10TH-TAMIL-3RD REVISION - MODEL QUESTION -1-PDF

 

 மூன்றாம் திருப்புதல் தேர்வு - 2024

 மாதிரி வினாத்தாள் - 1

பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                 மதிப்பெண் : 100

_________________________________________________________________________

பகுதி – I ( மதிப்பெண்கள் : 15 )

அ) சரியான விடையைத் தேர்வு செய்க.                                                           15×1=15

1. ‘ சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்

       செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் ‘ – பாரதியின் இக்கூற்று உணர்த்தும் கருத்து

அ. பல துறை நூல்கள் தமிழில் உருவாக்கப்பட வேண்டும்.   

ஆ. பலகலைகள் தமிழில் புதிததாக தோன்ற வேண்டும்.

இ. உலகெங்கும் காணப்படும் செல்வங்கள் தமிழகத்தில் வந்து சேர்தல் வேண்டும்

ஈ. கலைச் செல்வங்களை உலகம் முழுவதும் பயணம் செய்து கண்டுகளிக்க வேண்டும்.

2. மெத்த வணிகலன்’ என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது.

அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்     

ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்       

இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்

ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்

3. இவற்றில் திணை வழுவமைதியைக் காண்க

அ) ‘ இந்த பாப்பா தூங்கமாட்டாள் ‘ என்று தன்னையே குழந்தை குறிப்பிடுவது.

ஆ) இரவெல்லாம் நாய் கத்திக் கொண்டே இருந்தது.

இ) ‘ வாடா செல்லம் ‘ என்று தாய் மகளை அழைப்பது.

ஈ) ‘ என் தங்கை வந்தாள் ‘ – என்று பசுவைக் குறிப்பிடுவது

4. பாடி மகிழ்ந்தனர் – எவ்வகைத் தொடர் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

அ) பெயரெச்சத் தொடர்                ஆ) வினையெச்சத் தொடர்

இ) வேற்றுமைத் தொடர்               ஈ) விளித் தொடர்

5. கொடுக்கப்பட்டுள்ள பழமொழிகளுள் உணவுத் தொடர்பான பழமொழியைத் தேர்ந்தெடுக்கவும்.

அ) அகத்தின் அழகு முகத்தில் தெரியும்           ஆ) அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சு

இ) வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்                 ஈ) ஆடிக்காற்றில் அம்மியும் நகரும்

6. ‘ மாலவன் குன்றம் போனாலென்ன? வேலவன் குன்றமாவது எங்களுக்கு வேண்டும் ‘ – மாலவன் குன்றமும் வேலவன் குன்றமும் குறிப்பவை முறையே –

அ) திருப்பதியும்,திருத்தணியும்       ஆ) திருத்தணியும்,திருப்பதியும்

இ) திருப்பதியும் திருச்செந்தூரும்  ஈ) திருப்பரங்குன்றமும் பழனியும்

7. “ பிரிந்தன புள்ளின் கானில்

    பெரிதழுது இரங்கித் தேம்ப     - பாடலடிகளில் அடிக்கோடிட்ட சொற்களின் பொருளைத் தெரிவு செய்க

அ) கிளை, துளை ஆ) நிலம்,வாட     இ) காடு,வாட ஈ) காடு,  நிலம்

8. ’ வீட்டைத் துடைத்து சாயம் அடித்தல் ‘ – இவ்வடிகள் குறிப்பிடுவது ---

அ) காலம் மாறுவதை                     ஆ) வீட்டைத் துடைப்பதை

இ) இடையறாது அறப்பணி செய்தலை      ஈ) வண்ணம் பூசுவதை

9 உப்பில்லா கூழ் இட்டாலும் உண்பதே அமிர்தம் ஆகும் எனக் கூறும் நூல்

அ) காசிக்காண்டம்             ஆ) விவேக சிந்தாமணி      

இ) மலைபடுகடாம்             ஈ) நற்றிணை

10 உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம்                                                         

 ) செய்யுள் ) பாடல்     ) கவிதை     ) வசன கவிதை

11 பரிபாடல் அடியில் விசும்பும் இசையும் என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?

