முதல் இடைத்
தேர்வு – 2024
8
-ஆம் வகுப்பு தமிழ்
நேரம்
: 1.30 மணி மதிப்பெண்
: 50
அ.
அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 5×1=5
1. வளைந்த கோடுகளால் அமைந்த
மிகப்பழைய தமிழ் எழுத்து ______
என அழைக்கப்படுகிறது.
அ) கோட்டெழுத்து ஆ) வட்டெழுத்து இ) சித்திர எழுத்து ஈ) ஓவிய எழுத்து
2. பறவைகள்
_________ பறந்து செல்கின்றன.
அ) நிலத்தில் ஆ) விசும்பில் இ) மரத்தில் ஈ)
நீரில்
3 வல்லின எழுத்துகள்
பிறக்கும் இடம் _____.
அ) தலை ஆ) மார்பு இ)
மூக்கு ஈ) கழுத்து
4. பருத்தி + எல்லாம்
என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
அ) பருத்திஎல்லாம் ஆ)
பருத்தியெல்லாம்
இ) பருத்தெல்லாம் ஈ) பருத்திதெல்லாம்
5. ‘இன்னோசை ‘ என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____.
அ) இன் + ஓசை ஆ) இனி + ஓசை இ) இனிமை + ஓசை ஈ) இன் +
னோசை
ஆ.கோடிட்ட இடத்தை நிரப்புக :- 3×1=3
6. புகழாலும்
பழியாலும் அறியப்படுவது _______
7. ஆய்த எழுத்து
பிறக்கும் இடம் ______.
8.
மாடு வயலில் புல்லை மேய்ந்தது. – இத்தொடரிலுள்ள வினைமுற்று _____.
இ.
பொருத்துக. 2×1=2
9.
ஏவல் வினைமுற்று - படித்தான்
10.
குறிப்பு வினைமுற்று - ஓடு
- பொன்னன்
ஈ.அடிமாறாமல் எழுதுக:- 3+2=5
11. “ வாழ்க நிரந்தரம் “ எனத் தொடங்கும் தமிழ்மொழி வாழ்த்துப்
பாடலை எழுதுக. ( அல்லது )
“ ஓடை யாட
“ எனத் தொடங்கும் ஓடை பாடலை எழுதுக.
12.
இறைக்கு – என முடியும் திருக்குறளை எழுதுக.
உ.
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளி:- 5×2=10
13. தமிழ்
எவற்றை அறிந்து வளர்கிறது?
14. செய்யுளில் மரபுகளை
ஏன் மாற்றக் கூடாது?
15.
வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் எவையேனும் இரண்டனை எழுதுக.
16.
ஒலி எழுத்து நிலை என்றால் என்ன?
17. கொல்லிமலை
பற்றிப் பாடல் கூறும் செய்தி யாது?
18. நிலத்திற்கும் செவ்விந்தியர்களுக்கும் உள்ள உறவு யாது?
19. பழியின்றி
வாழும் வழியாகத் திருக்குறள் கூறுவது யாது?
ஊ.
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளி. 2×3=6
20. கோணக்காற்றால் வீடுகளுக்கு
ஏற்பட்ட பாதிப்புகள் யாவை ?
21. ஓடையின் பயன்களாக வாணிதாசன் கூறுவன யாவை?
22. எழுத்துகளின் பிறப்பு என்றால்
என்ன?
எ. எவையேனும் இரண்டு வினாவிற்கு விடையளி:- 2×2=4
23. கலைச் சொற்களை எழுதுக: அ) Pictograph
ஆ) LOCUST
24. சரியான மரபுச் சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
அ. கோழி
_____. (கூவும்/கொக்கரிக்கும்)
ஆ. பால்
_____. (குடி/ பருகு)
25.
தொடர்களை மாற்றுக.
அ)
அந்தோ ! பூனையின் காலில் அடிபட்டுவிட்டதே! (செய்தித்தொடராக
மாற்றுக.)
ஆ) காட்டில் புலி நடமாட்டம் உள்ளது. ( வினாத்
தொடராக மாற்றுக )
ஊ. விரிவாக விடையளிக்கவும். 3×5=5
26.
அ, எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக அல்லது )
ஆ.நிலவளத்தினைக் காப்பதற்கு
மேற்கொள்ள வேண்டிய செயல்களாக நீங்கள் கருதுவன யாவை?
27.
அ) இயற்கைச் சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்ய
வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்? ( அல்லது )
ஆ) “ வெட்டுக்கிளியும்
சருகுமானும் “ கதையைச் சுருக்கி எழுதுக.
28. அ) நான் விரும்பும் கவிஞர் என்னும் தலைப்பில் கட்டுரை
எழுதுக.
(அல்லது )
ஆ) விளையாட்டு
போட்டியில் வெற்றி பெற்ற உங்கள் நண்பனுக்குப் பாராட்டுக் கடிதம் எழுதுக.