10TH-TAMIL-3RD REVISION - MODEL QUESTION -2-PDF

 

 மூன்றாம் திருப்புதல் தேர்வு - 2024

 மாதிரி வினாத்தாள் - 2

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                 மதிப்பெண் : 100

_________________________________________________________________________

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

அ) சரியான விடையைத் தேர்வு செய்க.                                                           15×1=15

1 காய்ந்த இலையும்,காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல உரங்கள். இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது

) இலையும்,சருகும்                  ) தோகையும் சண்டும்    

) தாளும் ஓலையும்                   ) சருகும் சண்டும்

2. தமிழ்த்தொண்டு என்னும் தொடர் ________

அ) இருபெயரொட்டுப் பண்புத்தொகை             ஆ) உருபும் பயனும் உடன் தொக்கத் தொகை

இ) அன்மொழித்தொகை                                 ஈ) வேற்றுமைத்தொகை

3. ‘ வீட்டைத் துடைத்துச் சாயம் அடித்தல் ‘ இவ்வடி குறிப்பது ___

அ) காலம் மாறுவதை                            ஆ) வீட்டைத் துடைப்பது    

இ) இடையறாது அறப்பணி செய்தலை    ஈ) வண்ணம் பூசுவதை

4. சிலம்பு அடைந்திருந்த பாக்கம் எய்தி ‘ என்னும் அடியில் பாக்கம் என்பது --------

அ) புத்தூர்                        ஆ) மூதூர்              இ) பேரூர்                         ஈ) சிற்றூர்

5. கீதாஞ்சலி என்ற நூலை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர்

அ) ராகும் சாங்கிருத்யாயன்          ஆ) கணமுத்தையா

இ) யூமா வாசுகி                          ஈ) இரவீந்தநாத் தாகூர்

6 காசினியில் இன்று வரை அறிவின் மன்னர் கண்டுள்ள கலைகளெல்லாம் தமிழில் எண்ணி பேசி மகிழ் நிலை வேண்டும் எனக் குறிப்பிடுபவர் _________

அ) பாரதியார்                              ஆ) பாரதிதாசன் 

இ) குலோத்துங்கன்                     ஈ) தனிநாயகம்

7“ தகக  தகதகக  தந்தத்த தந்தக

    என்று தாளம்  பதலை திமிலை தம்பட்ட மும் பெருக” – என பாடல் வரிகள் குறிப்பிடும் இசைக் கருவி

அ) மத்தளம்    ஆ) புல்லாங்குழல்    இ) பறை     ஈ) உருமி

8. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது

அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல்  ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்

இ) அறிவியல் முன்னேற்றம்                                 ஈ) வெளிநாட்டு முதலீடுகள்

9 மலைபடுகடாம் எவ்வகை இலக்கியத்தைச் சார்ந்தது?

அ) சங்க இலக்கியம்                    ஆ) பக்தி இலக்கியம்        

இ) காப்பிய இலக்கியம்                 ஈ) சிற்றிலக்கியம்

10 ‘ எய்துவர் எய்தாப் பழி’ – இக்குறளடிக்கு பொருந்தும் வாய்பாடு எது?

அ) கூவிளம் தேமா மலர்    ஆ) கூவிளம் புளிமா நாள்  

இ) தேமா புளிமா காசு                  ஈ) புளிமா தேமா பிறப்பு

11 கோயம்புத்தூர் – ஊரின் மரூஉ பெயரைக் காண்க.

அ) கோவன்புதூர்     ஆ) கோவை இ) கோவன்புத்தூர்   ஈ) கோபுதூர்

பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

“ இந்தி ரன்முதற் திசாபாலர் எண் மரும்ஒரு வடிவாகி

வந்தபடி யென நின்று மனுவாணை தனி நடாத்திய

படியானையே பிணிப்புண்பன

வடிமணிச் சிலம்பே யரற்றுவன

செல்லோடையே கலக்குண்பன

வருபுனலே சிறைப்படுவன

மாவே வடுப்படுவன

மாமலரே கடியவாயின “

12. யார் இங்கு பிணிக்கப்படுவதாக கூறப்படுகிறது?

