அரசு
பொதுத் தேர்வு – 2024 / பத்தாம் வகுப்பு - மொழிப்பாடம்
தமிழ் – மாதிரி வினாத்தாள் – 3
நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி மதிப்பெண்
: 100
அறிவுரைகள் :
1) அனைத்து வினாக்களும் சரியாகப் பதிவாகி உள்ளனவா என்பதனைச் சரிபார்த்துக் கொள்ளவும்.
அச்சுப்பதிவில் குறையிருப்பின் அறைக் கண்காணிப்பாளரிடம் உடனடியாகத் தெரிவிக்கவும்.
2) நீலம் அல்லது கருப்பு
மையினை மட்டுமே எழுதுவதற்கும்,அடிக்கோடிடுவதற்கும் பயன்படுத்தவும்.
குறிப்பு :
I ) இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது.
ii) விடைகள் தெளிவாகவும் குறித்த அளவினதாகவும்
சொந்த நடையிலும் அமைதல் வேண்டும். பகுதி – I
( மதிப்பெண்கள் : 15 )
i)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்
ii)
கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத்
தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். 15×1=15
1. ‘
சாகும் போது தமிழ் படித்துச் சாக வேண்டும் -
என்றன்
சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும் ‘ – என்று கூறியவர்..
அ) திரு.வி.க ஆ)
க.சச்சிதானந்தன் இ)
நம்பூதனார் ஈ)
தனிநாயக அடிகள்
2. தேர்ப்பாகன் – இத்தொடரில் அமைந்துள்ள
தொகையைத் தெரிவு செய்க.
அ)
வினைத்தொகை ஆ) உருபும் பயனும் உடன்தொக்க தொகை
இ)
பண்புத் தொகை ஈ) இருபெயரொட்டுப் பண்புத் தொகை
3. ‘மெத்த வணிகலன்’ என்னும்
தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது.
அ) வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
ஆ) பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
இ) ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்
ஈ) வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்
4. “ கத்துங் குயிலோசை – சற்றே வந்து
காதிற் படவேணும் “ – பாரதியார். -
இப்பாடலடியில் இடம் பெற்றுள்ள வழுவமைதி
அ) திணை வழுவமைதி ஆ) பால் வழுவமைதி
இ) மரபு வழுவமைதி ஈ) கால வழுவமைதி
5. “ நாற்றிசையும்
செல்லாத நாடில்லை” “ ஐந்துசால்பு ஊன்றிய தூண்” – இந்தச் செய்யுள் அடிகளில் இடம்பெற்றுள்ள
எண்ணுப்பெயர்களையும் அவற்றிற்கான தமிழ் எண்களையும் தேர்க.
அ) நான்கு , ஐந்து – ௪ ,௫ ஆ)
மூன்று, நான்கு – ௩ , ௪
இ) ஐந்து , ஏழு – ௫ , ௭ ஈ)
நான்கு , ஆறு – ௪, ௬
6. “ அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி
மருளை அகற்றி மதிக்கும் தெருளை “ – என்று
இவ்வடிகளில் குறிப்பிடப்படுவது எது?________
அ)
தமிழ் ஆ) அறிவியல் இ) கல்வி ஈ) இலக்கியம்
7. பாடி மகிழ்ந்தனர் – எவ்வகைத் தொடர்
என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
அ) பெயரெச்சத் தொடர் ஆ) வினையெச்சத் தொடர்
இ) வேற்றுமைத் தொடர் ஈ) விளித் தொடர்
8. ஓர் ஆண்டின் மொத்த மாதங்களின் எண்ணிக்கையினைக்
குறிக்கும் தமிழ் எண்ணைத் தேர்ந்தெடுக்க.
அ) ௧ ௫ ஆ)
௧ ௨ இ)
௧ ௩ ஈ)
௧ ௪
9.பரிபாடல் அடியில் ‘ விசும்பும் இசையும்
‘ என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?
