8TH-TAMIL-2MARK-QUESTIONS

 

எட்டாம் வகுப்பு

இரண்டு மதிப்பெண் வினாக்கள்

குறுவினாக்கள் - தொகுப்பு

இயல் - 1

தமிழ்மொழி வாழ்த்து

குறுவினா

1. தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?

2. தமிழ் எவற்றை அறிந்து வளர்கிறது?

தமிழ்மொழி மரபு

குறுவினா

 1. உலகம் எவற்றால் ஆனது?

2. செய்யுளில் மரபுகளை ஏன் மாற்றக்கூடாது?

தமிழ்வரிவடிவ வளர்ச்சி

குறுவினா

1. ஓவிய எழுத்து என்றால் என்ன?

2. ஒலி எழுத்து நிலை என்றால் என்ன?

3. ஓலைச்சுவடிகளில் நேர்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?

4. வீரமா முனிவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் எவையேனும் இரண்டனை எழுதுக.

இயல் - 2

ஓடை

குறுவினா

1. ஓடை எவ்வாறு ஓடுவதாக வாணிதாசன் கூறுகிறார்?

2. ஓடை எழுப்பும் ஒலிக்கு எதனை உவமையாக வாணிதாசன் குறிப்பிடுகிறார்?

கோணக்காத்துப் பாட்டு

குறுவினா

 1. கப்பல் கவிழ்ந்ததற்குக் காரணமாகக் கோணக்காத்துப் பாட்டு கூறுவது யாது?

2. புயல்காற்றினால் தொண்டைமான் நாட்டில் ஏற்பட்ட அழிவு யாது?

3. கொல்லிமலை பற்றிப் பாடல் கூறும் செய்தி யாது?

நிலம் பொது

குறுவினா

1. விலைகொடுத்து வாங்க இயலாதவை எனச் சியாட்டல் கூறுவன யாவை?

2. நிலத்திற்கும் செவ் விந்தியர்களுக்கும் உள்ள உறவு யாது?

3. எதனைத் தம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை எனச் சியாட்டல் கூறுகிறார்?

திருக்குறள்

குறுவினா

1. சான்றோருக்கு அழகாவது எது?

2. பழியின்றி வாழும் வழியாகத் திருக்குறள் கூறுவது யாது?

3. ‘ புலித் தோல் போர்த்திய பசு ‘ என்னும் உவமையால் திருக்குறள் விளக்கும் கருத்து யாது?

திருக்குறளைச் சீர்பிரித்து எழுதுக.

1. தக்கார் தகவிலரெ  ன்பது  அரவர் எச்சத்தால் காணப்படும்.

2. தொடங்கற்க எவ்வினையு மெள்ளற்க முற்று மிடங்கண்டபின் அல்லது

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. வலியில் நிலைமையான் வல்லுருவம் ______

  புலியின்தோல் ________ மேய்ந் தற்று.

2. விலங்கொடு _______ அனையர் ______

   கற்றாரோடு  ஏனை யவர்

சீர்களை முறைப்படுத்தி எழுதுக.

யாழ்கோடு அன்ன கொளல் கணைகொடிது

வினைபடு பாலால் செவ்விதுஆங்கு

படங்களுக்குப் பொருத்தமான திருக்குறள்களை எழுதுக.

இயல் - 3

நோயும் மருந்தும்

குறுவினா

1. நோயின் மூன்று வகைகள் யாவை?

2. நீலகேசியில் பிறவித்துன்பத்தைத் தீர்க்கும் மருந்துகளாகக் கூறப்படுவன யாவை?

வருமுன் காப்போம்

குறுவினா

1. நம்மை நோய் அணுகாமல் காப்பவை எவை?

2. அதிகமாக உண்பதால் ஏற்படும் தீமைகளாகக் கவிமணி குறிப்பிடுவன யாவை?

தமிழர் மருத்துவம்

குறுவினா

1. மருத்துவம் எப்போது தொடங்கியது?

2. நல்வாழ்விற்கு நாம் நாள்தோறும் செய்ய வேண்டியவை யாவை?

3. தமிழர் மருத்துவத்தில் மருந்துகளாகப் பயன்படுவன யாவை?

இயல் - 4

கல்வி அழகே அழகு

குறுவினா

1. யாருக்கு அழகு செய்ய வேறு அணிகலன்கள் தேவையில்லை?

 

 

புத்தியைத் தீட்டு

குறுவினா

1. யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?

2. பகைவர்களிடம் நாம் நடந்துகொள்ள வேண்டிய முறை யாது?

பல்துறைக் கல்வி

குறுவினா

1. இன்றைய கல்வியின் நிலை பற்றித் திரு. வி. க. கூறுவன யாவை?

2. தாய்நாடு என்னும் பெயர் எவ்வாறு பிறக்கிறது?

3. திரு. வி. க., சங்க ப் புலவர்களாகக் குறிப்பிடுபவர்களின் பெயர்களை எழுதுக.

இயல் – 5

திருக்கேதாரம்

குறுவினா

1. தமிழ் இசையோடு இணைந்து இசைக்கும் இசைக்கருவிகளாகச் சுந்தரர் கூறுவன யாவை?

பாடறிந்து ஒழுகுதல்

குறுவினா

1. பண்பு, அன்பு ஆகியவைப் பற்றிக் கலித்தொகை கூறுவன யாவை?

2. முறை, பொறை என்பவற்றுக்குக் கலித்தொகை கூறும் விளக்கம் யாது?

நாட்டுப்புறக் கைவினைக் கலைகள்

குறுவினா

1. எவற்றையெல்லாம் கைவினைக்கலைகள் எனக் கூறுகிறோம்?

 2. மண்பாண்டம் , சுடுமண் சிற்பம் - ஒப்பிடுக.

