மாதிரி
ஜூன் மாதத் தேர்வு – 2024
10 -ஆம் வகுப்பு தமிழ் இயல் : 1,2
நேரம் :
1.30 மணி மதிப்பெண் : 50
அ. அனைத்து
வினாக்களுக்கும் விடையளி:- 5×1=5
1. . வேர்கடலை,மிளகாய்விதை,மாங்கொட்டை
ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை ________
அ) குலை வகை ஆ) மணிவகை இ)
கொழுந்து வகை ஈ) இலை வகை
2. எந்தமிழ்நா என்பதைப்
பிரித்தால் இவ்வாறு வரும்___
அ) எந் + தமிழ் + நா ஆ)
எந்த + தமிழ் + நா
இ) எம் + தமிழ் + நா ஈ) எந்தம் + தமிழ் + நா
3 பொருந்தும் விடைவரிசையைத் தேர்ந்தெடுக்க.
அ)
கொண்டல் - 1. மேற்கு ஆ) கோடை - 2. தெற்கு
இ)
வாடை - 3.
கிழக்கு ஈ) தென்றல் - 4.
வடக்கு
அ)
1,2,3,4 ஆ) 3,1,4,2 இ) 4,3,2,1 ஈ) 3,4,1,2
4. சார்பெழுத்துகள் ___________ வகைப்படும்
அ) 4 ஆ) 6 இ) 8 ஈ) 10
5. ‘பாடு இமிழ் பனிக்கடல் பருகி
‘ என்னும் முல்லைப் பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?
அ)
கடல் நீர் ஆவியாகி மேகமாதல் ஆ) கடல் நீர் குளிர்ச்சி
அடைதல்
இ)
கடல் நீர் ஒலித்தல் ஈ) கடல்
நீர் கொந்தளித்தல்
ஆ..
பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு விடையளி :- 4×1=4
‘ முத்தமிழ் துய்ப்பதால் முச்சங்கம் கண்டதால்
மெத்த வணிகலமும் மேவலால் – நித்தம்
அணைகிடந்தே சங்கத் தவர்காக்க ஆழிக்கு
இணைகிடந்த தேதமிழ் ஈண்டு “
6. இப்பாடல் இடம் பெற்ற நூல்
அ. நற்றிணை ஆ. முல்லைப்பாட்டு ‘
இ. குறுந்தொகை ஈ.தனிப்பாடல் திரட்டு
7. பாடலில் இடம் பெற்றுள்ள பொருத்தமான
அணி
அ. இரட்டுற மொழிதல் அணி ஆ, தீவக அணி
இ. வஞ்சப்புகழ்ச்சி அணி ஈ.
நிரல் நிறை அணி
8. தமிழுக்கு இணையாய்ப் பாடலில் பொருத்தப்படுவது
அ. சங்கப் பலகை ஆ. கடல் இ.
அணிகலன் ஈ. புலவர்கள்
9. தொழிற்பெயர் அல்லாத சொல்
அ. துய்ப்பதால் ஆ. அணிகலன் இ. மேவலால்
ஈ. கண்டதால்
இ.
எவையேனும் பத்து வினாக்களுக்கு விடையளிக்க. 10×2=20
10.
வேங்கை என்பதனைத் தொடர்மொழியாகவும், பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.
11.
நமக்கு உயிர் காற்று
காற்றுக்கு
வரம் மரம் – மரங்களை
வெட்டி
எறியாமல் நட்டு வளர்ப்போம் – இது போன்று
உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான
இரண்டு
முழக்கத் தொடர்களை எழுதுக.
12. தமிழ் பற்றி க.சச்சிதாந்தன் அவர்களின்
கூற்று யாது?
13.
வசன கவிதை – குறிப்பு வரைக
14.
பூவின் நிலைகள் குறிக்கும் தமிழ்சொற்கள் யாவை?
15.
தண்ணீர்குடி, தயிர்க்குடம் ஆகிய தொகைநிலைத் தொடர்களை விரித்து எழுதி தொடரில் அமைக்க.
16. கலைச்சொல்
தருக. அ) Tempest ஆ) VOWEL
17.
எண்ணுப்பெயர்களைக்
கண்டு தமிழ் எண்களில் எழுதுக.
: நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி
18.
சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க:-
இன்சொல் எழுகதிர்
19.
காற்றே வா பாடலில் இடம் பெற்றுள்ள வேண்டுகோள் சொற்களையும்,
கட்டளைச் சொற்களையும் எழுதுக.
20.
எட்டுத் தொகை நூல்கள்
யாவை?
21.
அடிக்கோடிட்ட
தொகைநிலைத் தொடர்களை வகைப்படுத்துக.
அ)
அன்புச்செல்வன் திறன்பேசியின் தொடுதிரையில் படித்துக் கொண்டிருந்தார்.
ஈ.
அடிமாறாமல் எழுதுக:- 1×6=6
22.
அன்னை மொழியே எனத் தொடங்கும் பாடலை
எழுதுக ( அல்லது )
சிறுதாம்பு எனத்
தொடங்கும் முல்லைப்பாட்டு பாடலை எழுதுக
உ. எவையேனும் இரண்டு வினாவிற்கு விடையளி:- 2×4=8
23. தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?
24.
. ‘ அறிந்தது, அறியாதது, புரிந்தது,
புரியாதது, தெரிந்தது, தெரியாதது, பிறந்தது, பிறவாதது ‘ இவை எல்லாம் அனைத்தையும்
யாம் அறிவோம். அதுபற்றி உமது அறிவுரை எமக்குத் தேவை இல்லை.எல்லாம் எமக்குத் தெரியும்.
இக்கூற்றில் வண்ண எழுத்துகளில் உள்ள வினைமுற்றுகளைத் தொழிற்பெயர்களாக மாற்றி எழுதுக.
25.
சோலைக் ( பூங்கா ) காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வது
போல் ஓர் உரையாடல் அமைக்க.
ஊ. விரிவாக விடையளிக்கவும். 1×7=7
26.
அ, தமிழின் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ்மன்றத்தில்
பேசுவதற்கான உரைக்குறிப்புகளை எழுதுக..( அல்லது
)
ஆ. புயலிலே ஒரு தோணி – கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத்
தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில், தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன.?
www.tamilvithai.com
www.kalvivithaigal.com
மேலும்
பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில்
இணைக்கவும்.
எங்கள்
குழுவில் இணைய:-
WHATSAPP LINK : https://chat.whatsapp.com/COVni0568j41sEyPmcyNgj
TELEGRAM LINK : https://t.me/thamizhvithai
FACE BOOK LINK : https://www.facebook.com/groups/215175780078251/?ref=share