அ)
வானத்தையும் பாட்டையும் ஆ) வானத்தையும்,
புகழையும்
இ)
வானத்தையும் பூமியையும் ஈ) வானத்தையும் பேரொலியையும்
10. கல் – கூட்டப் பெயரைத் தேர்க
அ)
கட்டு ஆ)
குலை
இ) குவியல்
ஈ) தாறு
11. சீவலமாறன் என்ற பட்டப்பெயர் கொண்டவர்
அ) பெருஞ்சித்திரனார் ஆ) தமிழழகனார் இ) தேவநேயப் பாவாணர் ஈ) அதிவீரராம
பாண்டியர்
பாடலைப்
படித்து வினாக்களுக்கு (12,13,14,15) விடையளிக்க:-
“
உய்முறை அறியேன்; ஓர்ந்த
உணர்வினொத்து உறுப்பும் இல்லா
மெய்முறை
அறியேன்; மெய்தான்
விரும்பிய
உணவு தேடச்
செய்முறை
அறியேன்; கானில்
செல்வழி அறியேன்; தாய்தன்
மைமுறை
அறிந்தேன் தாயும்
கடிந்தெனைத் தனித்துப் போனாள் ”
12)
இப்பாடலின் ஆசிரியர்
அ)
தமிழழகனார் ஆ) பாரதியார் இ) வீரமாமுனிவர் ஈ) பாரதிதாசன்
13)
இப்பாடல் இடம் பெற்ற நூல்
அ)
கம்பராமாயணம் ஆ) தேம்பாவணி இ) சிலப்பதிகாரம் ஈ) காசிக்காண்டம்
14.
பாடலில் இடம் பெற்றுள்ள எதுகைச் சொற்களைத் தேர்க
அ) உய்முறை
- உணர்வு ஆ) மெய்முறை – செல்வழி
இ)
மெய்முறை - செய்முறை ஈ) தாய் - கடிந்தெனை
15)
செய்முறை என்பதன் இலக்கண குறிப்பு தருக_____
அ)
வினைத்தொகை ஆ) தொழில் பெயர் இ) வினைமுற்று
ஈ) பெயரெச்சம்
பகுதி – II ( மதிப்பெண்கள் : 18 ) பிரிவு – 1
எவையேனும்
நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. 4×2=8
21
ஆவது வினாவிற்கு கட்டாயமாக விடையளிக்க வேண்டும்..
16.
வசன கவிதை – குறிப்பு வரைக
17.
நஞ்சைக் கொடுத்தாலும் உண்ணும் பண்பாளர் எவர் என வள்ளுவர் வாய்மொழி கூறும் செய்தி யாது?
18.
விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமன் சொற்கள் நான்கு எழுதுக
19. விடைக்கேற்ற வினா அமைக்க.
அ) தமிழ்த்தென்றல் திரு.வி.க.போல
இமைகளை மூடியபடி எழுதும் ஆற்றலைக் கற்றுக்கொண்டவர் தமிழ்த்திரு. இரா. இளங்குமரனார்
ஆ) தமிழ் மக்களின் வீரத்தைச் சொல்லும் கலையாகத் திகழ்வது
புலி ஆட்டமாகும்.
20. ஜெயகாந்தனின் திரைப்படமான படைப்புகளில் எவையேனும் இரண்டினை
எழுதுக.
21. ‘ வினை ‘ என முடியும் திருக்குறளை எழுதுக.
பிரிவு – 2
எவையேனும்
ஐந்து வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். 5×2=10
22.
“ இப்ப ஒசரமா வளந்துட்டான்! ஒனக்கு அடையாளமே தெரியாது! ஊருக்கு எங்கூட வருவாம் பாரேன்!
சரி, போனை வையி, நாங் கெளம்பிட்டேன்……
உரையாடலில்
உள்ள பேச்சு வழக்கினை எழுத்து வழக்காக மாற்றுக.
23.
வருகின்ற கோடை விடுமுறையில் காற்றாலை மின் உற்பத்தியை நேரில் காண்பதற்கு ஆரல்வாய் மொழிக்குச்
செல்கிறேன் – இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைவது எவ்வாறு?
24. அடிக்கோடிட்ட தொகைநிலைத் தொடர்களை வகைப்படுத்துக.
அன்புச்செல்வன்
திறன்பேசியின் தொடுதிரையில் படித்துக் கொண்டிருந்தார்,
25.
சந்தக் கவிதையில் பிழைகளைத் திருத்துக
“ தேணிலே ஊரிய செந்தமிழின் – சுவை
தேரும் சிலப்பதி காறமதை
ஊனிலே எம்முயிர் உல்லலவும் – நிதம்
ஓதி யுனர்ந்தின் புருவோமே”
குறிப்பு:
செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
கூட்டப்
பெயர்களை எழுதுக: அ) பழம் ஆ) புல்
26.
. கலைச்சொல் தருக:- அ) VOWEL ஆ) EMBLEM
27.
’ கிளர்ந்த’ – பகுபத உறுப்பிலக்கணம் தருக.
28
புறத்திணைகளில் எதிரெதிர் திணைகளை அட்டவணைப்படுத்துக
பகுதி – III ( மதிப்பெண்கள் -18 ) பிரிவு – I
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க:- 2×3=6
29.
