மாதிரி முதல்
இடைத் தேர்வு – 2024
7 -ஆம் வகுப்பு தமிழ்
நேரம்
: 1.00 மணி மதிப்பெண்
: 30
I.
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:- 6×1=6
1. பகைவரை வெற்றி கொண்டவரைப்
பாடும் இலக்கியம் ________.
அ) கலம்பகம் ஆ)
பரிபாடல் இ) பரணி ஈ) அந்தாதி
2. மொழியின் முதல் நிலை பேசுதல், _________ ஆகியன வாகும்.
அ) படித்தல் ஆ)
கேட்டல் இ) எழுதுதல் ஈ) வரைதல்
3 வான் + ஒலி என்பதனைச்
சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
அ) வான்ஒலி ஆ) வானொலி இ) வாவொலி ஈ) வானெலி
4. ‘நேரம் + ஆகி’
என்பதனை ச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.
அ) நேரமாகி ஆ)
நேராகி இ) நேரம்ஆகி ஈ) நேர்ஆகி
5. ‘காட்டாறு’ என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______.
அ) காடு + ஆறு ஆ)
காட்டு + ஆறு இ) காட் + ஆறு ஈ) காட் + டாறு
6. குரலாகும்’ என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.
அ) குரல் + யாகும் ஆ) குரல் + ஆகும் இ) குர + லாகும்
ஈ) குர + ஆகும்
II. ஏவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளி 5×2=10
7.
தமிழ்மொழியின் பண்புகளாக நாமக்கல் கவிஞர் கூறுவன யாவை?
8.
மொழியின் இரு வடிவங்கள் யாவை?
9.
சொல்லின் முதல், இடை, இறுதி
ஆகிய இடங்களில் ஐகாரக்குறுக்கம் பெறும் மாத்திரை அளவு யாது?
10.
காட்டுப்பூக்களுக்கு எதனை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்?
11.
நாவல் மரம் எத்தனை தலைமுறைகளாக அங்கு நின்றிருந்தது?
12.
காடு – வரையறுக்க .
13.
மகரக் குறுக்கம் என்றால் என்ன? சான்று தருக.
III.
அடிமாறாமல் எழுதுக 3+2=5
14.
‘ அருள்நெறி ‘ எனத் தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக.
15.
; ஏதிலார் ‘ எனத் தொடங்கும் குறளை எழுதுக.
IV)
எவையேனும் ஒன்றனுக்கு மட்டும் விடையளி 1×4=4
16.
அ) கிளை மொழிகள் எவ்வாறு உருவாகின்றன? ( அல்லது
)
ஆ) புலிகள் குறித்து நீங்கள்
அறிந்து கொண்ட செய்திகளைத் தொகுத்து எழுதுக.
V)
கட்டுரை / கடிதம் எழுதுக 1×5=5
17.
அ) கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக. தாய்மொழிப்
பற்று
(முன்னுரை – மொழி பற்றிய விளக்கம்
– தாய்மொழி – தாய்மொழிப் பற்று - தாய்மொழிப் பற்றுக் கொண்ட சான்றோர் – சாதுவன் வரலாறு
– நமது கடமை – முடிவுரை) ( அல்லது
)
ஆ)
நீங்கள் சென்று வந்த சுற்றுலா குறித்து நண்பனுக்குக் கடிதம் எழுதுக.
CLICK HERE TO GET PDF