அ. மன்னன்  ஆ. இறைவன்        இ. மக்கள்     ஈ. யானை

13. இப்பாடலில் இடம் பெற்றுள்ள எதுகை சொற்கள்

அ. வந்தபடி - நின்று                   ஆ. சிலம்பு – அரற்றுவன   

இ. படியானை – வடிமணி   ஈ. செல்லோடை - சிறை

14. பாடலில் குறிப்பிடப்படும் திசைபாலகர் எத்தனை பேர்?

அ. 10           ஆ. 9                        இ. 8                   ஈ. 7

15. இலக்கண குறிப்புத் தருக : வருபுனல்

அ. உவமைத் தொகை       ஆ. பண்புத்தொகை

இ. வினைத் தொகை        ஈ. அன்மொழித்தொகை

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                      4×2=8

21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

16. விடைக்கேற்ற வினா அமைக்க.

அ. சந்த நயத்தோடும் எதுகை மோனையோடும் உள்ள அம்மானைப் பாடல்களை அடிக்கடி பாடிப்பாடி பிள்ளைப் பருவத்திலேயே இலக்கிய அறிவை வளர்த்தவர் ம.பொ.சி

ஆ. அறிவியலின் வளர்ச்சி மனிதனின் அறிவை விரிவாக்குகிறது.

17. மொழிபெயர்ப்பு என்றால் என்ன?

18. வறுமையிலும் படிப்பின் மீது நாட்டம் கொண்டவர் ம.பொ.சி என்பதற்குச் சான்று தருக.

19. ‘ நமக்கு உயிர் காற்று

    காற்றுக்கு வரம் மரம் – மரங்களை

   வெட்டி எறியாமல் நட்டு வளர்ப்போம் ‘ – இது போன்ற உலகக் காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக.

20. தற்கால உரைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டுத் தருக.

21.  பண்என்னாம் – எனத் தொடங்கும் குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                            5×2=10

22. அ) ஓடிக் கொண்டிருந்த மின்விசிறி சட்டென நின்றவுடன் அறையில் உள்ளவர்கள் பேச்சு தடைபட்டது. இத்தொடரைத் தனிச்சொற்றொடர்களாக மாற்றுக.

ஆ) அழைப்பு மணி ஒலித்தது. கயல்விழி கதவைத் திறந்தார் – தனிச் சொற்றொடர்களைக் கலவைத் தொடராக்குக.

23. புறத்திணைகளில் எதிரெதிர் திணைகளை அட்டவணைப்படுத்துக.

24. தொடர்களைக் கொண்டு பொருத்தமான தொடர் அமைக்க:-

அ. இல்லாமல் இருக்கிறது           ஆ. முன்னுக்குப்பின்

25. கலைச்சொல் தருக

அ. DOCUMENT                            ஆ. GUILD

26. காட்டில் விளைந்த வரகில் சமைத்த உணவு மழைக்கால மாலையில் சூடாக உண்ணச் சுவை மிகுந்திருக்கும். இத்தொடரில் அமைந்துள்ள முதற் பொருள், கருப்பொருள்களை வகைப்படுத்தி எழுதுக.

27.   வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை தூங்கல் ஓசை ஆகும்.துள்ளல் ஓசை கலிப்பாவுக்கு உரியது.இத்தொடர்களை ஒரே தொடராக இணைத்து எழுதுக.

குறிப்பு :- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.

அ. மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.    ஆ. குழந்தைகள் தனித்தனியே எழுதித்தர வேண்டும்

28. ஒலித்து– பகுபத உறுப்பிலக்கணம் தருக.

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )  பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                             2×3=6

29. ‘ பொய்க்கால் குதிரையாட்டம் ‘ என்னும் நிகழ்கலை குறித்து நீங்கள் அறிந்தவற்றை எழுதுக.

