10TH-TAMIL-3RD REVISION - MODEL QUESTION -3-PDF

 

  மூன்றாம் திருப்புதல் தேர்வு - 2024

 மாதிரி வினாத்தாள் - 3

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                 மதிப்பெண் : 100

_________________________________________________________________________

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

அ) சரியான விடையைத் தேர்வு செய்க.                                                           15×1=15

1 இவற்றில் திணை வழுவமைதியைக் காண்க

அ) ‘ இந்த பாப்பா தூங்கமாட்டாள் ‘ என்று தன்னையே குழந்தை குறிப்பிடுவது.

ஆ) இரவெல்லாம் நாய் கத்திக் கொண்டே இருந்தது.

இ) ‘ வாடா செல்லம் ‘ என்று தாய் மகளை அழைப்பது.

ஈ) ‘ என் தங்கை வந்தாள் ‘ – என்று பசுவைக் குறிப்பிடுவது

2. பின்வருவனவற்றுள் முறையான தொடர்

) தமிழர் பண்பாட்டில் தனித்த வாழை இலைக்கு இடமுண்டு

) தமிழர் வாழை இலைக்குப் பண்பாட்டில் தனித்த இடமுண்டு.

) தமிழர் பண்பாட்டில் வாழை இலைக்குத் தனித்த இடமுண்டு       

) தமிழர் வாழை பண்பாட்டில் தனித்த இலைக்கு இடமுண்டு

3. சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் அமைந்த பாவினம்

அ) அகவற்பா ஆ) வெண்பா   இ) வஞ்சிப்பா        ஈ) கலிப்பா

4. உலகமே வறுமையுற்றாலும் கொடுப்பவன் என்றும் பொருள்களின் இருப்பைக் கூட அறியாமல் கொடுப்பவன் என்றும் பாராட்டப்படுவோர்.

அ) உதியன்;சேரலாதன்              ஆ) அதியன்;பெருஞ்சாத்தன்  

இ) பேகன்;கிள்ளிவளவன்            ஈ) நெடுஞ்செழியன்;திருமிடிக்காரி

5. தேர்ப்பாகன் – இத்தொடரில் அமைந்துள்ள தொகையைத் தெரிவு செய்க.

அ) வினைத்தொகை ஆ) உருபும் பயனும் உடன்தொக்க தொகை

இ) பண்புத் தொகை ஈ) இருபெயரொட்டுப் பண்புத் தொகை

6 கோசல நாட்டில் கொடை இல்லாத காரணம் என்ன?

) அங்கு வறுமை இல்லாததால்  

) அரசன் கொடுங்கோல் ஆட்சி புரிவதால்       

) ஊரில் விளைச்சல் இல்லாததால்                 

) நல்ல உள்ளம் உடையவர்கள் இல்லாததால்

7“ நாற்றிசையும் செல்லாத நாடில்லை” “ ஐந்துசால்பு ஊன்றிய தூண்” – இந்தச் செய்யுள் அடிகளில் இடம்பெற்றுள்ள எண்ணுப்பெயர்களையும் அவற்றிற்கான தமிழ் எண்களையும் தேர்க.

) நான்கு , ஐந்து – ௪ ,௫   ) மூன்று, நான்கு – ௩ , ௪       

) ஐந்து , ஏழு – ,         ) நான்கு , ஆறு – ,

8. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது

அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்  ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்

இ) அறிவியல் முன்னேற்றம்                                 ஈ) வெளிநாட்டு முதலீடுகள்

9 ‘ மொழி ஞாயிறு ‘ – என்றழைக்கப்படுபவர் யார்?

அ) தமிழழகனார்                         ஆ) கம்பர்     

இ) தேவநேயப் பாவாணர்               ஈ) வைரமுத்து

10 “ உனதருளே பார்ப்பன் அடியேனே” – யார் யாரிடம் கூறியது?

அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்

ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்        

இ) மருத்துவரிடம் நோயாளி          ஈ) நோயாளியிடம் மருத்துவர்

11 கொளுத்தும் வெயில் சட்டெனத் தணிந்தது.வானம் இருண்டது. வாடைக் காற்று வீசியது. – என்ற நயமிகு தொடருக்கு ஏற்ற தலைப்பு.