அ) வானத்தையும் பாட்டையும்  ஆ) வானத்தையும் புகழையும்

இ) வானத்தையும் பூமியும்    ஈ) வானத்தையும் பேரொலியையும்

பாடலைப் படித்து வினாக்களுக்கு(12,13,14,15) விடையளிக்க:-

“ நனந்தலை உலகம் வளைஇ நேமியோடு

வலம்புரி பொறித்த மாதாங்கு தடக்கை

நீர்செல, நிமிர்ந்த மாஅல் போல,

பாடுஇமிழ் பனிக்கடல் பருகி, வலன் ஏர்பு,

கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி

பெரும்பயல் பொழிந்த சிறுபுன் மாலை”

12. இப்பாடல் இடம் பெற்ற நூல்

அ. முல்லைப்பாட்டு                     ஆ. மலைபடுகடாம்  

இ. நற்றிணை                             ஈ. குறுந்தொகை

13. நனந்தலை உலகம் – இத்தொடரின் பொருள்

அ. சிறிய உலகம்                        ஆ. தலையாய உலகம்

இ. நனைந்த உலகம்                   ஈ. அகன்ற உலகம்

14. பாடலில் இடம்பெற்றுள்ள அடி எதுகைச் சொற்கள்

அ. பெரும்பெயல், பொழிந்த           ஆ. பாடுஇமிழ்,பனிக்கடல் இ.பாடுஇமிழ்,கோடுகொண்டு           ஈ. நீர்செல,நிமிர்ந்த

15. பாடலில் இடம் பெற்றுள்ள அளபெடை

அ. தடக்கை  ஆ. வளைஇ  இ. பெரும்பெயல்   ஈ. கொடுஞ்செலவு

பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1

எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.                                 4×2=8

21 ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்.

16. விடைக்கேற்ற வினா அமைக்க.

அ. நெய்தல் நிலத்தவர் பாணர்களை வரவேற்றுக் குழல் மீன் கறியும், பிறவும் கொடுத்தனர்.

ஆ. வேர்டுஸ்மித் என்ற எழுத்தாளி தகவல்களைக் கொண்டு சில நொடிகளில் அழகான கட்டுரையை உருவாக்கி விடும்.

17. . சதாவதானம் என்றால் என்ன?

18. கரப்பிடும்பை இல்லார்இத்தொடரின் பொருள் கூறுக

19. . ‘ கொள்வோர் கொள்க;குரைப்போர் குரைக்க!

  உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது’

அ) அடியெதுகையை எடுத்தெழுதுக..

ஆ) இலக்கணக் குறிப்பு தருக:- கொள்க, குரைக்க

20. செய்குதம்பிப் பாவலரின் கல்வி பற்றிய கருத்தினை முழக்கத் தொடர்களாக்குக:-

21.  அறிவு – எனத் முடியும் குறளை எழுதுக.

பிரிவு – 2

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.                              5×2=10

22. வெளிப்படை விடைகள் யாவை?

23. பொருத்தமான இடங்களில் நிறுத்தக் குறியிடுக.

          பழங்காலத்தில் பாண்டியன் ஆண்ட பெருமையைக்கூறி சோழன் ஆண்ட சிறப்பைச் சொல்லி சேரன் ஆண்ட மாண்பினைக் காட்டி நம் அருமைத் தமிழ்நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப் பட்டிருந்த சிறுமையையும் நினைவூட்டி விடுதலைப் போரில் ஈடுபட வருமாறு தமிழர்க்கு அழைப்பு விடுத்திருந்தேன். –ம.பொ.சி

24. விடுபட்ட எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு நூலின் பெயரைக் கண்டுபிடிக்க:-

____கு ( பறவையிடம் இருப்பது )  கு___தி (சிவப்பு நிறத்தில் இருக்கும் )

வா____  ( மன்னரிடம் இருப்பது )  ____கா ( தங்கைக்கு மூத்தவள் )

_____ ( அறிவின் மறுபெயர் )   பட_____ ( நீரில் செல்வது )

25. கலைச்சொல் தருக

அ. TEMPEST                               ஆ. VOWEL

26. தொடர்களில் உள்ள எழுவாயைச் செழுமை செய்க.

1. கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான்.   2. மரத்தை வளர்ப்பது நன்மை பயக்கும்.

27.   அருணா ஓடினாள் – பெயரெச்சமாகவும், வினைமுற்றாகவும் மாற்றுக

குறிப்பு :- செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

எதிர்மறை சொற்களை எழுதுக :-  அ. கேட்ட பாடல்      ஆ) எழுதிய கட்டுரை

28. பழமொழியை நிறைவு செய்க:-

1.உப்பில்லாப்_____________  2. ஒரு பானை_______________

பகுதி – III ( மதிப்பெண்கள் -18 )  பிரிவு – I

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:-                             2×3=6

29. “ புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது”

- இது போல் இளம் பயிர்வகை மூன்றின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

30. உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக;

“ மாபாரதம் தமிழ்ப்படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் “ என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு, சங்க காலத்திலேயே தமிழில் மொழி பெயர்ப்பு மேற்கொள்ளப்பட்டதைப் புலப்படுத்துகிறது. வடமொழியில் வழங்கி வந்த இராமாயண,மகாபாரத் தொன்மைச் செய்திகள் சங்க இலக்கியங்களில் பரவலாக இடம் பெற்றுள்ளன. இதுவும் பிற மொழிக்கருத்துகளை, கதைகளை, தமிழ்ப்படுத்தியமையைப் புலப்படுத்துகிறது. பெருங்கதை,  சீவக சிந்தாமணி, கம்பராமாயணம், வில்லிபாரதம் முதலிய சில காப்பியங்களும் வடமொழிக்கதைகளைத் தழுவி படைக்கப்பட்டவையே.