30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக;

தமிழர்,போரிலும் அறநெறிகளைப் பின்பற்றினர்.போர் அறம் என்பது வீரமற்றோர், புறமுதுகிட்டோர், சிறார், முதியோர் ஆகியோரை எதிர்த்துப் போர் செய்யாமையைக் குறிக்கிறது. போரின் கொடுமையிலிருந்து பசு, பார்ப்பனர், பெண்கள்,நோயாளர், புதல்வரைப் பெறாதவர் ஆகியோருக்குத் தீங்கு வராமல் போர் புரிய வேண்டும் என்று ஒரு பாடல் கூறுகிறது. தம்மை விட வலிமை குறைந்தாரோடு போர் செய்வது கூடாது என்பதை ஆவூர் மூலங்கிழார் குறிப்பிடுகிறார்.

அ) போர் அறம் என்பது எதைக் குறிக்கிறது?

ஆ) யாரோடு போர் செய்வது கூடாது என்று ஆவூர் மூலங்கிழார் குறிப்பிடுகிறார்?

இ) எவ்வாறு போர் புரிய வேண்டும்?

31. அ) புதியதாக வருவோர் இரவில் தங்குவதற்கு வீட்டின் முன்புறம் திண்ணையும் அதில் தலை வைக்கத் திண்டும் அமைத்தனர்.

ஆ. திருவிழாக் காலங்களில் ஊருக்கு வரும் புதியவர்களையும் அழைத்து அன்போடு விருந்தளிப்பதைச் சில இடங்களில் காணமுடிகிறது. இப்படியாகக் காலமாற்றம் , தமிழர் விருந்தோம்பலில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்த கருத்துகளை எழுதுக

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.               2×3=6

34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.

32. கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துதலைக் கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?

33. “ சித்தாளின் மனச்சுமைகள்

         செங்கற்கள் அறியாது “   - இடஞ்சுட்டிப் பொருள் எழுதுக..

34. “ அன்னைமொழியே “ எனத் தொடங்கும் பெருஞ்சித்திரனார் பாடலை அடிமாறாமல்  எழுதுக (அல்லது )  “ தண்டலை “ எனத் தொடங்கும் கம்பராமாயணப்  பாடலை எழுதுக.

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                       2×3=6

35. தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும் வழியில் ஆடு மாடுகளுக்குத் தண்ணீர்த்    

      தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க் கடிகாரத்தில் மணி பார்த்தாள்.

இப்பத்தியில் உள்ள தொகைநிலைத் தொடர்களின் வகைகளைக் குறிப்பிட்டு, விரித்து எழுதுக.

36. மதிநுட்பம் நூலோ  டுடையார்க்  கதிநுட்பம்

      யாவுள  முன்நிற்  பவை   – இக்குறளை அலகிடுக.

37. வினாவின் வகைகளை எடுத்துகாட்டுகளுடன் விளக்குக.

பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                  5×5=25

38. அ) தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாக பெருஞ்சித்திரனார் சுட்டுவன யாவை?          ( அல்லது )

ஆ) நெகிழிப் பைகளின் தீமையைக் கூறும் பொம்மலாட்டம் உங்கள் பள்ளியின் ஆண்டு விழாவில் நிகழ்த்தப்படுகிறது. அதற்கு பாராட்டுரை ஒன்றினை எழுதுக.

39. அ) கொரோனா பெருந்தொற்று ஊரடங்குக் காலத்தில் உங்கள் நேரத்தை எவ்வாறு பயனுறக் கழித்தீர்கள் என்பதை நண்பனுக்கு விவரித்து கடிதம் எழுதுக.   ( அல்லது )

ஆ. நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் “ உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம் “ என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி,அந்நாளிதழ் ஆசிரியருக்கு கடிதம் எழுதுக

40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.

 

41. பணி வாய்ப்பு வேண்டி தன் விவரப் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைக் கொண்டு படிவத்தை நிரப்புக.

பெயர் : அருளன், தந்தை : செல்வம், முகவரி : கதவு எண்.25, திலகர் தெரு, மதுரை வடக்கு-2.

