எட்டாம்
வகுப்பு
தமிழ்
மொழித்திறன் பயிற்சிகள் - தொகுப்பு
மொழியை ஆள்வோம் / மொழியோடு
விளையாடு
இயல் -
1
மொழியை ஆள்வோம்
அகரவரிசைப்படுத்துக.
எழுத்து,
ஒலிவடிவம், அழகுணர்ச்சி, ஏழ்கடல், இரண்டல்ல , ஊழி,
உரைநடை , ஒளகாரம், ஓலைச்சுவடிகள்,
ஆரம்நீ, ஈசன், ஐயம்.
சரியான
மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. கோழி _____.
(கூவும்/கொக்க ரிக்கும்)
2. பால் _____.
(குடி/ பருகு)
3. சோறு _____.
(தின்/உண்)
4. பூ _____.
(கொய்/பறி)
5. ஆ _____.
(நிரை/மந்தை)
மரபுப்
பிழையை நீக்கி எழுதுக.
சேவல்
கொக்கரிக்கும் சத்தம் கேட்டுக் கயல் கண் விழித்தாள். பூப்பறிக்க நேரமாகி விட்டதை
அறிந்து தோட்டத்திற்குச் சென்றாள். அங்கு மரத்தில் குயில் கரைந்து கொண்டிருந்தது.
பூவைப் பறித்ததுடன், தோரணம் கட்ட மாவிலையையும்
கொய்து கொண்டு வீடு திரும்பினாள். அம்மா தந்த பாலைக் குடித்துவிட்டுப் பள்ளிக்குப்
புறப்பட்டாள்.
கட்டுரை
எழுதுக.
நான் விரும்பும்
கவிஞர்.
மொழியோடு விளையாடு
பொருத்தமான
பன்மை விகுதியைச் சேர்த்தெழுதுக.
கல்,
பூ, மரம், புல், வாழ்த்து, சொல், மாதம்,
கிழமை, ஈ, பசு, படம், பல், கடல், கை, பக்கம், பா
கள் |
க்கள் |
ங்கள் |
ற்கள் |
|
|
|
|
ஒரு
சொல் ஒரே தொடரில் பல பொருள் தருமாறு எழுதுக.
(எ.கா.)
அணி – பல அணிகளை அணிந்த வீரர்கள், அணிஅணியாய்ச் சென்றனர்.
படி, திங்கள்,ஆறு
சொற்களை
ஒழுங்குபடுத்தி முறையான தொடராக்குக.
1. வட்டெழுத்து
எனப்படும் தமிழ் கோடுகளால் வளைந்த அமைந்த எழுத்து.
2. உலகம்
தமிழ்மொழி வாழட்டும் உள்ளவரையிலும்.
3. வென்றதை
பரணி பகைவரை ஆகும் பாடும் இலக்கியம்.
4. கழுத்து
பிறக்கும் இடம் உயிரெழுத்து ஆகும்.
5. ஏகலை
கலையை அம்புவிடும் தமிழ் என்றது.
கலைச்சொல்
அறிவோம்.
Articulatory phonetics Vowel
Consonant Lexicography
Nasal consonant sound Phoneme
Epigraph Pictograph
மொழியை ஆள்வோம்
தமிழ்
எண்கள் அறிவோம்.
விடுபட்ட
கட்டங்களை நிரப்புக.
வண்ணமிடப்பட்டுள்ள
எண்களுக்குரிய தமிழ் எண்களை எழுதுக.
1. உலக ஈர
நில நாள் பிப்ரவரி 2. _____
2. உலக
ஓசோ ன் நாள் செப்டம்பர் 16. _____
3. உலக
இயற்கை நாள் அக்டோபர் 3. _____
4. உலக
வனவிலங்கு நாள் அக்டோபர் 6. _____
5. உலக
இயற்கைச் சீரழிவுத் தடுப்பு நாள் அக்டோபர் 5. _____
கொடுக்கப்பட்டுள்ள
தொடர்களின் வகையைக் கண்டறிந்து எழுதுக.
