10th-Tamil-Previous -Public Questions -5 mark-collections - Pdf


அரசு பொதுத் தேர்வு வினாத்தாள்கள்

ஐந்து  மதிப்பெண் வினாக்கள்

செப்டம்பர் 2020 முதல் ஜூன் 2023 வரை ( 6 வினாத்தாள்கள் )

வினா எண் – 38 முதல் 42 வரை

செப்டம்பர் – 2020

பகுதி -IV

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                           5×5=25

38. அ) காசிக்காண்டம் குறிப்பிடும் இல்லற ஒழுக்கங்களில் எவையேனும் ஐந்தினை எழுதி, உங்கள் வீட்டிற்கு வந்த விருந்தினரை எதிர்கொண்டு, நீங்கள் விருந்தளித்த நிகழ்வோடு ஒப்பிட்டு எழுதுக.     ( அல்லது )

ஆ) ‘ சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் ‘ என்ற தலைப்பில்  கீழ்க்காணும் குறிப்பினைக் கொண்டு உங்கள் இலக்கிய உரையைத் தொடர்க.

குறிப்பு :

அன்பும் பண்பும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து  அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கைக் காட்சியைப் பெரிய கலை நிகழ்வாகவே காட்டும் கன்பனின் கவி நயம்……….

39. அ) நீங்கள் படித்த நூல் ஒன்றின் சிறப்புகளைக் குறிப்பிட்டு அந்நூலைப் படிக்குமாறு பரிந்துரை செய்து உங்கள் நண்பருக்குக் கடிதம் ஒன்று எழுதுக..           ( அல்லது )

 ஆ.’ பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல்’ – குறித்த செயல்திட்ட வரைவு ஒன்றை உருவாக்கி, அதற்குத் தலைமை ஆசிரியரின் ஒப்புதல் பெறக் கடிதம் ஒன்று எழுதுக.

40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.


41.எண்-6,பாரதியார் தெரு, நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தமிழரசுவின் மகள் பூங்கொடி.கணினிப் பயிற்றுநர் பணி வேண்டி தன் விவரப் பட்டியல் நிரப்புகிறார். தேர்வர் தன்னை பூங்கொடியாகப் பாவித்து பணிவாய்ப்பு வேண்டி தன் விவரப் பட்டியலை நிரப்புக.

42. அ) அரசால் நிறுவப்படும் கட்டடங்களிலும் சிலைகளிலும் நிறுவியர் பெயர்,நிறுவப்பட்ட காலம், நோக்கம் சார்ந்த பிற செய்திகளும் தாங்கிய கல்வெட்டுகளைப் பார்த்திருப்பீர்கள்.இவை  போண்று  நீவிர் கண்ட பல்வேறு பழமையான நினைவுச் சின்ங்களைப் பாதுகாத்துப் பராமரித்துக் காக்கும் வழிமுறைகள் ஐந்தினைப் பட்டியலிடுக..                 ( அல்லது )

ஆ) மொழிபெயர்க்க.

          Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had  the most fertile lands. The properity of a farmer depended on getting the necessary sunlight,seasonal rains and the fertility of the soil.Among these elements of nature,sunlight was considered indispensible by the ancient Tamils.

குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

 உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

மொழி பெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் நாம் எளிதாகப் பெற முடியும். பல அறிவுத் துறைகளுக்கும் தொழில் துறைகளுக்கும் வெளிநாட்டாரை எதிர்பார்க்காமல் நாமே நமக்கு வேண்டிய அனைத்தையும் உருவாக்கிக் கொள்ள முடியும். மனித வளத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியும். வேலைவாய்ப்புத் தளத்தை விரிவாக்க முடியும்.நாடு,இன மொழி எல்லைகள் கடந்து ஓருலகத் தன்மையைப் பெற முடியும். நாடு விடுதலை பெற்ற பிறகு பல நாட்டு தூதரகங்கள் நம் நாட்டில் நிறுவப்பட்டன. அவை தங்களுடைய இலக்கியம், பண்பாடு, தொழில் வளர்ச்சி, கலை போன்ற்வற்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் தத்தம் மொழிகளைக் கற்றுக் கொடுக்கின்ற முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. இதனைச் சார்ந்து பிற மொழிகளைக் கற்றுத்தரும் தனியார் நிறுவனங்களும் உருவாகியுள்ளன. பள்ளிகளிலும் கல்லுரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் பிறமொழிகளைக் கற்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

( I ). ஓரூலகத் தன்மையைப் பெறுவதற்கான முக்கிய வழிமுறையாக எதனைக் கொள்ளலாம்?

