9TH-TAMIL-2023-24- ANNUAL EXAM MODEL QUESTION - 1- PDF

 

ஒன்பதாம் வகுப்பு - 2024மாதிரி வினாத்தாள் - 1

மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                                      மதிப்பெண் : 100

அறிவுரைகள் :  1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும்.அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம்  உடனடியாகத்  தெரிவிக்கவும்.

2) நீலம் அல்லது கருப்பு மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும்     பயன்படுத்தவும்.

குறிப்பு : I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.

ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும் சொந்த நடையிலும் அமைதல் வேண்டும்.

i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்                       

ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும்

பகுதி-1(மதிப்பெண்கள்:15)

சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:                                                                         15X1=15

1)  “ மிசை “ என்பதன் எதிர்சொல் என்ன?

அ) கீழே                 ஆ) மேலே              இ) இசை   ஈ) வசை

2) தெற்கு ஆசியாவின் சாக்ரடீஸ் யார்?

அ) அம்பேத்கர்    ஆ) பெரியார்   இ) அயோத்திதாசர்    ஈ) திராவிடமணி

3) முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக

) தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்

) தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான       

) தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்

ஈ) தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்

 4)’அதிரப் புகுதக் கனாக் கண்டேன்’ -யார் கனவில் யார் அதிரப் புகுந்தார்?

 அ) கண்ணனின் கனவில் ஆண்டாள் புகுந்தாள் ஆ)தோழியின் கனவில் ஆண்டாள் புகுந்தாள்

இ) ஆண்டாளின் கனவில் தோ ழி புகுந்தாள்  ஈ) ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்

5) ஐந்து சால்புகளில் இரண்டு

அ) வானமும் நாணமும்                ஆ) நாணமும் இணக்கமும்

இ) இணக்கமும் சுணக்கமும்         ஈ)இணக்கமும் பிணக்கமும்

6) கூற்று - இந்திய தேசிய இராணுவப்படைத் தலைவராக இருந்த தில்லான், ”இந்திய தேசிய இராணுவத்தின் இதயமும் ஆத்மாவும் தமிழர்கள்தான்” என்றார். காரணம் - இந்திய தேசிய இரா ணுவத்திற்கு வலுச்சேர்த்த பெருமைக்கு உரியவர்கள் தமிழர்கள்.

அ) கூற்று சரி; காரணம் சரி ஆ) கூற்று சரி; காரணம் தவறு

இ) கூற்று தவறு; காரணம் சரி        ஈ) கூற்று தவறு; காரணம் தவறு

7) சரியான கூற்றினைத் தெரிவு செய்க.

 அ) ‘ஆ’ என்பது எதிர்மறை இடைநிலை.

ஆ) வீட்டிற்கோர் புத்தகசாலை என்பது அண்ணாவின் மேடைப்பேச்சு.

 இ) வில்லுப்பாட்டு ஓர் இலக்கிய வடிவம்.

 1. , இ சரி; அ தவறு         2. , , சரி; ஆ தவறு

3. மூன்றும் சரி                  4. மூன்றும் தவறு

8) பாரதிதாசனின் --------- நாடக நூலுக்குச் சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.

அ) குடும்பவிளக்கு    ஆ) இருண்டவீடு    இ) பிசிராந்தையார்    ஈ) கண்ணன்பாட்டு

9) பிரித்து எழுதுக: கண்டெடுக்கப்பட்டுள்ளன

அ) கண்டு + எடுக்கப்பட்டு + உள்ளன                 ஆ) கண்டு + எடுக்கப் + பட்டுள்ளன

இ) கண்டெடுக்க + பட்டு + உள்ளன                   ஈ) கண் + டெடுக்க + பட்டு + உள்ளன.

10) தீரா இடும்பை தருவது எது?

 அ. ஆராயாமைஐயப்படுதல் ஆ.குணம்குற்றம்  இ.பெருமைசிறுமை ஈ. நாடாமைபேணாமை

11) மல்லல் மூதூர் வயவேந்தே- கோடிட்ட சொல்லின் பொருள் என்ன?

அ) மறுமை ஆ) பூவரசு மரம் இ) வளம் ஈ) பெரிய

பாடலைப்படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:

   நீரின்று அமையா யாக்கைக்கு எல்லாம்

   உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே!

