சேலம் – இரண்டாம் திருப்புதல் தேர்வு -2024
பத்தாம் வகுப்பு / மொழிப்பாடம் – தமிழ்
உத்தேச விடைக் குறிப்பு
நேரம்
: 3.00 + 15 மணி மதிப்பெண் : 100
பகுதி
– 1 மதிப்பெண்கள்
- 15 |
|||||||||||||||||||||||||||||||||||||||
வினா.எண் |
விடைக்
குறிப்பு |
மதிப்பெண் |
|||||||||||||||||||||||||||||||||||||
1. |
ஆ. மணிவகை |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
2. |
அ. கடல்நீர் ஆவியாகி மேகமாதல் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
3. |
அ. இகழ்ந்தால் என் மனம் இறந்துவிடாது |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
4. |
ஆ. கொன்றை வேந்தன் |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
5. |
ஈ. மழை முகம் காணாப் பயிர்போல |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
6. |
ஆ. வேற்றுமை உருபு |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
7. |
ஆ. மார்ஷல்.ஏ.நேசமணி |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
8. |
அ. சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு
இருந்தது |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
9. |
ஈ. இலா |
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
10. |
ஈ) கரகாட்டத்தின் வேறு பெயர்கள் யாவை? |
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
11.
|
அ. காடு |
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
12
. |
ஈ. தனிப்பாடல் திரட்டு |
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
13
. |
அ. இரட்டுற மொழிதல் அணி |
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
14
. |
ஆ. கடல் |
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
15
|
இ. அணை கிடந்தே – இணை கிடந்த |
1
|
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
- 2 |
|||||||||||||||||||||||||||||||||||||||
16 |
அ. சம்பாவில் எத்தனை உள்வகைகள் உள்ளன? ஆ. ஜப்பானில் சாப்ட் வங்கி உருவாக்கிய மனிதன் எது? ( பொருத்தமான வேறு விடைகள் இருப்பினும் மதிப்பெண் வழங்கலாம் ) |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
17. |
தாயை இழந்து வாடுகிறேன் என்பது உவமை உணர்த்தும் கருத்து. |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
18. |
நிலம், நீர், வானம், நெருப்பு, காற்று |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
19 |
·
ஆற்றுப்படுத்தும் கூத்தன், வள்ளலை நாடி எதிர்வரும் கூத்தனை அழைத்து, யாம்
இவ்விடத்து இன்னவெல்லாம் பெற்று வருகின்றோம், நீயும் அந்த வள்ளலிடம் சென்று வளம் பெற்று வாழ்வாயாக என்று கூறுதல்
ஆற்றுபடை. ( கூத்தனை
கூத்தன் ஆற்றுப்படுத்துதல் ஆற்றுபடை ஆகும் ) |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
20 |
உரைநடையும்,கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும்
கவிதை வடிவம் வசன கவிதை. ( உரைநடை + கவிதை = வசன கவிதை ) |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
21. |
குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
|
|||||||||||||||||||||||||||||||||||||||
22 |
அறிவினா,
அறியாவினா, ஐய வினா , கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
23 |
மாமழை – உரிச்சொல் தொடர் மாம்பூவே – விளித் தொடர் |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
24. |
வளிக்கு வாளி என எழுதினான். |
2 |
|||||||||||||||||||||||||||||||||||||
25 |
அ.