( ii ). பிற மொழிகளைக் கற்பதற்கான வாய்ப்புகளைத் தருவன எவை?

( iii ) தூதரங்களின் முதன்மையான பணிகளில் ஒன்று எது?

( iv ) மொழி பெயர்ப்புக் கல்வியின் பயங்களை எழுதுக.

( v )  இப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு இடுக.

செப்டம்பர் – 2021

பகுதி – IV 

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                            5×5=25

38. அ) காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி எழுதுக.

கவிஞன் யானோர் காலக் கணிதம்

          கருப்படு பொருளை உருப்பட வைப்பேன்!

          புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்

          பொன்னினும் விலைமிகு பொருளென் செல்வம்!

          இவைசரி யென்றால் இயம்புவதென் தொழில்

          இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!

          ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்

          அவனும் யானுமே அறிந்தவை;அறிக!  -கண்ணதாசன்.            ( அல்லது )

ஆ) கருணையனின் தாய் மறைவுக்கு,வீரமாமுனிவர் தம் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக  மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விளக்குக

39. அ) கொரோனா பெருந்தொற்று ஊரடங்குக் காலத்தில் உங்கள் நேரத்தை எவ்வாறு பயனுறக் கழித்தீர்கள் என்பதை நண்பனுக்கு விவரித்து கடிதம் எழுதுக.               ( அல்லது )

 ஆ.உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.

41. கடலூர் மாவட்டம், பாரதியார் நகர், கம்பர் தெருவிலுள்ள 112 ஆம் இலக்க வீட்டில் குடியிருக்கும் நிலவனின் மகள் பூங்குழலி, நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் படிக்கிறார். அவர் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் உறுப்பினராகச் சேர்ந்து கால்பந்து விளையாட்டில் பயிற்சி பெற விரும்புகிறார். தேர்வர் தம்மை பூங்குழலியாகக் கருதி, கொடுக்கப்பட்டுள்ள உறுப்பினர் சேர்க்கைப் படிவத்தை நிரப்புக.

42. அ) நாம் எப்போதும் ஒரே மனநிலையில் இருப்பதில்லை. நம்மைச் சுற்றி நிகழும் செயல்களால் நாம் அலைக்கழிக்கப்படுகிறோம். உடன் பயில்பவருடனோ,உடன் பிறந்தவருடனோ எதிர் பாராமல் சச்சரவு ஏற்படுகிறது…. இந்த சமயத்தில் சினம் கொள்ளத் தக்க சொற்களை பேசுகிறோம்; கேட்கிறோம்;கை கலப்பில் ஈடுபடுகிறோம்; இது காறும் கற்ற அறங்கள் நமக்கு கைகொடுக்க வேண்டாமா?

மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடுக.   ( அல்லது )

ஆ) மொழிபெயர்க்க.

1.If you talk to a man in a language he understand,thats goes to his head. If you talk to him in his own language that goes to his heart – Nelson Mendela

2. Language is the road map of a culture. It tells you where its people come from and where they are going – Rita Mae Brown

குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

 உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

கருத்தாழமும் வாசக சுவைப்பும் கலந்து இலக்கியங்கள் படைத்தவர் ஜெயகாந்தன். சமூக அமைப்பின் சமூக முரண்பாடுகளை எழுத்திலே அப்பட்டமாகக் காட்டியவர் ஜெயகாந்தன். நேர்முக, எதிர்முக விளைவுகளைப் பெற்ரவர். உள்ளடக்க விரிவால் மனிதாபி – மானத்தை வாசகர் நெஞ்சங்களில் விதைத்தவர். இவருடைய படைப்புகளுக்குக் குடியரசுத் தலைவர் விருது., சாகித்திய அகாதெமி விருது, சோவியத்  நாட்டு விருது மற்றும் ஞானபீட விருது,தாமரைத் திரு விருதுகளும் கிடைத்துள்ளன. “ நான் எழுதுவதற்கு ஒரு தூண்டுதலும் அதற்குரிய காரணமும் உண்டு. என் எழுத்துக்கு ஒரு இலட்சியமும் உணடு. நான் எழுதுவது, முழுக்க முழுக்க வாழ்க்கையிருந்து நான் பெறும் கல்வியின் விளைவும், எனது தனி முயற்சியின் பயனுமாகும்” என்று கூறுகிறார் ஜெயகாந்தன். ‘ அர்த்தமே படைப்பின் வடிவத்தை வளமாக்குகிறது’ என்பது அன்னாரின் அசைக்க முடியாத நம்பிக்கை.

( I ). ஜெயகாந்தன் பெற்ற விருதுகள் யாவை?