உரைப்
பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
1. எப்பண்புகளைப் பின்பற்றிப் பொய்க்கால் குதிரையாட்டம் நிகழ்த்தப்படுகிறது?
2. பொய்க்கால் குதிரையாட்டம் வேறு பெயர்கள் யாவை?
3. யாருடைய காலத்தில் இது தஞ்சைக்கு வந்தது?
30
“ பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர்
வருவீர் உளீரோ “ – வினவுவது ஏன்?
31. உங்களுடன் பயிலும் மாணவர் ஒருவர் பள்ளிப்
படிப்பைப் பாதியில் நிறுத்தி வேலைக்குச் செல்ல விரும்புகிறார். அவரிடம் கற்பதன் இன்றியமையாமையை
எவ்வகையில் எடுத்துரைப்பீர்கள்?
பிரிவு – II
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்கவும். 2×3=6
34
ஆவது வினாவிற்கு கட்டாயம் விடையளிக்க வேண்டும்.
32.
வாளித் தண்ணீர், சாயக் குவளை, கந்தைத் துணி, கட்டைத் தூரிகை – இச்சொற்களைத் தொடர்புபடுத்தி
ஒரு பத்தி அமைக்க.
33.
கம்பராமாயணம் – குறிப்பு வரைக
34. அடிபிறழாமல் எழுதுக
அ)
“ விருந்தினனாக“ எனத் தொடங்கும்
காசிக்காண்டம் பாடல் (அல்லது )
ஆ)
“
மாற்றம் “ – எனத் தொடங்கும் காலக்கணித பாடல்
பிரிவு -III
எவையேனும்
இரண்டு வினாக்களுக்கு விடையளிக்க:- 2×3=6
35 முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி
விடும்.
இக்குறட்பாவில்
அமைந்துள்ள பொருள்கோளின் வகையைச் சுட்டி விளக்குக.
36. வன்கண்
குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோ
டைந்துடன்
மாண்ட தமைச்சு – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
37.
கொண்டுக் கூட்டு பொருள்கோள் – விளக்குக.
பகுதி -IV ( மதிப்பெண்கள் : 25)
அனைத்து
வினாக்களுக்கும் விடையளிக்க. 5×5=25
38.
அ) நும் பாடப்பகுதியில் முயற்சி குறித்து ஆள்வினை உடைமை என்னும் அதிகாரத்தில்
திருவள்ளுவர் கூறிய கருத்துகளைத் தொகுக்க. ( அல்லது )
ஆ)
பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள மெய்க்கீர்த்திப் பாடலின் நயத்தை விளக்குக.
39.
உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும், விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து
உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக
( அல்லது )
ஆ பள்ளித் திடலில் கிடைத்த பணப் பையை உரியவரிடம்
ஒப்படைத்ததையும் அதற்குப் பாராட்டுப் பெற்றதையும் பற்றி வெளியூரில் இருக்கும் உறவினர்
ஒருவருக்குக் கடிதம் எழுதுக.40. படம் உணர்த்தும் கருத்தைக் கவினுற எழுதுக.
41. தமிழழகனின் மகன் இனியன் இளங்கலை தமிழ் பட்டம் முடித்துள்ளார்.
அவர் தட்டச்சு பிரிவில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் மேல்நிலை வகுப்பு முடித்துள்ளார்.
கணினியில் எம்.எஸ்.ஆபிஸ் முடித்துள்ளார். அவர் தமிழ் வாரப்பத்திரிக்கையில் தட்டச்சர்
பணி வேண்டி விண்ணபிக்கிறார். தேர்வர் தன்னை இனியனாக நினைத்து உரிய பரிவத்தை நிரப்புக.
42.
அ) மாணவ நிலையில் நாம் பின்பற்ற வேண்டிய
அறங்களும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடுக. ( அல்லது )
ஆ)
மொழிபெயர்க்க.
