10TH-TAMIL-1ST MID TERM - MODEL QUESTION -2024

 

மாதிரி முதல் இடைத் தேர்வு – 2024

10 -ஆம் வகுப்பு                             தமிழ்                                         

நேரம் : 1.30 மணி                                                                    மதிப்பெண் : 50

அ. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                       5×1=5

1. காய்ந்த இலையும்,காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது ___

) இலையும்,சருகும்   ) தோகையும் சண்டும்   ) தாளும் ஓலையும்         ) சருகும் சண்டும்

2. ‘பாடு இமிழ் பனிக்கடல் பருகி ‘ என்னும் முல்லைப் பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?

அ) கடல் நீர் ஆவியாகி மேகமாதல் ஆ) கடல் நீர் குளிர்ச்சி அடைதல்

இ) கடல் நீர் ஒலித்தல்                  ஈ) கடல் நீர் கொந்தளித்தல்

3தேர்ப்பாகன்’ . என்ற சொல்லில் அமைந்துள்ள தொகையைத் தேர்க.

அ) உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை     ஆ) பண்புத்தொகை

இ) உம்மைத் தொகை                                     ஈ) வேற்றுமைத் தொகை

4. குயில்களின் கூவலிசை, புள்ளினங்களின் மேய்ச்சலும் பாய்ச்சலும், இலைகளின் அசைவுகள், சூறைக்காற்றின் ஆலோலம்____

அ) மொட்டின் வருகை      ) வனத்தின் நடனம்  ) உயிர்ப்பின் ஏக்கம்   ) நீரின் சிலிர்ப்பு

5. காசிக்காண்டம் என்பது __________

அ) காசி நகரத்தின் வரலாற்றைப் பாடும் நூல்      

ஆ) காசி நகரத்தைக் குறிக்கும் மறுபெயர்

இ) காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்    

ஈ) காசி நகரத்திற்கு வழிப்படுத்தும் நூல்

ஆ.. பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு விடையளி :-                                 4×1=4

“ நனந்தலை உலகம் வளைஇ நேமியோடு

வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை

நீர்செல, நிமிர்ந்த மாஅல் போல,

பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,

கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி

பெரும்பயல் பொழிந்த சிறுபுன் மாலை”

6. இப்பாடல் இடம் பெற்ற நூல்

அ. முல்லைப்பாட்டு                     ஆ. மலைபடுகடாம்  

இ. நற்றிணை                             ஈ. குறுந்தொகை

7. நனந்தலை உலகம் – இத்தொடரின் பொருள்

அ. சிறிய உலகம்                        ஆ. தலையாய உலகம்

இ. நனைந்த உலகம்                   ஈ. அகன்ற உலகம்

8. பாடலில் இடம்பெற்றுள்ள அடி எதுகைச் சொற்கள்

அ. பெரும்பெயல், பொழிந்த     ஆ. பாடுஇமிழ்,பனிக்கடல்

இ.பாடுஇமிழ்,கோடுகொண்டு           ஈ. நீர்செல,நிமிர்ந்த

9. பாடலில் இடம் பெற்றுள்ள அளபெடை

அ. தடக்கை  ஆ. வளைஇ  இ. பெரும்பெயல்   ஈ. கொடுஞ்செலவு

. எவையேனும் பத்து வினாக்களுக்கு விடையளிக்க.                                         10×2=20

10. வசன கவிதை – குறிப்பு வரைக.

11. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

12. கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய

   கோடிஉண் டாயினும் இல் – இக்குறளில் வரும் அளபெடைகளை எடுத்து எழுதுக.

13. பூவின் நிலைகளைக் குறிக்கும் தமிழ்ச்சொற்களை எழுதுக.

14. ‘ இறடிப் பொம்மல் பெறுகுவீர் ‘ – தொடர் உணர்த்தும் பொருளை எழுதுக

15. பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?

16. இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

          அ) மலை – மாலை            ஆ) தொடு - தோடு

17. கலைச்சொல் தருக:-     அ) STORM                       ஆ) FOLK LITERATURE

18. கூட்டப் பெயர்களை எழுதுக.    ( அ) கல்       ( ஆ ) ஆடு

19. பகுபத உறுப்பிலக்கணம் தருக:- பொறித்த

20. சொற்களில் மறைந்துள்ள தொகைகளை அடையாளம் கண்டு தொடரில் அமைக்க:-            

அ) இன்சொல்                            ஆ) எழுகதிர்

21. விடைக்கேற்ற வினா அமைக்க:

அ) நாடும் மொழியும் நமது இரு கண்கள் என்கிறார் பாரதியார்.

ஆ) உலகத்திலேயே ஒரு மொழிக்காக உலக மாநாடு நடத்திய முதல் நாடு மலேசியா.

ஈ. அடிமாறாமல் எழுதுக:-                                                                            4+2=6

22.  அ) “சிறுதாம்பு”  எனத் தொடங்கும் முல்லைப்பாட்டு பாடலை எழுதுக  ( அல்லது )

        ஆ) “ விருந்தினனாக” எனத் தொடங்கும் காசிகாண்டம் பாடலை எழுதுக.

23. எப்பொருள் எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.

உ. எவையேனும் இரண்டு வினாவிற்கு விடையளி:-                                              2×4=8

24. கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலைக் கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?

25. சோலைக் ( பூங்கா ) காற்றும் மின்விசிறிக் காற்றும் பேசிக்கொள்வது போல் ஓர் உரையாடல் அமைக்க.

26. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும் பாங்கினை விளக்குக.

. விரிவாக விடையளிக்கவும்.                                                                                   1×7=7

27. அ, காற்று பேசியதைப் போல, நிலம் பேசுவதாக எண்ணிக் கொண்டு எழுதுக. ( அல்லது )

      ஆ. அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினை ‘    

             கோபல்லபுரத்து மக்கள் ‘ கதைப் பகுதி கொண்டு விவரிக்க.


CLICK HERE TO GET PDF

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post