1. முக்காலமும்
உணர்ந்தவர்கள் நம் முன்னோர்கள். __________________
2. கடமையைச்
செய் . __________________
3. பாரதியார்
பாடல்களின் இனிமைதான் என்னே! __________________
4. நீ
எத்தனை புத்தகங்களைப் படித்திருக்கிறாய்? __________________
தொடர்களை
மாற்றுக.
(எ.கா.) நேற்று நம் ஊரில் மழை
பெய்தது. (வினாத்தொடராக மாற்றுக.) நேற்று நம் ஊரில் மழை பெய்ததா?
1. காடு
மிகவும் அழகானது. (உணர்ச்சித் தொடராக மாற்றுக.)
2. அந்தோ
! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே! (செய்தித்தொடராக மாற்றுக.)
3. அதிகாலையில்
துயில் எழுவது நல்லது. (விழைவுத் தொடராக மாற்றுக.)
4. முகில்கள்
திரண்டா ல் மழை பெய்யும் அல்லவா? (செய்தித்தொடராக மாற்றுக.)
5. காட்டில் புலி நடமாட்டம்
உள்ளது. (வினாத்தொடராக மாற்றுக.)
கடிதம்
எழுதுக.
விளையாட்டுப்போட்டியில்
வெற்றி பெற்ற உன் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக.
மொழியோடு விளையாடு
உரிய
வினைமுற்றுகளைக் கொண்டு கட்டங்களை நிரப்புக.
வினைமுற்றுக்கு
உரிய வேர்ச்சொல்லை எழுதுக.
1. நடக்கிறது
– நட 6.
பேசினாள் - _________
2. போனான்
- _________ 7.
வருக - _________
3. சென்றனர்
- _________ 8.
தருகின்றனர் - _________
4. உறங்கினாள்
- _________ 9.
பயின்றாள் - _________
5. வாழிய
- _________ 10.
கேட்டார் - _________
கலைச்சொல்
அறிவோம்.
1. Tribes 2.Plain
3.Valley 4.Thicket
5.Ridge 6.Locust
7.Leopard 8.Bud
மொழியை ஆள்வோம்
பொருத்துக.
1. காக்கை
உட்காரப் பனம்பழம் விழுந்தது போல - ஒற்றுமையின்மை
2. கிணறு
வெட்டப் பூதம் கிளம்பியது போல – பயனற்ற செயல்
3. பசு
மரத்து ஆணி போல – தற்செயல் நிகழ்வு
4. விழலுக்கு
இறைத்த நீர் போல – எதிர்பாரா நிகழ்வு
5. நெல்லிக்காய்
மூட்டையைக் கொட்டினாற் போல – எளிதில் மனத்தில் பதிதல்
உவமைத்
தொடர்களைப் பயன்படுத்தித் தொடர் அமைக்க.
1. குன்றின்
மேலிட்ட விளக்கைப் போல
2. வேலியே
பயிரை மேய்ந்தது போல
3. பழம்
நழுவிப் பாலில் விழுந்தது போல
4. உடலும்
உயிரும் போல
5. கிணற்றுத்
தவளை போல
கொடுக்கப்பட்டுள்ள
குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் முன்னுரை
– நோய் வரக் காரணங்கள் – நோய் தீர்க்கும் வழிமுறைகள் – வருமுன் காத்தல் – உணவும்
மருந்தும் – உடற்பயிற்சியின் தேவை – முடிவுரை
மொழியோடு விளையாடு
கீழ்க்காணும்
படம் சார்ந்த சொற்களை எழுதுக.
வட்டத்துள்ள பழமொழிகளைக் கண்டுபிடித்து எழுதுக.
கலைச்சொல் அறிவோம்
Disease Side Effect
Herbs Antibiotic
Millets Gene
Auditor Allergy
மொழியை ஆள்வோம்
கீழ்க்காண்பவற்றுள் ஒரு
சொல்லை எடுத்து ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களுடன் இணைத்துப் புதிய சொற்களை உருவாக்குக.
மா தேன் மலர் செம்மை சிட்டு கனி குருவி
இலை காய் கூடு முட்டை மரம்
பின்வரும்
தொடர்களில் உரிய இடங்களில் நிறுத்தக் குறிகளை இடுக.