) வனத்தின் நடனம்        ) மிதக்கும் வாசம் 

) மொட்டின் வருகை      ) காற்றின் பாடல்

பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

உய்முறை அறியேன்; ஓர்ந்த

  உணர்வினொத்து உறுப்பும் இல்லா

மெய்முறை அறியேன்; மெய்தான்

 விரும்பிய உணவு தேடச்

செய்முறை அறியேன் ; கானில்

  செல்வழி அறியேன்; தாய்தன்

கைமுறை அறிந்தேன் தாயும்

 கடிந்தெனைத் தனித்துப் போனாள்“

12. இப்பாடல் இடம் பெற்ற நூல்

அ. சிலப்பதிகாரம்     ஆ. முல்லைப்பாட்டு           இ. பரிபாடல்            ஈ.தேம்பாவாணி

13. இப்பாடலின் ஆசிரியர்_____

அ. இளங்கோவடிகள்                   ஆ, வீரமாமுனிவர்    

இ. குமரகுருபரர்                          ஈ. கீரந்தையர்

14. பாடலில் இடம் பெற்றுள்ள மோனைச் சொற்கள்

அ. உய்முறை - மெய்முறை                           ஆ. ஓர்ந்த - உறுப்பு          

இ. மெய்முறை - செய்முறை                           ஈ. கைமுறை - கடிதெனை

15. இப்பாடலில் மெய் என்பதன் பொருள்

அ. உணவு             ஆ. காணுதல்          இ. உடம்பு     ஈ. வழி

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                      4×2=8

21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

16. விடைக்கேற்ற வினா அமைக்க.

அ. தமிழ் இயல்,இசை,நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது.

ஆ. 1906 – ஆம் ஆண்டு வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயருக்கு எதிராகச் சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்

17. உறங்குகின்ற கும்பகன்ன ‘ எழுந்திராய் எழுந்திராய்’ காலதூதர் கையிலே ‘ உறங்குவாய் உறங்குவாய் ‘ கும்பகன்னனை என்ன சொல்லி எழுப்புகிறார்கள்? எங்கு அவனை உறங்கச் சொல்கிறார்கள்?

18. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

19. குறிப்பு வரைக – அவையம்

20. தேம்பாவணி – குறிப்பு வரைக

21.  பொருளல்ல – எனத் தொடங்கும் குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                            5×2=10

22. “ வாழ்க “ பகுபத உறுப்பிலக்கணம் தருக.

23. புறத்திணைகளில் எதிரெதிர் திணைகளை அட்டவணைப்படுத்துக.

24. வெளிப்படை விடைகள் யாவை?

25. கலைச்சொல் தருக

அ) BELIEF     ஆ)  PHILOSOPHER

26. பழமொழியை நிறைவு செய்க.

அ) உப்பிட்ட வரை ___________           ஆ) விருந்தும் மருந்தும் _______

27.   சந்தக் கவிதையில் வந்த பிழையைத் திருத்துக.

“ தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை

       தேரும் சிலப்பதி காறமதை

ஊனிலே எம்முயிர் உல்லலவும் – நிதம்

      ஓதி யுனர்ந்தின் புருவோமே”

குறிப்பு :- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

( அ ) விடு – வீடு               ( ஆ ) கொடு – கோடு

28. சொற்களைப் பிரித்துப் பார்த்து பொருள் தருக.:- அ)  பலகையொலி   ஆ) கானடை

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )  பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                             2×3=6

29. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி. என்பதற்குச் சான்று தருக.

30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக;

உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளி

வாய்மையைச் சிறந்த அறமாகச் சங்க இலக்கியஙகள் பேசுகின்றன.வாய்மை பேசும்  நாவே உண்மையான நா என்ற கருத்தை, “பொய்யாச் செந்நா”. ,“பொய்படுபறியா வயங்கு செந்நா” என்று இ்லக்கியஙகள் கூறுகின்றன. நாக்கு ஓர் அதிசயத் திறவுகோல் என்பார்கள். இன்பத்தின் கதவைத் திறப்பதுவும் அதுதான். துன்பத்தின் கதவை திறப்பதுவும் அதுதான். மெய் பேசும் நா மனிதனை  உயர்த்துகிறது. பொய்பேசும் நா மனிதனைத்  தாழ்த்துகிறது.,

அ) உண்மையான நா என்பதனை இலக்கியங்கள் எவ்வாறு கூறுகின்றன?