அ. இப்பத்தியில் இடம்பெறும் செப்பேட்டுக் குறிப்பு எவ்வூரைச் சார்ந்தது?

ஆ. சங்கக் காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்ததை எதன் மூலம் அறியலாம்?

இ. வடமொழிக் கதைகளைத் தழுவி படைக்கப்பட்ட காப்பியங்கள் எவை?

31. இன்றைய அறிவியல் கண்டுபிடிப்புகள் மனிதனை மேம்படுத்துகின்றனவா என்பது குறித்து சிந்தனைகளை முன் வைத்து எழுதுக

பிரிவு – II

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும்.               2×3=6

34 ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.

32. மன்னன், இடைக்காடனார் என்ற புலவனுக்குச் சிறப்பு செய்தது ஏன்?

33. “ மாளாத காதல் நோயாளன் போல் “ என்னும் தொடரிலுள்ள  உள்ள உவமை சுட்டும் செய்திகளை விளக்குக.

34. “ வாளால் “ எனத் தொடங்கும் பெருமாள் திருமொழி பாடலை அடிமாறாமல்  எழுதுக (அல்லது )  “ மாற்றம் “ எனத் தொடங்கும் காலக்கணிதப்  பாடலை எழுதுக.

பிரிவு -III

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:-                                       2×3=6

35. தோட்டத்தில் மல்லிகைப்பூ பறித்த பூங்கொடி, வரும் வழியில் ஆடு மாடுகளுக்குத் தண்ணீர்த்    

      தொட்டியில் குடிநீர் நிரப்பினாள். வீட்டினுள் வந்தவள் சுவர்க் கடிகாரத்தில் மணி பார்த்தாள்.

இப்பத்தியில் உள்ள தொகைநிலைத் தொடர்களின் வகைகளைக் குறிப்பிட்டு, விரித்து எழுதுக.

36. கருவியும் காலமும் செய்கையும் செய்யும்

      அருவினையும் மாண்ட தமைச்சு – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக

37. கொண்டு கூட்டுப் பொருள்கோளினை விளக்கி, எடுத்துக்காட்டு ஒன்று தருக.

பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)

அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க.                                                     5×5=25

38. அ) சங்க இலக்கியங்கள் காட்டும் அறங்கள் இன்றைக்கும் தேவையானவையே என்பதற்குச் சான்றுகள் தருக.              

( அல்லது )

ஆ) ஆற்றுப்படுத்துதல் என்பது அன்றைக்குப் புலவர்களையும் கலைஞர்களையும் வள்ளல்களை நோக்கி நெறிப்படுத்துவதாக இருந்தது. அது இன்றைய நிலையில் ஒரு வழிகாட்டுதலாக மாறியிருப்பதை விளக்குக.

39. நீங்கள் விரும்பி படித்த நூல் ஒன்றின் சிறப்புகளைக் கூறி,உங்கள் நண்பரையும் அந்நூலினைப் படிக்குமாறுப் பரிந்துரைத்துக் கடிதம் எழுதுக.   ( அல்லது )

ஆ. “ பள்ளியைத் தூய்மையாக வைத்திருத்தல் “ என்ற செயல்திட்டம் ஒன்றை உருவாக்கி அது உங்கள் பள்ளியில் தலைமையாசிரியர் ஒப்புதலுடன் செயல்படுத்திட அனுமதி வேண்டி தலைமையாசிரியருக்கு கடிதம் எழுதுக.

40. படம் உணர்த்தும் கருத்தை கவினுற எழுதுக.

 

41. நாமக்கல் மாவட்டம்,வ.உ.சி.நகர், காந்தித் தெரு,கதவிலக்க எண்50 இல் வசிக்கும்  இளமாறன் மகள் யாழினி பத்தாம் வகுப்பு முடித்து அங்குள்ள விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் வாள் வீச்சு பயிற்சியில் கலந்துக் கொள்ள இருக்கிறார். தேர்வர் தம்மை யாழினியாக கருதி உரிய படிவத்தை நிரப்புக.

