9TH-TAMIL-2023-24- ANNUAL EXAM MODEL QUESTION - 2- PDF

 

ஒன்பதாம் வகுப்பு - 2024

மாதிரி வினாத்தாள் - 2

மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                                      மதிப்பெண் : 100

அறிவுரைகள் :  1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும்.அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம்  உடனடியாகத்  தெரிவிக்கவும்.

2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்     பயன்படுத்தவும்.

குறிப்பு : I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்                       

ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்

பகுதி-1(மதிப்பெண்கள்:15)

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:                                                                     15X1=15

1) காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! – எந்த

   காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!.............

இவ்வடிகளில் பயின்று வரும் நயங்கள்

) முரண்,எதுகை,இரட்டைதொடை ) இயைபு,அளபெடை,செந்தொடை

) மோனை,எதுகை,இயைபு                ஈ) மோனை,முரண்,அந்தாதி

2) தமிழின் மிகத் தொன்மையான இலக்கண நூல் ______

அ) நன்னூல்          ஆ) தொல்காப்பியம்   இ)அகத்தியம்    ஈ) திருக்குறள்

3) முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக

) தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்

) தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான

) தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்

ஈ) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்

 4)’அதிரப் புகுதக் கனாக் கண்டேன்’ -யார் கனவில் யார் அதிரப் புகுந்தார்?

 அ) கண்ணனின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்

ஆ)தோழியின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்

இ) ஆண்டாளின் கனவில் தோ ழி புகுந்தாள்

ஈ) ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

5) உலகத் தாய்மொழி தினம் _____

அ) ஜனவரி 21 ஆ) பிப்ரவரி-22   இ) மார்ச் - 21 ஈ) ஏப்ரல் – 21

6) இந்திய தேசிய இராணுவத்தை ..........இன் தலைமையில் ..........உருவாக்கினர்.

அ) சுபாஷ் சந்திரபோஸ்இந்தியர் ஆ) சுபாஷ் சந்திரபோஸ்ஜப்பானியர்

இ) மோகன்சிங்ஜப்பானியர் ஈ) மோகன்சிங்இந்தியர்

7) _______________ மொழிக்குப் பின் வல்லினம் மிகும்

அ) ஓரெழுத்து ஆ) ஈரெழுத்து    இ) மூவெழுத்து     ஈ) நான்கெழுத்து

8) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல் எழுதப்பட்ட ஆண்டு_____

அ) 1746     ஆ) 1856     இ) 1996     ஈ) 1976

9) ஒன்றறிவதுவே உற்றறிவதுவே

   இரண்டறிவதுவே அதனொடு நாவே    - இவ்வடிகளில் உற்றறிவது என்பது எதைக் குறிக்கிறது?

அ) நுகர்தல்           ஆ) தொடு உணர்வு         இ) கேட்டல்           ஈ) காணல்

10) சரியான கூற்றினைத் தெரிவு செய்க.

 அ) ‘ஆ’ என்பது எதிர்மறை இடைநிலை.

ஆ) வீட்டிற்கோர் புத்தகசாலை என்பது அண்ணாவின் மேடைப்பேச்சு.

 இ) வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம்.

 1. , இ சரி; அ தவறு      2. , , சரி; ஆ தவறு

3. மூன்றும் சரி                4. மூன்றும் தவறு

11) தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன, - எவ்வகைத் தொடர்

அ) செய்தித் தொடர்         ஆ) வினாத் தொடர்          இ) வினைமுற்றுத் தொடர்

ஈ) பெயரெச்சத் தொடர்

பாடலைப்படித்து வினாக்களுக்கு விடையளிக்க:

   நீரின்று அமையா யாக்கைக்கு எல்லாம்

   உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!

   உண்டி முதற்றே உணவின் பிண்டம்

   உணவெனப் படுவது  நிலத்தொடு நீரே

12.இப்பாடல் இடம்பெற்ற நூல்

அ.பெரியபுராணம்   ஆ.புறநானூறு  இ.தமிழ்விடு தூது  ஈ.தமிழோவியம்

13.இப்பாடலை இயற்றியவர்

அ.நன்னாகனார்   ஆ.ஔவையார்   இ.மருதனார்  ஈ.குடபுலவியனார்

14.யாக்கை என்பதன் பொருள்

அ.உடல்  ஆ.உலகம்  இ.காற்று   ஈ.வானம்

15.அமையா என்பதன் இலக்கணக்குறிப்பு

அ.வினையெச்சம்  ஆ.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்  இ.பெயரெச்சம்  ஈ.முற்றெச்சம்

 

பகுதி-2(மதிப்பெண்கள்:18)

                                                   பிரிவு-1                                               4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:(21 கட்டாயவினா)

16) விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க:

        அ) வெண்பாவால் எழுதப்பட்ட நூல் முத்தொள்ளாயிரம்

        ஆ) விருத்தப்பாக்களால் இயற்றப்பட்ட முதல் நூல் சீவக சிந்தாமணி

17) தமிழோவியம் கவிதையில் உங்களை மிகவும் ஈர்த்த அடிகள் குறித்து எழுதுக.