   உண்டி முதற்றே உணவின் பிண்டம்

   உணவெனப் படுவது  நிலத்தொடு நீரே

12.இப்பாடல் இடம்பெற்ற நூல்

அ.பெரியபுராணம்   ஆ.புறநானூறு  இ.தமிழ்விடு தூது  ஈ.தமிழோவியம்

13.இப்பாடலை இயற்றியவர்

அ.நன்னாகனார்   ஆ.ஔவையார்   இ.மருதனார்  ஈ.குடபுலவியனார்

14.யாக்கை என்பதன் பொருள்

அ.உடல்  ஆ.உலகம்  இ.காற்று   ஈ.வானம்

15.அமையா என்பதன் இலக்கணக்குறிப்பு

அ.வினையெச்சம்  ஆ.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்  இ.பெயரெச்சம்  ஈ.முற்றெச்சம்

பகுதி-2(மதிப்பெண்கள்:18)

                                                   பிரிவு-1                                               4X2=8

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:(21 கட்டாயவினா)

16) விடைகளுக்கேற்ற வினாக்கள் அமைக்க:

 அ) தமிழ்மொழி  திராவிட மொழிகள் சிலவற்றின் தாய் மொழியாகக் கருதப்படுகிறது.

 ஆ) பெரியபுராணத்தை இயற்றியவர் சேக்கிழார்.

17) அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் – அவை அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள் – இலக்கியங்களின் பாடுப்பொருளாக இவ்வடிகள் உணர்த்துவன யாவை?

18) மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற் காடும் உடையது அரண் - இக்குறள் கூறும் நாட்டின் அரண்கள் யாவை?

19) ஏறுதழுவுதல் நிகழ்விற்கு இலக்கியங்கள் காட்டும் வேறுபெயர்களைக் குறிப்பிடுக.

20) சாரதா சட்டம் எதற்காக இயற்றப் பட்டது?

21) ஓஒதல் – எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக.

                                                     பிரிவு-2                                                                     5X2=10

ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க:

22) அசை எத்தனை வகைப்படும்? அவை யாவை?

23) இடிகுரல் , பெருங்கடல் – இலக்கணக் குறிப்புத் தருக.

24) கலைச்சொல் தருக: அ. Tropical Zone ,  ஆ.PHONETICS

25). தொடரைப் பழமொழிகொண்டு நிறைவு செய்க.

அ. இளமையில் ________           ஆ. சித்திரமும் கைப்பழக்கம் ­­­­­­­___________

26) மரபு இணைச் சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

 1. மேடும் பள்ளமும்                               2. நகமும் சதையும்

27) ஒரு சொல்லால் தொடரின் இரு இடங்களை நிரப்புக.

 விலங்கு, எழுதி, அகல், கால், அலை

அ) எண்ணெய் ஊற்றி _____விளக்கு ஏற்றியவுடன், இடத்தைவிட்டு ____
ஆ) எனக்கு____ பங்கு பிரித்துக் கொடுக்க வா! கீழே ஈரம்: பார்த்து உன் ____ ஐ வை.
28) கொடுத்தோர் – பகுபத உறுப்பிலக்கணம் தருக.

பகுதி-3(மதிப்பெண்:18) பிரிவு 1                                                      2X3=6

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:

29) மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடுக.

30) சோழர்காலக் குமிழித்தாம்பு  எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?

31) அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைக் கொண்டு பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க

   


1.தமிழ்மொழியின் மிக பழமையான நூலாக கருதப்படும் நூல் எது?

2.இந்திய இலக்கணக் கொள்கைகளின் பின்னணியில் தமிழ் இலக்கணம் என்ற நூலை எழுதியவர் யார்?

3. கன்னட மொழியின் பழமையான இலக்கிய நூல் எது?

பிரிவு-2

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க (34 கட்டாய வினா)             2X3=6

32) புதுக்கோலம் புனைந்து தமிழ் வளர்ப்பாய்-உங்கள் பங்கினைக் குறிப்பிடுக..

33) விதைக்காமலே முளைக்கும் விதைகள் -இத்தொடரின்வழிச் சிறுபஞ்சமூலம் தெரிவிக்கும் கருத்துகளை விளக்குக.

34)அ.தித்திக்கும் – எனத்தொடங்கும் தமிழ்விடுதூது பாடலை அடி மாறாமல் எழுதுக   (அல்லது)

ஆ.கல்லிடை- எனத் தொடங்கும்இராவண காவியம் பாடலை அடிமாறாமல் எழுதுக.

பிரிவு-3

இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமான விடையளிக்க:                                    2X3=6 

35) அலகிட்டு வாய்பாடு எழுதுக:

          செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்

          அவியினும் வாழினும் என்

36) வல்லினம் இட்டும் நீக்கியும் எழுதுவதன் இன்றியமையாமையை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.

37) வஞ்சப் புகழ்ச்சி அணியைச் சான்றுடன் விளக்குக.

பகுதி-4(மதிப்பெண்:25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:                                      5X5=25

38) அ)பெரிய புராணம் காட்டும் திருநாட்டுச் சிறப்பினைத் தொகுத்து எழுதுக

                                                            (அல்லது)

ஆ) ஏமாங்கத நாட்டு வளம் குறித்த வருணனைகளை நும் ஊரின் வளங்களோடு ஒப்பிடுக.

