மூன்றாம் பருவம் - தொகுத்தறி மதிப்பீடு - 2024
ஆறாம் வகுப்பு - மாதிரி வினாத்தாள் - 1
மொழிப்பாடம் – தமிழ்
பாடம்- தமிழ் மதிப்பெண்கள்: 60
I ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 5x1=5
1. தேசம் உடுத்திய நூலாடை எனக் கவிஞர் குறிப்பிடும் நூல்
அ) திருவாசகம் ஆ) திருக்குறள் இ) திரிகடுகம் ஈ) திருப்பாவை
2. காந்தியடிகளிடம் உடை அணிவதில் மாற்றத்தை ஏற்படுத்திய ஊர்_______________.
அ) கோவை ஆ) மதுரை இ) தஞ்சாவூர் ஈ) சிதம்பரம்
3. ’சோம்பல்’ என்னும் சொல்லுக்குரிய பொருத்தமான எதிர்ச்சொல் --------
அ) அழிவு ஆ) துன்பம் இ) சுறுசுறுப்பு ஈ) சோகம்
4. வாழ்வில் உயர கடினமாக_______ வேண்டும்..
அ) பேச ஆ) சிரிக்க இ) நடக்க ஈ) உழைக்க
5. ஒருவர் செய்யக் கூடாதது ______________
அ) நல்வினை ஆ. தீவினை இ) பிறவினை ஈ) தன்வினை
II ) பொருத்துக. 4x1=4
6. இலக்கிய மாநாடு - பாரதியார்
7. தமிழ்நாட்டுக் கவிஞர் - சென்னை
8. குற்றாலம் - ஜி.யு.போப்
9. தமிழ்க் கையேடு - அருவி
III) கீழ்க்காணும் வினாக்களுள் எவையேனும் ஆறனுக்கு மட்டும் விடை தருக. 6x2=12
10. இந்தியாவின் மேற்கு, கிழக்கு ஆகிய திசைகளை இணைத்துக் கவிஞர் காட்டும் காட்சியை எழுதுக.
11. ஈகை பற்றிய வள்ளுவரின் கருத்து யாது?
12. வள்ளலார் பசிப்பிணியை நீக்க என்ன செய்தார்?
13. உலகம் முழுமையையும் எப்போது ஆளமுடியும்?
14. யாருக்குத் தொண்டு செய்ய வேண்டும்?
15. காந்தியடிகளுக்குத் தமிழ் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிகழ்வை எழுதுக.
16. பிற உயிர்களை எவ்வாறு காப்பாற்ற வேண்டும்?
17. உழைக்கும்போது என்னவாக ஆகிறோம்?
IV ) எவையேனும் மூன்று வினாக்களுக்கு மட்டும் விடை தருக. 3x2=6
18. சொல் என்றால் என்ன?
19. பெயரையும் வினையையும் சார்ந்து வரும் சொற்களை எவ்வாறு வழங்குகிறோம்?
20. உயர்வு நவிற்சி அணி என்பது யாது?
21. இடுகுறிப் பெயர் என்றால் என்ன?
V) அடிமாறாமல் எழுதுக. 4+2=6
22. அ) ‘ புல்வெளி எல்லாம் ‘ எனத் தொடங்கும் தாராபாரதியின் பாடலை எழுதுக.
ஆ) மனத்துக்கண் எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.
VI ) 2.3. கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக. 1x5=5
அரசர் ஒருவர் தன் மக்களிடம் "அமைதி என்றால் என்ன?" என்பதை விளக்கும் வகையில் ஓவியமாக வரைந்து கொடுப்பவர்களுக்கு மிகச்சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை வெளிப்படுத்தும் வகையில் பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்குக் கொண்டு வந்தனர். அரசர் ஒவ்வொரு ஓவியமாகப் பார்த்துக் கொண்டே வந்தார். அழகிய மலையின் அடிவாரத்தில் ஓர் ஏரி இருப்பது போல் ஓவியம் ஒன்று இருந்தது. அது மிகவும் சிறப்பாக இருந்தது. பார்த்த உடனே பறிக்கத் தூண்டும் வகையில் மலர்களின் ஓவியம் ஒன்று இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியைத் தங்களுக்குத் தோன்றியபடி ஓவியத்தில் வெளிப்படுத்தி இருந்தனர். ஓர் ஓவியத்தில் ஒரு மலைமேல் இருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவியின் படம் வரையப்பட்டிருந்தது. அதிலேயே இடியோடு மழை கொட்டிக் கொண்டு இருந்தது. சற்று உற்றுப் பார்த்தால் அருவியின் கீழே இருந்த மரம் ஒன்றில் பறவைக் கூட்டில் பறவை ஒன்று தனது குஞ்சுகளோடு இருந்தது.
1. அமைதி என்றவுடன் உங்கள் மனதில் தோன்றுவது என்ன?
2. இக்கதையில் அமைதி எங்கு இருப்பதாகக் கூறப்படுகிறது?
3. நீங்கள் இந்த ஓவியப் போட்டியில் பங்கு பெற்று இருந்தால் என்ன ஓவியம் வரைந்து இருப்பீர்கள்?
4. பார்த்த உடனே பறிக்கத் தூண்டும் வகையில் இருந்த ஓவியம் எது?
5. இக்கதைக்குப் பொருத்தமான தலைப்பு ஒன்று தருக.
VII ) ஏதேனும் ஒன்றனுக்கு விடையளிக்க 1x5=5
24. அ) வேலு நாச்சியார் சிவகங்கையை மீட்ட நிகழ்வை எழுதுக. (அல்லது)
ஆ) அறம் செய விரும்பு என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக
VIII ) கீழ்க்காணும் வினாக்களுள் ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் விடையளிக்க. 1x5=5
25. அ ) மணிபல்லவத் தீவு எவ்வாறு காட்சி அளித்தது? ( அல்லது )
ஆ) அறச்செயல்கள் என்று நீங்கள் எவற்றை எல்லாம் கருதுகிறீர்கள்?
IX ) கீழ்க்காணும் வினாக்களுள் ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் விடையளிக்க. 1x5=5
26. அ) நூல்கள் அனுப்ப வேண்டிப் பதிப்பகத்தாருக்குக் கடிதம் எழுதுக. (அல்லது )
ஆ) பாதம் கதையைச் சுருக்கி எழுதுக
X ) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. 7x1=7
27. அகரவரிசைப்படுத்துக
பெண்கள், பாரதம், புதுமை, பீலி, பேருந்து, பூமி, பழங்கள், பொதுக்கூட்டம், பையன், போக்குவரத்து, பின்னிரவு.
.28. அகராதியைப் பயன்படுத்தி பொருள் எழுதுக.
அ. கருணை ஆ. அச்சம்
29. தொடரில் அமைத்து எழுதுக: அ) மனித நேயம், ஆ) உரிமை
30. கலைச்சொல் எழுதுக.
அ) Humanity ஆ) lorry
31. கீழ்க்காணும்தொடரை முறைப்படுத்துக.
.அன்பு எல்லாரிடமும் வேண்டும் காட்ட
32.. இருபொருள் தருக : - அ) திங்கள் ஆ) ஆறு
33. இ) ஒலி வேறுபாடறிந்து வாக்கியத்தில் அமைத்து எழுதுக.
அரம் – அறம்
CLICK HERE TO PDF