1. பூக்கள்
நிறைந்த இடம் சோலை ஆகும்
2. திருக்குறள்
அறம் பொருள் இன்பம் என்னும் முப்பால் பகுப்பு கொண்டது
3. தமிழ்மொழி
செம்மையானது வலிமையானது இளமையானது
4. கபிலன்
தன் தந்தையிடம் இன்று மாலை விளையாடப் போகட்டுமா என்று கேட்டான்
5. திரு
வி க எழுதிய பெண்ணின் பெருமை என்னும் நூல் புகழ்பெற்றது.
பின்வரும்
பத்தியில் உரிய இடங்களில் நிறுத்தக் குறிகளை இடுக.
நூல் பல கல்
என்பர் பெரியோர் அறிவை வளர்க்கும் நூல்கள் அனைத்தையும் நம்மால் விலை கொடுத்து
வாங்க முடியுமா முடியாது நூலகங்கள் இக்குறையை நீக்க உதவுகின்றன பல்வேறு துறைகளைச்
சேர்ந்த அனைத்து நூல்களும் நிறைந்த இடம் நூலகம் ஆகும். நூலகத்தின் வகைகளாவன
மையநூலகம் மாவட்ட நூலகம் கிளை நூலகம் ஊர்ப்புற நூலகம் எனக்குப் பிடித்த நூல்களுடன்
வாழ்நாள் முழுவதும் சிறை யில் அடைத்தாலும் மகிழ்ச்சியடைவேன் என்றார் நேரு ஆகவே
நூலகத்தின் பயன் அறிவோம் அறிவு வளம் பெறுவோம்.
கீழ்க்காணும்
விளம்பரத்தைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
1. எந்த
நாளை முன்னிட்டுப் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது?
2. புத்தகக்
கண்காட்சி எங்கு நடைபெறுகிறது?
3. புத்தகக்
கண்காட்சி எத்தனை நாள்கள் நடைபெறுகிறது?
4. புத்தகக்
கண்காட்சிக்கான நுழைவுக் கட்டணம் எவ்வளவு?
5. புத்தகம்
வாங்குவோருக்கு வழங்கப்படும் சலுகை யாது?
கொடுக்கப்பட்டுள்ள
குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.
நூலகம்
முன்னுரை –
நூலகத்தின் தேவை – வகைகள் – நூலகத்திலுள்ளவை – படிக்கும் முறை
– முடிவுரை.
மொழியோடு விளையாடு
கீழ்க்காணும்
வினாக்களுக்கு விடைகளைக் கட்டத்தில் நிரப்புக.
வட்டத்தில்
சிக்கிய எழுத்துகளை எடுத்து எழுதுக.
எழுத்துகளை
முறைப்படுத்திக் கல்வி பற்றிய பழமொழியைக் கண்டறிக.
1. திரைப்படப்
பாடலாசிரியர் சோமுவின் ஊர்.
2. கேடில்
விழுச்செல்வ ம் ____.
3. குமர குருபரர் எழுதிய
நூல்களுள் ஒன்று.
4. ‘கலன்’
என்னும் சொல்லின் பொருள்.
5. ஏட்டுக்கல்வியுடன்
________ கல்வியும் பயில வேண்டும்.
6. திரு.வி.க.
எழுதிய நூல்களுள் ஒன்று.
7. மா +
பழம் என்பது _____ விகாரம்
கலைச்சொல் அறிவோம்
Punctuation Translation
Ornament Awareness
Talent Reform
மொழியை ஆள்வோம்
கோடிட்ட
இடங்களில் பொருத்தமான சொல்லுருபுகளை இட்டு நிரப்புக.
( கொண்டு,
இருந்து, உடைய, காட்டிலும்,
ஆக, நின்று, உடன்,
விட, பொருட்டு )
1. இடி ___________
மழை வந்தது.
2. மலர்விழி
தேர்வின் ____________ ஆயத்தமானாள்.
3. அருவி
மலையில் _____________ வீழ்ந்தது.