39) அ. உங்கள் பள்ளி நூலகத்திற்குத் தமிழ்- தமிழ் -ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதி பத்துப்படிகளைப் பதிவஞ்ச லில் அனுப்புமாறு நெய்தல் பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக

(அல்லது)

ஆ. உங்களின் நண்பர்பிறந்தநாள் பரிசாக அனுப்பிய எழுத்தா ளர் எஸ். இராமகிருஷ்ணனின், "கால்முளைத்த கதைகள்" என்னும் நூல் குறித்த கருத்துகளைக் கடிதமாக எழுதுக

40)அ) நயம் பாராட்டுக:-

கல்லும் மலையும் குதித்துவந்தேன் – பெருங்

காடும் செடியும் கடந்துவந்தேன்;

எல்லை விரிந்த சமவெளி – எங்கும்நான்

இறங்கித் தவழ்ந்து தவழ்ந்துவந்தேன்.

ஏறாத மேடுகள் ஏறிவந்தேன்-பல

ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்; ஊறாத

ஊற்றிலும் உட்புகுந்தேன்-மணல்

ஓடைகள் பொங்கிட ஓடிவந்தேன்.கவிமணி                   (அல்லது)

ஆ) மொழிபெயர்க்க.

Akbar said, "How many crows are there in this city?

" Without even a moment's thought, Birbal replied "There are fifty thousand five hundred and eighty nine crows, my lord".

 "How can you be so sure?" asked Akbar.

Birbal said, "Make your men count, My lord. If you find more crows it means some have come to visit their relatives here.

If you find less number of crows it means some have gone to visit their relatives elsewhere".

Akbar was pleased very much by Birbal's wit.

41) காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.



42) கதையைப் படித்து உரையாடலாக மாற்றுக.

ஒரு சிப்பி, இன்னொரு சிப்பியிடம் சொன்னது – ‘ஐயோ, என்னால் வலி தாங்கமுடியவில்லையே '. ‘ஏன்? என்னாச்சு? ’ என்று விசாரித்தது இரண்டாவது சிப்பி.எனக்குள் ஏதோ ஒரு கனமான உருண்டை, பந்து உருள்வதுபோல் இருக்கிறது. ரொம்ப வலி. ’ இதைக் கேட்டதும் இரண்டாவது சிப்பிக்கு மிகுந்த மகிழ்ச்சி. பெருமையுடன் நெஞ்சு நிமிர்த்தி, 'ஆகா! நான் எந்த வலியும் இல்லாமல், நலமாக இருக்கிறேன்' என்றது உற்சாகமாக. இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்த ஒரு நண்டு, இரண்டாவது சிப்பியிடம் சொன்னது–உனக்கு எந்த வலியும் இல்லை என்பது உண்மையாக இருக்கலாம். வலியைத் தாங்க விரும்பாத நீ, எப்பொழுதும் இப்படியே வெறுமையாகக் கிடக்க வேண்டியதுதான். ஆனால், இப்போது சிரமப்படுத்தும் அந்த வலி, இன்னும் சில நாள்களில், ஓர் அழகான முத்தாக உருவெடுக்கும். அது பெருமை தேடித்தரும். ’

பகுதி-5 (மதிப்பெண்:24)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க:                                                                      3X8=24

43)அ) திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்விற்குத் தமிழே பெருந்துணையாக இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்க .                  (அல்லது)

   ஆ) மொழியிலும் இலக்கியத்திலும் பெரியார் மேற்கொண்ட சீரமைப்புகளை விளக்குக.

44)அ) தண்ணீர் கதையின் கருபொருள் குன்றாமல் எழுதுக      (அல்லது)

    ஆ) நூலகம், நூல்கள் ஆகியன குறித்து அண்ணாவின் வானொலி உரையில் வெளிப்படுகின்ற கருத்துகள் யாவை?

45)அ. "எனது பயணம்" என்னும் தலைப்பில் உங்களது அனுபவங்களை வருணித்து எழுதுக    (அல்லது)

    ஆ. பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழா நிகழ்ச்சி செய்திகளைத் திரட்டித் தொகுப்புரை உருவாக்குக.

வினாத்தாள் தயாரிப்பு :

வெ.ராமகிருஷ்ணன்,       தமிழாசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி, சேலம்

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும். சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

எங்கள் குழுவில் இணைய:-

WHATSAPP                           TELEGRAM                   FACE BOOK GROUP




WHATSAPP LINK : https://chat.whatsapp.com/COVni0568j41sEyPmcyNgj

TELEGRAM LINK : https://t.me/thamizhvithai

FACE BOOK LINK : https://www.facebook.com/groups/215175780078251/?ref=share

KINDLY WAIT FOR 10 SECONDS



நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post