அரசு பொதுத்
தேர்வு வினாத்தாள்கள்
எட்டு மதிப்பெண் வினாக்கள்
செப்டம்பர்
2020 முதல் ஜூன் 2023 வரை ( 6 வினாத்தாள்கள் )
வினா
எண் – 43 முதல் 45 வரை
செப்டம்பர்
– 2020
பகுதி -V
43.
அ) விருந்தினர் பேணுதல், பசித்தவருக்கு உணவிடல் போன்ற தமிழர் பண்பாடு இன்றைய சூழலில்
உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் உணவிட்ட செயலையும் அழகுற விவரிக்கவும். ( அல்லது )
ஆ)
நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு
– குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் ‘ மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் ‘
என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக
44.
அ) புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச்
சொற்களும் புயலில் தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன? ( அல்லது )
ஆ)
‘ பாய்ச்சல் ‘ கதையில் அழகு தன்னை மறந்து ஆடியதைப் போன்று உங்கள் தெருக்களில் நீங்கள்
கண்டு மகிழ்ந்த பகல் வேடக் கலைஞரைக் குறித்து அழகுற விளக்கி எழுதுக.
45.
அ) மனித நேயமிக்க ஆளுமை ஒருவருக்கு குறிப்புகளைப் பயன்படுத்தி நினைவிதழ் ஒன்று உருவாக்குக.
முன்னுரை
– என் இளமைப் பருவம் – விடுதலைப் போராட்டத்தில் நான் – பொது நலமே தன்னலம் – எளிமையே
அறம் – நாட்டின் முன்னேற்றமே நோக்கம் – எளியோரின் அன்பே சொத்து – முடிவுரை ( அல்லது )
ஆ)
குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று தருக.
முன்னுரை – விண்வெளியில் தமிழரின் அறிவு – கல்பனா சாவ்லா
– விண்ணியல் அறிவில் வருங்காலத்தில் மேற்கொள்ள வேண்டியவை – முடிவுரை
செப்டம்பர்
– 2021
பகுதி – V
அனைத்து
வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. 3×8=24
43.
அ) சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சான்று
தந்து விளக்குக. ( அல்லது )
ஆ)
தமிழ் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில்
பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.
44.
அ) இராமானுசர் நாடகத்தில் வெளிப்படும் மனித நேயத்தை விவரிக்கவும். ( அல்லது )
ஆ)
அன்னமய்யா என்னும் பெயருக்கும், அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் ‘ கோபல்லபுரத்து
மக்கள் ‘ கதைப் பகுதி கொண்டு விவரிக்க.
45.
குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை எழுதுக
அ)
முன்னுரை – உழவுத் தொழில் – உழவர் – உழவுத் தொழிலின் இன்றியாமை – உழவர்களை மதித்தல்
– உணவினை வீணாக்கமல் உண்ணுதல் – முடிவுரை
( அல்லது )
ஆ)
குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பிடுக.
முன்னுரை
– ‘ சாலைப் பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு ‘ – சாலை விதிகள் – ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்
– ‘ விபத்தினைத் தவிர்ப்போம் விழிப்புணர்வு தருவோம் ‘ – முடிவுரை
மே
– 2022
பகுதி – V
அனைத்து
வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. 3×8=24
43.
அ) சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சான்று
தந்து விளக்குக. ( அல்லது )
ஆ)
தமிழ் சொல்வளம் பற்றியும் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை குறித்தும் தமிழ் மன்றத்தில்
பேசுவதற்கான உரைக் குறிப்புகளை எழுதுக.
44. அ) அழகர்சாமியின் ‘ ஒருவன் இருக்கிறான் ‘ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும்
கதை மாந்தர் குறித்து எழுதுக.. ( அல்லது )
ஆ)
அன்னமய்யா என்னும் பெயருக்கும், அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக் ‘ கோபல்லபுரத்து
மக்கள் ‘ கதைப் பகுதி கொண்டு விவரிக்க.
45.
குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதி தலைப்பிடுக.
அ
) முன்னுரை – ‘ சாலைப் பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு ‘ – சாலை விதிகள் – ஊர்தி ஓட்டுநருக்கான
நெறிகள் – ‘ விபத்தினைத் தவிர்ப்போம் விழிப்புணர்வு தருவோம் ‘ – முடிவுரை ( அல்லது )
ஆ)
குறிப்புகளைக் கொண்டு, ‘மக்கள் பணியே மகத்தான பணி ‘ என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.
முன்னுரை – தமிழகம் தந்த தவப்புதல்வர் – நாட்டுப்பற்று –
மொழிப்பற்று – பொதுவாழ்வில் தூய்மை – எளிமை – மக்கள் பணியே மகத்தான பணி – முடிவுரை
ஆகஸ்ட் - 2022
பகுதி – V
அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. 3×8=24
43. அ) ஜெயகாந்தன் நினைவுச் சிறப்பிதழை,வார இதழ் ஒன்று வெளியிட இருக்கிறது.