42. அ) தூய்மையான காற்றைப் பெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளாக நீங்கள் கருதுவனவற்றை ஐந்து தொடர்களில் பட்டியலிடுக   ( அல்லது )

ஆ) நயம் பாராட்டுக:-

நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்

நேர்ப்பட வைத்தாங்கே

குலாவும் அமுதக் குழம்பைக் குடிதொரு

கோல வெறிபடைத்தோம்;

 உலாவும் மனச்சிறு புள்ளினை எங்கணும்

ஓட்டி மகிழ்ந்திடுவோம்;

பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு

பாடுவதும் வியப்போ?           - பாரதியார்

குறிப்பு : செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா

மொழி பெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் நாம் எளிதாகப் பெற முடியும். பல அறிவுத் துறைகளுக்கும் தொழில் துறைகளுக்கும் வெளிநாட்டாரை எதிர்பார்க்காமல் நாமே நமக்கு வேண்டிய அனைத்தையும் உருவாக்கிக் கொள்ள முடியும். மனித வளத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியும். வேலைவாய்ப்புத் தளத்தை விரிவாக்க முடியும்.நாடு,இன மொழி எல்லைகள் கடந்து ஓருலகத் தன்மையைப் பெற முடியும். நாடு விடுதலை பெற்ற பிறகு பல நாட்டு தூதரகங்கள் நம் நாட்டில் நிறுவப்பட்டன. அவை தங்களுடைய இலக்கியம், பண்பாடு, தொழில் வளர்ச்சி, கலை போன்ற்வற்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் தத்தம் மொழிகளைக் கற்றுக் கொடுக்கின்ற முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. இதனைச் சார்ந்து பிற மொழிகளைக் கற்றுத்தரும் தனியார் நிறுவனங்களும் உருவாகியுள்ளன. பள்ளிகளிலும் கல்லுரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் பிறமொழிகளைக் கற்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

( I ). ஓரூலகத் தன்மையைப் பெறுவதற்கான முக்கிய வழிமுறையாக எதனைக் கொள்ளலாம்?

( ii ). பிற மொழிகளைக் கற்பதற்கான வாய்ப்புகளைத் தருவன எவை?

( iii ) தூதரங்களின் முதன்மையான பணிகளில் ஒன்று எது?

( iv ) மொழி பெயர்ப்புக் கல்வியின் பயங்களை எழுதுக.

( v )  இப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு இடுக.

பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )

அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க.                                   3×8=24

43. அ) உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.   ( அல்லது )

ஆ) நாட்டு விழாக்கள் – விடுதலைப் போராட்ட வரலாறு – நாட்டு முன்னேற்றத்தில் மாணவர் பங்கு – குறிப்புகளைக் கொண்டு ஒரு பக்க அளவில் ‘ மாணவப் பருவமும் நாட்டுப் பற்றும் ‘ என்ற தலைப்பில் மேடை உரை எழுதுக

44. அ) புயலிலே ஒரு தோணி கதையில் இடம்பெற்றுள்ள வருணனைகளும் அடுக்குத் தொடர்களும் ஒலிக்குறிப்புச் சொற்களும் புயலில் தோணி படும்பாட்டை எவ்வாறு விவரிக்கின்றன?  ( அல்லது )

ஆ) ‘ பாய்ச்சல் ‘ கதையில் அழகு தன்னை மறந்து ஆடியதைப் போன்று உங்கள் தெருக்களில் நீங்கள் கண்டு மகிழ்ந்த பகல் வேடக் கலைஞரைக் குறித்து அழகுற விளக்கி எழுதுக

45. அ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக.

குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று தருக.

முன்னுரை – விண்வெளியில் தமிழரின் அறிவு – கல்பனா சாவ்லா – விண்ணியல் அறிவில் வருங்காலத்தில் மேற்கொள்ள வேண்டியவை – முடிவுரை   ( அல்லது )

ஆ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதி தலைப்பிடுக..

குறிப்புகள் : முன்னுரை-பரவலான போதைப் பழக்கம்-போதைப் பழக்கத்திற்கான காரணங்கள்-பரப்புரை-போதைப் பழக்கத்தின் விளைவுகள்-விடுபடும் வழிமுறைகள்-வழிப்புணர்வு பரப்புரைகள்-நமது கடமைகள்- முடிவுரை

www.tamilvithai.com                                                                      www.kalvivithaigal.com

மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.

சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்

எங்கள் குழுவில் இணைய:-

   WHATSAPP LINK : https://chat.whatsapp.com/COVni0568j41sEyPmcyNgj

TELEGRAM LINK : https://t.me/thamizhvithai

FACE BOOK LINK : https://www.facebook.com/groups/215175780078251/?ref=share


pdf file - download

kindly wait for 10 seconds


நீங்கள் 10 விநாடிகள் காத்திருக்கவும் .

காத்திருப்புக்கு நன்றி


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post