ஆ) நாக்கு ஓர் அதிசய திறவுகோல் என கருத காரணம் யாது?

இ) எது சிறந்த அறமாக இலக்கியங்கள் பேசுகின்றன?

31. முன்னுரையில் முகம் காட்டும் ஜெயகாந்தன் குறித்து எழுதுக.

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.               2×3=6

34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.

32. ‘ மாளாத காதல் நோயாளன் போல் ‘என்னும் தொடரில் உள்ள உவமை சுட்டும் செய்திகளை விளக்குக.

33. வாளித் தண்ணீர், சாயக்குவளை,கந்தைத்துணி, கட்டைத் தூரிகை – இச்சொற்களைத் தொடர்புப்படுத்தி ஒரு பத்தி அமைக்க

34. “ சிறுதாம்பு “ எனத் தொடங்கும் முல்லைப்பாட்டு  பாடலை அடிமாறாமல்  எழுதுக

(அல்லது ) “ செம்பொன் “ – எனத் தொடங்கும் குமரகுருபரர்  எழுதிய பாடலை எழுதுக.

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                       2×3=6

35. ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தை எழுதுக.

36. ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்

      தாழா துஞற்று பவர் – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு காண்க.

37. கொண்டு கூட்டுப் பொருள்கோளினை விளக்கி, எடுத்துக்காட்டு ஒன்று தருக.

பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                  5×5=25

38. அ) இரண்டாம் இராசராச சோழனது மெய்க்கீர்த்திப் பாடலின் அழகிய நயத்தைச் சுவைபட விளக்குக             ( அல்லது )

ஆ) ) ‘ சந்தக் கவிதையில் சிறக்கும் கம்பன் ‘ என்ற தலைப்பில்  கீழ்க்காணும் குறிப்பினைக் கொண்டு உங்கள் இலக்கிய உரையைத் தொடர்க.

குறிப்பு :

 அன்பும் பண்பும் கொண்ட தலைவர் அவர்களே! தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து  அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே! வணக்கம். இயற்கைக் காட்சியைப் பெரிய கலை நிகழ்வாகவே காட்டும் கன்பனின் கவி நயம்……….

39. அ) மாநில அளவில் நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம் “ எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.   ( அல்லது )

ஆ. உங்கள் தெருவில் மின் விளக்குகள் பழுந்தடைந்துள்ளன அதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை எழுதி ஆவணச் செய்யும்படி மின்வாரிய அலுவலருக்குக் கடிதம் எழுதுக.

40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.

41. மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா, வள்ளுவர் நகர், எண் 19 இல் வசித்து வரும்  பழனி, தந்தை பெயர் சிவன், எழுத்தர் பணி வேண்டி விண்ணப்பிக்கிறார். தேர்வர் தன்னை பழனியாக எண்ணி படிவத்தை நிரப்புக.

42. அ) அரசால் நிறுவப்படும் கட்டடங்களிலும் சிலைகளிலும் நிறுவியர் பெயர்,நிறுவப்பட்ட காலம், நோக்கம் சார்ந்த பிற செய்திகளும் தாங்கிய கல்வெட்டுகளைப் பார்த்திருப்பீர்கள்.இவை  போண்று  நீவிர் கண்ட பல்வேறு பழமையான நினைவுச் சின்ங்களைப் பாதுகாத்துப் பராமரித்துக் காக்கும் வழிமுறைகள் ஐந்தினைப் பட்டியலிடுக..   ( அல்லது )

ஆ) மொழிபெயர்க்க.

