www.tamilvithai.com www.kalvivithaigal.com
பருவம் : மூன்றாம்
பருவம்
மாதம் : பிப்ரவரி
வாரம் : முதல்
வாரம்
வகுப்பு : ஆறாம்
வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : நீங்கள் நல்லவர்
அறிமுகம் :
Ø
உனது
நண்பர்களிடம் நீங்கள் காணும் பண்புகளைக் கூறுக.
கற்பித்தல்
துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø வாழும் முறைகளை அறிதல்
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
Ø செய்யுள் பகுதியினை
பிழையின்றி வாசித்தல்
Ø புதியச் சொற்களை இனம்
காணல்
Ø புதியச் சொற்களுக்கு
அகராதி மூலம் பொருள் காணுதல்
Ø பாடலின் மையக் கருத்தைக்
கூறல்
Ø பாடலை இனிய இராகத்தில்
பாடுதல்
Ø பாடலை நடைமுறை வாழ்வியலோடு
ஒப்பிடல்
கருத்துரு வரைபடம் :
நீங்கள் நல்லவர்
விளக்கம் :
நீங்கள் நல்லவர்
Ø ஆசிரியர்
: கலீல் கிப்ரான்
Ø நாடு
: லெபனான்
Ø பண்புகள்
: கவிஞர், புதின ஆசிரியர், கட்டுரையாசிரியர், ஓவிய ஆசிரியர்
Ø வாழ்க்கை
பின் திரும்பிச் செல்லாது. நேற்றுடன் ஒத்துப் போகாது.
Ø உழைக்கும்
போது நீங்கள் புல்லாங்குழலாக மாறி விடுவீர்கள்.
Ø உங்களுக்குள்
இருக்கும் நன்மையைத் தான் பேச வேண்டும்.
Ø கொடுப்பது
பழத்தின் இயல்பு
Ø பெறுவது
வேரின் இயல்பு
Ø உங்கள்
குறிக்கோளை நோக்கி நடக்கயில் நீங்கள் நல்லவர்.
காணொளிகள் :
Ø விரைவுத்
துலங்க குறியீடு காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
Ø பாடப்பகுதியினை வாசித்தல்
Ø சீர்ப் பிரித்து வாசித்தல்
Ø புதிய சொற்களை அடையாளம் காணுதல்
Ø புதிய சொற்களுக்கு பொருள் அறிதல்
Ø பாடல் கருத்தை நடைமுறை வாழ்வில் செயல்படுத்துதல்
Ø பாடலின் பொருளை உணர்தல்
மதிப்பீடு :
LOT :
Ø பரிசு
பெறும் போது மனநிலை ________________ ஆக இருக்கும்.
Ø பழத்தின்
இயல்பு யாது?
MOT :
Ø கலீல்
இப்ரான் அவர்களின் பன்முக ஆற்றல் யாது?
Ø வாழ்க்கை
எப்படிப்பட்டது?
HOT
Ø உழைக்கும்
போது என்னவாக ஆகிறோம்?
Ø உங்கள்
குறிக்கோளை அடைய நீங்கள் செய்யும் முயற்சிகள் யாவை?
கற்றல் விளைவுகள் :
நீங்கள்
நல்லவர்
T610 பல்வேறு பாடப் பொருட்கள் பற்றி தமிழில்
உள்ள பனுவல்களை (செய்தித்தாள்கள், பருவ இதழ்கள், கதைகள், இணையத்தில் தகவல் தரும் பகுதிகள்
போன்றவற்றில் இருந்து படித்து புரிந்து கொண்டு அவற்றின் மீதான கருத்துக்களை பகிர்தல்
தங்களின் விருப்பு வெறுப்புகளை வெளிப்படுத்துதல்
தொடர் பணி :
Ø பாடநூல் வினாக்களுக்கு விடை எழுதி வருதல்
Ø உங்களது
நிறை குறைகளைப் பட்டியலிடுக.
_______________________________________
நன்றி,
வணக்கம் – தமிழ்விதை