42. அ) இன்சொல் பேசுவதால் விளையும் நன்மைகள் ஐந்தினை எழுதுக.    ( அல்லது )

ஆ) மொழிபெயர்க்க.

The Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away the dark.The milky clouds start their wandering.The colourful birds start twitting their morning melodies in percussion.The cute butterflies dance around the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows everywhere and makes everything pleasant

குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.

மனிதன் தனியானவன் அல்லன். அவன் சமூகக் கடலின் ஒரு துளி. அவனுக்குள்ளே சமூகம் – சமூகத்துக்குள்ளே அவன். மனிதன் எல்லாரோடும் எல்லாவற்றோடும் எவ்வளவுக்கெவ்வளவு தன்னை இணைத்துக் கொள்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவனுடைய மகிழ்ச்சி பெருகிறது. இந்த மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்க வேண்டும் என்றால் அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் பொது விதியான அறத்தை மனிதன் ஏற்க வேண்டும். சங்க காலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின் காலத்தை அறநெறிக்காலம் என்பர். அறநெறிக்கால அறங்கள் சமயம் சார்ந்தவை, ஆனால் சங்ககால அறங்கள் இயல்பானவை.

( I ). மனிதன் எப்படிப்பட்டவன்?

( ii ). மனிதனுக்கு எப்போது மகிழ்ச்சி பெருகுகிறது?

( iii ) மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்க மனிதன் என்ன செய்ய வேண்டும்?

( iv ) அறநெறிக்காலம் எனப்படுவது எது?

( v )  சங்ககால அறங்கள் எப்படிப்பட்டவை?

பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                                       3×8=24

43. அ) ) தமிழர் மருத்துவ முறைக்கும் நவீன மருத்துவ முறைக்கும் உள்ள தொடர்பு குறித்து எழுதுக.       ( அல்லது )

ஆ) சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகளை இக்கால வணிக வளாகங்களோடும் அங்காடிகளோடும் ஒப்பிட்டு எழுதுக.

44. அ) “ மங்கையராய்ப் பிறப்பதற்கே “ என்னும் பாடத்தில் இடம் பெற்றுள்ள மூவர் பற்றி சுருக்கி எழுதுக.        ( அல்லது )

ஆ) ‘ கற்கை நன்றே கற்கை நன்றே

      பிச்சை புகினும் கற்கை நன்றே ‘

                   என்கிறது வெற்றிவேற்கை, மேரியிடமிருந்து பறிக்கப்பட்ட புத்தகம், அச்சிறுமியின் வாழ்க்கையில் கல்விச்சுடரை ஏற்றிய கதையைப் பற்றி உங்களின் கருத்துகளை விவரிக்கவும்

45. அ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

குறிப்புகள் : முன்னுரை – இயற்கை சீற்றம் - புயல் – வெள்ள பாதிப்பு– மக்களின் அவதி – அரசின் நடவடிக்கைகள் – மேற்கொள்ள வேண்டியவை – நமது கடமைகள் – முடிவுரை

  ( அல்லது )

ஆ) குறிப்புகளைக் கொண்டு ‘ சான்றோர் வளர்த்த தமிழ் ‘ என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக.

குறிப்புகள் : முன்னுரை – தமிழன்னையின் அணிகலன்கள் – தமிழ்ச் சான்றோர் – தமிழின் வளர்ச்சி – தமிழின் எதிர்காலம் –முடிவுரை

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.

சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

KINDLY WAIT FOR 10 SECONDS PDF FOR THIS QUESTIONS

நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி

எங்கள் குழுவில் இணைய:-

WHATSAPP                           TELEGRAM                   FACE BOOK GROUP

WHATSAPP LINK : https://chat.whatsapp.com/COVni0568j41sEyPmcyNgj

TELEGRAM LINK : https://t.me/thamizhvithai

FACE BOOK LINK : https://www.facebook.com/groups/215175780078251/?ref=share


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post