18) தென் திராவிட மொழிகள் நான்கனை எழுதுக.

19) கண்ணன் புகுந்த பந்தல் எவ்வாறு இருந்தது?

20) சாரதா சட்டம் எதற்காக இயற்றப் பட்டது?

21) தரும் என முடியும் திருக்குறளை எழுதுக.

                                                     பிரிவு-2                                                               5X2=10

ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:

22) இடிகுரல் , பெருங்கடல் – இலக்கணக் குறிப்புத் தருக.

23) வீணையோடு வந்தாள்,கிளியே பேசு-தொடரின் வகையைச் சுட்டுக.

24) கலைச்சொல் தருக: அ. HERO STONE  ஆ. DOWNLOAD

25) கோடிட்ட இடத்தைத் தமிழெண் கொண்டு நிரப்புக :  

அ. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எண்ணிக்கை _____

 ஆ. சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை ________

26) மரபு இணைச்சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக. 

  அ) கண்ணும் கருத்தும்            ஆ) மேடும் பள்ளமும்

27) உவமைத் தொடர்களை உருவகத் தொடர்களாக மாற்றுக.

         மலர்விழி வீணைவாசித்தாள் ; கேட்டவர் வெள்ளம் போன்ற இன்பத்தில் நீந்தினர்

28) பொருத்தமான இடங்களில் அடைமொழியிட்டு, சொற்றொடரை விரிவாக்குக.

         புத்தகம் படிக்கலாம் ( நல்லஆழ்ந்துநாளும்தேர்ந்துமகிழ்ந்துஉணர்ந்து)

பகுதி-3(மதிப்பெண்:18)

                             பிரிவு-1                                                                                  2X3=6

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:

29) முத்துலட்சுமியின் சாதனைகளை எழுதுக.

30) குறிப்பு வரைக: டோக்கியோ கேடட்ஸ்

31) பத்தியைப் படித்துப் பதில் தருக:-

   பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல   காலங்கள் கடந்து சென்றன.புவி உருவானபோதுநெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியதுபின்னர்ப் புவி குளிரும்படியாகத்  தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்ததுஅவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியதுஇப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக ( வெள்ளத்தில் மூழ்குதல் ) நடந்த இந்தப் பெரிய உலகத்தில்உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியதுஉயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.

1.உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாக நீவிர் கருதுவன யாவை?

2.பெய்மழை,பெய்த மழை-இலக்கணக்குறிப்பு தருக.

3.இப்பத்தி உணர்த்தும் அறிவியல் கொள்கை யாது?

பிரிவு-2

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க (34 கட்டாய வினா)     2X3=6

32) நிலைத்த புகழைப் பெறுவதற்குக் குடபுலவியனார் கூறும் வழிகள் யாவை?

33) 'என் சம காலத் தோழர்களேகவிதையில் கவிஞர் விடுக்கும் வேண்டுகோள் யாது?

34)அ.காடெல்லாம்- எனத்தொடங்கும் பாடலை அடி மாறாமல் எழுதுக   (அல்லது)

ஆ. அறிவியல் எனும்- எனத் தொடங்கும் பாடலை அடிமாறாமல் எழுதுக

பிரிவு-3

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:                             2X3=6 

35)அலகிட்டு வாய்பாடு எழுதுக:

           அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை

           இகழ்வார்ப் பொறுத்தல் தலை

36) பத்தியில் இடம்பெற்றுள்ள இடைச்சொற்களைக் கண்டறிந்து எழுதுக.

  அ) பெண்ணடிமை போகவேண் டும்பெண்கல்வி பெறவேண்டும். பெண்கள் படித்தால்தான் தம் சொந்தக் காலில் நிற்கலாம். பெண்கல்வி கற்றால் வீடும் நாடும் முன்னேறும். சமுதாயத்தின் சரிபாதியான பெண்களுக்கும் எல்லா உரிமைகளும் உண்டு.

37) உவமையை அணியைச் சான்றுடன் விளக்குக.

