10th-Tamil-Previous -Public Questions - 3 mark- section-1- collections - Pdf

 

அரசு பொதுத் தேர்வு வினாத்தாள்கள்

மூன்று மதிப்பெண் வினாக்கள்

செப்டம்பர் 2020 முதல் ஜூன் 2023 வரை ( 6 வினாத்தாள்கள் )

செப்டம்பர் – 2020

பகுதி – III / பிரிவு – I

இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                                   2×3=6

29. படங்கள் வெளிப்படுத்தும் நிகழ்த்துகலை குறித்து மூன்று தொடர்கள் எழுதுக.

30 உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

          தமிழர்,போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர்.போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது. போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள்,நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது. தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிடுகிறார்.

அ) போர் அறம் என்பது எதைக் குறிக்கிறது?

ஆ) யாரோடு போர் செய்வது கூடாது என்று ஆவூர் மூலங்கிழார் குறிப்பிடுகிறார்?

இ) எவ்வாறு போர் புரிய வேண்டும்?

31. உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசைகளிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர் நாவாய் ஓட்டியாக நான்….. முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றி பேசுகிறது.” இன்றைய சூழலில் நான் “ நீர்  தன்னைப் பற்றிப் பேசுவதாக உங்களுடைய கற்பனையில்  மூன்று கருத்துகளை எழுதுக

 

செப்டம்பர் – 2021

பகுதி – III  / பிரிவு – I

இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-           2×3=6

29 உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

          தமிழ்நாடு எத்துணைப் பொருள் வளமுடையதென்பது அதன் விளைபொருள் வகைகளை நோக்கினாலே விளங்கும். பிற நாடுகளிலுள்ள கூலங்களெல்லாம் சிலவாகவும் சில வகைப்பட்டனவாகவும் இருக்கின்றன. எடுத்துக்காட்டாக கோதுமையை எடுத்துக் கொள்ளின் அதில் சம்பாக் கோதுமை, குண்டுக் கோதுமை, வாற்கோதுமை முதலிய சில வகைகளேயுண்டு. ஆனால் தமிழ்நாட்டில் நெல்லிலோ. செந்நெல், வெண்ணெல், கார்நெல் என்றும், பல வகைகள் இருப்பதுடன் அவற்றுள் சம்பாவில் மட்டும் ஆவிரம்பூச்சம்பா, ஆனைக்கொம்பன் சம்பா, குண்டுச் சம்பா, குதிரை வாலிச் சம்பா, சிறுமணிச் சம்பா, சீரகச் சம்பா முதலிய அறுபது உள்வகைகள் உள்ளன.

அ) தமிழ்நாடு பொருள் வளமுடையது என்பது எதனால் விளங்கும்?

ஆ) கோதுமையின் வகைகளைக் குறிப்பிடுக.

இ) தமிழ்நாட்டின் நெல்லின் வகைகளை எழுதுக.

30. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள் தருக.

31. “ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் “ – இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

மே – 2022

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 ) பிரிவு – I

இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                                         2×3=6

29. “ புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது”

- இது போல் இளம் பயிர்வகை மூன்றின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

 30.உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

          அறம் கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தன. அறம் கூறு அவையம் பற்றி ‘ அறம் அறக்கண்ட நெறிமான் அவையம் ‘ என்கிறது புறநானூறு. உறையூரிலிருந்த அறஅவையம் தனிச்சிறப்புப் பெற்றது என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. மதுரையில் இருந்த அவையம் பற்றி மதுரைக் காஞ்சி குறிப்பிடுகிறது.அங்குள்ள அவையம் துலாக்கோல் போல நடுநிலை மிக்கது என்கிறது.

அ) அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தவை எவை?

ஆ) அவையம் பற்றி புறநானூறு கூறுவது யாது?

இ) மதுரையில் இருந்த அவையம் எப்படி இருந்ததாக மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது?

31. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.

ஆகஸ்ட் - 2022

பகுதி – III  / பிரிவு – I

இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-           2×3=6

29. “ தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம் “ இடம் சுட்டிப் பொருள் விளக்குக.