4. தமிழைக்
____________ சுவையான மொழியுண்டோ!
5. யாழ்,
தமிழர் ____________ இசைக்கருவிகளுள் ஒன்று
பின்வரும்
இசைக்கருவிகளின் பெயர்களை அகரவரிசைப்படுத்துக.
படகம், தவில்,
கணப்பறை , பேரியாழ், உறுமி,
உடுக்கை, தவண்டை, பிடில்,
நாகசுரம், மகுடி.
பின்வரும்
இணைச்சொற்களை வகைப்படுத்துக.
உற்றார்உறவினர்,
விருப்புவெறுப்பு, காலைமாலை , கன்னங்கரேல், ஆடல்பாடல், வாடிவதங்கி,
பட்டிதொட்டி, உள்ளும்புறமும், மேடுபள்ளம், நட்டநடுவில்.
சரியான
இணைச்சொற்களை இட்டு நிரப்புக.
( மேடுபள்ளம்,
ஈடுஇணை, கல்விகேள்வி, போற்றிப்புகழப்பட,
வாழ்வுதாழ்வு, ஆடிஅசைந்து )
1. சான்றோர் எனப்படுபவர் __________
களில் சிறந்தவர் ஆவர்.
2. ஆற்று வெள்ளம் __________
பாராமல் ஓடியது.
3. இசைக்கலைஞர்கள் __________
வேண்டியவர்கள்.
4. தமிழ்
இலக்கியங்களின் பெருமைக்கு __________ இல்லை
5. திருவிழாவில்
யானை __________ வந்தது.
கடிதம் எழுதுக.
இருப்பிடச் சான்று வேண்டி
வட்டாட்சியருக்கு விண்ணப்பம் எழுதுக.
மொழியோடு
விளையாடு
கலைச்சொல்
அறிவோம்
Crafts Knitting
Flute Horn
Drum Artisan
இயல்
- 6
மொழியை
ஆள்வோம்
பின்வரும்
மரபுத்தொடர்களைப் பொருளோடு பொருத்துக.
ஆயிரங்காலத்துப்
பயிர் - இயலாத செயல்.
கல்லில் நார்
உரித்தல் - ஆராய்ந்து பாராமல்.
கம்பி நீட்டுதல்
- இருப்பதுபோல் தோன்றும்; ஆனால் இருக்காது.
கானல்நீர் - நீண்டகாலமாக
இருப்பது.
கண்ணை
மூடிக்கொண்டு - விரைந்து வெளியேறுதல்
பின்வரும்
மரபுத்தொடர்களைத் தொடரில் அமைத்து எழுதுக.
1. வாழையடி
வாழையாக
2. முதலைக்கண்ணீர்
3. எடுப்பார்
கைப்பிள்ளை
கட்டுரை எழுதுக.
கைத்தொழில்
ஒன்றைக் கற்றுக் கொள்.
மொழியோடு விளையாடு
கலைச்சொல் தருக.
Thread Stitch
Loom Factory
Dairy farm Dyeing
Tanning Readymade
Dress
மொழியை ஆள்வோம்
பின்வரும்
தொடர்களில் உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.
1. அதைச் செய்தது நான் அன்று.
2. பானையை
உடைத்தது கண்ணன் அல்ல.
3. மல்லிகை
குளத்தில் பூக்கும் மலர் அல்லை.
4. சித்தர்க
ள் செயற்கையை விரும்பியவர்கள் அல்லோம்.
5. பகைவர்
நீவீர் அல்லர்.
சரியான
எதிர்மறைச் சொற்களைக் கொண்டு நிரப்புக.
1. தாங்கள்
படிக்க வேண்டிய புத்தகங்கள் இவை _____.
2. உங்களோ டு வருவோர் _____
அல்லோம்.
3. மணிமேகலை
செல்வ வாழ்வை விரும்பியவள் _____.
4. ஈ மொய்த்த பண்டங்கள் உடலுக்கு
நன்மை செய்வன _____.
5. இந்த
நிலத்துக்கு உரிமையாளர் _____ அல்லை.