விண்வெளிக் கதிர்கள் ஆ. அறிவாளர் |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
26 |
அ. நெல்லை ஆ. மன்னை |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
27 |
அ. வருக = வா( வரு) + க வா – பகுதி, வரு என திரிந்தது – விகாரம்,
க – வியங்கோள் வினை முற்று விகுதி |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
27 |
செவி மாற்றுத்திறனாளர்களுக்கான மாற்று வினா அ. மீளும் துயர் ஆ. எழுதியக் கவிதை |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
28 |
அ. பறவை ஆ. வானவில் ( பொருத்தமான வேறு விடைகள் இருப்பினும் மதிப்பெண் வழங்கலாம் ) |
1 1 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 3 |
|||||||||||||||||||||||||||||||||||||||
29 |
Ø கல்வி நமக்கு மகிழ்ச்சியான வாழ்வைத் தரும் Ø சமூகத்தில் நற்பெயருடன் இருக்கக் கல்வி அவசியம். Ø பிறருடைய உதவி நாடாமல் சுயமாக வாழ கல்வி அவசியம் Ø கல்வி நமக்கு உறுதியான பாதுகாப்பு தரும் |
3
|
|||||||||||||||||||||||||||||||||||||
30 |
அ) பழந்தமிழ்
மக்களின் கலை, அழகியல், புதுமை ஆ) சமுதாய நிகழ்வுகளின்
ஆவணங்களாகவும் செய்திகளைத் தரும் ஊடகங்களாகவும் திகழ்கின்றன இ) சிற்றூர்
மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளில் பிரித்து பார்க்க இயலாத கூறுகளாகத்
திகழ்கின்றன. |
1
1
1 |
|||||||||||||||||||||||||||||||||||||
31 |
இடம்: மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமை – மாநகராட்சி சிறப்புக்
கூட்டம் பொருள் : மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது ஆந்திராவின் தலைநகராக
சென்னை இருக்க வேண்டும் என்ற நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையத்தை எதிர்த்து
முழங்கிய முழக்கம் இது. விளக்கம் : இதன் பொருட்டு ம.பொ.சி. சென்னையை மீட்க தலைக்கொடுத்தேனும் தலைநகர் காப்போம்
என முழங்கினார். |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
-3 / பிரிவு - 2 |
|||||||||||||||||||||||||||||||||||||||
32 |
·
மேல் மண் பதமாகிவிட்டது. ·
வெள்ளி முளைத்திடுது ·
காளைகளை ஓட்டி விரைந்து செல் |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
33
|
·
தொழில் செய்வதற்குத் தேவையான கருவி, அதற்கு ஏற்ற காலம், செயலின் தன்மை, செய்யும் முறை ஆகியவற்றை அறிந்து செயல்பட வேண்டும் என கூறியிருப்பது நமக்கும்
பொருத்தமாக அமைகிறது. ·
மனவலிமை, குடிகளைக் காத்தல், ஆட்சி முறைகளைக் கற்றல், நூல்களைக் கற்றல்,விடாமுயற்சி போன்றவை நமக்கும் சிறப்பாக அமைய வேண்டும். ·
இயற்கையான நுண்ணறிவும் ,நூலறிவும் உடையவர்களிடம்
எந்த சூழ்ச்சியும் நடைபெறாது ·
ஒரு செயலைச் செய்வதற்குரிய முறைகளை நூல் வழியாக அறிந்திருப்பினும் உலகியல்
நடைமுறைகளை அறிந்து தான் நாம் செயல்பட வேண்டும். |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
34 |
அருளைப் பெருக்கி அறிவைத் திருத்தி மருளை அகற்றி மதிக்கும் தெருளை அருத்துவதும்
ஆவிக்கு அருந்துணையாய் இன்பம் பொருத்துவதும் கல்வியென்றே போற்று. கா.ப.செய்கு தம்பி பாவலர் |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