30.உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

பருப்பொருள்கள் சிதறும்படியாகப் பல   காலங்கள் கடந்து சென்றன. புவி உருவானபோதுநெருப்புப் பந்துபோல் விளங்கிய ஊழிக்காலம் தோன்றியது. பின்னர்ப் புவி குளிரும்படியாகத்  தொடர்ந்து மழை பொழிந்த ஊழிக்காலம் கடந்தது. அவ்வாறு தொடர்ந்து பெய்த மழையால் புவி வெள்ளத்தில் மூழ்கியது. இப்படி மீண்டும் மீண்டும் சிறப்பாக ஆற்றல் மிகுந்து செறிந்து திரண்டு இப்படியாக ( வெள்ளத்தில் மூழ்குதல் ) நடந்த இந்தப் பெரிய உலகத்தில், உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலாகிய உள்ளீடு தோன்றியது. உயிர்கள் தோன்றி நிலைபெறும்படியாக இப்பெரிய புவியில் ஊழிக்காலம் கடந்தது.

1. பத்தியில் உள்ள அடுக்குத்தொடர்களை எடுத்து எழுதுக.

2. புவி ஏன் வெள்ளத்தில் மூழ்கியது?

3. பெய்த மழைஇத்தொடரை வினைத்தொகையாக மாற்றுக.

31. ஜெயகாந்தனின் திரைப்படப் படைப்புகளைக் கூறுக.

 

 

 

ஏப்ரல் – 2023

பகுதி – III  / பிரிவு – I

இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-           2×3=6

29. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதைப் பற்றி எழுதுக.

30.உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

          “ போலச் செய்தல் “ பண்புகளைப் பின்பற்றி நிகழ்த்திக் காட்டும் கலைகளில் பொய்க்கால் குதிரையாட்டமும் ஒன்று. மரத்தாலான பொய்க்காலில் நின்றுகொண்டும் குதிரை வடிவுள்ள கூட்டை உடம்பில் சுமந்து கொண்டும் ஆடும் ஆட்டமே பொய்க்கால் குதிரையாட்டம். அரசன், அரசி வேடமிட்டு ஆடப்படும் இவ்வாட்டம் புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இது மராட்டியர் காலத்தில் தஞ்சைக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

1. எப்பண்புகளைப் பின்பற்றிப் பொய்க்கால் குதிரையாட்டம் நிகழ்த்தப்படுகிறது?

2. பொய்க்கால் குதிரையாட்டம் வேறு பெயர்கள் யாவை?

3. யாருடைய காலத்தில் இது தஞ்சைக்கு வந்தது?

31. சோலைக்( பூங்கா) காற்றும் மின் விசிறிக் காற்றும் பேசிக் கொள்வது போல் ஓர் உரையாடல் அமைக்க.

ஜூன் – 2023

பகுதி – III  / பிரிவு – I

இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-           2×3=6

29. சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதைப் பற்றி எழுதுக.

30.உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

          ஜெர்மனியில் ஓர் ஆண்டில் பிற மொழிகளிலிருந்து 5000 நூல்கள் வரை மொழி பெயர்க்கப்படுகின்றன. புள்ளி விவரப்படி அதிகமான தமிழ் நூல்கள் பிறமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அவ்வரிசையில் முதலிடம் ஆங்கிலம், இரண்டாமிடம் மலையாளம். மொழிபெயர்ப்பினால் புதிய சொற்களை உருவாகி மொழிவளம் ஏற்படுகிறது.

அ. ஜெர்மனியில் ஓர் ஆண்டில் எத்தனை நூல்கள் வரை மொழி பெயர்க்கப்படுகின்றன?

ஆ. தமிழ் நூல்கள் எந்த மொழியில் அதிக அளவில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது?

இ. மொழிபெயர்ப்பின் பயன் என்ன?

31. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்து சிந்தனைகளை முன்வைத்து எழுதுக..

 

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

 click here to get pdf

click here


மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.

சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

எங்கள் குழுவில் இணைய:-

WHATSAPP                          TELEGRAM                  FACE BOOK GROU

WHATSAPP LINK : https://chat.whatsapp.com/COVni0568j41sEyPmcyNgj

TELEGRAM LINK : https://t.me/thamizhvithai

FACE BOOK LINK : https://www.facebook.com/groups/215175780078251/?ref=share

 

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post