( ii ). மனிதாபிமானத்தை வாசகர் நெஞ்சில் விதைத்தவர் யார்?

( iii ) வாசகர் மனதில் ஜெயகாந்தன் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தினார்?

( iv ) எது படைப்பின் வடிவத்தை வளமாக்குகிறது?.

( v )  உரைப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு தருக..

மே – 2022

பகுதி – IV ( மதிப்பெண்கள் -25 )

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                 5×5=25

38. அ) கருணையன் தாய் மறைவுக்கு வீரமாமுனிவர் பூக்கள் போன்ற உவமைகளாலும் உருவக மலர்களாலும் நிகழ்த்திய கவிதாஞ்சலியை விவரிக்க.                   ( அல்லது )

ஆ)’ காலக்கணிதம்’ கவிதையில் கவிஞர் கண்ணதாசன் குறிப்பிட்டுள்ள கருத்துகளுள் உங்களைக் கவர்ந்த ஐந்து கருத்துகளை எழுதுக.

39. அ) பெருந்தொற்று ஏற்படுவதைத் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கைகளை விவரித்துச் சிற்றூரில் உள்ள உங்களது தாத்தா பாட்டிக்கு கடிதம் ஒன்றை எழுதுக.( அல்லது )

 ஆ. உங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவன செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.

40. படம் உணர்த்தும் கருத்தை நயமுற ஐந்து தொடர்களில்  எழுதுக.

41. வீட்டு எண்: 21, வ.உ.சிதம்பரனார் தெரு, கரூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பினை நிறைவு செய்த வெற்றிச் செல்வனின் மகன் குணசேகரன் மேல்நிலை வகுப்பில் சேர விரும்புகிறார். தேர்வர் தன்னை குணசேகரனாகக் கருதி கொடுக்கப்பட்ட மேல்நிலை வகுப்புச் சேர்க்கை விண்ணப்பப்படிவத்தினை நிரப்புக.

42. அ) இன்சொல் பேசுவதால் விளையும் நன்மைகள் ஐந்தினை எழுதுக.    ( அல்லது )

ஆ) மொழிபெயர்க்க.

The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark.The milky clouds start their wandering.The colourful birds start twitting their morning melodies in percussion.The cute butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant

குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

 உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

மனிதன் தனியானவன் அல்லன். அவன் சமூகக் கடலின் ஒரு துளி. அவனுக்குள்ளே சமூகம் – சமூகத்துக்குள்ளே அவன். மனிதன் எல்லாரோடும் எல்லாவற்றோடும் எவ்வளவுக்கெவ்வளவு தன்னை இணைத்துக் கொள்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவனுடைய மகிழ்ச்சி பெருகிறது. இந்த மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்க வேண்டும் என்றால் அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் பொது விதியான அறத்தை மனிதன் ஏற்க வேண்டும். சங்க காலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின் காலத்தை அறநெறிக்காலம் என்பர். அறநெறிக்கால அறங்கள் சமயம் சார்ந்தவை, ஆனால் சங்ககால அறங்கள் இயல்பானவை.

( I ). மனிதன் எப்படிப்பட்டவன்?

( ii ). மனிதனுக்கு எப்போது மகிழ்ச்சி பெருகுகிறது?

( iii ) மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்க மனிதன் என்ன செய்ய வேண்டும்?

( iv ) அறநெறிக்காலம் எனப்படுவது எது?

( v )  சங்ககால அறங்கள் எப்படிப்பட்டவை?

ஆகஸ்ட் - 2022

பகுதி – IV

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                 5×5=25

38. அ) மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப் பேச்சு ஒன்றை உருவாக்குக.                ( அல்லது )

ஆ) சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.

39. அ) பள்ளித் திடலில் கிடைத்த பணப் பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.     ( அல்லது )

ஆ. உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக



41 பணி வாய்ப்பு வேண்டி தன் விவரப் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு படிவத்தை நிரப்புக. பெயர் : அருளன், தந்தை : செல்வம், முகவரி : கதவு எண்.25, திலகர் தெரு, மதுரை வடக்கு-2.

42. அ) பள்ளியிலும், வீட்டிலும் நீ கடைப்பிடிக்கக் கூடிய நற்பண்புகளைப் பட்டியலிடுக.

( அல்லது )

ஆ) மொழிபெயர்க்க.

Therukoothu is, as its name indicates, a popular form of theatre performed in the steets.It is performed by rural artists.The stories are derived from epics like Ramayana,Mahabharatha and other ancient puranas.There are more songs in the play with dialogues improvised by the artists on the spot. Fifteen to twenty actors with a small orchestra forms a koothu troupe.Though the orchestra has a singer, the artists sing in their own voices. Artists dress themselves with heavy costumes and bright makeup.Koothu is very popular amoung rural areas.

குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

 உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

பூக்களைப் பற்றிய அரிய இலக்கியச் செய்திகள்

பூ உண்டு.ஆனால் கண்ணிற்குக் காட்சி தராமல் காண்டற்கு அரியவாய் இருக்கும் மலர்கள்; ஆல மலர்;பலா மலர்.

மலர் உண்டு;பெயரும் உண்டு; ஆனால் இது தான் அது என்று உறுதியாக அறிய இயலாதுள்ள நிலையில் இருக்கும் மலர்கள்: சுள்ளி மலர், பாங்கர் மலர்.

அகவிதழ் முதலிய உறுப்புகள் இருந்து அவை புறத்தே காட்சிப்படாமல் உள்ளேயே பொதிந்திருக்கும் மலர்கள்: அத்தி,ஆலம்,கொழிஞ்சி,பலா.

பயன்பாடு நாற்றம்,மக்களது விருப்பில் இடம் பெறாமை,பொதுவில் ஒதுக்கப்பட்டமை கொண்டு மலரில் சில எளியவை ஆகின்றன. அவையாவன: நெருஞ்சி,எருக்கு,பூளை,குரீஇப் பூளை, வேளை, ஊமத்தம், கள்ளி, முருங்கை.

இலுப்பைப் பூக்கள் இனிப்பானவை. கரடிகள் மரத்தின் மீதேறி அவற்றைப் பறித்து உண்ணும். பாதிரிப் பூ குடிநீருக்குத் தன் மணத்தை ஏற்றும். மூங்கில் பூவில் காய் தோன்றிக் கனியாகி அதிலிருந்து ஒரு வகை அரிசி தோன்றும். இது மூங்கில் அரிசி எனப்படும்.

(i). கண்ணிற்குக் காட்சி தராமல் காண்பதற்கு அரியனவாய் இருக்கும் மலர்கள் எவை?

(ii). புறத்தே காட்சிப்படாமல் உள்ளே பொதிந்திருக்கும் மலர்கள் யாவை?

(iii). இனிப்பான பூக்கள் எது?

(iv) எந்தப் பூ குடிநீருக்கு மணத்தை ஏற்றும்?

(v)  மூங்கில் அரிசி என்றால் என்ன?

ஏப்ரல் – 2023

பகுதி – IV

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.         5×5=25

38. அ) முல்லைப்பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக    ( அல்லது )

ஆ) வள்ளுவம், சிறந்த அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதை குறள் வழி விளக்குக

39. அ) பள்ளித் திடலில் கிடைத்த பணப் பையை உரியவரிடம் ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.( அல்லது )

ஆ. மருந்தகம் ஒன்றிலிருந்து உங்கள் தாத்தா வாங்கி வந்த மருந்தின் பயன்பாட்டுத் தேதி முடிவடைந்ததை அறிந்த நீங்கள், அந்த மருந்தகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரதுறை ஆய்வாளர் அவர்களுக்கு முறையீட்டுக் கடிதம் ஒன்றை எழுதுக.

40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக



41 அமுதன் தன் தந்தை மாணிக்கமணி அவர்களிடம் நூலகத்தில் உறுப்பினராக வேண்டினான். அவரும் அமுதனிடம் 200/- ரூபாயும், 15. காந்தி தெரு, குமாரபாளையம்,நீலகிரி மாவட்டம் என்ற முகவரியிட்ட அடையாளச் சான்றையும் கொடுத்தார். கிளை நூலகத்திற்கு சென்ற அமுதனாக, தேர்வர் தன்னைக் கருதி, கொடுக்கப்பட்ட நூலக உறுப்பினர் படிவத்தை நிரப்புக.

42. அ) பள்ளியிலும், வீட்டிலும் நீங்கள் நடந்துகொள்ளும் முறைகளைப் பட்டியலிடுக

( அல்லது )

ஆ) மொழிபெயர்க்க.

Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had  the most fertile lands. The properity of a farmer depended on getting the necessary sunlight,seasonal rains and the fertility of the soil.Among these elements of nature,sunlight was considered indispensible by the ancient Tamils.

குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

 உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

          மேற்கு என்பதற்குக் குடக்கு என்னும் பெயருமுண்டு. மேற்கிலிருந்து வீசும் போது நான் கோடை எனப்படுகிறேன். மேற்கிலிருந்து அதிக வலிமையோடு வீசுகிறேன். வறண்ட நிலப்பகுதியில் இருந்து வீசுவதால் வெப்பக் காற்றாகிறேன். வடக்கு என்பதற்கு வாடை என்னும் பெயருமுண்டு. வடக்கிலிருந்து வீசும் போது நான் வாடை காற்று எனப்படுகிறேன். நான் பனிப் பகுதியிலிருந்து வீசுவதால் மிகவும் குளிர்ச்சியான ஊதைக் காற்று எனவும் அழைக்கப்படுகிறேன்.

(i). மேற்கிலிருந்து வீசும் காற்று யாது?

(ii). ஊதைக் காற்று என்று அழைப்பதேன்?

(iii). மேற்கு என்பதன் மற்றொரு பெயர் என்ன?

(iv) வாடை என்பது எத்திசையைக் குறிக்கிறது?

(v)  இப்பத்திக்கு ஏற்ற தலைப்பினை தருக.

ஜூன் – 2023

பகுதி – IV 

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                 5×5=25

38. அ) மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக (அல்லது)

ஆ) பலரிடம் உதவி பெற்றுக் கடின உழைப்பால் முன்னேறிய ஒருவர், அவருக்கு உதவிய நல்ல உள்ளங்களையும் சுற்றங்களையும் அருகில் சேர்க்கவில்லை. அவருக்கு உணர்த்தும் நோக்கில் வள்ளுவர் குறிப்பிடும் கருத்துகள் யாவை?

39. அ) உங்கள் பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றவும் புதை சாக்கடைத் தூர்வாரவும் வேண்டி நகராட்சி ஆணையருக்குக் கடிதம் ஒன்று எழுதுக.     ( அல்லது )

ஆ. மாநில அளவில் நடைபெற்ற ‘ மரம் இயற்கையின் வரம் ‘ எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.

 40. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக




41 எண்:46, திரு.வி.க. தெரு, கடம்பவனம், நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் தமிழினியன் என்பவரின் மகன் இளஞ்செழியன் பத்தாம் வகுப்பினை நிறைவு செய்தார். இளஞ்செழியன் கடம்பவனம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மேல்நிலை வகுப்பு சேருவதற்குக் கொடுக்கப்பட்டுள்ள மேல்நிலை வகுப்பு சேர்க்கை விண்ணப்பப் படிவத்தை நிரப்புக.

42. அ) இன்சொற்கள் பேசுவதால் விளையும் நன்மைகள் ஐந்தினைப் பட்டியலிடுக ( அல்லது )

ஆ) மொழிபெயர்க்க.

Therukoothu is, as its name indicates, a popular form of theatre performed in the steets.It is performed by rural artists.The stories are derived from epics like Ramayana,Mahabharatha and other ancient puranas.There are more songs in the play with dialogues improvised by the artists on the spot. Fifteen to twenty actors with a small orchestra forms a koothu troupe.Though the orchestra has a singer, the artists sing in their own voices. Artists dress themselves with heavy costumes and bright makeup.Koothu is very popular amoung rural areas.

குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

 உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

          மனிதன் தனியானவன் அல்லன். அவன் சமூகக் கடலின் ஒரு துளி. அவனுக்குள்ளே சமூகம் – சமூகத்துக்குள்ளே அவன். மனிதன் எல்லாரோடும் எல்லாவற்றோடும் எவ்வளவுக்கெவ்வளவு தன்னை இணைத்துக் கொள்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவனுடைய மகிழ்ச்சி பெருகிறது. இந்த மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்க வேண்டும் என்றால் அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் பொது விதியான அறத்தை மனிதன் ஏற்க வேண்டும். சங்க காலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின் காலத்தை அறநெறிக்காலம் என்பர். அறநெறிக்கால அறங்கள் சமயம் சார்ந்தவை, ஆனால் சங்ககால அறங்கள் இயல்பானவை.

( I ). மனிதன் எப்படிப்பட்டவன்?

( ii ). மனிதனுக்கு எப்போது மகிழ்ச்சி பெருகுகிறது?

( iii ) மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்க மனிதன் என்ன செய்ய வேண்டும்?

( iv ) அறநெறிக்காலம் எனப்படுவது எது?

( v )  சங்ககால அறங்கள் எப்படிப்பட்டவை?.

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

 click here to get pdf

click here

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.

சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

எங்கள் குழுவில் இணைய:-

WHATSAPP                          TELEGRAM                  FACE BOOK GROUP




WHATSAPP LINK : https://chat.whatsapp.com/COVni0568j41sEyPmcyNgj

TELEGRAM LINK : https://t.me/thamizhvithai

FACE BOOK LINK : https://www.facebook.com/groups/215175780078251/?ref=share

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post