பருவம் : மூன்றாம்
பருவம்
மாதம் : பிப்ரவரி
வாரம் : மூன்றாம்
வாரம்
வகுப்பு : ஆறாம்
வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : பாதம்
அறிமுகம் :
Ø
உங்களுக்கு
சொந்தமில்லாத ஒரு பொருள் உங்கள் கையில் கிடைத்தால் அதை நீங்கள் என்ன செய்வீர்கள்?
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø பிறர் பொருளை விரும்பாமை
ஓர் அறம் என்பதனை உணர்தல்.
Ø கற்பனை கதையின் நுட்பத்தை
அறிதல்
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
Ø அறம் என்பதனைப் பற்றிக்
கூறல்
Ø பாடத்தினை உணர்வுகளுக்கு
ஏற்றவாறு கூறல்
Ø மாணவர்களை பங்கேற்று
கற்றல் என்பதன் மூலம் மாணவர்களை நடிக்க வைத்தல்
Ø அறம் சார்ந்த செயல்பாடுகளை
செய்ய ஊக்குவித்தல்
Ø பாடத்தின் மூலம் நல்லொழுக்கத்தினை
வளர்த்தல்.
கருத்துரு வரைபடம் :
பாதம்
விளக்கம் : பாதம்
Ø கதை
மாந்தர்கள் : மாரி, சிறுமி
Ø கதையின்
மையப் பொருள் : காலணி
Ø மையக்
கருத்து: பிறர் பொருட்களுக்கு ஆசைப்படாமல் வாழும் போது தமது நிலை தாமாக உயரும்.
Ø ஆசிரியர்
: எஸ்.இராமகிருஷ்ணன்
Ø எழுதிய
நூல்கள்: உபபாண்டவம், கதாவிலாசம், தேசாந்திரி, கால் முளைத்த கதைகள்
Ø கதை
அமைந்த நூல் : தாவரங்களின் உரையாடல்
Ø கற்பனைக்
கதைகளில் வரும் அறத்தை உணர்த்துதல்
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்க குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
Ø பாடப்பகுதியினை வாசித்தல்
Ø பாடப்பகுதியின் மூலம் அறத்தை உணர்தல்
Ø புதிய சொற்களை அடையாளம் காணுதல்
Ø புதிய சொற்களுக்கு பொருள் அறிதல்
Ø பங்கேற்று நடித்தல்
Ø அறத்தின் பயன் அறிதல்
Ø தாமும் அறங்களை பின்பற்ற வேண்டிய செயல்களை உணர்தல்
Ø கதையின் பொருளை உணர்தல்
மதிப்பீடு :
LOT :
Ø பாதம்
கதையினை எழுதியவர் __________
Ø கதையின்
மையப் பொருள் என்ன?
MOT :
Ø பாதம்
எவ்வாறு இருந்தது?
Ø பாதம்
மூலம் செருப்பு தைக்கும் தொழிலாளியின் நிலை என்னவானது?
HOT
Ø கதையின்
மையக் கருத்தைக் கூறுக.
Ø உங்களுக்கும்
இதுப்போன்று காலணி கிடைத்தால் நீங்கள் என்னென்ன செய்வீர்கள்?
கற்றல் விளைவுகள் : பாதம்
·
T606
தங்கள் பகுதிகளில் காணப்படும் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் நாட்டுப்புறப் பாடல்களை
அறிந்திருத்தல் அவற்றை பற்றி கலந்துரையாடல்.
· T610
பல்வேறு பாடப் பொருட்கள் பற்றி தமிழில் உள்ள பனுவல்களை (செய்தித்தாள்கள், பருவ இதழ்கள்,
கதைகள், இணையத்தில் தகவல் தரும் பகுதிகள் போன்றவற்றில் இருந்து படித்து புரிந்து கொண்டு
அவற்றின் மீதான கருத்துக்களை பகிர்தல் தங்களின் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துதல்
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
Ø உங்களுக்கும்
இது போன்று பாதம் கிடைத்தால் நீங்கள் செய்யும் செயல்களைப் பட்டிலிடுக.
_______________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை