மாதிரி முதல் இடைத் தேர்வு – 2024
9 -ஆம் வகுப்பு தமிழ்
நேரம்
: 1.30 மணி மதிப்பெண்
: 50
அ.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:- 8×1=8
1. விடுபட்ட
இடத்திற்கு பொருத்தமான விடை வரிசையைக் குறிப்பிடுக.
அ) _____இனம் ஆ) ______ வண்ணம்
இ) _____ குணம் ஈ)
_____ வனப்பு
௧ ) மூன்று,நூறு,பத்து,எட்டு ௨) எட்டு,நூறு,பத்து,மூன்று
௩) பத்து,நூறு,எட்டு,மூன்று ௪) நூறு,பத்து,எட்டு,மூன்று
2. ‘ மிசை ‘ என்பதன் எதிர்சொல்.
அ) கீழே ஆ) மேலே இ) இசை ஈ) ஆசை
3 நீர்நிலைகளோடு தொடர்பில்லாதது எது?
அ) இலஞ்சி ஆ) அகழி இ) ஆறு ஈ) புவி
4. பொருத்தமான விடையைத் தேர்க.
அ) நீரின்று
அமையாது உலகு - திருவள்ளுவர்
ஆ) நீரின்று
அமையாது யாக்கை - ஓளவையார்
இ) மாமழை போற்றுதும் - இளங்கோவடிகள்
க) அ,இ ௨) ஆ,இ ௩) அ,ஆ ௪)
அ,ஆ,இ
5.
நான் திடலில் ஓடினேன் – எவ்வகை வினை?
அ)
தன்வினை ஆ) பிறவினை இ) செய்வினை ஈ) செயபாட்டு வினை
6.
பகுபத உறுப்புகளில் கட்டளைச் சொல்லாக வரும் பகுதி ______________
அ)
விகுதி ஆ) பகுதி இ) இடைநிலை ஈ) சாரியை
7.
‘ பக்திச்சுவை நனிச் சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ” என்று பாராட்டப்பட்டவர்____________
அ)
இளங்கோவடிகள் ஆ) மீனாட்சி சுந்தரனார்
இ)
சேக்கிழார் ஈ) தமிழ்ஒளி
8.
மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலை____________
அ)
இலஞ்சி ஆ) ஊருணி இ) புனற்குளம் ஈ) குண்டம்
ஆ.
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளிக்க:-
5×2=10
9. தமிழோவியம்
கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.
10.
கண்ணி என்பதன் விளக்கம் யாது?
11.
வீணையோடு வந்தாள், கிளியே பேசு – தொடரின் வகையைச் சுட்டுக.
12. “ கூவல்
“ என்று அழைக்கப்படுவது எது?
13.
நிலையான வானத்தில் தோன்றி மறையும் காட்சிக்குப் பெரியபுராணம் எதனை ஒப்பிடுகிறது?
14.
கலைச்சொற்களை மொழிபெயர்க்க.
அ) COMPARATIVE GRAMMER ஆ) Tropical Zone
15.
பிழை
நீக்கி எழுதுக.
1. சர் ஆர்தர் காட்டன் கல்லணையின்
கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டியது.
2.
மதியழகன் தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உடனடியாகத் தண்ணீர் கொண்டு
குளிர வைத்தாள்.
இ. ஏவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளி 3×3=9
16. புதுக்கோலம்
புனைந்து தமிழ் வளர்ப்பாய் – உங்கள் பங்கினை குறிப்பிடுக.
17.
தன்வினை,பிறவினை – எடுத்துக்காட்டுகளுடன் வேறுபடுத்திக் காட்டுக
18.
சோழர்காலக் குமிழித்தாம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?
19.
பட்ட மரத்தின் வருத்தங்கள் யாவை?
20.
அடுத்த தலைமுறைக்கும் தண்ணீர் தேவை – அதற்கு நாம் செய்ய வேண்டியவற்றை
எழுதுக.
ஈ.
ஏவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி 2×5=10
21.
திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்த்துணையாக இருக்கிறது என்பதனை
எடுத்துக்காட்டுடன் விளக்குக.?
22.
நயம் பாராட்டுக:-
விரிகின்ற நெடுவானில்,கடற்பரப்பில்
விண்ணோங்கு பெருமலையில்,பள்ளத்தாக்கில்
பொழிகின்ற புனலருவிப் பொழிலில்,காட்டில்
புல்வெளியில்,நல்வயலில்,விலங்கில்,புள்ளில்
தெரிகின்ற பொருளிலெல்லாம் திகழ்ந்து நெஞ்சில்
தெவிட்டாத நுண்பாட்டே,தூய்மை ஊற்றே,
அழகு என்னும் பேரொழுங்கே மெய்யே,மக்கள்
அகத்திலும் நீ குடியிருக்க வேண்டுவேனே! - ம.இலெ. தங்கப்பா
23.
பெரிய புராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக.
24.
“ தண்ணீர் “ கதையைக் கருபொருள் குன்றாமல் சுருக்கி தருக.
உ)
அடிபிறழாமல் எழுதுக 1×5=5
25. அ) “ தித்திக்கும்
முதல் நாச்சிந்துமே “ முடிய உள்ள தமிழ்விடுதூது பாடலை எழுதுக. (அல்லது)
ஆ) காடெல்லாம் எனத் தொடங்கும்
பெரிய புராணம் பாடலை எழுதுக
ஊ)
ஏதேனும் ஒன்றனுக்கு விடையளிக்க. 1×8=8
26.
அ) நிகழ்ச்சி நிரல் வடிவமைக்க.
உங்கள் பள்ளி இலக்கிய மன்றத்தின் சார்பில்
நடைபெறவிருக்கும் உலகத் தாய்மொழி நாள் ( பிப்ரவரி 21 ) விழாவிற்கான நிகழ்ச்சி நிரல்
ஒன்றை வடிவமைக்க
( அல்லது )
ஆ)
உங்களின் நண்பர் பிறந்தநாள் பரிசாக அனுப்பிய எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணனின் “ கால்
முளைத்த கதைகள் “ என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக.