விளக்குக.
பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. 5×5=25
38. அ) ) காசிக்காண்டம் குறிப்பிடும் இல்லற ஒழுக்கங்களில் எவையேனும் ஐந்தினை எழுதி, உங்கள் வீட்டிற்கு வந்த விருந்தினரை எதிர்கொண்டு, நீங்கள் விருந்தளித்த நிகழ்வோடு ஒப்பிட்டு எழுதுக. ( அல்லது )
ஆ) இடைக்காடனுக்கு மன்னன் சிறப்பு செய்தது ஏன்? நாடக வடிவில் எழுதுக.
39. நீங்கள் படித்த நூல் ஒன்றின் சிறப்புகளைக் குறிப்பிட்டு அந்நூலைப் படிக்குமாறு பரிந்துரை செய்து உங்கள் நண்பருக்குக் கடிதம் ஒன்று எழுதுக.. ( அல்லது )
ஆ. மருந்தகம் ஒன்றிலிருந்து உங்கள் தாத்தா வாங்கி வந்த மருந்தின் பயன்பாட்டுத் தேதி முடிவடைந்ததை அறிந்த நீங்கள், அந்த மருந்தகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரதுறை ஆய்வாளர் அவர்களுக்கு முறையீட்டுக் கடிதம் ஒன்றை எழுதுக.
40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.
41. அமுதன் தன் தந்தை மாணிக்கமணி அவர்களிடம் நூலகத்தில் உறுப்பினராக வேண்டினான். அவரும் அமுதனிடம் 200/- ரூபாயும், 15. காந்தி தெரு, குமாரபாளையம்,நீலகிரி மாவட்டம் என்ற முகவரியிட்ட அடையாளச் சான்றையும் கொடுத்தார். கிளை நூலகத்திற்கு சென்ற அமுதனாக, தேர்வர் தன்னைக் கருதி, கொடுக்கப்பட்ட நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.
42. அ) புயல் அறிவிப்பைக் கேட்ட நீங்கள்,உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் காப்பாற்றும் வகையில் செய்யும் செயல்களை வரிசைப்படுத்துக. ( அல்லது )
ஆ) மொழிபெயர்க்க:-
Respected ladies and gentleman. I am Ilangaovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammer for language have also defined grammer for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, Engaland and Worldwide. Though our culture is very old,it has been updates consistently. We should feel proud about our culture. Thank you one and all.
குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு. தலைவாழை இலையில் விருந்தினருக்கு உணவளிப்பது நம் மரபாகக் கருதப்படுகிறது. நம் மக்கள் வாழை இலையின் மருத்துவப் பயன்களை அன்றே அறிந்திருந்தனர். உண்பவரின் மனமறிந்து உணவு வகைகளைப் பரிமாறுவர்.
(I) தமிழர் பண்பாட்டில் எதற்கு தனித்த இடமுண்டு?
(ii). யாருக்கு உணவளிப்பது நம் மரபாகக் கருதப்படுகிறது?
(iii) நம் மக்கள் வாழை இலையின் எந்தப் பயன்களை அறிந்திருந்தனர்?
(iv) உண்பவரின் எந்த நிலையை அறிந்து உணவு பரிமாறுவர்?
(v) இப்பத்திக்கு ஏற்ற தலைப்பு தருக..
பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )
அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. 3×8=24
43. அ) மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்தரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப் பேச்சு ஒன்றை உருவாக்குக.. ( அல்லது )
ஆ) காற்று மாசு அடைவதைப் போன்று நிலம் மாசு அடைவதை விவரித்து எழுதுக.
44. அ அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க.
( அல்லது )
ஆ ‘ கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே ‘ - என்கிறது வெற்றிவேற்கை, மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச்சுடரை ஏற்றிய கதையைப் பற்றி உங்களின் கருத்துகளை விவரிக்கவும்.
45. அ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை எழுதுக
அ) முன்னுரை – உழவுத் தொழில் – உழவர் – உழவுத் தொழிலின் இன்றியாமை – உழவர்களை மதித்தல் – உணவினை வீணாக்கமல் உண்ணுதல் – முடிவுரை ( அல்லது )
ஆ) உங்கள் பகுதியில் நடைபெற்ற கலைத்திருவிழாவிற்குச் சென்று வந்த நிகழ்வை கட்டுரையாக்குக.
KINDLY WAIT FOR 10 SECONDS