கட்டுரை
எழுதுக.
நாட்டின்
வளர்ச்சியில் இளைஞர்களின் பங்கு.
மொழியோடு விளையாடு
வட்டத்தில்
உள்ள எழுத்துகளைப் பயன்படுத்திச் சொற்களை உருவாக்குக.
கதை
நிகழ்வுக்கேற்பச் சொற்றொடரை முறையாக வரிசைப்படுத்துக.
1. தொண்டைமானிடம்
ஒளவை தூது போதல்.
2. தொண்டைமான் படையெடுத்து வரும்
செய்தியை அதியமான் ஒளவை க்குத் தெரிவித்தல்.
3. ஒளவைக்குத்
தொண்டைமான் தன் படைக்கருவிகளைக் காட்டுதல்.
4. அதியமான்
ஒளவைக்கு நெல்லிக்கனி வழங்குதல்.
5. தொண்டைமான்
போர் வேண்டாம் என்று முடிவு செய்தல்.
6. தொண்டைமானிடம்
ஒளவை அதியமானின் படைச்சிறப்பைக் குறிப்பால் உணர்த்துதல்.
கலைச்சொல்
அறிவோம்.
Equestrian Support
The Hero Tax
Chief Minister Victory
Leadership Member of Legislative Assembly
மொழியை ஆள்வோம்
இரண்டு
தொடர்களை ஒரே தொடராக்குக.
(எ.கா.)
முத்து நன்கு படித்தான். முத்து வாழ்வில் உயர்ந்தான்.
முத்து நன்கு படித்ததால் வாழ்வில்
உயர்ந்தான்.
1. மழை
நன்கு பெய்தது. எங்களால் விளையாட முடியவில்லை.
2. எனக்குப்
பால் வேண் டும். எனக்குப் பழம் வேண்டும்.
3. திருமூலர்
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகக் கருதப்படுபவர். அவர் பதினெண்
சித்தர்களில் ஒருவராகக் கருதப்படுபவர்.
4. அறநெறிகளைக்
கூறும் நூல்களைக் கற்க வேண்டும். அவை கூறும் கருத்துகளைப் பின்பற்ற வேண்டும்.
5. குணங்குடி
மஸ்தான் சா கிபு எக்காளக்கண்ணி நூலை இயற்றியுள்ளார். நந்தீசுவரக் கண்ணி நூலை
இயற்றியுள்ளார்.
பின்வரும்
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை எழுதுக.
விபத்தில்லா
வாகனப் பயணம்
·
சாலைவிதிகளுக்கு
உட்பட்டு வாகனம் ஓட்டும் முறைகளை அறிந்து, வாகனங்களை
இயக்கினால் விபத்துகளைத் தவிர்க்கலாம்.
·
ஓட்டுநர் வாகனத்தைச் சாலையின் இடப்புறத்தில்
செலுத்துவதுடன், எதிரேவரும் வாகனத்திற்கு வலப்புறமாகக்
கடந்து செல்லப் போதிய இடம்விட வேண்டும்.
·
சந்திப்புச் சாலைகள்,
பயணிகள் கடக்கும் இடங்கள், திரும்பும் இடங்கள்
ஆகியவற்றை நெருங்கும்போது வாகனத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டும். அவ்விடங்களில்
இருப்பவர்களுக்கு எவ்வித ஆபத்தும் நேராது என்று உறுதி செய்த பிறகே கடந்து செல்ல
வேண்டும்.
·
சாலைச்சந்திப்பில்
நுழையும்போது, அந்தச் சாலையில் ஏற்கெனவே செல்லும் வாகனங்களுக்கு
முதலிடம் கொடுக்க வேண்டும்.
·
தீயணைப்பு வாகனம்,
அவசரச்சிகிச்சை ஊர்தி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளித்து, அவை தடையின்றிச் செல்வதற்குக் கண்டிப்பாக வழிவிட வேண்டும்.
·
எல்லா ஓட்டுநர்க ளும்
தேவையான இடங்களில் கை சைகை அல்லது வாகன எச்சரிக்கை விளக்குகளைத் தவறாமல்
பயன்படுத்த வேண்டும்.