34 |
தூசும் துகிரும் ஆரமும் அகிலும் மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும் அருங்கல
வெறுக்கையோடு அளந்துகடை அறியா வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்; பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு கூலம் குவித்த கூல வீதியும்; -இளங்கோவடிகள் |
3
|
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
– 3 / பிரிவு - 3 |
|||||||||||||||||||||||||||||||||||||||
35 |
Ø
அகவல் ஓசை பெற்று
வரும். Ø
ஈரசைச்சீர் குறைவாக
காய்ச்சீர் மிகுதியாக வரும் Ø
ஆசிரியத்தளை மிகுதியாக
வரும். Ø
வெண்டளை,கலித்தளை விரவி
வரும். Ø
மூன்றடி முதல் எழுதுபவர்
மனநிலைக்கு ஏற்ப முடியும் Ø
ஏகாரத்தில் முடிவது
சிறப்பு |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
36 |
|
3
|
|||||||||||||||||||||||||||||||||||||
37
|
இலக்கணம்: இயல்பாக நிகழும்
நிகழ்ச்சியின் மீது கவிஞர் தன் குறிப்பினை ஏற்றிக்கூறுதல். எ.கா: தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால் .................................................................................. ................... கூவினவே கோழிக் குலம். விளக்கம்: அதிகாலை விடிந்ததும் கோழிகளும் இயல்பாகக் கூவும்.ஆனால் புலவர் தமயந்தியின்
துயர் கண்டே கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாகக் கூறுகிறார். |
3 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
- 4 |
|||||||||||||||||||||||||||||||||||||||
38அ |
Ø
வணிக நோக்கமின்றி
அறம் செய்ய வேண்டும். அதை விளம்பரப்படுத்தக்கூடாது. Ø
நீர்நிலை பெருக்கி,நிலவளம்கண்டு,உணவுப் பெருக்கம்
காணவேண்டும் என்று கூறுவது இன்றைய அரசியல் தலைவர்களுக்குப் பொருந்தும். Ø
வாய்மை சிறந்த அறமாகும்.
உண்மை பேசும் நா “ பொய்யா செந்நா, பொய்படுவறியா
வயங்கு செந்நா “ என இலக்கியங்கள் கூறுகின்றன, Ø
எனவே நாம் உண்மை
மட்டுமே பேச வேண்டும். Ø
உதவி செய்தல் சிறந்த
அறமாகும். Ø
சங்க இலக்கிய்ங்கள்
காட்டும் அறங்கள் முதல் தரமான அறங்கள். |
5
|
|||||||||||||||||||||||||||||||||||||
38ஆ |
·
நீயும் அந்த வள்ளலிடம்
சென்று வளம் பெற்று வாழ்வாயாக என கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்துதல்
ஆற்றுப்படை ·
நன்னன் எனும் மன்னனிடம்
பரிசில் பெற்ற கூத்தர், மற்றொரு கூத்தரிடம் பரிசில் பெறுவதற்கான வழியினை கூறுகிறது. ·
உணவினைப் பெறுவதற்கான
வழியினைக் கூறல். |
5
|
|||||||||||||||||||||||||||||||||||||
39அ |
அனுப்புநர் அ அ அ அ அ, 100,பாரதி தெரு, சக்தி நகர், சேலம் – 636006. பெறுநர் உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள், உணவு பாதுகாப்பு ஆணையம், சென்னை – 600001 ஐயா, பொருள்: தரமற்ற உணவு வழங்கிய
உணவு விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுதல் – சார்பு வணக்கம். நான் நேற்று சேலத்தில் அன்பு உணவகத்தில் கோழி பிரியாணி உண்டேன். அது கெட்டுப் போனதாகவும்
மேலும் அதன் விலைப்பட்டியலைவிட விலைக் கூடுதலாகவும் இருந்தது. இத்துடன் அந்த உணவிற்கான
விலை இரசீது நகல் மற்றும் உணவு பட்டியல் நகலையும் இணைத்துள்ளேன். தகுந்த நடவடிக்கை