Once upon a time there were two beggars in Rome. The  first begger used to cry  in the streets of the city,”He is helped whom God helps”.The Second begger used to cry,” He is helped who the king helps”. This was repeated by them everyday. The emperor of Rome heard it so often that he decided to help the begger who popularized him in the streets of Rome. He ordered a loaf of bread to be baked and filled with pieces of gold. When the begger felt the heavy weight of the bread, he sold it to his friend as soon as he met him. The latter carried it home. When he cut the loaf of bread he found sparkling pieces of gold. Thanking God, he stopped begging from that day. But the other continued to beg through the city. Puzzled by the beggar’s behaviour, the Emperor summoned him to his presence and asked him,” What have you done with the loaf of bread that I had sent you lately?” The man replied, “ I sold it to my friend,because it was heavy and did not seem well baked “ Then the Emperor said, “ Truly he whom God helps is helped indeed,” and turned the beggar out his palace.

குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

மேற்கு என்பதற்குக் குடக்கு என்னும் பெயருமுண்டு. மேற்கிலிருந்து வீசும் போது நான் கோடை எனப்படுகிறேன். மேற்கிலிருந்து அதிக வலிமையோடு வீசுகிறேன். வறண்ட நிலப்பகுதியில் இருந்து வீசுவதால் வெப்பக் காற்றாகிறேன். வடக்கு என்பதற்கு வாடை என்னும் பெயருமுண்டு. வடக்கிலிருந்து வீசும் போது நான் வாடை காற்று எனப்படுகிறேன். நான் பனிப் பகுதியிலிருந்து வீசுவதால் மிகவும் குளிர்ச்சியான ஊதைக் காற்று எனவும் அழைக்கப்படுகிறேன்.

(i). மேற்கிலிருந்து வீசும் காற்று யாது?

(ii). ஊதைக் காற்று என்று அழைப்பதேன்?

(iii). மேற்கு என்பதன் மற்றொரு பெயர் என்ன?

(iv) வாடை என்பது எத்திசையைக் குறிக்கிறது

(v)  இப்பத்திக்கு ஏற்ற தலைப்பினை தருக.

பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                                       3×8=24

43. அ) காற்று மாசு அடைவதைப் போன்று நிலம் மாசு அடைவதை விவரித்து எழுதுக

      ( அல்லது )

ஆ) இறைவன், புலவன் இடைக்காடன் குரலுக்குச் செவிசாய்த்த நிகழ்வை நயத்துடன் விளக்குக.

44. அ) ஒரு பக்க அளவில் உரையாடல் எழுதுக.

சூழல்  : வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின் மகளுக்குத் தமிழ் மொழியைப் பேச மட்டுமே தெரியும். ஆங்கில இலக்கியம் படித்த அவரிடம் தமிழ் உரைநடையின் சிறப்புப் பற்றி உரையாடுதல் . ( அல்லது )

ஆ) குறிப்புகளைக் கொண்டு நாடகம் எழுதுக

மாணவன்கொக்கைப் போல,கோழியைப் போலஉப்பைப் போலஇருக்க வேண்டும்கொக்கு காத்திருந்து கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளும்குப்பையைக் கிளறினாலும் தனது உணவை மட்டுமே எடுத்துக்கொள்ளும் கோழிகண்ணுக்குத் தெரியாவிட்டாலும் உப்பின் சுவையை உணரமுடியும்ஆசிரியர் விளக்கம்மாணவன் மகிழ்ச்சி.

45. அ) குறிப்புகளைக் கொண்டு ‘ சான்றோர் வளர்த்த தமிழ் ‘ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

குறிப்புகள் : முன்னுரை – தமிழன்னையின் அணிகலன்கள் – தமிழ்ச் சான்றோர் – தமிழின் வளர்ச்சி – தமிழின் எதிர்காலம் –முடிவுரை.(அல்லது)

ஆ) குறிப்புகளைக் கொண்டு  கட்டுரை எழுதி தலைப்பிடுக.

குறிப்புகள் : முன்னுரை – சாலைப் பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு– ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள் – விபத்துகளைத் தவிர்ப்போம் – விழிப்புணர்வு தருவோம் – முடிவுரை.


www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.

சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

எங்கள் குழுவில் இணைய:-

WHATSAPP                           TELEGRAM                   FACE BOOK GROUP


WHATSAPP LINK : https://chat.whatsapp.com/COVni0568j41sEyPmcyNgj

TELEGRAM LINK : https://t.me/thamizhvithai

FACE BOOK LINK : https://www.facebook.com/groups/215175780078251/?ref=share

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post