·
மலைச்சாலைகள், மிகவும்
சரிவான சாலைகள் ஆகியவற்றில் கீழ்நோக்கிச் செல்லும் வாகனங்கள், மேல்நோக்கி வரும் வாகனங்கள் பாதுகாப்பாகக் கடந்து செல்ல முன்னுரிமை தர
வேண்டும்.
வினாக்கள்
1.
விபத்துகளை எவ்வாறு தவிர்க்கலாம்?
2.
கண்டிப்பாக வழிவிட வேண்டிய வாகனங்கள் யாவை?
3.
சாலைச் சந்திப்புகளில் எவற்றுக்கு முதலிடம் தர வேண்டும்?
4.
மலைச்சாலைகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறை யாது?
5.
வாகனம் செலுத்தும் முறையை எழுதுக.
கடிதம்
எழுதுக.
புத்தகம்
வாங்கி அனுப்புமாறு உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.
மொழியோடு விளையாடு
படத்தைப் பார்த்து எழுதுக.
ஓரெழுத்துச் சொல்
ஆ _______________
இரண்டு எழுத்துச்
சொல் ___________
_______________
மூன்று எழுத்துச்
சொல் ___________
_______________
நான்கு எழுத்துச்
சொல் ___________
_______________
ஐந்து எழுத்துச்
சொல் ___________
கன்றுகள்
கலைச்சொல் அறிக
Charity
Integrity
Saint
Rational
இயல் - 9
மொழியை ஆள்வோம்
கோடிட்ட
இடங்களைப் பொருத்தமான சொற்களால் நிரப்புக.
1. சிறுமி
______ (தனது/தமது) கையில் மலர்களை வைத்திருந்தாள்.
2. அம்பேத்கர்
ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகத் ______ ( தனது/தமது) உழைப்பை
நல்கினார்.
3. உயர்ந்தோர்
________ (தம்மைத்தாமே /தன்னைத்தானே) புகழ்ந்து கொள்ள மாட்டார்கள்.
4. இவை ______
(தான்/தாம்) எனக்குப் பிடித்த நூல்கள்.
5. குழந்தைகள்
________ (தன்னால்/தம்மால்) இயன்ற உதவிகளைப் பிறருக்குச் செய்கின்றனர்.
தொடரில்
உள்ள பிழைகளைத் திருத்தி எழுதுக.
முதியவர் ஒருவர்
தனது கால்களில் செருப்பில்லாமல் தன்னால் இழுக்க முடியாத வண்டியை இழுத்துச்
சென்றார். அதனைக் கண்ட கிருஷ்ணா தம்முடைய சித்தப்பாவிடம் அவருடைய காலணிகளைக்
கொடுக்குமாறு கூறினாள். அவரிடம் விலையுயர்ந்த காலணிகள்தான் இருந்தன. எனவே,
தனது வேறு காலணிகளைப் பிறகு தருவதாகச் சித்தப்பா கூறினார்.
கட்டுரை
எழுதுக.
உழைப்பே
உயர்வு.
மொழியோடு
விளையாடு
பின்வரும்
வினாக்களைப் படித்து இருவினாக்களுக்கு ஒரு விடை தருக.
(எ.கா)
குழம்பும் கூட்டும் மணப்பது ஏன்?
குருதி மிகுதியாய்க் கொட்டுவது
ஏன்? பெருங்காயத்தால்
1. ஆடை
நெய்வது எதனாலே? அறிவைப் பெறுவது எதனாலே?
2. மாடுகள்
வைக்கோல் தின்பது எங்கே? மன்னர்கள் பலரும் இறந்தது எங்கே?
3. கதிரவன்
மறையும் நேரம் எது? கழுத்தில் அழகாய்ச் சூடுவது எது?
4. வானில்
தேய்ந்து வளர்வது எது? வாரம் நான்கு கொண்டது எது?
கலைச்சொல்
அறிக
Objective University
Confidence Agreement
Doctorate Constitution
Round Table Conference Double voting
தயாரிப்பு