The
Golden sun gets up early in the morning and starts its bright rays to fade away
the dark.The milky clouds start their wandering.The colourful birds start
twitting their morning melodies in percussion.The cute butterflies dance around
the flowers. The flowers fragrance fills the breeze. The breeze gently blows
everywhere and makes everything pleasant
குறிப்பு
: செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா
உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
மொழி பெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும்
நாம் எளிதாகப் பெற முடியும். பல அறிவுத் துறைகளுக்கும் தொழில் துறைகளுக்கும் வெளிநாட்டாரை
எதிர்பார்க்காமல் நாமே நமக்கு வேண்டிய அனைத்தையும் உருவாக்கிக் கொள்ள முடியும். மனித
வளத்தை முழுமையாகப் பயன்படுத்த முடியும். வேலைவாய்ப்புத் தளத்தை விரிவாக்க முடியும்.நாடு,இன
மொழி எல்லைகள் கடந்து ஓருலகத் தன்மையைப் பெற முடியும். நாடு விடுதலை பெற்ற பிறகு பல
நாட்டு தூதரகங்கள் நம் நாட்டில் நிறுவப்பட்டன. அவை தங்களுடைய இலக்கியம், பண்பாடு, தொழில்
வளர்ச்சி, கலை போன்ற்வற்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் தத்தம் மொழிகளைக் கற்றுக் கொடுக்கின்ற
முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. இதனைச் சார்ந்து பிற மொழிகளைக் கற்றுத்தரும் தனியார்
நிறுவனங்களும் உருவாகியுள்ளன. பள்ளிகளிலும் கல்லுரிகளிலும் பல்கலைக் கழகங்களிலும் பிறமொழிகளைக்
கற்கும் வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
(
I ). ஓரூலகத் தன்மையைப் பெறுவதற்கான முக்கிய வழிமுறையாக எதனைக் கொள்ளலாம்?
(
ii ). பிற மொழிகளைக் கற்பதற்கான வாய்ப்புகளைத் தருவன எவை?
(
iii ) தூதரங்களின் முதன்மையான பணிகளில் ஒன்று எது?
(
iv ) மொழி பெயர்ப்புக் கல்வியின் பயங்களை எழுதுக.
(
v ) இப்பத்திக்குப் பொருத்தமான தலைப்பு இடுக.
பகுதி – v ( மதிப்பெண்கள் : 24 )
அனைத்து
வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. 3×8=24
43.அ) நெகிழிப் பைகளின் தீமையைக் கூறும் பொம்மலாட்டம் உங்கள் பள்ளியின் ஆண்டு
விழாவில் நிகழ்த்தப்படுகிறது. அதற்கு பாராட்டுரை ஒன்று எழுதுக ( அல்லது )
ஆ) தமிழர் மருத்துவ முறைக்கும் நவீன மருத்துவ முறைக்கும் உள்ள தொடர்பு குறித்து
எழுதுக.
44. அ) “ மங்கையராய்ப் பிறப்பதற்கே “ என்னும் பாடத்தில் இடம் பெற்றுள்ள மூவர்
பற்றி சுருக்கி எழுதுக.
( அல்லது )
ஆ) ‘ புயலிலே ஒரு தோணி ‘ – கதைப் பகுதியில் இடம்பெறும் கடற்பயண நிகழ்வுகளை விவரித்து
எழுதுக
45. அ) குறிப்புகளைக் கொண்டு கட்டுரை ஒன்று எழுதி தலைப்பிடுக..
குறிப்புகள் : முன்னுரை – கல்பனா சாவ்லா இளமைப் பருவம் – விண்வெளிப் பயணம்
– விண்வெளி சாதனைகள் – முடிவுரை ( அல்லது
)
ஆ) குறிப்புகளைக் கொண்டு, ‘மக்கள் பணியே மகத்தான பணி ‘ என்ற தலைப்பில் கட்டுரை எழுதுக.
முன்னுரை – தமிழகம் தந்த தவப்புதல்வர் – நாட்டுப்பற்று – மொழிப்பற்று – பொதுவாழ்வில் தூய்மை – எளிமை – மக்கள் பணியே மகத்தான பணி – முடிவுரை
தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி, சேலம்
www.tamilvithai.com www.kalvivithaigal.com
மேலும் பல்வேறு கற்றல் வளங்கள் பெற : 8695617154 என்ற எண்ணை உங்கள் புலனக் குழுவில் இணைக்கவும்.
சராசரி மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான ஒன்பதாம் வகுப்பு மற்றும் பத்தாம் வழிகாட்டிகள் கிடைக்கும். மேலும் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற்று அதிகப்பட்ச மதிப்பெண் பெற சிறப்பு வினா வங்கி உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றைக் கொண்டு பயிற்சி அளிக்கும் போது மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற இவை உதவியாக இருக்கும். வழிகாட்டி மற்றும் வினா வங்கி விபரங்கள் பெற : 8072426391 , 8667426866 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளவும். நன்றி, வணக்கம்
எங்கள் குழுவில் இணைய:-
WHATSAPP TELEGRAM FACE BOOK GROUP
WHATSAPP LINK : https://chat.whatsapp.com/COVni0568j41sEyPmcyNgj
TELEGRAM LINK : https://t.me/thamizhvithai
FACE BOOK LINK : https://www.facebook.com/groups/215175780078251/?ref=share