அதற்கான ஒரு சுவரொட்டியை வடிவமைத்து அளிக்கவும். (
அல்லது )
ஆ) தமிழர் மருத்துவ முறைக்கும் நவீன மருத்துவ முறைக்கும் உள்ள தொடர்பு குறித்து
எழுதுக.
44. அ) இராமானுசர் நாடகத்தினைச் சுருக்கி கதையாய் எழுதுக. ( அல்லது )
ஆ) “ மங்கையராய்ப் பிறப்பதற்கே “ என்னும் பாடத்தில் இடம் பெற்றுள்ள மூவர் பற்றி
சுருக்கி எழுதுக.
45. குறிப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதி தலைப்பிடுக..
குறிப்புகள் : முன்னுரை – கல்பனா சாவ்லா இளமைப் பருவம் – விண்வெளிப் பயணம்
– விண்வெளி சாதனைகள் – முடிவுரை ( அல்லது )
ஆ)
ஆ) குறிப்புகளைக் கொண்டு பொருட்காட்சிக்குச்
சென்ற நிகழ்வைக் கட்டுரையாக எழுதுக.
முன்னுரை – பொருட்காட்சி
வகைகள் – சென்னையில் அரசு பொருட்காட்சி – துறை அரங்குகள் – பொழுது போக்கு விற்பனை
– பொருட்காட்சியால் விளையும் நன்மைகள் – முடிவுரை.
ஏப்ரல்
– 2023
பகுதி – V
அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. 3×8=24
43. அ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற
விவரித்து எழுதுக. ( அல்லது )
ஆ) சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும்
ஒப்பிட்டு எழுதுக.
44. அ) ‘ கற்கை நன்றே கற்கை நன்றே
பிச்சை புகினும் கற்கை நன்றே ‘
என்கிறது வெற்றிவேற்கை,
மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச்சுடரை ஏற்றிய
கதையைப் பற்றி உங்களின் கருத்துகளை விவரிக்கவும். ( அல்லது )
ஆ) ‘ புயலிலே ஒரு தோணி ‘ – கதைப் பகுதியில் இடம்பெறும் கடற்பயண நிகழ்வுகளை விவரித்து
எழுதுக
45. உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச்
சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
முன்னுரை – அரசுப்
பொருட்காட்சி அமைவிடம் – பல்வித அரங்குகள் – நடைபெற்ற நிகழ்ச்சிகள் – அடைந்த உணர்வுகளும்
நன்மைளும் –முடிவுரை. (
அல்லது )
ஆ)
குறிப்புகளைக்
கொண்டு கட்டுரை ஒன்று எழுதுக.
முன்னுரை – கொரோனா பெருந்தொற்று
– தடுப்பு நடவடிக்கைகள் – விழிப்புணர்வுச் செயல்பாடுகள் – நமது கடமைகள் – முடிவுரை.
ஜூன்
– 2023
பகுதி – V
அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. 3×8=24
43. அ) காற்று மாசு அடைவதைப் போன்று நிலம் மாசு அடைவதை விவரித்து எழுதுக.
(அல்லது )
ஆ) நெகிழிப் பைகளின் தீமையைக் கூறும் பொம்மலாட்டம் உங்கள் பள்ளியின் ஆண்டு விழாவில்
நிகழ்த்தப்படுகிறது. அதற்கு பாராட்டுரை ஒன்று எழுதுக
44. அ) அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள பொருத்தப்பாட்டினைக்
கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி கொண்டு விவரிக்க ( அல்லது )
ஆ) அழகிரி சாமியின் ‘ ஒருவன் இருக்கிறான் ‘ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும்
கதை மாந்தர் குறித்து எழுதுக.
45. குறிப்புகளைக் கொண்டு ‘ சான்றோர் வளர்த்த தமிழ் ‘ என்னும்
தலைப்பில் கட்டுரை எழுதுக.
குறிப்புகள் : முன்னுரை
– தமிழன்னையின் அணிகலன்கள் – தமிழ்ச் சான்றோர் – தமிழின் வளர்ச்சி – தமிழின் எதிர்காலம்
–முடிவுரை.(அல்லது)
ஆ)
குறிப்புகளைக்
கொண்டு கட்டுரை எழுதி தலைப்பிடுக.
குறிப்புகள் : முன்னுரை
– சாலைப் பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு– ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள் – விபத்துகளைத்
தவிர்ப்போம் – விழிப்புணர்வு தருவோம் – முடிவுரை.
www.tamilvithai.com
www.kalvivithaigal.com
மேலும் பல்வேறு கற்றல் வளங்கள்
பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.
சராசரி
மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு
மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில்
தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது.
இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக
இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866
என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்
எங்கள்
குழுவில் இணைய:-
WHATSAPP TELEGRAM FACE BOOK GROUP
WHATSAPP LINK : https://chat.whatsapp.com/COVni0568j41sEyPmcyNgj
TELEGRAM LINK : https://t.me/thamizhvithai
FACE BOOK LINK :
https://www.facebook.com/groups/215175780078251/?ref=share