3. பனையோலை யால் உருவாக்கப்படும் பொருள்கள் யாவை?

திருக்குறள்

குறுவினா

1. நன்மையைத் தரும் செயலை ஒருவரிடம் ஒப்படை க்கும் வழி யாது?

2. சிறந்த ஆட்சியின் பண்பாகத் திருக்குறள் கூறுவது யாது?

3. அரசன் தண்டிக்கும் முறை யாது?

4. சிறந்த சொல்லாற்றலின் இயல்பு என்ன?

இயல் – 6

வளம் பெருகுக

குறுவினா

1. பயிர்கள் வாட்டமின்றிக் கிளைத்து வளரத் தேவையானது யாது?

2. உழவர்கள் எப்போது ஆரவார ஒலி எழுப்புவர்?

மழைச்சோறு

குறுவினா

1. மழைச்சோறு பாடலில் உழவர் படும் வேதனை எவ்வாறு கூறுப்படுகிறது?

2. மக்கள் ஊரைவிட்டு வெளியேறக் காரணம் என்ன?

கொங்கு நாட்டு வணிகம்

குறுவினா

1. மூவேந்தர்களின் காலம் குறித்து எழுதுக.

2. கொங்கு நாட்டில் பாயும் ஆறுகள் யாவை?

3. ‘தமிழ்நாட்டின் ஹாலந்து’ என்று அழைக்கப்படும் ஊர் எது? ஏன்?

இயல் – 7

படைவேழம்

குறுவினா

1. சோழ வீரர்களைக் கண்டு கலிங்கர் எவ்வாறு நடுங்கினர்?

2. கலிங்க வீரர்கள் எவ்வாறு அஞ்சி ஓடினர்?

3. சோழனின் யானைப் படையைக் கண்ட வீரர்களின் செயல்கள் யாவை?

விடுதலைத் திருநாள்

குறுவினா

 1. பகத்சிங் கண்ட கனவு யாது?

2. இருண்ட ஆட்சி என எதனை மீரா குறிப்பிடுகிறார்?

பாரத ரத்னா எம்.ஜி.இராமச்சந்திரன்

குறுவினா

1. எம்.ஜி.ஆர். நாடகத்துறையில் ஈடுபடக் காரணம் என்ன?

2. திரைத் துறையில் எம்.ஜி.ஆரின் பன்முகத் திறமைகள் யாவை?

3. எம்.ஜி.ஆரின் சமூக நலத்திட்டங்களுள் நான்கனை எழுதுக.

வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும்

பின்வரும் தொடர்களை வல்லினம் மிகும், மிகா இடங்கள் என வகைப்படுத்துக.

1. சுட்டுத் திரிபு - __________________________.

2. திசைப் பெயர்கள் - __________________________.

3. பெயரெச்சம் - __________________________.

 4. உவமைத் தொகை - __________________________.

5. நான்காம் வேற்றுமை விரி - __________________________.

 6. இரண்டாம் வேற்றுமை தொகை - __________________________.

7. வினைத் தொகை - __________________________.

 8. உருவகம் - __________________________.

9. எழுவாய்த் தொடர் - __________________________.

10. எதிர்மறைப் பெயரெச்சம் - __________________________.

இயல் – 8

ஒன்றே குலம்

குறுவினா

1. யாருக்கு எமனைப் பற்றிய அச்சம் இல்லை?

2. மக்களின் உள்ளத்தில் நிலைபெற்று வாழ விரும்புபவர் செய்ய வேண்டியது யாது?

 

மெய்ஞ்ஞான ஒளி

குறுவினா

1. உண்மை அறிவை உணர்ந்தோர் உள்ளத்தில் நிகழ்வது யாது?

2. மனிதனின் மனம் கலங்கக் காரணமாக அமைவது யாது?

அயோத்திதாசர் சிந்தனைகள்

குறுவினா

1. அயோத்திதாசரிடம் இருந்த ஐந்து பண்புகள் யாவை?

2. ஒரு சிறந்த வழிகாட்டி எவ்வா று இருக்கவேண்டும் என அயோத்திதாசர் கூறுகிறார்?

3. திராவிட மகாஜன சங்கம் எவற்றுக்காகப் போராடியது?

திருக்குறள்

குறுவினா

1. எது பெருமையைத் தரும்?

2. நண்பர்களின் இயல்பை அளந்துகாட்டும் அளவுகோல் எது?

3. இவ்வுலகம் யாரால் இயங்குவதாகத் திருக்குறள் கூறுகிறது?

4. நட்பு எதற்கு உரியது என்று திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?

படத்திற்குப் பொருத்தமான திருக்குறளை எழுதுக.

இயல் – 9

உயிர்க்குணங்கள்

குறுவினா

1. மனிதர்களின் பொது இயல்பாகக் கன்னிப்பாவை நூல் கூறுவது யாது?

2. மனிதர்களிடம் உள்ள பண்புகளாகக் கன்னிப்பாவை நூல் கூறுவனவற்றுள் நற்பண்புகள் யாவை?

இளைய தோழனுக்கு

குறுவினா

 1. கவலைகளைக் கவிஞர் எவ்வாறு உருவகப்படுத்துகிறார்?

2. தோல்வி எப்போது தூண்டுகோலாகும்?

சட்டமேதை அம்பேத்கர்

குறுவினா

1. அம்பேத்கர் தன் பெயரை ஏன் மாற்றிக் கொண்டார்?

2. தீண்டாமைக்கு எதிராக அம்பேத்கர் மேற்கொண்ட பணிகள் இரண்டினை எழுதுக.

3. வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளும் முன் அம்பேத்கர் கூறியது யாது?

 

CLICK HERE TO GET PDF

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post