எடுக்குமாறு பணிவுடன் வேண்டுகிறேன். நன்றி. இணைப்பு: இப்படிக்கு, 1. விலை இரசீது – நகல் தங்கள் உண்மையுள்ள, 2. விலைப்பட்டியல்–நகல் அ அ அ அ அ. இடம் : சேலம் நாள் : 04-03-2021 உறை மேல் முகவரி: பெறுநர் உணவு பாதுகாப்பு
ஆணையர் அவர்கள், உணவு பாதுகாப்பு
ஆணையம், சென்னை – 600001. |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
39ஆ |
சேலம் 30-01-2024 அன்புள்ள மாமாவுக்கு, நான் நலம். நீங்கள் நலமா? என அறிய ஆவல். சென்ற வாரம் எங்கள் பள்ளித் திடலில் பை ஒன்று கிடந்தது. அதனை திறந்த போது
அதில நிறைய பணம் இருந்தது. உடனடியாக நான் தலைமை ஆசிரியரிடம் விபரம் கூறி ஒப்படைத்தேன்.மறுநாள் காலை இறைவணக்கக்
கூட்டத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரி இருவரும் பாராட்டி ஒரு
நற்சான்றிதழையும் வழங்கினார்கள். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நேர்மைக்குக் கிடைத்த
மிகப் பெரிய கவுரமாக இதை கருதுகிறேன். வீட்டில் அனைவரிடமும் இதை கூறவும். நன்றி,வணக்கம். இப்படிக்கு, தங்கள் உண்மையுள்ள, அ அ அ அ அ அ அ . உறைமேல் முகவரி; பெறுதல் திரு.இரா.இளங்கோ, 100,பாரதி தெரு,,நாமக்கல். |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
40 |
|
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
41 |
கொடுக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு முழுமையாக
அனைத்துப் பகுதியினையும் நூலக உறுப்பினர் படிவத்தில் பதிவு செய்து இருப்பின் முழு
மதிப்பெண் வழங்குக |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
42அ |
|
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
42ஆ |
பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால்
இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த
காட்சி பரவசத்தை உண்டாக்குகிறது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம்
வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும்
இனிமையாக இருக்கிறது. |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
|
செவி மாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா 1. கோடை 2. பனிப்பகுதியிலிருந்து வீசுவதால் ஊதைக்காற்று 3. குடக்கு 4. வடக்கு 5. நான்கு திசைகளிலும் காற்று |
5 |
|||||||||||||||||||||||||||||||||||||
பகுதி
- 5 |
|||||||||||||||||||||||||||||||||||||||
43அ |
|
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
43ஆ |
(வினா எண் : 43 -
8 மதிப்பெண் – உரைநடை நெடுவினா )
செம்மொழி : “ வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள் முதல் உயிர்மொழி” என தமிழின் பெருமையைப் பறைச்சாற்றுகிறார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.
கால வெள்ளத்தில் கரைந்துபோன மொழிகளுக்கிடையே தன்னைச் செம்மொழியாக நிலைநிறுத்திக்
கொண்டுள்ளது. தமிழின் சிறப்பு : “ நாடும்
மொழியும் நமதிரு கண்கள் “ என்கிறார் பாரதியார்.
தமிழானது தொன்மை மிக்க மொழி. பிறமொழி தாக்கம் இல்லாத மொழி உண்டு என்றால் அது தமிழ்