பகுதி-4 (மதிப்பெண்:25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:                                                   5X5=25

38)அ) தூது அனுப்பத் தமிழே சிறந்தது – தமிழ்விடுதூது காட்டும் காரணங்களை விளக்கி எழுதுக                             (அல்லது)

ஆ) குடும்ப விளக்கு நூலில் தலைவி பேச்சில் வெளிப்படும் பெண்கல்விக்கான கருத்துகளை இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு எழுதுக.

39) அ. உங்கள் பள்ளி நூலகத்திற்குத் தமிழ்- தமிழ் -ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதி பத்துப்படிகளைப் பதிவஞ்ச லில் அனுப்புமாறு நெய்தல் பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக

(அல்லது)

ஆ. மாநில அளவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில் வெற்றி பெற்று பரிசு பெற்ற உன் நண்பனைப் பாராட்டி கடிதம் எழுதுக.

40) அ)நயம் பாராட்டுக:-

                    நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்

                              நேர்ப்பட வைத்தாங்கே

                    குலாவும் அமுதக் குழம்பைக் குடிதொரு

                              கோல வெறிபடைத்தோம்;

                    உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்

                              ஓட்டி மகிழ்ந்திடுவோம்;

                    பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு

                              பாடுவதும் வியப்போ?          - பாரதியார்         (அல்லது)

ஆ) மொழிபெயர்க்க.

1. A nations’s culture resides in the hearts and in the soul of its people – Mahatma Gandhi

2. The art of people is a true mirror to their minds – Jawaharlal Nehru

3. The biggest problem is the lack of love and charity – Mother Teresa

4. You have to dream before your dreams can come true – A.P.J.Abdul Kalam

5. Winners don’t do different; they do things differently – Shiv Khera

41) பின்வரும் கருத்துகளை உள்வாங்கிக் கண்டு, வரிசைப்படுத்தி முறையான பத்தியாக்குக.

 1. உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கே தான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

 2. டைனோசர்கள் உலாவித் திரிந்த தமிழ்மண் என்று அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் கடல்பகுதி இருந்துள்ளது என்பதை அங்குக் கிடைத்துள்ள ஆதாரங்கள் உறுதி செய்கின்றன.

 3. இங்குக் கல்லாகிப் போன டைனோசர் முட்டைகள், பாறைப் படிமமாகக் கிடைத்த கடல் நத்தை, டைனோசரின் வால்பகுதி, கடல் கிளிஞ்சல்களின் பாறைப் படிமங்கள் போன்றவை கிடைத்துள்ளன.

4. தமிழ்மக்களின் தொன்மையை மீட்டெடுப்பதுடன் நாம் வாழ்கின்ற நிலப்பகுதியின் வரலாற்றையும் தெரிந்துகொள்ள அரியலூரும் பெரம்பலூரும் அரிய ஊர்களாய்த் திகழ்கின்றன.

42) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.



பகுதி-5 (மதிப்பெண்:24)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:                                                            3X8=24

43) அ) அன்றாட வாழ்வில் நீங்கள் பயன்படுத்தும் இரண்டு இணையவழிச் சேவைகள் பற்றி விரிவாகத் தொகுத்து எழுதுக.               (அல்லது)

   ஆ) இந்தியதேசிய இராணுவத்தின் தூண்களாகத் திகழ்ந்தவர்கள் தமிழர்கள் என்பதைக் கட்டுரைவழி நிறுவுக.

44) அ)இந்திய விண்வெளித்துறை பற்றிய செய்திகளை விவரிக்க

(அல்லது)

    ஆ) தண்ணீர் கதையை கருபொருள் குன்றாமல் எழுதுக.

45) அ. ‘ எனது பயணம் ‘ என்னும் தலைப்பில் நீ சென்று வந்த சுற்றுலா இடங்களைப் பற்றி எழுதுக

(அல்லது)

    ஆ. குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பு தருக:  முன்னுரை- சாலை பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு- சாலை விதிகள்- ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்- விபத்துகளை தவிர்ப்போம், விழிப்புணர்வு தருவோம்- முடிவுரை.

வினாத்தாள் தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி, சேலம்

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும். சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

எங்கள் குழுவில் இணைய:-

WHATSAPP                           TELEGRAM                   FACE BOOK GROUP

WHATSAPP LINK : https://chat.whatsapp.com/COVni0568j41sEyPmcyNgj

TELEGRAM LINK : https://t.me/thamizhvithai

FACE BOOK LINK : https://www.facebook.com/groups/215175780078251/?ref=share

kindly wait for 10 seconds



நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post