மட்டுமே, திராவிட மொழிகளுக்கெல்லாம் தாயாகவும் விளங்குகிறது தமிழ்மொழி. இயல், இசை,நாடகம்
என்னும் முப்பிரிவுகளைக் கொண்டது. இறவா இலக்கிய, இலக்கண வளங்களை மட்டுமல்லாது, அதீத
சொல்வளமும் மிக்கது நம் தமிழ் மொழி. தமிழ்ச்சொல் வளம் : சொல்வளம் இலக்கியச் செம்மொழிகளுக்கெல்லாம் பொதுவேனும்,
தமிழ் மட்டும் அதில் தலைசிறந்ததாகும். தமிழ் சொல்வளம் மிக்க மொழி. தமிழ்ச்சொல் வளம்
பலதுறைகளில் மிகுந்து காணப்படுகிறது. இங்கு பயிர்வகைச் சொற்கள் மட்டும் சிறப்பாக
எடுத்துக்காட்டப்பெறும் . அடிவகை :- தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிப்பதற்கான சொற்கள் தாள், தண்டு, கோல், தூறு, தட்டு, கழி, கழை, அடி கிளைப்பிரிவுகள் :
தாவரத்தின் அடியிலிருந்து பிரிந்து செல்லும் பிரிவுகளுக்கு
வழங்கும் சொற்கள். கவை, கொம்பு,
கிளை, சினை, போத்து, குச்சு, இணுக்கு. காய்ந்த அடியும் கிளையும் பெயர்பெறுதல் : காய்ந்த தாவரத்தின் பகுதிகளுக்கு வழங்கும் சொற்கள் சுள்ளி,
விறகு, வெங்கழி, கட்டை இலை வகை : தாவரங்களின் இலை வகைகளைக் குறிக்கும் சொற்கள். இலை, தாள்,
தோகை, ஓலை, சண்டு, சருகு. கொழுந்து வகை : தாவரத்தின் நுனிப்பகுதிகளைக் குறிக்கும் சொற்கள் துளிர்,
முறி, கொழுந்து, குருத்து, கொழுந்தாடை பூவின் நிலைகள் : பூவின் நிலைகளைக் குறிக்கும் சொற்கள் அரும்பு,
போது, மலர், வீ, செம்மல் பிஞ்சுவகை : தாவரத்தின் பிஞ்சுவகைகளுக்கு வழங்கும்
சொற்கள் பூம்பிஞ்சு,
பிஞ்சு, வடு, மூசு, கவ்வை, குரும்பை, முட்டுக் குரும்பை, இளநீர், கருக்கல், கச்சல். குலை வகை : தாவரங்களின் குலைவகைகளைக் குறிப்பதற்கான
சொற்கள். கொத்து,
குலை, தாறு, கதிர், அலகு, குரல், சீப்பு, கெட்டுப்போன காய்கனி வகை : கெட்டுப்போன காய்க்கும் கனிக்கும் வழங்கக் கூடியச் சொற்கள் சூம்பல்,
சிவியல், சொத்தை, வெம்பல், அளியல், அழுகல், சொண்டு, கோட்டான் காய், தேரைக்காய், அல்லிக்காய்,
ஒல்லிக்காய். பழத்தோல் வகை : பழங்களின் மேற்பகுதியினைக் குறிக்க வழங்கும் சொற்கள். தொலி,
தோல், தோடு, ஓடு, குடுக்கை, உமி, மட்டை, கொம்மை மணிவகை : தானியங்களுக்கு வழங்கும் சொற்கள். கூலம்,
பயறு, கடலை, விதை, காழ், முத்து, கொட்டை, தேங்காய், முதிரை இளம்பயிர்வகை : தாவரங்களின் இளம் பருவத்திற்கான சொற்கள். நாற்று,
கன்று, குருத்து, பிள்ளை,குட்டி, மடலி, வடலி, பைங்கூழ் புதிய சொல்லாக்கத்திற்கான தேவை: Ø வழக்கத்தில் பல ஆங்கில சொற்களைத் தமிழோடு இணைத்து பேசவும், எழுதவும் செய்வதைத்
தவிர்க்கப் புதிய சொல்லாக்கம் தேவை. Ø தொழில் நுட்பம் சார்ந்த பல சொற்களை தமிழில் பயன்படுத்த
சொல்லாக்கம் தேவை. Ø தாவரத்தின் அனைத்து நிலைகளுக்கும் தமிழில் சொற்கள் உண்டு. Ø புதிய தமிழ்ச்சொல்லாக்கம் தமிழ் மொழியை அழியாமல் பாதுகாக்கிறது. Ø மொழியின் மூலம் நாட்டாரின் நாகரிகத்தையும்,நாட்டு வளத்தின்
மூலம் மொழிவளத்தினையும் அறியலாம். முடிவுரை : மொழி ஒரு நாட்டாரின் அல்லது இனத்தாரின் நாகரிகத்தை அளந்தறிவதற்கான
சிறந்த வழியாகும். ஒரு நாட்டின் வளம் அதன் மொழிவளத்தை சார்ந்தே அமையும் எனக் கூறி
உரையை நிறைவு செய்கிறேன். |
8
|
|||||||||||||||||||||||||||||||||||||
44அ |
முன்னுரை : பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து
காக்கின்ற மனித நேயம் விருந்தோம்பல்.இக்கட்டுரையில் கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பலைக்
காணலாம். தேசாந்திரி: Ø சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி. Ø அன்னமய்யாவுடன் ஒரு ஆள் வந்தான் Ø அவன் மிக சோர்வாக இருந்தான் Ø லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான். Ø குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது. Ø வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான் கருணை அன்னமய்யா: Ø அவன் பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும்
கூறினான். Ø அன்னமய்யா ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும், துவையலும் வைத்துக்
கொடுத்தார். Ø கடுமையான பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி
உறங்கினான். Ø ஆனந்த உறக்கம் கண்டான். முடிவுரை: பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுத்து
காக்கின்ற கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது. |
|
|||||||||||||||||||||||||||||||||||||
44ஆ |
மகளிர் நாள் விழா அறிக்கை எம்பள்ளிக் கலையரங்கத்தில்
08-03-2019 அன்று மகளிர் நாள் விழா நடைபெற்றது. மாணவர் ,ஆசிரியர் கூடுதல்: கலையரங்கத்தில் மாலை 3.00 மணியளவில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் கூடினர்.தமிழ்த்தாய் வாழ்த்து
பாடி விழா தொடங்கப்பட்டது. தலைமையாசிரியர்
வரவேற்பு: தலைமை ஆசிரியர் வந்திருந்த அனைவரையும் தேன் தமிழ் சொற்களால் வரவேற்றார். தலைமை ஆசிரியர்
கூறிய இதழாளர் கலையரசி பற்றிய வரவேற்பும்,அறிமுகமும் மிகவும் சிறப்பாக இருந்தது. இதழாளர்
கலையரசியின் சிறப்புரை: இதழாளர் கலையரசியின் பேச்சு மகளிருக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் உந்து
சக்தியாக அமைந்தது. Ø மகளிரின் சிறப்புகள் Ø மகளிருக்கு அரசின் நலத் திட்டங்கள் Ø சுய உதவிக்குழுக்களின் பங்கு Ø
மகளிர் கல்வி போன்ற கருத்துகள் தெளிவாகவும்,அருமையாகவும் இருந்தன. ஆசிரியர்களின்
வாழ்த்துரை: ஆசிரியர் கலையரசியின் உரைக்கு வாழ்த்து தெரிவித்ததோடு நம் பள்ளி மாணவிகளையும்
பல்வேறு சாதனைகள் புரிய வேண்டும் என வாழ்த்துரை வழங்கினார். மாணவத் தலைவரின் நன்றியுரை: மாணவத் தலைவர் சிறப்பு விருந்தினருக்கும்,தலைமை ஆசிரியருக்கும்,ஆசிரியர்களுக்கும்,மாணவர்கள் மற்றும்
அவர் தம் பெற்றோருக்கும் நன்றி கூறினார். மகளிர் நாளில் உறுதி மொழி எடுக்கப்பட்டு நாட்டுப்பண் பாடி
விழா இனிதே நிறைவுற்றது. |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
45அ |
கொரோனா பெருந்தொற்று
மேற்காணும்
தலைப்புகளில் பொருத்தமான விடை எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம். |
8 |
|||||||||||||||||||||||||||||||||||||
45ஆ |
மேற்காணும்
தலைப்புகளில் பொருத்தமான விடை எழுதி இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம். |
|
|||||||||||||||||||||||||||||||||||||
விடைக்குறிப்பு தயாரிப்பு :
வெ.ராமகிருஷ்ணன், தமிழாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி, கோரணம்பட்டி
click here to get pdf